எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
பொதுத்தமிழ் 111 Days Plan
TNPSC GROUP 2/2A, 4 (VAO)
10th தமிழ் இயல்- 2
UNIT 2: உயிரின் ஓசை [146 வினா விடை] |
♦ கேட்கிறதா என்குரல்! (காற்று) ♦ காற்றே வா!
(பாரதியார்) ♦ முல்லைப்பாட்டு
(பத்துபாட்டு) ♦ புயலிலே ஒரு தோணி ♦ தொகைநிலைத் தொடர்கள்
(இலக்கணம்) |
TNPSC
UNIT 2: உயிரின் ஓசை
1. உயிரினங்களின் முதன்மை தேவை - மூச்சுக்குக் காற்று,தாகத்திற்கு நீர்,உறைவதற்கு
நிலம், ஒளிக்கும் கதிரவன்
2. உலகம் என்பது ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்று
கூறியவர் - தொல்காப்பியர்
3. "மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை
நீட்டிக்கும்" என்று திருமூலர் எந்நூலில் கூறியுள்ளார் - திருமந்திரம்
4. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம்
உண் டாம் - என்று கூறியவர் - ஔவையார்
5. காற்றின் வேறுபெயர்கள் - வளி,தென்றல், புயல் , சூறாவளி
6. காற்று பருவநிலை சூழல், வீசும் வேகம் ஆகியவற்றிற்கேற்ப
எந்தெந்த பெயர்களில் அழைக்கப்படுகிறது - தென்றல்
காற்று. பூங்காற்று, கடல் காற்று, பனிக்காற்று,வாடைக்காற்று, மேல் காற்று வீழ்காற்று,
ஆடிக்காற்று,கடுங்காற்று, பேய்க்காற்று, சூறாவளிக்காற்று
7. கிழக்கு என்பதற்கு - குணக்கு என்னும் பெயரும் உண்டு
8. கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல் என அழைக்கப்படுகிறது
9. மேற்கு என்பதற்குக் - குடக்கு என்னும் பெயர் உண்டு
10. மேற்கிலிருந்து வீசும் காற்று - கோடை என அழைக்கப்படுகிறது
11. வடக்கு என்பதற்கு - வாடை என்னும் பெயருண்டு
12. வடக்கிலிருந்து வீசும் காற்று - வாடைக்காற்று என அழைக்கப்படுகிறது
13. தெற்கிலிருந்து வீசும் காற்று - தென்றல் காற்று என அழைக்கப்படுகிறது
14. "வண்பொடு புக்க மணவாய்த் தென்றல்" என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்
15. பத்மகிரிநாதர் தென்றல் விடுதாது என்ற நாலை எழுதியவர்
- பலபட்டடைர் சொக்கநாதப் புலவர்
16. "நந்தமிழும் தண்பொருறை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே" என்ற பாடலை இயற்றியவர் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
17. "நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில்
ஆண்ட உரவோன் மருகா களிஇயல் யானைக் கரிகால் வளவ - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு
18. கி.பி. முதல் நூற்றாண்டில் பருவக் காற்றின் உதவியினால்
நடுக்கடல் வழியாக முசிறித் துறைமுகத்திற்கு நேரே விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக்
கண்டுபிடித்தவர் - கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்
19. ஹிப்பாலஸ் பருவக்காற்று என பெயர் சூட்டியவர்கள்
- யவனர்கள்
20. “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட
உரவோன் மருக'' என்ற புறநானூற்றுப் பாடலில் வெண்ணிக்குயத்தியார் எம்மன்னைப் புகழ்ந்து
பாடியுள்ளார் - கரிகால் பெருவளத்தான்
21. தென்மேற்குப் பருவக்காற்றின் காலம் - ஜீன் முதல் செப்டம்பர் வரை
22. வடகிழக்கு பருவக்காற்றின் காலம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
23. இந்தியாவின் முதுகெலும்பு - வேளாண்மை
24. இந்தியாவிற்கு தேவையான எத்தனை சதவீத மழையை தென்மேற்கு
பருவக்காற்று தருகிறது -70%
25. "வளி மிகின் வலி இல்லை" என்ற புறநானூற்றுப்
பாடலை பாடியவர் - ஐயூர் முடவனார்
26. "கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது"
என்று காற்றின் வேகத்தைப் பற்றி புறநானூறில் குறிப்பிட்டவர் - மதுரை இளநாகனார்
27. உலக காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் இடம்
- 5
28. இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகத்தின்
இடம் - 1
29. உலகிலேயே காற்றை அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில்
இரண்டாம் இடத்தில் உள்ள நாடு - இந்தியா
30. உயிர்வளியை உடையது - ஆக்ஸிஜன்
31. மெதுஉருளைகள் என்பது - Tyres
32. காற்று மாசுபடுவதால் ஏற்படும் நோய்- கண் எரிச்சல், தலைவலி,நுரையீரல் புற்றுநோய்,இளைப்பு
நோய்
33. இந்தியாவில் மிகுந்த உயிரிழப்பைத் தரும் காரணங்களில்
காற்று மாசுபாடு எத்தனையாவது இடம் பெற்றுள்ளது - 5
34. காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி
குறைவதாக எந்த நிறுவனம் கூறுகிறது- ஐக்கிய
நாடுகளின் சிறுவர் நிதியம்
35. கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களை
தடுக்கும் அரணாக விளங்குவது- ஓசோன் படலம்
36. குளிர்பதனப் பெட்டிய இருந்து வெளிவரும் நச்சுக்காற்று
- குளோரோ புளோரோ கார்பன்
37. எந்த வாயு ஓசோன் படலத்தை ஓட்டையிடுகிறது - குளோரோ புளோரோ கார்பன்
38. குளிப்பதனப் பெட்டியில் தற்போது பயன்படுத்தப்படும்
வாயு - ஹைட்ரோ கார்பன்
39. அமில மழை பொழிவுக்கு காரணமான வாயு - கந்தக டை ஆக்சைடு,நைட்ரஜன் டை ஆக்சைடு
40. உலக காற்று நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது-
ஜீன் 15
41. குளோரோ
புளோரோ கார்பனின் ஒரு மூலக்கூறு - 1 லட்சம்
ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து விடும்
42. "மென்துகிலாய் உடல்வருடி வாஞ்சையுடன் மனம்
வருடி" என்ற பாடலை இயற்றியவர் - தேவகோட்டை
வா. மூர்த்தி
43. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் எந்தெந்த
பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகின்றனர் - திருவெம்பாவை, திருப்பாவை
44. எந்த நூற்றாண்டில்
வெள்ளைப் பளிங்குக் கற்களால் தாஜ்மஹால் கட்டப்பட்டது - 17ம் நூற்றாண்டு
45. "காற்றே, வா மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு,
மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடுன் வா” என்ற பாடலை பாடியவர் - பாரதியார்
46. “நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா" என்று
பாராட்டப்பட்டவர் - பாரதியார்
47. “சிந்துக்குத் தந்தை" என்று பாராட்டப்பட்டவர்
- பாரதியார்
48. எட்டயப்புர ஏந்தலாக அறியப்பட்டவர் - பாரதியார்
49. சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் பெண்ணடிமைத் தனத்தையும்
தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர் - பாரதியார்
50. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய காவியங்களை
படைத்தவர் - பாரதியார்
51. பாரதியார் இயற்றிய குழந்தைகளுக்கான நூல்கள் - கண்ணன்
பாட்டு,பாப்பா பாட்டு,புதிய ஆத்திச்சூடி
52. பாரதியார் எந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார்
- இந்தியா,சுதேசமித்திரன்
53. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் - பாரதியார்
54. உரைநடையும் கவிதையும் இணைந்து கட்டுகளுக்கு அப்பாற்பட்டு
உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது - யாப்பு
55. ஆங்கிலத்தில் Prose Poetry (Free Verse) என்றழைக்கப்படும்
வசனக்கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது- பாரதியார்
56. உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு
தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசனக்கவிதை
வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்
57. வசன கவிதையே என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று
- புதுக்கவிதை
58. திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தாதர்கிட தீம்தரிகிட
தீம்தரிகிட தீம்தரிகட” என்ற பாடலின் ஆசிரியர் – பாரதியார்
59. முல்லைப்பாட்டை இயற்றியவர் - நப்பூதனார்
60. "சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள்'' - என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - முல்லைப்பாட்டு
61. "கொடுங்கோள் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர், தாயர்'' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - முல்லைப்பாட்டு
62. "நன்னர் நன்மொழி கேட்டனம் " என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் - முல்லைப்பாட்டு
63. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது
- முல்லை
64. முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுது - கார்காலம்
65. முல்லை நிலத்திற்குரிய சிறுபொழுது - மாலை
66. முல்லை நிலத்தில் காணப்படும் நீர் வகை - காட்டாறு
67. முல்லை நிலத்தில் காணப்படும் மரம் - கொன்றை,காயா,குருந்தம்
68. முல்லை நிலத்தில் உள்ள பூ வகை – முல்லை,பிடவம்,தோன்றிப்பூ
69. முல்லை நிலத்தின் உரிபொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
70. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று - முல்லைப்பாட்டு
71. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது - 103
72. முல்லைப்பாட்டின் பா வகையைக் காண்க - ஆசிரியப்பா
73. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் - முல்லைப்பாட்டு
74. தமிழினங்கள் குடியேறிய நாடு – மலேசியா,சிங்கப்பூர்,இந்தோனேசியா
75. கப்பித்தான் என்பதன் பொருள் - தலைமை மாலுமி
76. தொங்கான் என்பதன் பொருள் - கப்பல்
77. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப்
பெயர் வைக்கும் முறை எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது - 2000
78. புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்களை பட்டியலிட்டுள்ள
அமைப்பு - புது தில்லியில் உள்ள உலக வானிலை
மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம்
79. எந்த ஆண்டு புயல்களுக்கு பெயர் வைக்க 64 பெயர்கள்
பட்டியலிடப்பட்டது - செப்டம்பர் 2004
80. புயலின் பெயர்களை எந்தெந்த நாடு வழங்கியுள்ளது
- வங்கதேசம், இந்தியா,மியான்மர், ஓமன், பாகிஸ்தான்,இலங்கை,
தாய்லாந்து
81. புயல்களுக்கு இந்தியா வழங்கிய பெயர்களில் பயன்படுத்தப்படாதது
- சாஹர்
82. கஜா என்ற புயலின் பெயரை வழங்கிய நாடு - இலங்கை
83. பெய்ட்டி என்ற புயலின் பெயரை வழங்கிய நாடு - தாய்லாந்து
84. வங்கக் கடலில் வீசும் புயல் - இடம்புரிப் புயல்
85. ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல் - வலம்புரிப் புயல்
86. புயல்களின் சுழற்சி விளைவை 1835ல் கண்டுபிடித்தவர்
- காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ்
87. புயலின் வலம்புரி , இடம்புரி என்ற சுழற்சிக்கு
என்ன பெயர் - கொரியாலிஸ் விளைவு
88. எந்த மீன்கள் கூட்டம் கூட்டமாய், கண்மாயில் முதுகு
தெரிய மூழ்கி நீந்தும் எருமைகளென முனகல் ஒலியோடு பின் தொடர்ந்தன - அவுலியாமீன்
89. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி வெளியான முதல் புதினம்
- புயலிலே ஒரு தோணி
90. ப. சிங்காரம் வாழ்ந்த காலக்கட்டம் - 1920 - 1997
91. ப. சிங்காரம் எந்த நாட்டில் இருந்த பொழுது தென்கிழக்காசியாப்
போர் மூண்டது - இந்தோனேசியா
92. கடற்கூத்து என்னும் அத்தியாயம் எந்த நூலில் உள்ளது
- புயலிலே ஒரு தோணி
93. ப.சிங்காரம் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் எங்கு
பிறந்தார் - சிங்கம்புணரி
94. ப. சிங்காரம் எந்த இதழில் பணியாற்றினார் - தினந்தந்தி
95. ப.சிங்காரம் தன் சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை
மாணவர்களின் வளர்ச்சிக்காக வழங்கினார்-கல்வி
96. 'பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி' என்ற பாடல்
வரி இடம்பெற்றுள்ள நூல் – அகநானூறு
97. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது - சொற்றொடர்,தொடர்
98. பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும்
சேரும் தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி
வருவதை - தொகைநிலைத் தொடர் என்று கூறுவர்
99. தொகைநிலைத்தொடர் எடுத்துக்காட்டு தருக - கரும்பு தின்றான்
100. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் - 6
101. வேற்றுமைத்தொகைக்கு எடுத்துக்காட்டுத் தருக - மதுரை சென்றார்
102. உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டு
தருக - தேர்ப்பாகன்
103. “தமிழ்த்தொண்டு" இலக்கணக் குறிப்பு தருக
- நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகை
104. காலம் கரந்த பெயரெச்சம் - வினைத்தொகை
105. வீசு தென்றல், கொல்களிறு இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
106. வினைப்பகுதியும் அடுத்துப் பெயர்ச்சொல்லும் அமைந்த
சொற்றொடர்களிலேயே - வினைத்தொகை அமையும்
107. பண்புத்தொகை எதை உணர்த்தும் - நிறம்,வடிவம்,அளவு
108. பண்புத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக - செங்காந்தள்
109. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும்
நின்று இடையில் ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
110. இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கு எடுத்துக்காட்டு
தருக - சாரைப்பாம்பு
111. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து
வருவது - உவமைத்தொகை
112. உவமைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக - மலர்க்கை
113. இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும்
இடைச்சொல் மறைந்து வருவது- உம்மைத்தொகை
114. உம்மைத்தொகை அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்
- எண்ணல்,
எடுத்தல் , முகத்தல் , நீட்டல்
115. உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக - அண்ணன் தம்பி
116. அன்மொழித்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக - முறுக்கு மீசை வந்தார்
117. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள்
கூறுகிறோம் - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள
நயங்கள் - மோனை, எதுகை
118. ஒவ்வோர் ஆண்டும் ஜீன் 15ஐ உலகக்காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்
119. காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம்
செய்து அதில் வெற்றி கண்டவர்கள்- தமிழர்கள்
120. பாடு இமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு
அடி உணர்த்தும் அறிவியல் செய்தி - கடல்நீர்
ஆவியாகி மேகமாதல்
121. 'பெரிய மீசை' சிரித்தார் வண்ணச் சொல்லுக்கான தொகையின்
வகை - அன்மொழித்தொகை
122. மலர்ந்தும் மலராத பாதி மலர்போல எனத் தொடங்கும் பாடலின்
ஆசிரியர் - கண்ணதாசன்
123. அந்த இடம் காற்றே வா உன்னைப் பாடாமல் இருக்க முடியாது
என்று எழுதியவர் - அப்துல் ரகுமான்
124. கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பற்கு அரியனவாய்
இருக்கும் மலர்கள் - ஆல மலர் , பலா மலர்
125. இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில்
இருக்கும் மலர் - பாங்கர் மலர்
126. அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்தும் புறத்தே காட்சி
படாமல் உள்ளேயே இருக்கும் மலர்கள் - அத்தி,
ஆலம் ,கொழிஞ்சி,பலா
127. பயன்பாடு, நாற்றம் மற்றும் மக்கள் விரும்பாத மலர்கள்
- நெருஞ்சி, எருக்கு, பூளை,வேளை, ஊமத்தம்,
கள்ளி, முருங்கை
128. இனிப்பான பூ - இலுப்பை
129. இலுப்பை பூவை மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து
உண்ணும் விலங்கு - கரடி
130. குடிநீருக்கு தன் மணத்தை ஏற்றும் பூ - பாதிரிப்பூ
131. எந்த பூவில் காய்தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை
அரிசி தோன்றும் - மூங்கில் பூ
132. பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்தி என்ற நூலின்
ஆசிரியர் – இளஞ்சேரன்
133. குயில்பாட்டு என்ற நூலின் ஆசிரியர் - பாரதியார்
134. அதோ அந்தப்பறவை போல என்ற நூலின் ஆசிரியர் - ச.முகமது அலி
135. உலகின் மிகச்சிறிய தவளை என்ற நூலின் ஆசிரியர் -
ராமகிருஷ்ணன்
136. இலக்கணக்குறிப்பு தருக "மார்கழித்திங்கள்
" - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
137. இலக்கணக்குறிப்பு தருக அண்ணன் தம்பி - உம்மைத்தொகை
138. இலக்கணக் குறிப்பு தருக "சிவப்பு சட்டை பேசினார்''
– அன்மொழித்தொகை
139. தொகைநிலைத் தொடர் - ஆறு வகைப்படும்
140. காலம் கரந்த பெயரெச்சம் - வினைத்தொகை
141. பொருத்துக
1.
மயலுறுத்து - மயங்கச்செய்
2.
ப்ராண-ரஸம் - உயிர்வளி
3.
லயத்துடன் - சீராக
4.
அருகுற - அருகில்
142. பொருத்துக.
1.
நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
2.
நேமி - வலம்புரிச்சங்கு
3.
கோடு - மலை
4.
கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
143. பொருத்துக.
1.
நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
2.
தூஉய் - தூவி
3.
விரிச்சி - நற்சொல்
4.
சுவல் - தோள்
144. பொருத்துக
1.
மூதூர் - பண்புத்தொகை
2.
உறுதுயர் - வினைத்தொகை
3.
கைதொழுது - மூன்றாம் வேற்றுமைத்தொகை
4.
தடக்கை - உரிச்சொல் தொடர்
145. பொருத்துக.
1.
கொண்டல் - கிழக்கு
2.
கோடை - மேற்கு
3.
தெற்கு - தென்றல்
4.
வாடை - வடக்கு
146. பொருத்துக.
1.
Tempest - பெருங்காற்று
2.
Land Breeze - நிலக்காற்று
3.
Sea Breeze - கடற்காற்று
4.
Whirl wind – சுழல்காற்று
5.
Storm - புயல்
6.
Tomado – சூறாவளி
பாடம் 2.2 காற்றை வா!
நூல் வெளி |
·
மகாகவி சுப்பிரமணிய
பாரதியார், 'நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா', 'சிந்துக்குத் தந்தை' என்றெல்லாம்
பாராட்டப் பெற்றவர்; எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்; கவிஞர்; கட்டுரையாளர்; கேலிச்சித்திரம்-
கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர்; சிறுகதை ஆசிரியர்; இதழாளர்; சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும்,
பெண்ணடிமைத்தனத்தையும் தன் பாடல்களில் எதிர்த்து எழுதியவர்; குயில்பாட்டு, பாஞ்சாலி
சபதம் முதலிய காவியங்களையும் கண்ணன் பாட்டையும் பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி என,
குழந்தைகளுக்கான நீதிகளையும் பாடல்களில் தந்தவர்; இந்தியா, சுதேசமித்திரன் முதலிய
இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர். ·
பாட்டுக்கொரு
புலவன் எனப் பாராட்டப்பட்டவர் பாரதியார்; இவருடைய கவிதைத் தொகுப்பிலுள்ள காற்று என்னும்
தலைப்பிலான வசனகவிதையின் ஒரு பகுதியே பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது |
பாடம் 2.3 முல்லைப்பாட்டு
நூல் வெளி |
·
முல்லைப்பாட்டு,
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. இது 103 அடிகளைக் கொண்டது. ·
இப்பாடலின்
1- 17அடிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன. ·
முல்லைப்பாட்டு
ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது; முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது; பத்துப்பாட்டில்
குறைந்த அடிகளை உடைய நூல் இது. இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார்
மகனார் நப்பூதனார். |
பாடம் 2.4 புயலிலே ஒரு தோணி
நூல் வெளி |
·
புலம்பெயர்ந்த
தமிழர்கள் பற்றிய முதல் புதினம், புயலிலே ஒரு தோணி. ·
இந்நூலாசிரியர்
ப.சிங்காரம் (1920 - 1997). இந்தோனேசியாவில் இருந்தபோது, தென்கிழக்காசியப் போர் மூண்டது.
அச்சூழலில், மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு இப்புதினம்.
அதில் கடற்கூத்து என்னும் அத்தியாயத்தின் சுருக்கப்பட்ட பகுதிஇங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ·
ப.சிங்காரம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர். வேலைக்காக இந்தோனேசியா சென்றார்.
மீண்டும் இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில் பணியாற்றினார். ·
இவர் அன்றைய
சூழலில் அவருடைய சேமிப்பான ஏழரை இலட்சம் ரூபாயை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக
வழங்கினார். |
minnal vega kanitham