10th சமூக அறிவியல் | இந்திய அரசியலமைப்பு உங்களுக்குத் தெரியுமா?
மின்னல் வேக கணிதம் by JPDநவம்பர் 16, 20230
உங்களுக்குத் தெரியுமா?
• பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இத்தாலிய பாணியில் அவரது கைப்பட எழுதப்பட்டது.
உங்களுக்குத் தெரியுமா?
• 1789ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன முக்கிய முழக்கங்களாயின.
• இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இவற்றிற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• 1978ஆம் ஆண்டு, 44ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தப்படி, அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை (பிரிவு 31) நீக்கப்பட்டது. •
இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பகுதி XII, பிரிவு 300 A வின் கீழ் ஒரு சட்ட உரிமையாக வைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• தற்போது அதிகாரப் பகிர்வு என்பது மத்திய அரசு பட்டியலில் 100 துறைகள், மாநில அரசு பட்டியலில் 61 துறைகள், மற்றும் இரண்டுக்கும் பொதுவான பொதுப்பட்டியலில் 52 துறைகள் என்றும் மாற்றப்பட்டுள்ளது.
• 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து 5 துறைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
• அவை, கல்வி, காடுகள், எடைகள் மற்றும் அளவுகள், பறவைகள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு, மற்றும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற அமைப்புகளைத் தவிர பிற நீதிமன்றங்களின் நீதி நிர்வாகம் ஆகியனவாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
• 1969இல் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து முழுவதும் ஆராய தமிழக அரசு டாக்டர். P.V.இராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழு ஒன்றை நியமித்தது.
உங்களுக்குத் தெரியுமா?
• 2004ஆம் ஆண்டு இந்திய அரசு செம்மொழிகள் எனும் புதிய வகைப்பாட்டினை ஏற்படுத்த தீர்மானித்தது.
• அதன்படி 6 மொழிகள் செம்மொழி தகுதியை பெற்றுள்ளன. அவை, தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம்(2008), மலையாளம் (2013) மற்றும் ஒடியா(2014).
உங்களுக்குத் தெரியுமா?
• அரசியலமைப்பின் - 42வது சட்டத்திருத்தம் 'குறு அரசியலமைப்பு' என அறியப்படுகிறது.
minnal vega kanitham