Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் [இல்லம் தேடி குரூப்-4]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

10th சமூக அறிவியல்


https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg

(அல்லது)

https://t.me/minnalvegakanitham

 

 

Line By Line

Online Test

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

151

100

 

Online Test = https://www.minnalvegakanitham.in/p/illam-thedi-group-4.html



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

Book Back

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

a. T.M. நாயர்

b. P. ரங்கையா

c. G. சுப்பிரமணியம்

d. G.A. நடேசன்

விடை ; P. ரங்கையா

 

2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

a. மெரினா

b. மைலாப்பூர்

c. புனித ஜார்ஜ் கோட்டை

d. ஆயிரம் விளக்கு

விடை ; ஆயிரம் விளக்கு

 

3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

a. அன்னிபெசன்ட்

b. M. வீரராகவாச்சாரி

c. B.P. வாடியா

d. G.S. அருண்டேல்

விடை ; அன்னிபெசன்ட்

 

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

a. S. சத்தியமூர்த்தி

b. கஸ்தூரிரங்கர்

c. P. சுப்பராயன்

d. பெரியார் ஈ.வெ.ரா

விடை ; S. சத்தியமூர்த்தி

 

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

a. K. காமராஜ்

b. C. ராஜாஜி

c. K. சந்தானம்

d. T. பிரகாசம்

விடை ; T. பிரகாசம்

 

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

a. ஈரோடு

b. சென்னை

c. சேலம்

d. மதுரை

விடை ; சேலம்

 

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி __________ ஆவார் விடை ; T.முத்துசாமி

2. ______________ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.  

 விடை ; பாரத மாதா சங்கம்

3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் _____________ ஆவார். விடை ; B.P.வாடியா

4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் __________

விடை ; ராஜாஜி

5. ___________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

விடை ; யாகுப்ஹசன்

6. 1932 ஜனவரி 26இல் __________________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார். விடை ; பாஷ்யம்

 

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்:-

1.i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது

ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது

iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படவேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது

iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

a. (i) மற்றும் (ii) ஆகியவை சரி

b. (iii) மட்டும் சரி

c. (iv) மட்டும் சரி

d. அனைத்தும் சரி

விடை ; (i) மற்றும் (ii) ஆகியவை சரி

 

2. i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை

ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி பணியாற்றினார்.

iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை

iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

a. (i) மற்றும் (ii) ஆகியவை சரி

b. (i) மற்றும் (iii) ஆகியவை சரி

c. (ii) மட்டும் சரி

d. (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

விடை ; இ) (ii) மட்டும் சரி

 

IV) பொருத்துக:-

1. சென்னைவாசிகள் சங்கம் – அ. இந்தி எதிர்ப்புப் போராட்டம்

2. ஈ.வெ.ரா – ஆ. நீல் சிலையை அகற்றுதல்

3. S.N. சோமையாஜுலு – இ. உப்பு சத்தியாகிரகம்

4. வேதாரண்யம் – ஈ. சித்திரவதை ஆணையம்

5. தாளமுத்து – உ. வைக்கம் வீரர்

விடை 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ

உங்களுக்கு தெரியுமா?

ஜார்ஜ் ஜோசப் : வழக்கறிஞர் நன்குசொற்பொழிவாற்றும் திறன் படைத்தவருமான ஜார்ஜ் ஜோசப் துரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியதிலும், அதன் நோக்கத்தைமக்களின் கவனத்திற்குக் கொண்டுசென்ற போதிலும் முக்கியப் பங்குவகித்தார். செங்கண்ணூரில் (இன்றையகேரளமாநிலம் ஆலப்புழாமாவட்டம்) பிறந்திருந்தாலும் மதுரையில் வசிப்பதையேவிரும்பிமக்களின் வழக்கறிஞராகப் ணிசெய்தார். பாதிக்கப்பட்டசமூகங்களுக்கு இவர் ஆற்றியசேவையின் காரணமாக மதுரை மக்கள் இவரை 'ரோசாப்பு துரை' எனஅன்புடன் அழைத்தனர்.

 

உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டின் முக்கியதொடக்ககாலமிதவாததேசியவாதிகள் : தொடக்ககாலதேசியவாதிகள் அரசமைப்பு வழி முறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். அறைக் கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன. வங்கப்பிரிவினையின் போதுதிலகரும் ஏனைய தலைவர்களும் பெருவாரியானமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களை நடத்தியதாலும் மக்களை ஈடுபடச் செய்வதற்காக வட்டார மொழியைப் பயன்படுத்தியதாலும் தொடக்ககாலதேசியவாதிகள் மிதவாதிகளென அழைக்கப்படலாயினர். சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டுமிதவாதத் தலைவர்கள் V.S. சீனிவாச சாஸ்திரி, P.S. சிவசாமி. V. கிருஷ்ணசாமி. T.R. வெங்கட்ராமனார், G.A.நடேசன், T.M. மாதவராவ் மற்றும் S. சுப்பிரமணியனார் ஆகியோராவர்.

 

உங்களுக்கு தெரியுமா?

நீல் சிலைஅகற்றும் போராட்டம் (1927): ஜேம்ஸ் நீல், மதராஸ் துப்பாக்கி ஏந்திய காலாட் படையைச் சேர்ந்தவர். 1857 பேரெழுச்சியின் போதுநடைபெற்றகான்பூர் படுகொலை என்றழைக்கப்படும் சம்பவத்தில் பலஆங்கிலப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதற்குவஞ்சம் தீர்க்கும் வகையில் நீல் கொடூரமாகநடந்துகொண்டார். பின்னர் நீல் இந்தியவீரர் ஒருவரால் கொல்லப்பட்டார்.

 

உங்களுக்கு தெரியுமா?

சென்னைமௌண்ட்ரோட்டில் ஆங்கிலேயர் அவருக்குஒருசிலைவைத்தனர். இதை இந்தியர்களின் உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமரியாதைஎனக் கருதியதேசியவாதிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர். 1937 இல் ராஜாஜியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தபோது இச்சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாடு அன்றையசென்னைமாகாணத்தின் ஒருபகுதியாக இருந்தது. சென்னைமாகாணம் என்பது இன்றைய ஆந்திரப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளையும் (கடற்கரைமாவட்டங்கள் மற்றும் ராயலசீமா) கர்நாடகாவையும் (பெங்களூரு, பெல்லாரி, தெற்குகனரா) கேரளாவையும் (மலபார்) மற்றும் ஒடிசாவின் (கஞ்சம்) சிலபகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.

  



  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்