Type Here to Get Search Results !

6th to 12th திருக்குறள்

0
6th New & old தமிழ்
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
• இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
• இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
• இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
• இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன.
ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
• இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர்.
• திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
• திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
• கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
• எடுத்துக்காட்டு: 2013 +31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்)
நூல் வெளி 6th Tamil Book
திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
“திருக்குறளில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை” என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
• திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

7th தமிழ் திருக்குறள்
நூல் வெளி
• தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
• இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
• இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
• திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
• நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர்.
• வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது.
• இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
• இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை.
• இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு.
• இவரின் காலம் கி.மு.31 என்பர்.
நூல் குறிப்பு :
• குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள்.
• இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
• இதில், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
• ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துக் குறட்பாக்களென ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
• இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது.
• இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.
• இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
• மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள்.
நூல் பயன்:
திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்