Type Here to Get Search Results !

இந்திய அரசியலமைப்பு, முகவுரை & குடியுரிமை [10th சமூக அறிவியல்]

10வது சமூக அறிவியல்: குடிமையியல்: அலகு - 1: இந்திய அரசியலமைப்பு
இந்திய அரசியலமைப்பு
1. அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் தோன்றியது -அமெரிக்கா ஐக்கிய நாடுகள் (USA).
2. அமைச்சரவைத் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1946.
3. அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு-1946 டிசம்பர் 9.
4. அரசியலமைப்பு நடைமுறை வந்த ஆண்டு - 1950-ஜனவரி – 26.
5. அரசியலமைப்பை நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1949 நவம்பர் 26.
6. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவர்-சச்சிதானந்த சின்கா.
7. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்-ராஜேந்திர பிரசாத்.
8. அரசியலமைப்பு நிர்ணய சபையின் துணை தலைவர்கள் - H.C. முகர்ஜி, V.T கிருஷ்ணமாச்சாரி.
9. அரசியலமைப்பு நிர்ணய சபை மொத்த உறுப்பினர்கள்- 389.
• மாகாண பிரதிநிதிகள்-292.
• சுதேசி அரசுகளின் நியமன உறுப்பினர்கள்-93.
• மாகாண முதன்மை ஆணையர் – 3.
• பலுசிஸ்தான் -1.
10. அரசியலமைப்பு நிர்ணய சபை கூட்டம் 11 -அமர்வுகளாக 166 -நாட்கள் நடைபெற்றது, முன்வைக்கப்பட்டன திருத்தங்கள் -2473.
11. அரசியலமைப்பு சட்ட வரைவு குழு தலைவர் - B.R அம்பேத்கர்.
12. இந்திய அரசியலமைப்பின் தந்தை - Dr. B.R. அம்பேத்கர்.
13. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட போது இருந்த பகுதிகள், சரத்துகள், அட்டவணைகள் - 22 பகுதி, 395 சரத்து, 8 அட்டவணைகள்.
14. தற்போது - 25 பகுதி, சரத்து 12 அட்டவணைகள்.
15. இந்திய அரசியலமைப்பு சட்டம் யாரால் இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதப்பட்டது -பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா.
16. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்:
• எழுதப்பட்ட நீளமான அரசியலைமைப்பு.
• பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டது.
• நெகிழும் தன்மை மற்றும் நெகிழா தன்மை.
• கூட்டாட்சி முறை, நாடாளுமன்ற முறை.
• சுதந்திரமான நிதித்துறை.
• ஒற்றைக் குடியுரிமை.
• இந்திய சமய சார்பற்ற நாடு.
• 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.

முகவுரை
17. முகவுரை Preamble என்ற சொல்- அரசியலமைப்பு அறிமுகம் (அ) முன்னுரை.
18. அரசியலமைப்பின் திறவுகோல் - முகவுரை.
19. நேருவின் குறிக்கோள் தீர்மானம் நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு -1947 ஜனவரி -2.
20. முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு - 1976-42 ஆவது சட்ட திருத்தம் - ஒரு முறை
21. 1789 -ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்கள் - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்.
22. 1976 - 42 ஆவது திருத்தம், மூலம் சேர்க்கபட்ட மூன்று சொற்கள்-சமதர்மம், சமயச்சார்பின்மை , ஒருமைப்பாடு.
23. ‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
24. இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
25. 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின.
26. சிட்டிசன் (Citizen) என்ற செல் சிவிஸ் ( Civis) என்ற லத்தின் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும் இதன் பொருள் - நகர அரசில் வசிப்பவர்.
27. இந்திய அரசியலமைப்பு இந்தியா முழுவதும் - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
28. இந்திய அரசியலமைப்பின் பகுதி II சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
29. குடியுரிமை சட்டம் - 1955.
30. குடியுரிமை சட்டம் எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது - 8.
31. முதலில் வழங்கிய குடியுரிமை சட்டம் - காமன்வெல்த் குடியுரிமை.
32. காமன்வெல்த் குடியுரிமை நீக்கப்பட்ட ஆண்டு - 2003 .
33. குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு -1955.
• குடியுரிமை பெறுதல் - 5 வழி.
• குடியுரிமை இழத்தல் - 3 வழி.
34. குடியுரிமை பெறுதல் : 5 வழி.
• பிறப்பு.
• வம்சாவளி .
• பதிவு செய்தல்.
• இயல்புரிமை.
• பிரதேச இணைப்பு
35. குடியுரிமை இழத்தல் : 3 வழி.
• துறத்தல்.
• முடிவுரை செய்தல்.
• இழத்தல்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.