Type Here to Get Search Results !

6th புதிய தமிழ் இயல் 6

1

 

1.     கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி'' என்ற பாடலின் ஆசிரியர் - முடியரசன்

2.     "ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்புதியதொரு விதி செய்வோம்

3.     முடியரசனின் இயற்பெயர் - துரைராசு

4.     முடியரசன்  எழுதிய நூல்கள் : பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை.

5.     திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்-முடியரசன்.

6.     கவியரசு என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.

7.     வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல் ஆசிரியர் – பாரதியார்.

8.     போர்க்களத்தில் வெளிப்படும் குணம்வீரம்

9.     கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - கல் + எடுத்து

10.   நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுநான்கு + நிலம்

11.   நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்நாடென்ற

12.   கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்கலமேறி

13.    “புதியதொருவிதி செய்வோம்'' என்ற நூலை இயற்றியவர் - முடியரசன்

14.   கடலும் கடல் சார்ந்த இடம் - நெய்தல்

15.   நெய்தல் நிலத்தல் வாழும் மக்கள் - பரதர்பரத்தியர் , எயினர் , எயிற்றியர்

16.   நெய்தல் நில மக்களின் தொழில் என்னமீன் பிடித்தல்உப்பு விளைவித்தல்

17.   நெய்தல் நிலத்தின் பூ - தாழம் பூ

18.   காதால் கேட்டு வாய்மொழியாகவே வழக்கப்பட்டு வருவதால் நாட்டுப்புற பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறதுவாய்மொழி இலக்கியம்

19.   நாட்டுப்புறப்பாடலில் அடங்குபவை - ஏற்றப்பாட்டுஓடப்பாட்டு,விளையாட்டுப்பாடல்தொழில் பாடல்தாலாட்டுப் பாடல்

20.   நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைத் தொகுத்தவர் - சு.சக்திவேல்

21.   கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுகதிர் + சுடர்

22.   மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுமூச்சு + அடக்கி

23.   பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்பெருவானம்

24.   அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்அடிக்கும் அலை

25.   "பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை - ஐலசா'' என்ற பாடலின் ஆசிரியர் - சுசக்திவேல்

26.   பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதுபண்டமாற்று வணிகம்

27.   சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றனர்உப்பு

28.   சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக் கொடுத்து எதைப் பெற்றனர்தானியம்

29.   வணிகம் எத்தனை வகைப்படும் - இரண்டு

30.   வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு குழுவாக வெளியூருக்குச் செல்வர் இக்குழுவிற்கு பெயர்வணிகச்சாத்து

31.   துறைமுக நகரங்கள் - பட்டினம் ,பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன

32.   பண்டைய தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகம் - பூம்புகார்

33.   தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் - தனிநபர் வணிகம்

34.   ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகம் நடத்துவது - நிறுவன வணிகம்

35.   தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி உமணர் போகலும்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை

36.   பாலொடு வந்து கூழொடு பெயரும்என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - குறுந்தொகை

37.   பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு

38.   சிறு வணிகர்கள் - நுகர்வோர் உடன் நேரடித்தொடர்பு கொள்வார்கள்

39.   தமிழ்நாட்டில் இருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை - தேக்குமயில்தோகை,அரிசிசந்தனம்,இஞ்சிமிளகு

40.   சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் - கண்ணாடி ,கற்பூரம் , பட்டு

41.   அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது - குதிரை

42.   வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” என்று வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் - திருக்குறள்

43.   வணிகரை 'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்என்று கூறும் நூல் - பட்டினப்பாலை

44.   'கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாதுஎன்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – பட்டினப்பாலை

45.   "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணிஎன்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்

46.   வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்நுகர்வோர்

47.   வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்வணிகசாத்து

48.   பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதம் கிடைக்கும் சொல்பண்டமாற்று

49.   வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுவண்ணம் + படங்கள்

50.   விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுவிரிவு + அடைந்த

51.   கரன்சி நோட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பணத்தாள்

52.   பேங்க் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வங்கி

53.   செக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - காசோலை

54.   டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வரைவோலை

55.   டெபிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பற்று அட்டை

56.   கிரெடிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - கடன் அட்டை

57.   ஈகாமாஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - மின்னணு வணிகம்

58.   சங்ககால வணிகம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருந்ததுதரைவழி வணிகம்நீர்வழி வணிகம்

59.   துறைமுக நகரங்கள் பட்டினம் என்று அழைக்கப்பட்டது

60.   பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்என்பது யாருடைய கூற்றுஒளவையார்

61.   ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள்சுட்டு எழுத்து

62.   சுட்டு எழுத்துகள் - ,

63.   தற்போது எந்த சுட்டெழுத்தை பயன்படுத்துவது இல்லை - 

64.   சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவதுபுறச்சுட்டு

65.   சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது  - அகச்சுட்டு

66.   அண்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து  - 

67.   சேய்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - 

68.   அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ள சுட்டெழுத்து - 

69.    ஆகிய சுட்டு எழுத்துகள் அந்தஇந்த எனத் திரிந்து பொருள் தருவதுசுட்டுத்திரிபு

70.   வினா எழுத்துகள் - யா, ,

71.   மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் - யா

72.   மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து - 

73.   மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து - 

74.   வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருமானால் அது - அகவினா

75.   அகவினா எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டு - எதுயார்ஏன்

76.   வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருமானால் அது - புற வினா

77.   துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பட்டினம் , பாக்கம்.

78.   பொருள்களை விற்பவர் – வணிகர்.

79.   நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்ற வரி வணிகரின் எத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றனநேர்மை.

80.   நானிலம் படைத்தவன் பாடல் எந்நூலில் இடம்பெற்றது - புதியதொரு விதி செய்வோம்.

81.   நெய்தல் திணைக்குரிய நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்.

82.   போர்க்களத்தில் வெளிப்படும் குணம் – மறம்.

83.   பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று பாடியவர் – ஒளவையார்.

84.   ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப்பிற நாடுகளுக்கு அனுப்புவது – ஏற்றுமதி.

85.   பாரம்பரியம் என்ற சொல்லின் கலைச்சொல் தருக – Heritage.

86.   நானிலம் படைத்தவன் பாடலில் அதன் ஆசிரியர் கூறும் நான்கு நிலங்கள் குறிஞ்சிமுல்லைநெய்தல்மருதம்.

87.   எந்த நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன – அரேபியா.

88.   வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் – பாரதியார்.

89.   நானிலம் என்ற சொல்லை பிரித்து எழுதுக - நான்கு + நிலம்.

90.   பொருள்களை வாங்குபவர் – நுகர்வோர்.

91.   அவ்வானம் என்ற சொல்லின் சுட்டு எழுத்தை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தருவதுபுறச்சுட்டு.

92.   பொருத்துக

 1.     விடிவெள்ளி - விளக்கு

2.     மணல் - பஞ்சு மெத்தை

3.     புயல்ஊஞ்சல்

4.     பனிமூட்டம் - போர்வை

93.   பொருத்துக

1.     கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி

2.     மின்னல்வரி - மின்னல் கோடுகள்

3.     அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்

94.   பொருத்துக

1.     மல்லெடுத்தவலிமை பெற்ற

2.     கழனி - வயல்

 3.     சமர் - போர்

4.     நல்கும் - தரும்

95.   பொருத்துக.

 1.     மறம் - வீரம்

 2.     எக்களிப்புபெருமகிழ்ச்சி

3.     கலம்கப்பல்

4.     ஆழிகடல்

96.   பொருத்துக.

1.     பண்டம்Commodity

2.     பயணப்படகுகள் - Ferries

 3.     பாரம்பரியம்Heritage

4.     நுகர்வோர்Consumer

97.   பொருத்துக.

1.     கடற்பயணம் - Voyage

2.     தொழில் முனைவோர் -  Entrepreneur

3.     கலப்படம் - Adulteration

4.     வணிகர்Merchant

98.   பொருத்துக:

1.     நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - பட்டினப்பாலை

2.     தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து - நற்றிணை

3.     பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறுந்தொகை

4.     பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு

99.   பொருத்துக:

1.     அகச்சுட்டு - இம்மலை

2.     புறச்சுட்டு - இது

3.     அகவினா - எது

4.     புறவினா - அவனா

100.  ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க.

1.     டிஜிட்டல் - மின்னணுமயம்

2.     டெபிட் கார்டு - பற்று அட்டை

3.     -காமர்ஸ் - மின்னணுவணிகம்

4.     டிமான்ட் ட்ராப்ட் - வரைவோலை


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham