Type Here to Get Search Results !

குரூப் - 4 GK Notes – 3 மாநில அரசு

0


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------

மாநில அரசு (100 QUESTIONS)

1. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன?  28 மாநிலங்கள் – 9  யூனியன் பிரதேசங்கள்

2.  மாநில அரசைப் பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட பகுதி? 6

3. மாநில அரசு பற்றி கூறும் அரசியலமைப்பு சட்ட விதி? 152 முதல் 237 வரை

4. அரசியலமைப்பின் எந்த விதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கப்பட்டது? 370

5. மாநில அரசாங்கம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது? மூன்று நிர்வாகம், சட்டம் மற்றும் நீதித்துறை

6. மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் மாநில நிர்வாகம் யாருடைய பெயரில் நடைபெறுகிறது? ஆளுநர்

7. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டவிதி மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை பற்றி கூறியது சட்டப்பிரிவு? 154

8.  மாநில ஆளுநரின் நியமனம் செய்பவர்? இந்திய குடியரசுத் தலைவர்

9. மாநில ஆளுநரின் பதவிக்காலம்? 5 ஆண்டுகள் அல்லது குடியரசுத்தலைவர் விரும்பும் வரை

10. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொதுவாக சொந்த மாநிலத்தின் ஆளுநராக இருக்க முடியாது

11. ஆளுநரை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது? இந்திய குடியரசுத் தலைவர்

12. மாநிலத்தின் ஆளுநர் தனது பதவி துறப்பு கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்? குடியரசுத் தலைவரிடம்

13. ஒரு மாநிலத்தின் ஆளுநரை யாரால் பதவிநீக்கம் செய்ய முடியாது? மாநில சட்டமன்றம் அல்லது உயர் நீதிமன்றம்

14. ஆளுநரை நியமிக்க எத்தனை மரபுகள் பின்பற்றப்படுகின்றன? இரண்டு

i. அதே மாநிலத்தை சார்ந்தவராக ஆளுநர் இருக்கக்கூடாது

ii. மாநிலத்தின் ஆளுநரை மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து நியமிக்கப்பட வேண்டும்

15. ஒரு ஆளுநர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக நியமிக்கப்படும் சட்டவிதி? 158 (3A)

16. பொறுப்பு ஆளுநருக்கு ஊதியம் மற்றும் படிகளை வழங்க அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டுபவர்? குடியரசுத் தலைவர்

17. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி? சர்க்காரியா கமிட்டி 1983

18. சர்க்காரியா கமிஷனின் முழு பெயர்? ரஞ்சித் சிங் சர்க்காரியா

19. ஆளுநரின் நியமனம் செய்த பரிந்துரை செய்த கமிட்டி?  சர்க்காரியா கமிட்டி

20. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர்? பாத்திமா பீவி

21. தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதூ நான்குமுறை

22. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டப்பிரிவு ஆளுநருக்கு தேவையான தகுதிகளை கூறுவது? விதி157, 158

23. ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆவதற்கு வயது வரம்பு எவ்வளவு இருக்கவேண்டும்? 35 நிரம்பியவர்

24. முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட செயல்களை ஆளுநர் செய்கிறார் என்று கூறும் சட்ட விதி? 163

25. மாநில அரசின் தலைவர்? ஆளுநர்

26. மாநில அரசாங்கத்தின் தலைவர்? முதலமைச்சர்

27. மாநிலத்தின் அரசியல் அமைப்பின் தலைவர்? ஆளுநர்

28. மாநில அரசு பணியாளர் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? மாநில ஆளுநர்

29. மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? குடியரசுத் தலைவரிடம்

30. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? மாநில ஆளுநர்

31. மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரின் பனிக்காலத்தில் நியமனம் செய்பவர்? மாநில ஆளுநர்

32. மாநிலத் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யும் முறை மாநில உயர்ந்திமன்ற நீதிபதியை பதவி நக்கம் செய்யும் முறையைப் போன்றது

33. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான அதிகாரம் பெற்றவராக திகழ்கிறார்? மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி யின் போது

34. மாநில சட்டமன்றத்தை கூட்டவும் ஒத்தி வைக்கவும் கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்? மாநில ஆளுநர்

35. மாநிலத்தில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்தொடரில் முதல் உரையை நிகழ்த்துவார்? மாநில ஆளுநர்

36. மாநிலத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும்போது சட்டமன்றத்தை தலைமையேற்று நடத்த உறுப்பினர நியமிக்கும் அதிகாரம்? ஆளுநர்

37. மாநிலத்தில் ஆங்கிலோ இந்திய வகுப்பினரை ஒருவரை நியமிக்கும் அதிகாரம்? மாநில ஆளுநர்

38. மாநிலத்தின் சட்ட மேலவையில் உள்ள உறுப்பினர்களை ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர் ? 1/6

39. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா மாநில உயர்நீதிமன்றத்தில் அதிகாரத்திற்கு தீங்குவிளைவிக்கும் என்று ஆளுநர் கருதும் போது அதனை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைக்கலாம்

40. மாநிலத்தில் சட்டமன்றம் நடைபெறாத போது அவசர சட்டத்தை பிறப்பிக்கும் சட்டவிதி: 213

41. மாநிலத்தின் ஆளுநரால் நியமிக்கப்படும் அவசர சட்டம் எத்தனை மாதத்திற்கள்மாநில சட்டமன்றத்தால் ஒப்புதல் பெற வேண்டும் ? ஆறு மாதத்திற்குள்

42. மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆண்டு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்? மாநில ஆளுநரிடம்

43. ஆளுநரின் சமர்ப்பிக்கும் அதிகாரம்?

i. மாநிலத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை மற்றும்

ii. அரசு பணியாளர் தேர்வாணைய குழுவின் அறிக்கை அரசின்                          

iii. தணிக்கை குழு அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்

44. மாநிலத்தின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை தயார்செய்து சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யும் கடமை யாரிடம் உள்ளது? ஆளுநரிடம்

45. ஆண்டு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பு? மாநில நிதியமைச்சர்

46. மாநில சட்டமன்றத்தில் துணை வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அதிகாரம் படைத்தவர்? மாநில நிதியமைச்சர்

47. பணமசோதா யாருடைய முன் அனுமதி பெற்று சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்? ஆளுநர்

48. மாநிலத்தின் நிதி ஆணையத்தை அமைக்கும் அதிகாரம் படைத்தவர்? மாநில ஆளுநர்

49. மாநிலத்தின் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்போது அவசர நிதியிலிருந்து நீதியை பிடிக்கும் அதிகாரம் படைத்தவர்? மாநில ஆளுநர்

50. மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்பவர்? மாநில ஆளுநர்

51. மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்? மாநில ஆளுநர்

52. உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்? இந்திய குடியரசுத் தலைவர்

53. யாருடைய ஆலோசனையின்பேரில் இந்திய குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கிறார்? மாநில ஆளுநர்

54. மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட மன்றம் செயல்பாடுகள் தொடர்பான செய்திகளை ஆளுநர் யாரிடமிருந்து பெறமுடியும்? முதலமைச்சர்

55. மாநில சட்டமன்றத்தில் பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத போது எந்தக் கட்சித் தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஆளுநரிடம்

56. அமைச்சரவை பெரும்பான்மை இறந்தால் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? ஆளுநரிடம்

57. எந்த விதியைப் பயன்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க ஆளுநர் பரிந்துரை செய்ய முடியும்? விதி 356

58. எப்போது மாநிலத்தின் ஆளுநர் உண்மையான பிரதிநிதியாக செயல்படுகிறார் ? மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி யின் போது மட்டும்

59. ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கு எதிராக எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரமுடியாது கூறும் விதி? 361(1)

60. மாநிலத்தின் உண்மையான தலைவர் முதலமைச்சர்

61. மாநிலத்தின் பெயரளவு தலைவர் மாநில ஆளுநர்

62. மாநில அரசின் தலைவர் ஆளுநர்

63. மாநில அரசாங்கத்தின் தலைவர் முதலமைச்சர்

64. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? O.P ராமசாமி 1947-1949

65. 1949 முதல் 1952 வரை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? குமாரசாமி

65. காமராஜர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவருக்கு அடுத்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் ? பக்தவச்சலம் 1963-1967

67. 1983 ஜனவரி மாதம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்? ஜானகி ராமச்சந்திரன்

68. முதல் முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா எப்பொழுது ஆட்சி பொறுப்பேற்றார்? 1991-1996

69. யாருடைய பரிந்துரையின் பெயரில் ஆளுநர் மாநில அமைச்சர்களை நியமனம் செய்கிறார்?  முதலமைச்சர்

70. மாநில அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்பவர்? மாநில முதலமைச்சர்

71. ஆளுநருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே செய்தித் தொடர்பாளராக இருப்பவர்? முதலமைச்சர்

72. மாநிலத்தின் அமைச்சரவை மொத்தமாக எதற்கு கூட்டுப்பொறுப்பு ஆனது? மாநில சட்டமன்றத்திற்கு

73. சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் அமைச்சராக பதவியேற்றார் எத்தனை மாதத்திற்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்குள்

74. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை உள்ளது என்று கூறும் சட்ட விதி? 163

75. முதலமைச்சரை தலைவராக கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும்போது உதவி செய்யும் ஆலோசனை வழங்கவும் கூறும் சட்ட விதி? 163 (1)

76. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படும் சட்டவிதி? 164 (1)

77. மாநிலத்தில் உள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை சதவீதத்திற்கு மிகக் கூடாது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது (26 நபர்)

78. மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டிற்கும் மிகக் கூடாது என்று கூறும் சட்ட விதி 164 [1A]

79. மாநில ஆளுநர் நியமனம் செய்யும் பதவிகள்?

i. மாநில அரசு தலைமை வழக்கறிஞர்

ii. மாநிலத் தேர்தல் ஆணையர் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

iii. மாநில திட்டக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

iv. மாநில நிதி குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

80. சட்ட மேலவை உள்ள மாநிலங்கள்? பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர

81. தமிழகத்தில் அதிகபட்சம் எத்தனை உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்கலாம்? 36 அமைச்சர் (234இல் 15 விழுக்காடும்)

82. தமிழக சட்டமன்றம் எத்தனை அவைகளை கொண்டது? ஓரவை

83. மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதை பொறுத்து மாறும்? மக்கள் தொகையைப் பொறுத்து மாறும்

84. தமிழகத்தின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்? 500 க்கு மிகாமல்

85. தமிழகத்தில் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்?  60 க்கு குறையாமல்

86. மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில்? 1/3 ங்கு

87. சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் எவ்வளவு இருக்க வேண்டும்? 40

88. நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் காஷ்மீர் சட்ட மேலவையில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளன? 36 உறுப்பினர்கள்

89. தமிழக சட்டமன்றம் ஆனது எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது? 235

90. தமிழகத்தில் மக்களால் நியமிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை பேர்? 234

91. தமிழகத்தில் ஆளுநரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர் எத்தனை பேர்? ஒன்று

92. மாநிலத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தெரிந்து இருப்பவர்? மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்

93. சபாநாயகர் தனது பதவியை ராஜினாமா செய்தால் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது

94. சட்டமன்றத்தில் இருந்து சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய குறைந்த பட்சம் எவ்வளவு நாள் அவகாசம் கொடுக்க வேண்டும்? 14 நாள்

95. சட்ட மன்றம் கலைக்கப்படும் போது சபாநாயகர் தனது பதவியை இழக்க மாட்டார் மேலும் புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டம் வரை தனது பதவியை தொடர்வார்

96. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குமிகாமலும் குறைந்தபட்ச எண்ணிக்கை 40க்கு குறையாமலும் இருக்க வேண்டும் என்று கூறும் அரசியல் அமைப்பு சட்ட பிரிவு? 171 (1)

97. விதான் பரிஷத் என்று அழைக்கப்படுவது இந்திய மாநிலங்களில்? சட்ட மேலவை

98. மாநில சட்ட மேலவையில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எந்த முறை தேர்தல்? மறைமுக தேர்தல்

99. மாநில சட்ட மேலவை ஒரு நிரந்தர அவையாகும் அதை கலைக்க முடியாது

100. மாநில சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்? 6 ஆண்டுகள் 

  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்