மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (10th Old சமூக அறிவியல்) |
---|
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
• இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் தோன்றிய பெண் சீர்திருத்தவாதிகள் பெரும் பாலானவர்கள் தேச விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். • இதில் சிலர் தேச விடுதலையோடு சமூக விடுதலைக்கும் பாடுபட்டனர். • அவர்களில் மிக முக்கியமானவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். • 1883-ஆம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இவர் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் கிராமத்தில் வளர்ந்தார். • எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்டார். • இவர் இசை வேளாளர் குலத்தைச் சார்ந்தவர். • பழங்காலத்தில் இக்குலத்தில் பிறந்த பெண்கள் இறைப்பணி மற்றும் கலைப்பணிக்காக அர்பணிக்கப்பட்டனர். • இச்சமூகம் காலமாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது. • பிரபுக்கள் மற்றும் ஜமீன் தார்களால் அவமானப்படுத்தப்பட்டனர். • தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதையும், பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார், அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். • நாடு முழுவதும் தங்கள் இனப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துக் சொல்லி, அவர்களது விடுதலைக்கு ஆதரவு திரட்டினார். • காங்கிரஸ் கட்சியில் தன்னைணைத்துக் கொண்டார். • 1925ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டில் தமிழறிஞர் திரு.வி.க. பெரியார், மயூரமணி சின்னையா பிள்ளை, எஸ். இராமநாதன் போன்றோர் கலந்துகொண்டனர். • இவர்கள் தேவதாசி முறைக்கு எதிராகக் குரலெழுப்பினர். • இதன் விளைவாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர ஆணிவேராக அமைந்தது. • தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம் தமிழகப் பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்களை விழிப்படையச் செய்வதற்கு உறுதுணையாக அமைந்தது. • சமூகப்பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார், பெண்கள் பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார். • தந்தை பெரியார், இராஜாஜி, திரு.வி.க. இவர்களின் உறுதுணையால் இவர் சிறப்பாக செயலாற்றினார். • இவரது அரிய உழைப்பையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தமிழக அரசு, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு சமூகத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம்" என்று பெயரிட்டு இவரைக் கௌரவித்தது. • எந்த உயர்ந்த இலட்சியத்துக்காகப் பொது வாழ்வில் ஈடுபட்டாரோ, அந்த இலட்சியம் முழுமையாக நிறைவேறியதைக் கண்குளிரக் கண்டு அனுபவித்த பிறகு 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி இந்த உலகை விட்டு மறைந்தார். • பரம்பரை பரம்பரையாக வரும் பழக்கங்கள் நிறைந்த தமிழ் சமுதாயம் இன்றளவும் அதனுடைய பழைய மதிப்புகளைக் கொண்டுள்ளது. • 1856இல் விதவை மறுமணச் சட்டம் இயற்றப்ட்ட போதிலும் இன்றும் விதவைகள் சமுதாய விழாக்களில் புறக்கணிக்கப்படுகின்றனர். • 20ஆம் நூற்றாண்டில் நீதிக் கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கங்கள் கொண்டு வந்த சமுதாய முன்னேற்றக் கொள்கைகள் சட்டங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு விதவை மறுமணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகத் தமிழகத்தில் மாறியது. • சதி ஒழிப்பு, விதவைகள் திருமணம் மற்றும் குழந்தைகள் திருமணம் ஒழிப்பு போன்றவை தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். • சாதி ஏற்றத் தாழ்வு சமுதாயத்தில் மற்றுமொரு குறைபாடு ஆகும். • ஆலய நுழைவு இயக்கம் இதற்கு ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டாகும். • கோவில்கள் ஒரு காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது. • அங்கு தாழ்ந்த சாதியினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. • பல சீர்திருத்தவாதிகளான ஈ.வே.இராமசாமி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, வள்ளலார், பாரதி, பாரதிதாசன்,மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் மற்றும் டாக்டர் எஸ். தர்மாம்பாள் போன்றோர் இத்தகைய சமுதாய தீய பழக்க வழக்கங்களை ஒழிக்கப் போராடினார்கள். • இவ்வாறு பெண்கள் தமிழக சமுதாய மாற்றத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளனர். |
மூவலூர் இராமாமிர்தம் (9th தமிழ் புதிய புத்தகம்) |
---|
• 1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர்,
• தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், • தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். • தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது. |
-->
minnal vega kanitham