Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Group 4 Syllabus part b 4.4

குறுந்தொகை (11th, 12th Old 9th, 11th New Tamil Book)
• குறுமை + தொகை = குறுந்தொகை.
• குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• குறைந்த அடியளவால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
• இந்நூல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இதில், கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன.
• அகப்பொருள் பற்றிய பாடல்களைப் பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் பாடியுள்ளார்கள்.
• இப்பாடல்கள் குறைந்த அளவாக நான்கடிகளையும் அதிக அளவாக எட்டு அடிகளையும் கொண்டிருக்கின்றன.
• இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ.
• பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
• இப்பாடலாசிரியர் குறித்த செய்திகள் கிடைக்கவில்லை.
• இந்நூல் வாயிலாகப் பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு முதலியவற்றை அறியலாம்.
• கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த 401 பாடல்களை உடையது.
• "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது.
• உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது.
• 1915ஆம் ஆண்டு சௌரிப்பெருமாள் அரங்கனார் முதன் முதலில் இந்நூலைப் பதிப்பித்தார்.

குறுந்தொகை (11th, 12th Old 9th, 11th New Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
1. பாலை பாடிய பெருங்கடுங்கோ
• இவர் சேர மரபைச் சேர்ந்த மன்னர்;
• கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால் 'பாலை பாடிய பெருங்கடுங்கோ' என அழைக்கப் பெற்றார்.
2. வெள்ளிவீதியார்
• வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர்.
• சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.
3. கபிலர்
• கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரிலே அந்தணர் மரபில் பிறந்தவர்.
• கடைச்சங்கப் புலவர்கள் பரணர், இடைக்காடர், ஔவை ஆகியோரிடம் நட்பு பூண்டவர்.
• கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய பாரியை உயிர்த் தோழனாகக் கொண்டவர்.
• பாரியின் அவைக்களப் புலவராகவும் விளங்கியவர்.
• குறிஞ்சித் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்.
• 'கபிலரது பாட்டு' என்னும் தொடரே இவர் பாட்டுத் திறனுக்குச் சான்றாகும்.
• கபிலரை "வாய்மொழிக் கபிலன்" என்று நக்கீரரும், "நல்லிசைக் கபிலன்" என்று பெருங்குன்றூர்க் கிழாரும் 'வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்” என்று பொருந்தில் இளங்கீரனாரும், "புலனழுக்கற்ற அந்தணாளன்" "பொய்யா நாவிற் கபிலன்" என மாறோக்கத்து நப்பசலையாரும் புகழ்ந்துள்ளனர்.

கலித்தொகை (8th New & 10th old Tamil Book)
நூல் வெளி
• கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்;
• நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
• குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
• கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.
ஆசிரியர் குறிப்பு :
• நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
• இவரைப் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
• இவர், நெய்தல் கலியில் முப்பத்துமூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
• கலித்தொகையைத் தொகுத்தவரும் இவரே என்பர்.
நூற்குறிப்பு :
• எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள்.
• எட்டுத்தொகையுள் ஒன்றான கலித்தொகை, கலிப்பாக்களால் அமைந்தது;
• இது, நாடகப் பாங்கில் அமைந்துள்ளது; இசையோடு பாடுவதற்கேற்றது.
• கலித்தொகையில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நூற்றைம்பது பாடல்கள் உள்ளன.
• கலித்தொகை குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்னும் ஐம்பெரும்பிரிவுகளை உடையது.
• கலிப்பா துள்ளல் ஓசையைக் கொண்டது.
• நமக்குப் பாடமாக அமைந்துள்ள பகுதி, நெய்தற்கலியாகும்.
• இதனை இயற்றியவர் நல்லந்துவனார்.
• இப்பாடல்களைப் படிக்கும்பொழுது, கருத்தாழமும் ஓசையின்பமும் நம் உள்ளத்தினைக் கொள்ளை கொள்ளும்.
• எனவே, இதனைத் தமிழ்ச்சான்றோர் 'கற்றறிந்தார் ஏத்தும் கலி ' எனச் சிறப்பித்துக் கூறுவர்.

நற்றிணை (11th New & 10th, 12th Old Book)
• நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
• நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவதாகும்;
• 'நல்' என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்படுவதும் நற்றிணையே. இஃது அகத்திணை நூலாகும்.
• அவை அகப்பொருள்பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
• 'நல்ல திணை' என்ற அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது.
• இது, நானூறு பாடல்களைக் கொண்டது.
• 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்டது.
• பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.
• நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.
• இதன் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
• போதனார்: சங்ககாலப் புலவர் நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.
• நற்றிணையின் பேரெல்லை 12 அடி.விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.
• நற்றிணை பல்வேறு காலங்களில், புலவர் பலரால் பாடப்பெற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல்.
• ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல், அறவழியில் பொருளீட்டல் முதலிய தமிழர்தம் உயர் பண்புகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்தியம்பும் நூலிது இதில், ஐந்திணைக்குமான பாடல்கள் உள்ளன.
ஆசிரியர் குறிப்பு :
• மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
• இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
• இவர் பாடியனவாக நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றுமாக ஐந்து பாடல் உள்ளன.
• இவர் சங்ககாலத்தவர்.
நக்கண்ணையார்.
• இவர் பெண்பாற்புலவர் ஆவார்.
• 'பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை' யெனவும் கூறப்படுவார்.
• உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
• அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்தான்.
• அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பானைப் போரில் வெற்றி கொள்கின்றான்.
• அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83, 84, 85 ஆம் பாடல்கள் மூலம் அறிகிறோம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்