Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

6th New & Old Tamil Book திருக்குறள்

திருக்குறள் (6th New Tamil Book)
நூல் வெளி
• திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
• எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறியுள்ளார்.
• வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர், பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு
• திருக்குறள் அறத்துப்பால் பொருட்பால். இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
• பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது.
• "திருக்குறளில் இல்லாததும் இல்லை. சொல்லாததும் இல்லை" என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது.
• திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன.
• நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் (6th Old Tamil Book)
ஆசிரியர் குறிப்பு:
• திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
• இவருடைய காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதனைத் தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
• இவருடைய ஊர், பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
• இவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என வேறு பெயர்களாலும் போற்றப்படுகிறார்.
நூல்குறிப்பு
• இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
• இந்நூலில் 133 அதிகாரங்கள் உள்ளன.
• ஒவ்வோர் அதிகாரத்துக்கும் 10 குறட்பாக்கள் என 1330 குறட்பாக்கள் உள்ளன.
• இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலை முப்பால், பொதுமறை, தமிழ்மறை எனவும் கூறுவர்.
• திருக்குறள் ‘உலகப் பொதுமறை' எனப் போற்றப்படுகிறது.
• திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை
கிறித்து ஆண்டு (கி.பி.) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044 (கி.பி. 2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)

கருத்துரையிடுக

0 கருத்துகள்