Type Here to Get Search Results !

2024 Group 4 Tamil Study Plan -1

0
உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 


3. பிரித்தெழுதுக (2 Questions) 1. “தண்டளிர்ப்பதம்” இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
(அ) தண்+அளிர்+பதம்
(ஆ) தன்மை+தளிர்+பதம்
(இ) தண்மை+தளிர்+பதம்
(ஈ) தண்டளிர்+பதம்
2. கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
(அ) கலம் + அகம்
(ஆ) கலம் + பகம்
(இ) கலம்பு + அகம்
(ஈ) கல் + அம்பகம்

4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் (2 Questions) 1. “நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை” என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற “நனந்தலை உலகம்” என்பதற்கு எதிர்ச்சொல்?
(அ) அகன்ற உலகம்
(ஆ) மேலான உலகம்
(இ) சிறிய உலகம்
(ஈ) கீழான உலகம்
2. எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
(அ) தொடங்குதல்
(ஆ) முடித்தல்
(இ) நிற்றல்
(ஈ) ஏற்றல்

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் (2 Questions) 1. சரியான அகரவரிசையைத் தேர்க.
(அ) மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
(ஆ) கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
(இ) முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
(ஈ) மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
2. பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
(அ) கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்.
(ஆ) ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
(இ) தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
(ஈ) ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் (2 Questions) 1. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. “உள்ளங்கை நெல்லிக்கனி போல”
(அ) வெளிப்படைத் தன்மை
(ஆ) வெளிப்படையற்ற தன்மை
(இ) மறைத்து வைத்தல்
(ஈ) தன்னலமின்மை
2. “சிலை மேல் எழுத்து போல” இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
(அ) தெளிவாகத் தெரியாது
(ஆ) தெளிவாகத் தெரியும்
(இ) நிலைத்து நிற்கும்
(ஈ) நிலைத்து நிற்காது

6. பிழை திருத்தம் - சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல் (4 Questions) 1. மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
(அ) கூகை கூவும்
(ஆ) கூகை குனுகும்
(இ) கூகை குழறும்
(ஈ) கூகை அலறும்
2. சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(அ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரபோகிறது.
(ஆ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரபோகிறது
(இ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது
(ஈ) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது
3. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக. “கோல்டு பிஸ்கட்”
(அ) வைரக்கட்டி
(ஆ) அலுமினியக்கட்டி
(இ) தங்கக்கட்டி
(ஈ) தாமிரக்கட்டி
4. சரியான தொடரைக் கண்டறிக.
(அ) தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்
(ஆ) என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி
(இ) நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்
(ஈ) “தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி” என்று கவிஞர் கூறினார்

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (1 Questions) 1. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.
அ. Vowel - 1. மெய்யெழுத்து
ஆ. Consonant - 2. ஒரு மொழி
இ. Homograph - 3. உயிரெழுத்து
ஈ. MOnolingual - 4. ஒப்பெழுத்து
அ. 1 3 2 4
ஆ. 3 4 1 2
இ. 2 4 3 1
ஈ. 3 1 4 2

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11.வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல் (4 Questions)
1. “கேள்” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
(அ) கேட்டு
(ஆ) கேட்ட
(இ) கேட்டல்
(ஈ) கேட்டான்
2. “தணிந்தது” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
(அ) தணி
(ஆ) தணிந்த
(இ) தணிந்து
(ஈ) தனி
3. “தேடு” – வினைமுற்று சொல்
(அ) தேடிய
(ஆ) தேடினார்
(இ) தேடி
(ஈ) தேடுதல்
4. “தருக” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
(அ) தந்த
(ஆ) தரு
(இ) தா
(ஈ) தந்து

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் (4 Questions)
1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. “கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்”
(அ) உடன்பாட்டு வாக்கியம்
(ஆ) எதிர்மறை வாக்கியம்
(இ) பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
(ஈ) கலவை வாக்கியம்
2. கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
(அ) அண்ணனோடு போ
(ஆ) கூடு கட்டு
(இ) தமிழ்ப்படி
(ஈ) அரசு ஆணை பிறப்பித்தது
3. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர் - இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?
(அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
(ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
(இ) ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
(ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
4. மாலதி மாலையைத் தொடுத்தாள் இது எவ்வகை வாக்கியம்?
(அ) செய் வினை
(ஆ) செயப்பாட்டு வினை
(இ) தன் வினை
(ஈ) பிற வினை

நூல் வெளி (17 Questions) 1. முடியரசன் இயற்றாத நூல் எது ?
A) பூங்கொடி
B) நீலமேகம்
C) வீரகாவியம்
D) காவியப்பாவை
2. மூன்றடி சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?
A) குறுந்தொகை
B) ஐங்குறுநூறு
C) அகநானூறு
D) நற்றிணை
3. வரதன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A) நல்லாதனார்
B) ஒட்டக்கூத்தர்
C) காளமேகப் புலவர்
D) புதுமைப்பித்தன்
4. கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
A) கண்ணீர்ப் பூக்கள்
B) ஊர்வலம்
C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு
D) சோழ நிலா
5. புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை?
A) ஓவிய எழினி
B) சிற்பக்கலை
C) மெய்க்கீர்த்தி
D) பைஞ்சுதை
6. பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
A) கம்பர்
B) குலசேகரர்
C) ஆண்டாள்
D) பெரியாழ்வார்
7. சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
A) ரா.பி.சேதுப்பிள்ளை
B) சோமசுந்தர பாரதியார்
C) குன்றக்குடி அடிகளார்
D) வீரமாமுனிவர்
8. இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ——– நூலாகும்
A) இரட்டை மணிமலை
B) மும்மணிக்கோவை
C) தெய்வமணிமாலை
D) மனுமுறைகண்டவாசகம்
9. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
A) நெடுந்தொகை
B) திருக்குறள்
C) முத்தொள்ளாயிரம்
D) கம்பராமாயணம்
10. ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை
A) பத்து
B) ஆறு
C) ஏழு
D) ஐந்து
11. வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
A) தூது
B) பள்ளு
C) கலம்பகம்
D) குறவஞ்சி
12. கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று?
கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று 1ம் கூற்று 2ம் சரி
D) கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
13. சரியான இணைகளைத் தேர்ந்தெடு
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ.இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி

A) 1ம் மற்றும் 2ம் சரி
B) 2ம் மற்றும் 3ம் சரி
C) 1ம் மற்றும் 3ம் சரி
D) 2ம் மற்றும் 4ம் சரி
14. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க – “இளங்கோவடிகள்”
a) சேரமரபைச் சார்ந்தவர்
b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர்
d) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று குறிப்பிட்டவர்

A) அனைத்தும் சரி
B) (a), (b) சரி
C) (a), (c), (d) சரி
D) அனைத்தும் தவறு
15. கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.
கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) கூற்று இரண்டும் சரி
D) கூற்று இரண்டும் தவறு
16. சரியான பதிலைத் தேர்வு செய்க
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்
II. விட்டுனு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது

A) I, III, IV மட்டும் சரி
B) I , II மட்டும் சரி
C) I, II, III மட்டும் சரி
D) அனைத்தும் சரி
17. பொருத்தமான விடையைத் தருக
a) சிறுபஞ்சமூலம் – 1. காப்பிய இலக்கியம்
b) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
c) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
d) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்

A) 3 4 1 2
B) 3 1 4 2
C) 2 3 1 4
D) 4 1 2 3


2024 TNPSC Group 4 Online Test Batch 👇👇👇 Click Here 👇👇👇

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்