Type Here to Get Search Results !

6th தமிழ் பழைய புத்தகம் இயல் 1

0

6ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இயல் 1

இராமலிங்க அடிகளார்

ஆசிரியர் குறிப்பு 

இராமலிங்க அடிகளார், திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.

இவர் கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.

பெற்றோர் இராமையா-சின்னம்மையார்.

ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறை கண்டவாசகம் ஆகிய நூல்கள் இவர் எழுதியவை.

இவர் பாடல்கள் அனைத்தும் 'திருவருட்பா' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சமரச சன்மார்க்க நெறியை வழங்கியவர் இவரே.

அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காகச் சன்மார்க்க சங்கத்தையும், பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும் அமைத்தவர்.

அறிவுநெறி விளங்க ஞானசபையையும் நிறுவியவர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.

வடலூர் சத்திய தருமச்சாலையில், பசியால் வாடும் மக்களுக்குச் சோறிட, இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல், தொடர்ந்து பசிப்பிணி தீர்த்து வருகிறது.

இவர் வாழ்ந்த காலம் 05.10. 1823 முதல் 30.01.1874வரை.


திருக்குறள்

ஆசிரியர் குறிப்பு:  

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.

இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.

 

நூல்குறிப்பு

இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன.

ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.

இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர்.

திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை

கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.

எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)


 அரவிந்த குப்தா எழுதிய 'டென் லிட்டில் பிங்கர்ஸ்'.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. (6th Old Tamil Book)

• பெயர்- உ.வே.சாமிநாதன்

• ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

• இயற்பெயர் - வேங்கடரத்தினம்

• ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

• உ.வே.சா.வின் ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.

• உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா

• தமிழ்த்தாத்தா என்று உ.வே.சா அவர்களை அழைக்கின்றோம்.

• இவரின் தந்தை - வேங்கடசுப்பையா

• காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

• உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

• உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

• உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

• நடுவணரசு உ.வே.சா அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

• உ.வே.சா அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

• "குறிஞ்சிப்பாட்டு" என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார். அப்போது 96 பூக்களின் பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தது.

• 'குறிஞ்சிப்பாட்டு' சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் காணப்படும்.

• குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.

• ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா

• உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.

• உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

• உ.வே.சாமிநாதர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் ஆற்றில்விட்ட ஓலைச் சுவடியை எடுத்தார்.

• நமக்காகத் தாளில் எழுதிஅச்சிட்டுப் புத்தகத்தை வழங்கியவர்? உ.வே.சாமிநாதய்யர்

• யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர்? உ.வே.சா

•  மடங்களிலே மறைந்து கிடந்த தமிழை மக்கள் மடியிலே தவழச் செய்தவர்? உ.வே.சா

• பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.

• ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

• ஓலைச் சுவடிகளை ஆற்றில் விட்ட நாள் ஆடிப்பெருக்கு

• ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்:

1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை.

2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை.

3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

• உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:

1. எட்டுத்தொகை – 8

2. பத்துப்பாட்டு – 10

3. சீவகசிந்தாமணி – 1

4. சிலப்பதிகாரம் – 1

5. மணிமேகலை - 1

6. புராணங்கள் – 12

7. உலா – 9

8. கோவை – 6

9. தூது – 6

10. வெண்பா நூல்கள் – 13

11. அந்தாதி - 3

12. பரணி – 2

13. மும்மணிக்கோவை – 2

14. இரட்டைமணிமாலை - 2

15. பிற பிரபந்தங்கள் – 4



கருத்துரையிடுக

0 கருத்துகள்