Type Here to Get Search Results !

7th New Tamil Unit -1

0
7th தமிழ் இயல் 1 (நாமக்கல் கவிஞர்)
நூல் வெளி
• இப்பாடலின் ஆசிரியரை, நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர்.
• இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
• காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார்.
• தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
• மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
• நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது.

7th தமிழ் இயல் 1 (உடுமலை நாராயணகவி)
நூல் வெளி
• பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி.
• இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
• தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்.
• நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

7th தமிழ் இயல் 1 (பேச்சுமொழியும் எழுத்துமொழியும்)
தெரிந்து தெளிவோம்
• 'பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழி நிலைகளும் உண்டு எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்' - மு.வரதராசனார்
தெரிந்து தெளிவோம் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும். தமிழில் பழங்காலம் முதலே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு இருந்துள்ளது.
• தொல்காப்பியர் இவற்றை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.
தெரிந்து தெளிவோம்
•கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.
• படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் பிற மொழிகள் அறிமுகம் ஆகின்றன.
தெரிந்து தெளிவோம்
•இக்காலத்தில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் சான்றோர்களின் உரைகள் ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாகப் பேச்சுமொழியும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

7th தமிழ் இயல் 1 (குற்றியலுகரம், குற்றியலிகரம்)
தெரிந்து தெளிவோம்
• தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்து சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.
❖ குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
❖ நெடில் எழுத்துகளைக் குறிக்க 'கான்' (எ.கா.) ஐகான், ஔகான்
❖ குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
❖ ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' (எ.கா.) அஃகேனம் தெரிந்து தெளிவோம்
• ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
• மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்