1. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர்.
2. "மலைக்கள்ளன்' என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர்.
3. "என்கதை" என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர்.
4. “சங்கொலி" என்ற நூலின் ஆசிரியர் - நாமக்கல் கவிஞர் .
5. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் - நாமக்கல் கவிஞர்கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது'' -என்ற பாடலின் ஆசிரியர்- நாமக்கல் கவிஞர் .
6. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள் - மலைக்கள்ளன், என்கதை, சங்கொலி.
7. நெறி என்னும் சொல்லின் பொருள் - வழி.
8. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - குரல் + ஆகும்.
9. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- வானொலி.
10. ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" - என்ற பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயணக்கவி.
11. "சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு" - இப்பாடலின் ஆசிரியர் - உடுமலை நாராயணக் கவி.
12. பகைவரை வென்றதைப் பாடுவது - பரணி இலக்கியம்.
13. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றவன் - வள்ளல் வேள்பாரி.
14. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் - குமண வள்ளல்.
15. பகுத்தறிவு கவிராயர் என்று புகழப்படுபவர்-உடுமலை நாராயணகவி .
16. தமிழ்த திரைப்பட ஆசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்- உடுமலை நாராயணகவி.
17. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் - உடுமலை நாராயணகவி.
18. பகைவரை வெற்றி கொண்ட வரைப் பாடும் இலக்கியம் – பரணி.
19. வானில் முகில் கூட்டம் திரண்டால் -மழை பொழியும்.
20. இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - இரண்டு + அல்ல.
21. தந்துதவும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - தந்து + உதவும்.
22. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் – ஒப்புமையில்லாத.
23. தனது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது – மொழி.
24. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது - பேச்சுமொழி.
25. பேசுவதும், கேட்பதும் மொழியின் - முதல் நிலை .
26. எழுதப்படுவதும், படிக்கப்படுவதும் மொழியின் - இரண்டாம் நிலை .
27. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபுமட் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் – நன்னூல்.
28. “எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே என்று கூறியவர் – வரதராசனார்.
29. பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை - வட்டாரமொழி .
30. தமிழிலிருந்து பிரிந்து சென்ற திராவிட மொழிகள் - கன்னடம், தெலுங்கு, மலையாளம்.
31. பேச்சு மொழிக்கு நாம் தந்த வடிவம் – எழுத்து.
32. எழுத்து மொழி - இலக்கிய வழக்கு.
33. பேச்சுமொழி - உலக வழக்கு.
34. பேச்சுமொழி மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது - இரட்டை வழக்கு மொழி.
35. தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது. இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர்- தொல்காப்பியர் .
36. தமிழை மொழி - இரட்டை வழக்கு என்பர்
37. எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” - என்ற பாடலை இயற்றியவர் – பாரதிதாசன்.
38. செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும் - என்ற பாடலை இயற்றியவர் – பாரதிதாசன்.
39. மொழியின் முதல் நிலை – பேசுதல், கேட்டல்.
40. ஒலியின் வரிவடிவம் – எழுத்து.
41. குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்.
42. நெடில் எழுத்துகளைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஒளகான்.
43. குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்.
44. ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா.) - அஃகேனம்.
45. வ் - என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
46. சு, டு, று - ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
47. உலக மொழிகளில் தொன்மையான மொழி – தமிழ்.
48. பகுத்தறிவு கவிராயர் என்று போற்றப்படுபவர் - உடுமலை நாராயண கவி.
49. எழுத்துமொழி - இலக்கிய வழக்கு.
50. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் – 6.
51. அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் என்ற வரி இடம்பெற்றுள்ள எங்கள் தமிழ் பாடலின் ஆசிரியர் - வெ.ராமலிங்கனார்.
52. பகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம் – பரணி.
53. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் – 10.
54. க், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்-வன்தொடர்க் குற்றியலுகரம்.
55. காந்தியக்கவிஞர் எனப் போற்றப்படுபவர் - வெ.இராமலிங்கனார்.
56. எந்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை – வ்.
57. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் – குற்றியலுகரம்.
58. ஒரு மாத்திரை அளவில் இருந்து அரைமாத்திரை அளவாக குறுகி ஒலிக்கும் இகரம்-குற்றியலிகரம்.
59. பிரித்து எழுதுக குற்றியலிகரம் - குறுமை + இயல் + இகரம்.
60. குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் வரும் உகரம் – இகரம்.
61. குற்றியலுகரம் பிரித்து - குறுமை + இயல் + உகரம்.
62. "பொழிகிற" என்னும் சொல்லின் பொருள் – தருகின்ற.
63. "குரலாகும்" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக - குரல் + ஆகும்.
64. மொழியின் முதல் நிலை - பேசுதல், கேட்டல்.
65. உபகாரி என்னும் சொல்லின் பொருள் – வள்ளல்.
66. ஒலியின் வரிவடிவம் – எழுத்து.
67. பொருத்துக
1. பருவ இதழ் – Magazine
2. பொம்மலாட்டம் - Puppettry
3. எழுத்திலக்கணம் - Orthography
4. உரையாடல் – Dialogue
68. பொருத்துக:
1. ஒப்புமை- இணை
2. அற்புதம்- விந்தை
3. முகில் - மேகம்
4. உபகாரி - வள்ளல்
69. பொருத்துக:
1. ஊடகம் - Media
2. மொழியியல் - Linguistics
3. ஒலியியல் - Phonology
4. இதழியல் - Journalism
70. சார்பெழுத்து எத்தனை வகைப்படும் – 10.
(உயிர்மெய், ஆய்தம்,உயிரளபெடை,ஒற்றளபெடை,குற்றியலுகரம்,
குற்றியலிகரம்,ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம்,
ஆய்தக் குறுக்கம்)
71. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும் - 6 .
1. நெடில்தொடர் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
4. வன்தொடர் குற்றியலுகரம்
5. மென்தொடர் குற்றியலுகரம்
6. இடைத்தொடர் குற்றியலுகரம்
மின்னல் வேகவழிகாட்டிதான் என் கடவுள்
பதிலளிநீக்குminnal vega kanitham