Type Here to Get Search Results !

ilakkanam 9th tamil unit 1

தன்வினை, பிறவினை (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1)
மாணவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். எங்கும் விளையாட்டு, மகிழ்ச்சியின் ஆரவாரம். கண்ணன் முகமதுவை நோக்கி, "பந்தை என்னிடம் உருட்டு" என்று கத்தினான். முகமது பந்தைக் கண்ணனிடம் உருட்டினான். பந்து உருண்டது. கண்ணன் முகமது மூலம் பந்தை உருட்டவைத்தான். மேற்கண்ட சூழலில்,
• பந்து உருண்டது என்பது தன்வினை
• உருட்டவைத்தான் என்பது பிறவினை
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும்.
பிறவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும். உருவாக்கப்படுகின்றன.
தன்வினை :
1. அவன் திருந்தினான்
2. அவர்கள் நன்றாக படித்தனர்
பிறவினை :
1. அவனைத் திருந்த செய்தான்
2. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்
3. பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார்.

செய்வினை, செயப்பாட்டுவினை (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1)
• அப்பா சொன்னார், "குமுதா, இலையில் உள்ள இட்டிலியை விரைந்து சாப்பிடு. அடுத்துத் தோசை வரப்போகிறது." அவள் சாப்பிட்டு முடிப்பதற்குள், தோசை வைக்கப்பட்டது.)
• அப்பா சொன்னார் - செய்வினைத் தொடர்
• தோசை வைக்கப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
• இது போலவே, பாட்டுப் பாடுகிறாள் - செய்வினைத் தொடர்
• பாட்டுப் (அவளால்) பாடப்பட்டது - செயப்பாட்டுவினைத் தொடர்
தெரிந்து தெளிவோம்
• செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை; செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை என்பதை நினைவில் கொள்க.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.