1.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை? கனிச்சாறு, எண்சுவை எண்பது, உலகியல்
நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாற, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப்
பறவைகள்
2.
பெருஞ்சித்திரனார் எந்த இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை பரப்பினார்? தென்மொழி, தமிழ்ச்சிட்டு
3.
பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது? திருக்குறள் மெய்ப்பொருளுரை
4.
தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் எழுதிய நூல்கள் யாவை? இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம்,
தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திட்டு
உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
5.
நாம் என் தமிழ் கற்க வேண்டும் என்ற நூலின் ஆசிரியர் யார்? முனைவர் சேதுமணி மணியன்
6.
தவறின்றித் தமிழ் எழுதுவோம் என்ற நூலின் ஆசிரியர் யார்? மா. நன்னன்
7.
தனிப்பாடல் திரட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்? புலவர் பலரால் பாடப்பட்டது
8.
குறிஞ்சிப்பாட்டை இயற்றியவர் யார்? கபிலர்
9.
குறிஞ்சி மலர் என்ற நூலின் ஆசிரியர் யார்? நா. பார்த்தசாரதி
10.
மழையும் புயலும் என்ற நூலின் ஆசிரியர் யார்? வ. ராமசாமி
11.
தமிழின்பம் என்ற நூலின் ஆசிரியர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
12.
நாட்டுப்பற்று என்ற கட்டுரை தொகுப்பை எழுதியவர் யார்? மு. வரதராசனார்
13.
புதிய உரைநடையின் என்ற நூலின் ஆசிரியர் யார்? எழில் முதல்வன்
14.
எழில் முதல்வனின் எந்த நூலுக்காக சாகித்திய அகாடமி விருது கிடைத்தது? புதிய உரைநடை
15.
எழில் முதல்வனின் நூல்கள் யாவை? இனிக்கும் நினைவுகள், எங்கெங்கு காணினும், யாதுமாகி
நின்றாய்
16.
பச்சை நிழல் என்ற நூலின் ஆசிரியர் யார்? உதயசங்கர்
17.
மரமது மரத்தில் ஏறி என்ற பாடலின் ஆசிரியர் யார்? சுந்தர கவிராயர்
18.
தமிழழகனார் எத்தனை நூல்களை படைத்துள்ளார்? 12 சிற்றிலக்கியங்கள்
1.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன? துரை. மாணிக்கம்
2.
தமிழழகனாரின் இயற்ப்பெயர் என்ன? சண்முக சுந்தரம்
3.
எழில் முதல்வனின் இயற்பெயர் என்ன? மா. இராமலிங்கம்
4.
தமிழ்தென்றல் என அழைக்கப்படுகிறது யார்? திரு.வி.க
5.
சொல்லின் செல்வர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
6.
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுவர் யார்? தேவநேய பாவாணர்
7.
சந்தக் கவிமணி எனக் குறிப்பிடப்படுவர் யார்? தமிழழகனார்
8.
திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்? கால்டுவெல்
9.
இமைகளை மூடி எழுதும் ஆற்றலை பெற்றவர் யார்? திரு.வி.க
10.
திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் யார்?
இரா. இளங்குமரனார்
11.
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்றவர் யார்? மகாகவி பாரதியார்
12.
சொற்களை அளவாகப் பயன்படுத்தி உரைநடையை அழகு செய்தவர் யார்? மு. வரதராசனார்
13.
"தேனினும் ஊறிய செந்தமிழின் மொழியே என்று தமிழைச் சிறப்பித்தவர் யார்? கா.
நமசிவாயர்
14.
சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என கூறியவர் யார்? க. சச்சிதானந்தன்
15.
விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழே இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?
இரா. இளங்குமரனார்
16.
தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர் யார்? தேவநேய பாவாணர்
17.
முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் எது? கார்டிலா
18.
தமிழின் மொத்த அணிகலன்கள் எனக் குறிப்பிடப்படும் நூல்கள்? ஐம்பெரும்காப்பியம்
19.
காலையிலேயே மாலையும் வந்து விட்டது என சிலடையாக கூறியவர் யார்? கி. வா. ஜகந்நாதன்
20.
பல் மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது
"இவர் பல்துறை வித்தகர்" என்று அறிமுகப்படுத்தியவர் யார்? கி. ஆ. பெ.
விசுவநாதன்
21.
களம்புகத் துடித்த நின்ற உனக்கு, வெற்றிச்சாறு கிடைத்துவிட்டது, உண்டு மகிழ்ந்தாய்,
உன் புன்னகைத்தான் அதற்கு சான்று" என்று கூறியவர்? அறிஞர் அண்ணா
22.
பெரியார் பேசாத நாள் உண்டோ? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை
உண்டோ? என்று பெரியாரை பற்றி சிறப்பித்து கூறியவர் யார்? அறிஞர் அண்ணா
23.
புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று எழுதியவர் யார்? வ. ராமசாமி
24.
"குடிசைகள் ஒரு பக்கம், கோபுரங்கள் மறுபக்கம்" என்று கூறியவர்? ப. ஜீவானந்தம்
25.
வாழ்க்கை நடத்துவதற்கு பொருட்கள் பல வேண்டும் என்று எழுதியவர் யார்? மு. வரதராசனார்
26.
சோலையில் புகுவேன், மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும் என்ற வரிக்கு சொந்தக்காரர்
யார்? திரு. வி. கல்யாணசுந்தரனார்
27.
"இந்தியா தான் என்னுடைய மோட்சம்: இந்தியாவின் நன்மை தான் என் நன்மை" என்று
கூறியவர் யார்? மகாகவி பாரதியார்
28.
"தென்றல் அசைந்துவரும் தென்தமிழ் நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த
பழம்பதியாகும்" என்று எழுதியவர் யார்? ரா. பி. சேதுபிள்ளை
29.
ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும்
தமிழே என கூறியவர்? பன்மொழிப் புலவர் க. அப்பாத்துரையார்
30.
"வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய"
என்று எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது? திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை (சிலப்பதிகாரம்)
31.
செல்லாராய்ச்சியில் பாவாணாரும் வியந்த பெருமகனார் யார்? தமிழ்த்திரு இரா. இளங்குமரனார்
32.
திருவள்ளுவர் தவச்சாலையை நிறுவியவர் யார்? இரா. இளங்குமரனார்
33.
திருவள்ளுவர் தவச்சாலையை இரா. இளங்குமரனார் எங்கு நிறுவினார்? திருச்சிராப்பள்ளிக்கு
அருகில் அல்லூரில்
34.
தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர் யார்? இரா. இளங்குமரனார்
35.
பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்? இரா. இளங்குமரனார்
36.
தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்? இரா. இளங்குமரனார்
37.
ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மலேசியா
38.
உலக மொழி மாநாட்டில் எந்த மொழிக்காக நடத்தப்பட்டது? தமிழ் மொழி
39.
தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது? தேவநேயப் பாவாணரின்
சொல்லாய்வு கட்டுரைகள்
40.
உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்? தேவநேயப் பாவாணர்
41.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டஇயக்குனராக பணியாற்றியவர் யார்? தேவநேயப்
பாவாணர்
42.
இந்திய மொழிகளிலேயே மேலை நாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது? தமிழ்
மொழி
43.
கார்டிலா என்னும் நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ஆண்டு? 1554
44.
ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட கார்டிலா என்ற நூலின் முழுப் பெயர் என்ன? carthila
de lingoa tamul e portugues
45.
கார்டிலா என்ற நூல் எந்த வண்ணங்களில் மாறி மாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது? கருப்பு,
சிவப்பு
46.
இரட்டுற மொழிதலின் மற்றொரு பெயர் என்ன? சிலேடை
47.
ஒரு சொல்லோ, சொற்றோடரோ இருபொருள்பட வருவது? இரட்டுற மொழிதல் எனப்படும்
48.
"அன்று அவர் கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்" என்று
கூறியவர்? இசை விமர்சகர் சுப்புடு
49.
"உவமையும் பொருளும் வேற்றுமை ஒளிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்"
என்று எழுதியவர் யார்? தண்டி
50.
திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? 1983 செப்டம்பர்
51.
திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ் கணினி எந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டது? டி.
சி. எம் டேட்டா புரொடக்டஸ்
52.
தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கும் தலைமை செயலகத்துக்கு கோப்புகளையும், செய்திகளையும்
பரிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினி எது? திருவள்ளுவர் கணினி
53.
"திருப்பரங்குன்றத்தின் அழகை பார்ப்பதற்கென்றே இயற்கை பதித்து வைத்த இரண்டு பெரிய
நிலைக்கண்ணாடிகளை போல் வலப்புறமும் தென்புறமும் நீர் நிறைத்த காண்மாய்கள்" என்ற
உவமை காணப்படும் நூல்? குறிஞ்சி மலர்
54.
மாநிலக் கல்லூரியில் பயின்று அங்கேயே பேராசிரியர் பணியைத் தொடங்கியவர் யார்? எழில்
முதல்வன்
55.
குடந்தை அரசு ஆடவர் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக
பணிசெய்தவர்? எழில் முதல்வன்
minnal vega kanitham