Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

7th New & Old Tamil Book திருக்குறள்

திருக்குறள் (7th New Tamil Book)
நூல் வெளி
• திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறுவர்.
• இவர் முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
• தமிழ்நூல்களில் 'திரு' என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
• இதில் அறம்-38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
• அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
• இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.

திருக்குறள் (7th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவர், சுருங்கச்சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
• இவரைப்பற்றித் தெளிவான வரலாறு இதுவரையில் கிடைக்க வில்லை.
• இவருக்கு நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் முதலிய பெயர்கள் உண்டு.
• இவரின் காலம் கி.மு.31 என்பர்.
நூல் குறிப்பு :
• குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் திருக்குறள்.
• இது, திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்பெறுகிறது.
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
• இதில், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.
• ஒவ்வோர் அதிகாரத்துக்கும் பத்துக் குறட்பாக்களென ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
• இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• திருக்குறள், உலகம் ஏற்கும் கருத்துகளைக் கொண்டு உள்ளதனால் 'உலகப் பொதுமறை' என வழங்கப்பெறுகிறது.
• இது, தமிழ்மொழி யிலுள்ள அறநூல்களுள் முதன்மையானது.
• இந்நூல் நூற்றேழு மொழிகளில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ளது.
• மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரைதான் திருக்குறள்.
நூல் பயன்:
• திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும்; பண்புகள் வளரும்; உலகெலாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும்; மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும்; எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்