1. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
(ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்
(இ) கோப்பெருஞ்சோழன்
(ஈ) முதலாம் குலோத்துங்கன்
Answer
(அ) சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை2. பொருத்துக:
அ. கவுந்தியடிகள் – 1. ஆயர்குல மூதாட்டி
ஆ. மாதரி – 2. மாநாய்கனின் மகள்
இ. மாதவி – 3. சமணத்துறவி
ஈ. கண்ணகி – 4. ஆடலரசி
அ ஆ இ ஈ
(அ) 3 1 4 2
(ஆ) 2 4 1 3
(இ) 3 4 2 1
(ஈ) 1 3 2 4
Answer
(அ) 3 1 4 23. கடிகை என்பதன் பொருள் யாது?
(அ) அணிகலன்
(ஆ) கடித்தல்
(இ) கடுகு
(ஈ) காரம்
Answer
(அ) அணிகலன்4. “கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா” எனக் கூறும் நூல்
(அ) நான்மணிக்கடிகை
(ஆ) பழமொழி நானூறு
(இ) ஏலாதி
(ஈ) திரிகடுகம்
Answer
(ஆ) பழமொழி நானூறு5. “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து”
– எனத் திருக்குறளை பாரட்டியவர்.
(அ) பரிமேலழகர்
(ஆ) கபிலர்
(இ) மாங்குடி மருதனார்
(ஈ) பரணர்
Answer
(ஈ) பரணர்6.பொருத்துக:
நூலாசிரியர் நூல்
1. ஜெயங்கொண்டார் – 1. சடகோபரந்தாதி
2. காரியாசான் – 2. புறநானூறு
3. கம்பர் – 3. கலிங்கத்துப்பரணி
4. கண்ணகனார் – 4. சிறுபஞ்சமூலம்
அ ஆ இ ஈ
அ. 3 4 1 2
ஆ. 1 2 4 3
இ. 2 1 3 4
ஈ. 3 2 4 1
Answer
அ. 3 4 1 27. “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்”
– என்ற வரிகளைப் பாடியவர்
(அ) திருப்பாணாழ்வார்
(ஆ) குலசேகராழ்வார்
(இ) பேயாழ்வார்
(ஈ) ஆண்டாள்
Answer
(ஆ) குலசேகராழ்வார்8. “செறு” என்பதன் பொருள்
(அ) செருக்க
(ஆ) சேறு
(இ) சோறு
(ஈ) வயல்
Answer
(ஈ) வயல்9. திருக்குறளில் “ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
(அ) 11
(ஆ) 09
(இ) 08
(ஈ) 10
Answer
(இ) 0810. கீழ்க்கண்ட நூல்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
(அ) திரிகடுகம்
(ஆ) திருவள்ளுவமாலை
(இ) திருமந்திரம்
(ஈ) திருக்குறள்
Answer
(இ) திருமந்திரம்11. “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?
(அ) அப்பூதியடிகள்
(ஆ) திருநாவுக்கரசர்
(இ) சேக்கிழார்
(ஈ) திருஞானசம்பந்தர்
minnal vega kanitham