Type Here to Get Search Results !

8th New & Old Tamil Book திருக்குறள்

0
திருக்குறள் (8th New Tamil Book)
நூல் வெளி
• பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
• திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
• இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
• அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது.
• பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.
• இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

திருக்குறள் (8th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• பெயர் : திருவள்ளுவர்.
• வேறு பெயர்கள் : முதற்பாவலர், பொய்யில் புலவர்,பெருநாவலர், செந்நாப்போதார்.
• காலம் : கி.மு. 31 இல் பிறந்தவர் என உறுதி செய்து திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
• சிறப்பு :
I. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
II. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே -பாரதிதாசன்
நூல் குறிப்பு :
• திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• குறள் வெண்பாக்களால் ஆனதால், "குறள்" எனவும், மேன்மை கருதித் 'திரு' என்னும் அடைமொழினருடன் 'திருக்குறள்' எனவும் வழங்கப்பெறுகிறது.
• நாடு, மொழி, இனம், சமயம் எல்லாம் கடந்து எக்காலத்துக்கும் பொருந்துவதாக அமைந்தமையால், இஃது 'உலகப்பொதுமறை' எனப் போற்றப்படுகிறது.
• மக்கள், வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகிய அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் விரித்து உரைப்பது திருக்குறள்.
• எனவே, இந்நூல் 'முப்பால்' எனவும் பெயர் பெற்றது. இது நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களையும், ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் பெற்றுள்ளது
• வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.
• இதன் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி.யு. போப் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.
• இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவமாலை என்னும் நூல்,இதன்பெருமைக்கும் சிறப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.
• உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
• இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
• திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் 1886 ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்