Type Here to Get Search Results !

ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு (10th தமிழ் பழைய புத்தகம் இயல் 6)

0
தமிழ்விடு தூது (10th Old Tamil Book இயல் 6)
நூற்குறிப்பு :
• தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் தூதும் ஒன்று.
• கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப்பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது தூது இலக்கியம்.
• மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர்மேல் காதல்கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது தமிழ்விடு தூது.
• இதனை இயற்றியவர் பெயர் அறிய இயலவில்லை
• திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு - உலகுக்குப் பொது. - திரு. வி. கலியாணசுந்தரனார்
• திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. -கி.ஆ.பெ.விசுவநாதம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்