Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 5 Notes & Book Back || வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்


 

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

1. யாருடைய வருகையால் வேதகாலம் காலகட்டம் தொடங்கியது - ஆரியர்கள்.

2. வேதகாலம் ஆண்டு  - பொ.ஆ.மு 1500 - 600.

3. ஆரியர்கள் மொழி - இந்தோ , ஆரிய.

4. ஆரியர்ளின் காலம் - இரும்புக்காலம்.

5. ஆரியர்ளின் கால அளவு - பொ.ஆ.மு 1500 - 600.

6. ஆரியர்ளின் புவியியல் பரப்பு - வட இந்தியா.

7. ரிக் வேதகாலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் - பஞ்சாப்.

8. நான்கு வேதங்கள் - ரிக் , யஜீர் , சாம , அதர்வன.

9. தொடக்கால வேதகாலம் - பொ.ஆ.மு 1500 - 1000.

10. பின்வேதகாலம் - பொ.ஆ.மு 1000 - 600.

11. ஆரியர்களின் முதன்மைத்தோழில் - கால்நடை மேய்த்தல் ,அழித்தும் எரித்து சாகுபடி செய்யும் வேளாண்மை முறை.

12. ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இந்துகுஷ் மலைகளிலுள்ள எந்த கணவாய் வழியாக வந்தனர் - கைபர் கணவாய்.

13. சபா - முத்தோர்களை கொண்ட மன்றம்.

14. சமிதி - மக்கள் அணைவரையும் கொண்ட பொதுக்குழு.

15. செம்பு கால பண்பாடும் முதிர்ந்த நிலை ஹரப்பாபண்பாடும் - சமகாலம்.

16. வடஇந்தியாவில் பின்வேதகால பண்பாடும் தென்னிந்தியாவில் இரும்புகாலமும் - சமகாலத்தை சேர்ந்தது.

17. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்கள் எந்த ஆண்டைச் சேர்ந்தவை - கி.மு.200.

18. அமெரிக்காவில் புளோரிடா இடத்தில் உள்ள கதிரியக்க கார்பன் வயதுகணிப்பு நிறுவனம் - பீட்டா அனாலடிக்.

19. தீபகற்ப  இந்தியாவிலிருந்து எஃகு ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறித்தும் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது என்று எதில் குறிப்பிடபட்டுள்ளது - பெரிப்பிளஸிக்.

20.  பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் ரேடியோ கார்பன் முறையில் கணிக்கப்பட்ட காலம் - பொ.ஆ.மு -1000.

21. இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய மண் பானை -முதுமக்கள் தாழிகள்.

22.  இறந்துபோன வீரனின் நினைவைப் போற்றும் வகையில் நடப்படும் கல் - நடுக்கல்.

23. நம் நாட்டின் தேசிய குறிக்கோல் வாய்மையே வெல்லும் எதிலிருந்து எடுக்கப்பட்டது -உபநிடதம்.

24.  வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூல் செய்யப்பட்டது - 1/6 பங்கு.

25. ரோம்நாட்டை சேர்ந்த பழங்கால தொல்பொருட்கள் கிடைத்துள்ள இடம் - கீழடி

26. கொடுமணல் ஊர் இடம் பெற்றுள்ள பாடல் - பதிற்றுப்பத்து.

27. இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம் -பையம்பள்ளி.

28. நடுகற்கள் கிடைக்கபெற்றுள்ள இடம் :

1. மானுர் - திண்டுக்கல்.

2. வெள்ளாளன் கோட்டை - தூத்துக்குடி.

3. புலிமான் கோம்பை - திண்டுக்கல்.

29. ஆதிச்சநல்லுர் உள்ள மாவட்டம் - தூத்துக்குடி.

30.  ஆதிச்சநல்லுரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்றவை .

1. இரும்பாலான் குத்துவாள் ,

2. கத்தி, ஈட்டி , அம்பு ,

3. சில கல்மணிகள், தங்க ஆபரணங்கள்.

4. புலி , மான் , யானை , வெண்கலத்தாலான சிலை.

31. கீழடி உள்ள மாவட்டம் - சிவகங்கை.

32. கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள்.

1. தமிழ பிராமி எழுத்துகள் பொரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் ,

2. கண்ணாடி மணிகள் , செம்மணிகள் வெண்கல படிகம் ,

3. முத்துக்கள் , தங்க ஆபரணங்கள் ,

4. இரும்புப் பொருட்கள் சங்கு வலையல்கள் ,

5. தந்தத்தால் செய்யப்பட்ட பகடை.

33. பொருத்தல் உள்ள மாவட்டம் - திண்டுக்கல் .

34. பொருத்தலில் கிடைத்துள்ள பொருட்கள் :

1. கண்ணாடி மணி (பச்சை , சிவப்பு, மஞ்சள் , நீலம் , வெள்ளை) ,

2. இரும்பு வால், படிகக்கல் , சிவப்பு நிற மணிக்கற்கள் ,சங்கு ,

3. கண்ணாடி வளையல்கள்,மட்பாண்டங்கள் ,

4. அரிசி நிரப்பப்பட்ட மட்பாண்டங்கள்.

35. பையம்பள்ளி உள்ள மாவட்டம் - வேலூர் .

36. பையம்பள்ளியில் கிடைத்துள்ள பொருட்கள் .

1. கருப்பு , சிவப்பு மட்பாண்டங்கள்.

2. இரும்பு உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள்.

37. கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.

38. கொடுமணலில் கிடைத்துள்ள பொருட்கள்.

1. சுழல்அச்சுக்கள் ,

2. சிவப்பு நிற மணிகற்கள்,

3. துணிகளின் சிறிய துண்டுகள்.

39.  கற்திட்டைகள் காணப்படும் இடம் .

1. வீரராகவபுரம் - காஞ்சிபுர மாவட்டம்.

2. கும்மாளமருதுபட்டி - திண்டுக்கல் மாவட்டம் .

3. நரசிங்கப்பட்டி - மதுரை மாவட்டம் .

40. நினைவுகற்கள் உள்ள இடம்.

1. சிங்கப்பாளையம் -திருப்பூர் மாவட்டம்,

2. வெம்பூர் -தேனி மாவட்டம் ,

3. நரசிங்கப்பட்டி -மதுரை மாவட்டம் ,

4. குமரிக்கல் பாளையம் ,கொடுமணல் - ஈரோடு மாவட்டம்.

41.   பெருத்துக.

1. கீழடி - பகடை.

2. பொருத்தல் - கொழுமுனைகள்.

3. கொடுமணல் - சுழல் அச்சுக்கள்.

4. ஆதிச்சநல்லூர் - தங்க ஆபரணங்கள்.

5. பையம்பள்ளி - கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள்.

 


Book Back

1. ஆரியர்கள் முதலில் ………………… பகுதியில் குடியமர்ந்த னர்.

அ) பஞ்சாப்

ஆ) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

இ) காஷ்மீர்

ஈ) வடகிழக்கு

விடை: அ) பஞ்சாப்

 2. ஆரியர்கள் ………… லிருந்து வந்தனர்.

அ) சீனா

ஆ) வடக்கு ஆசியா

இ) மத்திய ஆசியா

ஈ) ஐரோப்பா

விடை: இ) மத்திய ஆசியா

3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “வாய்மையே வெல்லும்” …………. லிருந்து எடுக்கப்பட்டது.

அ) பிராமணா

ஆ) ஆரண்யகா

இ) வேதம்

ஈ) உபநிடதம்

விடை: ஈ) உபநிடதம்

 4. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

அ) 1/3

ஆ) 1/6

இ) 1/8

ஈ) 19

விடை: ஆ) 1/6

5. வேதப்பண்பாடு ……………. இயல்பைக் கொண்டிருந்தது. விடை: செம்புகால பண்பாடு

6. வேதகாலத்தில் மக்களிடமிருந்து ………… என்ற வரி வசூலிக்கப்பட்டது. விடை: பாலி

7. ………… முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும். விடை: குருகுலக்கல்வி

8. ஆதிச்சநல்லூர் ……………… மாவட்டத்தில் அமைந்துள்ளது. விடை: தூத்துக்குடி

 9. பொருத்துக.

1. கீழடி -                   அ. செப்புத்தகடுகள் ஓவியங்கள்

2. பொருந்தல் -          ஆ. கொழு முனைகள்

3. கொடு மணல் -      இ. சுழல் அச்சுக்கள்

4. ஆதிச்சநல்லூர் -    ஈ. தங்க ஆபரணங்கள்

விடை : 1 – அ, 2 ஆ, 3 – இ, 4 – ஈ

10. கூற்று : வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகளும் கிடைத்துள்ளன. காரணம் : நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.

அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரி ; காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ; காரணம் சரி

விடை: ஈ) கூற்று தவறு; காரணம் சரி

11. கூற்று 1 : தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிகப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார் கூற்று 2 : இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.

அ) கூற்று 1 தவறானது

ஆ) கூற்று 2 தவறானது

இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

ஈ) இரண்டு கூற்றுகளும் தவறானவை.

விடை: இ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

12. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

அ) ஒரு விதவை மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது.

இ) தந்தையின் சொத்துக்களை மகன் மரபுரிமையாகப் பெற்றான்

ஈ) உடன்கட்டை ஏறுதல் தெரியாது.

விடை: ஆ) குழந்தைத் திருமணம் பழக்கத்தில் இருந்தது

13. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?

அ) கிராமா < குலா விஷ் < ராஸ்டிரா < ஜனா

ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா

இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ்

ஈ) ஜனா < கிராம < குலா < விஷ் < ராஸ்டிரா

விடை: ஆ) குலா < கிராமா விஷ் < ஜனா < ராஸ்டிரா

14. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய – ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன. விடை: சரி

15. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும். விடை: சரி

16. படைத்தளபதி கிராமணி’ என அழைக்கப்பட்டார். விடை: தவறு

17. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும். விடை: சரி

18. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. விடை: சரி


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham