Type Here to Get Search Results !

தேசியம் : காந்திய காலகட்டம் [இல்லம் தேடி குரூப்-4]

0

எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

10th சமூக அறிவியல்


https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg

(அல்லது)

https://t.me/minnalvegakanitham

 

 

Line By Line

Online Test

தேசியம்:காந்திய காலகட்டம்

93

100

 

Online Test = https://www.minnalvegakanitham.in/p/illam-thedi-group-4.html



MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

TNPSC

 

Book Back

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

a. மோதிலால் நேரு

b. சைஃபுதீன் கிச்லு

c. முகம்மது அலி

d. ராஜ்குமார் சுக்லா

விடை ; சைஃபுதீன் கிச்லு

 

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

a. பம்பாய்

b. மதராஸ்

c. கல்கத்தா

d. நாக்பூர்

விடை ; கல்கத்தா

 

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

a. 1930 ஜனவரி 26

b. 1929 டிசம்பர் 26

c. 1946 ஜூன் 16

d. 1947 ஜனவரி 15

விடை ; 1930 ஜனவரி 26

 

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

a. 1858

b. 1911

c. 1865

d. 1936

விடை ; 1865

 

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

a. கோவில் நுழைவு நாள்

b. மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

c. நேரடி நடவடிக்கை நாள்

d. சுதந்திரப் பெருநாள்

விடை ; கோவில் நுழைவு நாள்

 

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

a. 1858 ஆம் ஆண்டு சட்டம்

b. இந்திய கவுன்சில் சட்டம், 1909

c. இந்திய அரசுச் சட்டம், 1919

d. இந்திய அரசுச் சட்டம், 1935

விடை ; இந்திய அரசுச் சட்டம், 1935

 

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-

1. காந்தியடிகளின் அரசியல் குரு ____________ ஆவார். விடை ; கோபால கிருஷ்ண கோகலே

2. கிலாபத் இயக்கத்துக்கு __________ தலைமை ஏற்றார். விடை ; அலி சகோதரர்கள்

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ________ அறிமுகம் செய்தது.         விடை ; இரட்டை ஆட்சி

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ___________  விடை ; கான்அப்துல் கஃபார்கான்

5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் __________ ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார். விடை ; வகுப்பு வாரி ஒதுக்கீடு

6. _______ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார். விடை ; உஷாமேத்தா

 

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனேவெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

a. (i) மற்றும் (ii) சரியானது

b. (ii) மற்றும் (iii) சரியானது

c. (iv) சரியானது

d. (i) (ii) மற்றும் (iii) சரியானது

விடை ; (i) (ii) மற்றும் (iii) சரியானது

 

2. கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தி – இர்வின் ஒப்பந்தம் வழிசெய்தது.

a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை

b. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

c. கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

விடை ; கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

 

3. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின

காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

b. கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

c. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது.

d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

விடை ; கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்

 

 

IV) பொருத்துக:-

1. ரௌலட் சட்டம் – அ. பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

2. ஒத்துழையாமை இயக்கம் – ஆ. இரட்டை ஆட்சி

3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் – இ. M.N. ராய்

4. இந்திய பொதுவுடைமை கட்சி – ஈ. நேரடி நடவடிக்கை நாள்

5. 16 ஆகஸ்ட் 1946 – உ. கருப்புச் சட்டம

விடை:- 1-உ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஈ

 

உங்களுக்கு தெரியுமா?

ஒருசிலர் அதிகாரத்துக்குவருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்றஅதிகாரத்தைதவறாகப் பயன்படுத்தப்படும் போதுநிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அஇனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும். - காந்தியடிகள்


உங்களுக்கு தெரியுமா?

1919 ஆம் ஆண்டின் இந்தியஅரசுச் சட்டம் மூலமாக இரட்டை ஆட்சி என்பது அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மாகாணஅரசின் அதிகாரங்கள் ஒதுக்கப்பட்ட மற்றும் மாற்றப்பட்டதுறைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது. நிதி,பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை,நிலவருவாய் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியதுறைகள் ஆங்கிலேயர்கள் வசம் ஒதுக்கப்பட்டன. மாற்றப்பட்டதுறைகளில் உள்ளாட்சி,வேளாண்மை,வனங்கள் மற்றும் மீன்வளத்துறை ஆகியன இந்திய அமைச்சர்களின் கட்டுப்பாட்டின் கீழ் விடப்பட்டன. 1935 ஆம் ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த முறை முடிவுக்கு வந்தது.

உங்களுக்கு தெரியுமா?

ஆங்கிலேயர்கள் 1865 ஆம் ஆண்டுமுதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். சுள்ளிஎடுப்பது.கால்நடைத் தீவனம் மற்றும் தேன், விதைகள், மருத்துவ மூலிகைகள், கொட்டைகள் ஆகிய சிறிய அளவிலான வன உற்பத்திப் பொருள்களையும் வனப் பகுதிகளில் இருந்து சேகரிக்க இந்தச் சட்டம் வனத்தில் வாழ்வோருக்குதடைவிதித்தது. 1878 ஆம் ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படிவனங்களின் உரிமைஅரசிடம் இருந்தது. நன்செய் மற்றும் தரிசுநிலங்களும் வனங்களாககருதப்பட்டன. பழங்குடியினர் பயன்படுத்தியசுழற்சிமுறைவிவசாயம் தடைசெய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில்

இருந்து வனப் பகுதிகளை தள்ளிவைப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆதிவாசிகளும் தேசியவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழங்குடியினர் நடத்தியதொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம். ராம்பாபகுதி ஆதிவாசிகள் நலன் காப்பதற்காக ஊழல் அதிகாரிகளுடன் அல்லூரி சீதாராம ராஜு போராடியதால் அவரது உயிரைக் குறிவைத்து ஆங்கிலேய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. ராம்பா ஆதிவாசிகளின் கிளர்ச்சியை அடக்குவதற்காக (1922 - 24) மலபார் காவல்துறையின் சிறப்புக்குழுஅனுப்பிவைக்கப்பட்டது. வனவாசிகளின் நலனுக்காகப் போராடியஅல்லூரி சீதாராம ராஜு தியாகிஆனார்.

 


  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்