Type Here to Get Search Results !

6th தமிழ் பழைய புத்தகம் இயல் 7, 8, 9

0
6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 7
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
ஆசிரியர் குறிப்பு
• 'மக்கள் கவிஞர்' என அழைக்கப்படும் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர்;
• திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.
• உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
• பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் ஊரில் பிறந்தவர்.
• இவர் வாழ்ந்த காலம் 13.04.1930 முதல் 08.10.1959 வரை

6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 8
தனிப்பாடல் திரட்டு
நூல்குறிப்பு
• புலவர் பலர், அவ்வப்போது பாடிய பல பாடல்கள் தொகுக்கப்படாமல் இருந்தன.
• அவற்றைத் 'தனிப்பாடல் திரட்டு' என்னும் பெயரில் தொகுத்துள்ளனர்.
• பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
• பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியவர் இராமச்சந்திரக்கவிராயர்; துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் இவர்.

உடுமலை நாராயணகவி
ஆசிரியர் குறிப்பு
• உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
• பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பியவர்.
• “பகுத்தறிவுக் கவிராயர்” எனத் தமிழக மக்களால் அழைக்கப்படுபவர்.
• இவர் வாழ்ந்தகாலம் 25.09.1899 முதல் 23.05.1981 வரை

6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 9
திருக்குற்றாலக் குறவஞ்சி
நூல்குறிப்பு :
• இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி.
• ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார்.
• குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல் ஓசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

அழகிய சொக்கநாதப் புலவர்
ஆசிரியர் குறிப்பு
• அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.
• இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர்.
• இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.
• நூல்குறிப்பு தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
• ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, 'இரட்டுறமொழிதல்' எனவும் கூறுவர்.
• இரண்டு + உற + மொழிதல் இரட்டுறமொழிதல்.
• இருபொருள்படப் பாடுவது. (எ.கா.) ஆறு
ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும்.
எண் ஆறனையும் (6) குறிக்கும்.
செல்லும் வழியையும் குறிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்