Type Here to Get Search Results !

ம.பொ.சிவஞானம் [10th New tamil Book]

1
10வது சமூக அறிவியல்: குடிமையியல் : அலகு - 2 : நடுவண் அரசு
ம.பொ.சிவஞானம்
1. ம.பொ.சிவஞானம் பிறந்த ஆண்டு - ஜீன் 26, 1906
2. ம.பொ.சிவஞானம் எங்கு பிறந்தார் - சென்னை (ஆயிரம் விளக்கு வட்டம் சால்வன்குப்பம்)
3. ம.பொ.சிவஞானம் தந்தை, தாய் பெயர் - பொன்னுசாமி, சிவகாமி
5. ம.பொ.சிவஞானத்திற்கு பெற்றோர் இட்ட பெயர் - ஞானப்பிரகாசம்
6. ம.பொ.சிவஞானத்துக்கு 'சிவஞானி' என்று பெயர் வைத்த முதியவர் - சரபையர்
7. சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.
8. ம.பொ.சிவஞானம் அன்னை எந்தெந்த அம்மானைப் பாடல்களை பாடுவார் - அல்லி அரசாணி மாலை,பவளக்கொடி மாலை
9. ம.பொ.சிவஞானம் யாருடைய பாடல்களை விரும்பிப் படித்தார் - சித்தர்
10. ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கு 2 வழிகள் உள்ளது. ஒன்று கல்வி, மற்றொன்று எது - கேள்வி
11. ம.பொ.சிவஞானத்தின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமையில் யாருக்கு பங்குண்டு -திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
12. பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, எனக்கு விருப்பமான புத்தகங்களை, மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் - ம.பொ.சிவஞானம்
13. உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறேன். குறைந்த விலைக்கு நல்ல நூலொன்று கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவேன் - ம.பொ.சிவஞானம்
14. என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்து வைத்துள்ள சொத்துகள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறில்லை என்று உறுதியாகக் கூறுவேன் - ம.பொ.சிவஞானம்
15. ம.பொ.சிவஞானம் எந்த கட்சியால் நடத்தப்பட்ட ஊர்வலங்களிலும் கதர் விற்பனையிலும் தவறாமல் கலந்து கொள்வார் – பேராயக்கட்சி
16. ம.பொ.சிவஞானம் "தமிழா! துள்ளி எழு" என்னும் தலைப்புடைய துண்டறிக்கை ஒன்றைக் கடற்கரையில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு -30.09.1932
17. பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்- ம.பொ.சிவஞானம்
18. ம.பொ.சிவஞானத்திற்கு எத்தனை மாத கடுங்காவல் தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது - 3, 300 ரூபாய்
19. ம.பொ.சிவஞானம் பணம் கட்டத்தவறியதால் எத்தனை மாதம் சிறை தண்டனை அனுபவித்தார்- 6
20. வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாள் - ஆகஸ்டு 8, 1942
21. 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தைப் பம்பாயில் கூடிய அகில இந்திய பேராயக்கட்சி ஒரு மனதாக நிறைவேற்றிய ஆண்டு - ஆகஸ்டு 8, 1942
22. ம.பொ.சிவஞானம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ஆண்டு - ஆகஸ்டு 13, 1942 (காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் உட்பட, தென்னகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரை அங்கு நான் கண்டேன்)
23. ம.பொ.சிவஞானம் வேலூர் சிறையிலிருந்து எந்த சிறைக்கு மாற்றப்பட்டார் - அமராவதி
24. அமராவதி சிறைச்சாலையில் சிவஞானத்திற்கு ஒதுக்கப்பட்ட அறையின் மேற்கூரை எதனால் வேயப்பட்டது - துத்தநாக தகடு (கோடைக்காலத்தில் 120 பாகை அளவில் வெயில் காயக்கூடிய பகுதி)
25. ம.பொ.சிவஞானம் சென்னை மாநகரில் விடுதலை விழாக் கொண்டாடி பிறகு குழுவாக வடக்கெல்லைக்குச் சென்ற ஆண்டு - ஆகஸ்டு 15, 1947
26. ம.பொ.சிவஞானம் யாருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வடக்கெல்லைக்குச் சென்றனர் -மங்கலங்கிழார்
27. வடக்கெல்லை தமிழ் மக்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்- மங்கலங்கிழார்
28. வடக்கெல்லை போராட்டம் எந்தெந்த இடங்களில் தொடங்கியது - சித்தூர்,புத்தூர்,திருத்தணி
29. தமிழாசான் மங்கலங்கிழார் மற்றும் தமிழரசுக் கழகம் இணைந்து எங்கெங்கு தமிழர் மாநாட்டை நடத்தியது - சென்னை, திருத்தணி
30. வடக்கெல்லை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் இராஜமுந்திரி சிறையில் உயிர் துறந்தவர் - திருவாலங்காடு கோவிந்தராசன்
31. வடக்கெல்லை போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் பழநி சிறையில் உயிர் துறந்தவர் -மாணிக்கம்
32. யார் தலைமையில் மத்திய அரசு மொழிவாரி வாரியத்தை அமைத்தது - கே.எம்.பணிக்கர்
33. மொழிவாரி வாரியம் ஆணையத்தின் அறிக்கையின்படி சித்தூர் மாவட்டம் எம்மாநிலத்துடன் சேர்க்கப்பட்டது - ஆந்திரா
34. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் என்று முழங்கினோம் - ம.பொ.சிவஞானம்
35. இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து என கூறியவர் - ம.பொ.சிவஞானம்
36. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தியவர் - ம.பொ.சிவஞானம்
37. படாஸ்கர் ஆணையம் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த பகுதி - திருத்தணி
38. ஆந்திர தலைவர்கள் ஆந்திராவிற்கு எதை தலைநகராக இருக்க வேண்டும் என்று கருதினர் - சென்னை
39. முதல்வர் இராஜாஜிக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்த்திய போது, தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறக்கவும் அவர் முன்வந்தார்.
40. சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம்
41. மாநகராட்சியின் சிறப்புக் கூட்ட மொன்றை அப்போதைய மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலை நகரைக் காப்போம்" என்று முழங்கினேன்.
42.'தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்' என்று முழங்கியவர் - ம.பொ.சிவஞானம்
43. எந்த நாள் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு "ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளே அமையும்" உறுதியளித்தார் - 25.03.1953
44. ம.பொ.சிவஞானம் தெற்கெல்லைப் போராட்டத்தில் நாகர்கோவில் நகரிலுள்ள வடிவீசுவரத்தில், வடிவை வாலிபர் சங்கத்தின் எந்த ஆண்டு விழாவில் பேசினார் - அக்டோபர் 25, 1946
45. எல்லைக் கிளர்ச்சிகளை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்த கழகம் - தமிழரசுக்கழகம்
46. 1953-54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள (திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம் - ம.பொ.சிவஞானம்
47. தெற்கெல்லைப் போராட்டத்தில் திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக உயிர்நீத்த தமிழரசுக் கழகத் தோழர்கள் - தேவசகாயம், செல்லையா
48. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் - ஏ.நேசமணி
49. எந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைத்துக்கொள்ளப்பட்டு தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது - நவம்பர் 1, 1956
50. மார்ஷல் ஏ.நேசமணி நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு எங்கு அவருடைய சிலையோடு மணிமண்டபத்தை அமைத்துள்ளது - நாகர்கோவில்
51. கேரள மாநிலம் உருவானபோது தமிழர்கள் மிகுதியாக வாழக்கூடிய எந்த பகுதிகள் தமிழகத்தோடு சேர வேண்டும் என்று தமிழரசுக் கழகம் போராட்டத்தைத் தொடங்கியது- தேவிகுளம், தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம்,விளவங்கோடு, நாகாகோவில்
52. பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான ஆண்டு - அக்டோபர் 10, 1955
53. சென்னை மாநிலத்தில் உள்ள எந்த மாவட்டம் கேரளாவுடன் இணைந்தது - மலபார் மாவட்டம்
54. புறநானூறு மற்றும் சிலப்பதிகாரமானது தமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லை எது குறிப்பிடுகிறது - வேங்கடமலை, குமரி முனை
55. ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
56. தமிழ் வணிகருக்கும், கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் எந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது - கி.பி. 2ம்நூற்றாண்டில்
57. சிலம்புச் செல்வர் என அழைக்கப்படுபவர் - ம.பொ.சிவஞானம்
58. சிவஞானம் காலக்கட்டம் என்ன - 1906 1995
59. ம.பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவை உறுப்பினரான வருடம் - 1952 - 1954
60. ம.பொ.சிவஞானம் சட்டமன்ற மேலவைத் தலைவராக பதவி வகித்த ஆண்டு – 1972 - 1978
61. தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் - ம.பொ.சிவஞானம்
62. ம.பொ.சிவஞானம் 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார் - 1966
63. ம.பொ.சிவஞானத்திற்கு எங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது – திருத்தணி,தியாகராய நகர்
64. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு - 1931
65. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் எந்த ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாகக் கருதப்படுகிறது - 1906
66. காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறையைத் தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஆண்டு - 1906
67. வ.உசிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டு -1906

நூல் வெளி
• ம.பொ.சிவஞானத்தின் 'எனது போராட்டம்' என்னும் தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
• சிலம்புச்செல்வர் என்று போற்றப்படும் ம.பொ.சிவஞானம் (1906 - 1995) விடுதலைப் போராட்ட வீரர்; 1952 முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972 முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்; தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர்.
• 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
• தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham