பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக |
---|
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை : எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போகிறார்கள். 2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க. விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள். |
சொல் வளம் பெறுவோம். |
---|
1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.
(எ.கா.) கரும்பு – கரு, கம்பு கவிதை – கவி, விதை, கதை, தை பதிற்றுப்பத்து – பதி, பத்து, பற்று பரிபாடல் – பரி, பாடல், பா, பால், பாரி 2. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக. நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண் (எ.கா.) விண்மீன் விடை • விண்மீன் • மணிமாலை • நீதிநூல் • விண்வெளி • தமிழ்மாலை • கண்மணி • எழுதுகோல் • தமிழ்மொழி • தமிழ்நூல் • நீதிமொழி • நீதிமணி • மணிமொழி • மீன்கண் • நீதிமாலை • தமிழ்வெளி |
பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக. |
---|
அழகு, ஏற்றம், இன்பம், ஊக்கம், இனிமை, ஆற்றல், ஈடு, இசை, உணர்வு, ஏடுகள், உரிமை, என்றும், எளிதாய், உவகை, அன்பு
(எ.கா.) அ – அன்பு தருவது தமிழ் ஆ - ஆற்றல் தருவது தமிழ் இ - இன்பம் தருவது தமிழ் ஈ - ஈடு இல்லாதது தமிழ் உ - உவகை தருவது தமிழ் ஊ - ஊக்கம் தருவது தமிழ் எ - என்றும் வேண்டும் தமிழ் ஏ - ஏற்றம் தருவது தமிழ் |
கலைச்சொல் அறிவோம் |
---|
1. வலஞ்சுழி – Clockwise
2. இடஞ்சுழி – Anti Clockwise 3. இணையம் – Internet 4. குரல்தேடல் – Voice Search 5. தேடுபொறி – Search engine 6. தொடுதிரை – Touch Screen 7. முகநூல் – Facebook 8. செயலி – App 9. புலனம் – Whatapp 10. மின்ன ஞ்சல் – E-mail |
சொல்லும் பொருளும் |
---|
• நிருமித்த - உருவாக்கிய
• சமூகம் - மக்கள் குழு • விளைவு - வளர்ச்சி • அசதி – சோர்வு • வினைவுக்கு - நீர் • அறிவுக்கு - தோள் • இளமைக்கு - பால் • புலவர்க்கு – வேல் • ஆழிப் பெருக்கு - கடல் கோள் • மேதினி - உலகம் • ஊழி - நீண்டதொருகாலப்பகுதி • உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை தெரிந்து தெளிவோம் |
பாரதிதாசன் |
---|
நூல் வெளி
• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். • பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். • இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார். |
பெருஞ்சித்திரனார் |
---|
நூல் வெளி
• பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். • இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். • கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். • தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். • இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. • இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. • இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது. |
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் |
---|
கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம்.சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் கத்தமே அடிப்படை. இவ்விரித்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது. 1. பழமொழியின் சிறப்பு --------- சொல்வது அ) விரிவாகச் ஆ) சுருங்கச் இ) பழைமையைச் ஈ) பல மொழிகளில் விடை : ஆ) சுருங்கச் 2. நோயற்ற வாழ்வைத் தருவது விடை: சுத்தம் 3. உடல்நலமே -------- அடிப்படை விடை: உழைப்புக்கு 4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை? விடை: உணவு, உடை. உறைவிடம் 5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக. விடை: சுத்தம் |
சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக. |
---|
1. தனிச்சிறப்பு
விடை : திருக்குறள் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அதனின் தனிச்சிறப்பு ஆகும். 2. நான்தோறும் விடை : நாம் நாள்தோறும் நல்ல பழக்கவழக்கத்தைக் கடைபிடிப்பது நல்லது. |
Book Back |
---|
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏற்றத் தாழ்வற்ற --------- அமைய வேண்டும் அ) சமூகம் ஆ) நாடு இ) வீடு ஈ) தெரு [விடை : அ) சமூகம்] 2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு -------- ஆக இருக்கும் அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி [விடை : ஈ) அசதி] 3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று [விடை : ஆ) நிலவென்று] 4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொவ் அ) தமிழங்கள் ஆ) தமிழெங்கள் இ) தமிழுங்கள் ஈ) தமிழ்எங்கள் [விடை : ஆ) தமிழெங்கள்] 5. 'அமுதென்று' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) அமுது + தென்று ஆ) அமுது + என்று இ) அமுது + ஒன்று ஈ) அமு + தென்று [விடை : ஆ) அமுது + என்று] 6. 'செம்பயிர்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) செம்மை + பயிர் ஆ) செம் + பயிர் இ) செமை + பயிர் ஈ) செம்பு + பயிர் [விடை : அ) செம்மை + பயிர்] 7. தாய் மொழியில் படித்தால் ----- அடையலாம் அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை [விடை : ஆ) மேன்மை] 8. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ---------- சுருங்கிவிட்டது அ) மேதினி ஆ) நிலா இ) வானம் ஈ) காற்று [விடை : அ) மேதினி] 9. 'செந்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) செந் + தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ் ஈ) செம்மை + தமிழ் [விடை : ஈ) செம்மை + தமிழ்] 10. 'பொய்யகற்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) பொய் + அகற்றும் இ) பொய்ய + கற்றும் ஆ)பொய் + கற்றும் ஈ)பொய் + யகற்றும் [விடை : அ) பொய் + அகற்றும்] 11. பாட்டு + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) பாட்டிருக்கும் ஆ) பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ) பாடியிருக்கும் [விடை : அ) பாட்டிருக்கும்] 12. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ) எட்டிஇசை [விடை : அ) எட்டுத்திசை] 13. 'தொன்மை' என்னும் சொல்லின் பொருள். அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை [விடை : ஆ) பழமை] 14. 'இடப்புறம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது....... அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம் [விடை : இ) இடம் + புறம்] 15. 'சீரிளமை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ) சிறு + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இளமை [விடை : இ) சீரி + இளமை] 16. சிலம்பு + அதிகாரம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) சிலம்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் ஈ) சில பதிகாரம் [விடை : ஆ) சிலப்பதிகாரம்] 17. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ் [விடை : ஆ) கணினித்தமிழ்] 18. 'தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர் அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ஈ) வாணிதாசன் [விடை : ஆ) பாரதியார்] 19. 'மா' என்னும் சொல்லின் பொருள். அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா [விடை : இ) விலங்கு] கோடிட்ட இடத்தை நிரப்புக. 1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது. விடை : மொழி 2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் விடை : தொல்காப்பியம் 3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். விடை : எண்களின் |
minnal vega kanitham