எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பகுதி - ஆ இலக்கியம்
1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.
நூல் வெளி 12th Tamil Book
• திரு + குறள் = திருக்குறள். சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது.
• இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று.
• குறள் – இரண்டடி வெண்பா, திரு – சிறப்பு அடைமொழி.
• திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும்.
• குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்; தமிழர் திருமறை;
• மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல்.
• ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
• ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்னும் பழமொழிகள் இந்நூலின் பெருமையை விளக்குகின்றன.
• இவற்றுள் ‘நால்’ என்பது நாலடியாரையும் ‘இரண்டு’ என்பது திருக்குறளையும் குறிக்கும்.
• தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையார், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர், வள்ளுவர் நூற்கு, எல்லையுரை செய்தார் இவர்.
• என்று ஒரு பழம்பாடல் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் பட்டியலொன்றைத் தருகிறது.
• ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.
• “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” எனப் பாரதியாரும்,
• “வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே”எனப் பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
• தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது.
• திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
நூல் வெளி 9th Tamil Book
• உலகப் பண்பாட்டிற்குத் தமிழினத்தின் பங்ளிப்பாக அமைந்த நூல் திருக்குறள்.
• இனம், சாதி, நாடு குறித்த எவ்வித அடையாளத்தையும் முன்னிலைப்படுத்தாத உலகப்பொதுமறை நூல் இந்நூல்.
• முப்பால், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தெய்வநூல், தமிழ்மறை, முதுமொழி, பொருளுறை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
• தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கள் ஆகிய பதின்மரால் முற்காலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது.
• இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது எனபர்.
• இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூலை போற்றும் பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.
• உலகின் பல மொழிகளிலும் பன்முறை மொழிபெயர்க்கப்பட்டதுடன், இந்திய மொழிகளிலும் தன் ஆற்றல் மிக்க அறக் கருத்துகளால் இடம் பெற்றது திருக்குறள்
• தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் இந்நூல்
• பிற அறநூல்களைப் போல் அல்லாமல் பொது அறம் பேணும் திருக்குறளை இயற்றிவர் திருவள்ளூவர்
• இவருக்கு நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்பேதார், பெருநாவலர் போன்ற சிறப்பு பெயர்களும் உண்டு.
நூல் வெளி 8th Tamil Book
• பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய சிறப்பு பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
• திருக்குறள் உலகில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்
• அறம், பொருள், இன்பம் என முப்பால் பகுப்பகள் கொண்டது
• அறத்துபால் பாயிரவியல், இல்லறவியல் துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களை கொண்டது.
• பொருட்பால் அரசியல், அமைச்சியல் ஒழிபியல் என மூன்று இயல்களை கொண்டது.
• இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என இரு இயல்களை கொண்டது.
நூல் வெளி 7th Tamil Book
• தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள் ஆகும்.
• திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக் கொண்டது.
• இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
• இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
• திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
• நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர்.
• வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
• உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது.
• இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
நூல் வெளி 6th Tamil Book
இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது அவை :
• அறத்துப்பால் : இயல்-4 பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 38 அதிகாரம் – 380 குறள்பாக்கள்
• பொருட்பால் : இயல் 3 – அரசியல், அங்கவியல், ஒழிபியல் 70 அதிகாரம் – 700 குறட்பாக்கள்
• இன்பத்துப்பால் : இயல் 2 – களவியல், கற்பியல் 25 அதிகாரம் – 250 குறள்
• வேறுபெயர்கள் : முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து.
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham