Type Here to Get Search Results !

எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

1

 

தொடர் இலக்கணம் (தன்வினை, பிறவினை)

1. தன் வினை:- வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். சான்று : பந்து உருண்டது

2. பிற வினை:- வினையின் பயன் எழுவாயை அன்றி பிறிதொன்றைச் சேருமாயின் பிறவினை எனப்படும். சான்று :  பந்தை உருட்டினான்

3. காரண வினை:- எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் , வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது காரண வினை எனப்படும் சான்று : பந்தை உருட்டவைத்தான்

4. எழுவாயை சான்றுடன் எழுதுக - சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே எழுவாய் என்கிறோம். சான்று : எட்வர்டு வந்தான். இதில் “எட்வர்டு” எழுவாய்

5. பயனிலையை சான்றுடன் எழுதுக - ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம். வினைச்சொல்லே பயனிலை ஆகும். சான்று : கனகாம்பரம் பூத்தது. இதில் “பூத்தது” பயனிலை

6. தோன்றா எழுவாயைச் சான்றுடன் விளக்குக - வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது ‘தோன்றா எழுவாய்’ எனப்படும்.

சான்று : i. படித்தாய். ii. இத்தொடரில் படித்தாய் என்பது பயனிலை.

iii. நீ என்ற எழுவாய் வெளிப்படையாக தோன்றவில்லை

7. வினைப் பயனிலை என்றால் என்ன? தொடரில் வினைமுற்று பயனிலையாக வருவது வினைப் பயனிலை எனப்படும். சான்று : நான் வந்தேன்.

8. பெயர்ப் பயனிலை என்றால் என்ன? தொடரில் பெயர்ச்சொல் பயனிலையாக வருவது பெயர்ப் பயனிலை எனப்படும். சான்று : சொன்னவள் கலா

9. வினாப் பயனிலை என்றால் என்ன? தொடரில் வினாச்சொல் பயனிலையாக வருவது வினாப் பயனிலை எனப்படும். சான்று : விளையாடுபவன் யார்?

 

பிறவினைத் தொடராக மாற்றுக

பதவியை விட்டு நீக்கினான்.

பதவியை விட்டு நீக்குவித்தான்.

மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர். 

மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார்.

நிலவன் சிறந்த பள்ளியில் படிப்பித்தான்.


1. பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக? பதவியை விட்டு நீக்குவித்தான்.

2. மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக. மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர

3. உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.

உண்ணும் தமிழ்த்தேனே

4. திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக? திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன

5. நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக? நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.

6.  நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?

7. பாடினான். (எழுவாய்த் தொடராக) அவன் பாடினான்

8. இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக) இசையோடு அமையும் பாடல்

9. நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக) நீ இதைச் செய்

10. வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக “பார்” 

 பார்க்கப்பட்டான் – செயப்பாட்டு வினைத் தொடர்

11. வேர்ச்சொல்லை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக. “கேள்” 

 கேட்டாயா? – வினாத் தொடர்

12. உண்ணப்படும் தமிழ்த்தேனே. (இத்தொடரைச் செய்வினைத் தொடராக மாற்றுக) உண்ணும் தமிழ்த்தேனே.

13. திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாக பகுத்துள்ளனர். (இத்தொடரை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றுக) திராவிட மொழிகள் மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

14. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

·         உண் – சான்று : கோவலன் கொலையுண்டான்.

·         ஆயிற்று – சான்று : வீடு கட்டியாயிற்று

15. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

·         வீணையோடு வந்தாள் – வேற்றுமைத்தொடர்,

·         கிளியே பேசு – விளித்தொடர்

16. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?

A.   வினாத்தொடர்                                               

B. கட்டளைத்தொடர்

C. செய்தித்தொடர்                                     

D. உணர்ச்சித்தொடர்


எழுவாய்/பெயர்

வினை அடி

தன்வினை

பிறவினை

நான்

ஓடு

நான் திடலில் ஓடினேன்.

நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன்.

காவியா

வரை

காவியா வேகமாக படம் வரைந்தாள்.

காவியா வேகமா படம் வரைவித்தாள்

கவிதை

நனை

நான் கவிதை மழையில் நனைந்தேன்.

நான் கவிதை மழையில் நனைவித்தேன்.

இலை

அசை

செடியில் இலை வேகமாக அசைந்தது.

செடியில் இலை வேகமாக அசைவித்தது.

மழை

சேர்

மழை மண்ணைச் சேர்ந்தது.

மழை மண்ணைச் சேர்பித்தது.


வகைகள்

பயன்பாடு

வா – ஒரு சொல் தொடர்

வா – கட்டளைத் தொடராக

வந்தான் –  வினைமுற்றுத் தொடர்

வந்த – பள்ளிக்கு வந்த மாணவன்

வரச்சொன்னான் – வினையெச்ச தொடர்

வந்து – பள்ளிக்கு வந்து சென்ற மாணவன்

வாவா – அடுக்குத்தொடர்

வரச்சொன்னான் – அவன் தான் வரச் சொன்னான்

வந்த மாணவன் – பெயரச்ச தொடர்

வருக வருக என வரேவற்றான்









கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham