பெரியபுராணம் (10th Old Tamil Book இயல் 5) |
---|
ஆசிரியர் குறிப்பு:
• பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார். • இவர், தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூரில் பிறந்தவர். • இவரது இயற்பெயர் அருண்மொழித்தேவர். • இவர், அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர். • இவர், உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர். • இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர். • இவரது காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. நூற்குறிப்பு: • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர். • அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் 'பெரியபுராணம்' என்னும் பெயர் பெற்றது. • இந்நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர், 'திருத்தொண்டர் புராணம்' என்பது. • தில்லை நடராசப்பெருமான், 'உலகெலாம்' என்றுஅடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர். இவரது பாடல்கள் அனைத்தும் தெய்வ மணம் கமழும் தன்மையுடையன. எனவேதான், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், 'பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்துள்ளார். • உலகம்,உயிர்,கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், 'பெரியபுராணம்' என்பார் திரு. வி. கலியாணசுந்தரனார். |
ஆசிரியர் குறிப்பு & நூற்குறிப்பு (10th தமிழ் பழைய புத்தகம் இயல் 5)
டிசம்பர் 20, 2023
0
minnal vega kanitham