Type Here to Get Search Results !

கவிஞர் சுரதா, வாணிதாசன், கண்ணதாசன் குறிப்பு Voice Demo


கவிஞர் சுரதா, வாணிதாசன், கண்ணதாசன் குறிப்பு

கவிஞர் சுரதா குறிப்பு
1. சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்
2. இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்
3. பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம், எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார், அதன் சுருக்கமே சுரதா என்பதாகும்
4. உவமைகளைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர்
5. அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்
6. முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்
7. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்
8. தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல் துறைமுகம்.

வாணிதாசன் குறிப்பு
1. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
2. அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர்
3. இவர் பாரதிதாசனின் மாணவர் ஆவார்
4. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்
5. கவிஞரேறு, பாவலர்மணி முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றவர்
6. பிரெஞ்சு அரசு இவருக்கு செவாலியர் விருது வழங்கியுள்ளது
7. தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும்,

கண்ணதாசன் குறிப்பு
1. முத்தையா என்னும் இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்
2. அவரது பெற்றோர் சாத்தப்பன், விசாலாட்சி ஆவர்
3. 1949ஆம் ஆண்டு கலங்காதிரு மனேம என்ற பாடைல எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்
4. திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்
5. சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் இவர் திகழ்ந்தவர்
6. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடைய கொண்டு சேர்த்தவர்
7. சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
8. இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்,


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.