Type Here to Get Search Results !

TNPSC குரூப் 4 தேர்வு 2022 ஒண்ணும் புரியல என்ன தான் நடக்குது

0

 



மாண்புமிகு பிடிஆர் அவர்கள் TNPSC தேர்வாணையத்திடம் பெற்ற உண்மையான தகவலை 10 நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் கூறினார்..

தென்காசியில் மொத்தம் எட்டு சென்டர் ..

அதில் முதல் 500 இடத்தில் 27 பேர்

முதல் ஆயிரம் இடத்தில் 45 பேர்

முதல் பத்தாயிரம் இடத்தில் 397 பேர் என்று கூறினார்..

இது அவர் சுட்டிக் காட்டியது ஒட்டுமொத்த தென்காசியில் 8 சென்டரில் ..

ஆனால் தற்போதைய CV தகவலை ஆய்வு செய்யும் பொழுது முற்றிலும் மாறுபாடு காணப்படுகிறது..

தென்காசி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1577 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்..

கிட்டத்தட்ட நிதி அமைச்சர் சொல்லும் கணக்கிற்கு 1180 அதிகமாக வந்துள்ளார்கள்..

தென்காசி மாவட்டத்தை சென்டர் வாரியாக ஆய்வு செய்யும் பொழுது

தென்காசி சென்டரில் மட்டும் 285 .. அமைச்சரின் தகவல் படி இது தென்காசி சென்டரில் மட்டும் என்று எடுத்துக் கொண்டாலும் அவர் சொன்னது 397 பேர் இதில் 102 நபர்கள் வேறுபாடு உள்ளது.

சங்கரன்கோவில் 648 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.. இது மிகப்பெரிய அதிர்ச்சிகரமான ரிசல்ட் ஆகும்..

கீழே அதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளேன் நீங்களே உண்மை தன்மையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Document https://drive.google.com/drive/folders/1TgPMnDrFdWtviHxytVvFCsIgXjifPKCK?usp=sharing

Ptr speech assembly

https://youtu.be/8QbBivV-noo?t=72



அமைச்சர் சொன்ன பட்டியல், தாங்கள் கூறிய படி முதல் 10,000 நபர்களில் தான் தென்காசியில் 397 நபர்கள் என்று கூறி இருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் கிட்டத்தட்ட 22,000 நபர்களை உள்ளடிக்கியதாக உள்ளது (ja 1:2,typ 1:2.5,steno 1:2.5). இதில்
.முதல் 10,000 நபர்களில் 397 இருந்தால்,அதை விட 2.5 மடங்கு அதிக நபர்களளை கொண்டு வெளியன cv பட்டியலில் 1200-1500 இருப்பது சரி தானே.. அதாவது 22000 கொண்ட பட்டியலில் 1500 பேர்... தவறு இருந்தால் திருத்துங்கள் 👍


கருத்துரையிடுக

0 கருத்துகள்