Type Here to Get Search Results !

தெரிந்து தெளிவோம் 9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 2, 3

நீரின்றி அமையாது உலகு (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 2)
தெரிந்து தெளிவோம்
• அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, அணை, ஏரி, குளம், ஊருணி, கண்மாய், கேணி - எனப் பல்வேறு பெயர்களில் நீர்நிலைகள் உள்ளன.
தெரிந்து தெளிவோம்
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்
1. அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர்
2. அரண் அருவி - மலைமுகட்டுத் தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது
3. ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
4. ஆறு - இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
5. இலஞ்சி - பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
6. உறைக்கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
7. ஊருணி - மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
8. ஊற்று - அடியிலிருந்து நீர் ஊறுவது
9. ஏரி - வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.
10. கட்டுக்கிணறு - சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
11. கடல் - அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு
12. கண்மாய் - பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
13. குண்டம் - சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை குண்டு - குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
14. குமிழி ஊற்று - அடி நிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று
15. கூவல் - உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
16. கேணி - அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
17. புனற்குளம் - நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
18. பூட்டைக் கிணறு - கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு

ஏறு தழுவுதல் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3)
தெரிந்து தெளிவோம்
• எகிப்தில் உள்ள பெனி - ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களிலும் காளைப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3)
தெரிந்து தெளிவோம்
• ஐம்பெருங்குழு
1. அமைச்சர்
2. சடங்கு செய்விப்போர்
3. படைத்தலைவர்
4. தூதர்
5. சாரணர் (ஒற்றர்)
• எண்பேராயம்
1. கரணத்தியலவர்
2. கரும விதிகள்
3. கனகச்சுற்றம்
4. கடைக்காப்பாளர்
5. நகரமாந்தர்
6. படைத்தலைவர்
7. யானை வீரர்
8. இவுளி மறவர்

அகழாய்வுகள் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 3)
தெரிந்து தெளிவோம்
பட்டிமண்டபம்

• பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
• பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.
• மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்று சிலப்பதிகாரத்திலும் (காதை 5, அடி 102)
• பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்று மணிமேகலையிலும் (காதை 1, அடி 16)
• பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை;
எட்டினோடு இரண்டும் அறியேனையே என்று திருவாசகத்திலும் (சதகம் 41)
• பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்று கம்பராமாயணத்திலும் (பாலகாண்டம், நகரப் படலம் 154) பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வருகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.