Type Here to Get Search Results !

8th New Tamil Book Unit -1 Book Back

0

1.1 தமிழ்மொழி வாழ்த்து (பாரதியார்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
[விடை : அ) வைப்பு]
2. 'என்றென்றும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
[விடை : ஆ) என்று + என்றும்]
3. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
[விடை : இ) வானம் + அளந்தது]
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
[விடை : இ) அறிந்ததனைத்தும்]
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வானம்அறிந்து
ஆ) வான்அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
[விடை : இ) வானமறிந்த]

1.2 தமிழ்மொழி மரபு (தொல்காப்பியர்)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் ---------------- . பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
[விடை : ஆ) விசும்பில்]
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் ---------- .
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
[விடை : அ) மரபு]
3. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
[விடை : அ) இரண்டு + திணை]
4. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
[விடை : ஆ) ஐந்து + பால்]

1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற --------- காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
[விடை : இ) அச்சுக்கலை]
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ------- என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
[விடை : ஆ) வட்டெழுத்து]
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்.

அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
[விடை : ஆ) தந்தை பெரியார்]
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் --------- அழைக்கப்பட்டன.
விடை : கண்ணெழுத்துகள்
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்
விடை : வீரமாமுனிவர்
1.5 எழுத்துகளின் பிறப்பு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள்
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ
[விடை : ஆ) உ, ஊ]
2. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ---------
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
[விடை : இ) தலை]
3. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம்
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
[விடை : ஆ) மார்பு]
4. நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்
[விடை : இ) ட், ண்]
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து --------- .

அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
[விடை : ஈ) வ்]
பொருத்துக.

1. க், ங் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை.
2. ச், ஞ் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி.
3. ட், ண் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி.
4. த்,ந் – ஈ) நாவின் நுனி, அண்ணத்தின் நுனி.
விடை
1. க், ங் – இ) நாவின் முதல், அண்ண த்தின் அடி.
2. ச், ஞ் – அ) நாவின் இடை, அண்ண த்தின் இடை
3. ட், ண் – ஈ) நாவின் நுனி, அண்ணத்தின் நுனி.
4. த்,ந் – ஆ) நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி.

சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
2. உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
3. வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
4. கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
5. ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
விடை
ஒழுங்குபடுத்திய தொடர் :

1. வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும்.
2. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
4. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.
கலைச்சொல் அறிவோம்.
1. ஒலிபிறப்பியல் – Articulatory phonetics
2. மெய்யொலி – Consonant
3. மூக்கொலி – Nasal consonant sound
4. கல்வெட்டு – Epigraph
5. உயிரொலி – Vowel
6. அகராதியியல் – Lexicography
7. ஒலியன் – Phoneme
8. சித்திர எழுத்து – Pictograph
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.
விடை - அகர வரிசை:
அழகுணர்ச்சி, ஆரம் நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்
அறிந்து பயன்படுத்துவோம்.
மரபுத் தொடர்கள்
தமிழ் மொழிக்கெனச் சில சொல் மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்படுகின்றன.
பறவைகளின் ஒலிமரபு
● ஆந்தை அலறும்
● காகம் கரையும்
● சேவல் கூவும்
● குயில் கூவும்
● கோழிகொக்கரிக்கும்
● புறா குனுகும்
● மயில் அகவும்
● கிளி பேசும்
● கூகை குழறும்
தொகை மரபு
● மக்கள் கூட்டம்
● ஆநிரை
● ஆட்டு மந்தை
வினைமரபு
● சோறு உண்
● தண்ணீர் குடி
● பூக் கொய்
● முறுக்குத் தின்
● கூடை முடை
● இலை பறி
● சுவர் எழுப்பு
● பால் பருகு
● பானை வனை
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி ………………………. (கூவும் / கொக்கரிக்கும்)
2. பால் …………………….. (குடி / பருகு)
3. சோறு ……………………… (தின்/ உண்)
4. பூ ………………………. (கொய் / பறி)
5. ஆ ……………………. (நிரை / மந்தை )
விடை
1. கொக்கரிக்கும்
2. பருகு
3. உண்
4. கொய்
5. நிரை
மரபுப் பிழையை நீக்கி எழுதுக.
சேவல் கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது. பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் கொய்து கொண்டு வீடு திரும்பினாள், அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.
விடை
சேவல் கூவும் சத்தம் கேட்டுக்கயல் கண்விழித்தாள். பூக்கொய்ய நேரமாகிவிட்டதை அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. பூவைக் கொய்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும் பறித்துக்கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைப் பருகிவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்