திராவிட மொழிக்குடும்பம் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தெரியுமா?
• தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் - கால்டுவெல் தெரியுமா ? • மொரிசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது. |
தமிழோவியம் - ஈரோடு தமிழன்பன்(9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தெரிந்து தெளிவோம்
• இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் - பிங்கல நிகண்டு • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார் தெரியுமா? • உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 • தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் - இலங்கை , சிங்கப்பூர் |
தமிழ்விடு தூது (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தெரிந்து தெளிவோம்
• கண்ணி - இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதேபோல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும். |
வளரும் செல்வம் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
தமிழ் எண்கள் அறிவோம். |
தொடர் இலக்கணம் (9th தமிழ் புதிய புத்தகம் இயல் – 1) |
---|
• ஒரு தொடரில் எழுவாயும், செயப்படு பொருளும் பெயர்ச்சொல்லாகவும் பயனிலை வினை முற்றாகவும் இருக்கும். பயனிலை, அந்தத் தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும். ஒரு தொடரில் செயப்படுபொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. செயப்படுபொருள் தோன்றும் தொடர், விளக்கமாக இருக்கும்.
தெரிந்து தெளிவோம் • செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை செய்வினை; செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை என்பதை நினைவில் கொள்க. |
minnal vega kanitham