Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

பாரதியார், பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகனார் & தாராபாரதி (6th தமிழ் புதிய/புத்தகம் புத்தகம்)

பாரதியார்
பாரதியார் (புதிய புத்தகம் இயல் - 2)
நூல் வெளி

• இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
• அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
• இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
• எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
• தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
• மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
• நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
• பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
• பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
பாரதியார் (பழைய புத்தகம் இயல் - 2)
ஆசிரியர் குறிப்பு:

• பாரதியார் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர்.
• 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்று கொண்டாடப்பட்டவர்.
• இவர், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
• கனவு காண்பதில் பாரதிக்கு நிகர் பாரதியே.
• இந்தப் பாட்டில்தான் என்னென்ன கனவுகள்? அன்று அவை கனவுகள். இன்று அவை நனவாகி உள்ளன.
• இவர் வாழ்ந்த காலம் 11.12.1882முதல் 11.9.1921வரை
• 'வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம்' எனத் தொடங்கும் பாடலின் ஒரு பகுதி, நம் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.

பாரதிதாசன்
பாரதிதாசன் (புதிய புத்தகம் இயல் - 1)
நூல் வெளி

• பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
• பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
• தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார். எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
• இவர் பாவேந்தர் என்னும் சிறப்பிக்கப்படுகிறார்.
• இப்பாடல், 'பாரதிதாசன் கவிதைகள்' என்ற நூலில் 'தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
பாரதிதாசன் (பழைய புத்தகம் இயல் - 4)
ஆசிரியர் குறிப்பு

• 'புரட்சிக்கவிஞர்' எனவும், 'பாவேந்தர்' எனவும் புகழப்படுபவர் பாரதிதாசன்.
• இவர்தம் இயற்பெயர் சுப்புரத்தினம்.
• இவர் பாரதியின் கவிதைமீது கொண்ட காதலால், தம்முடைய பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
• பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு முதலியன இவர்தம் கவிதை நூல்கள்.
• இவர் வாழ்ந்த காலம் 29.04.1891 முதல் 21.04.1964 வரை

கவிமணி தேசிக விநாயகனார்
கவிமணி தேசிக விநாயகனார் (புதிய புத்தகம் இயல் - 9)
நூல் வெளி

• தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
• முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
• கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.
• ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா [Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

தாராபாரதி
தாராபாரதி (புதிய புத்தகம் இயல் - 7)
நூல் வெளி

• தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
• கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.
• இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
தாராபாரதி (பழைய புத்தகம் இயல் - 6)
ஆசிரியர் குறிப்பு:

• கவிஞர் தாராபாரதி எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
• ஆசிரியராகப் பணியாற்றிய இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
• புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, தாராபாரதி கவிதைகள் முதலியன இவர்தம் நூல்களுள் சில.
• இவர் வாழ்ந்த காலம் 26.02.1947 முதல் 13.05.2000 வரை

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham