1.உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றும் காட்டும் காவியம் என திரு.வி.க எந்த காவியத்தைக் கூறினார்?
(A) பெரிய புராணம்
(B) கந்த புராணம்
(C) சீறாப் புராணம்
(D) திருவிளையாடற் புராணம்
(A) பெரிய புராணம்
2. வீடுதோறிரந்தும் – பிரித்தெழுதியவற்றுள் சரியானதைத் தெரிந்தெழுதுக.
(A) வீடுதோறும் + இரந்தும்
(B) வீடுதோ+றும் +இரந்தும்
(C) வீடுதோர் +இரந்தும்
(D) வீடுதோறு +இரந்தும்
(A) வீடுதோறும் + இரந்தும்
3.பொருத்தமில்லாத இணை
(A) இன்மை – இன்பம்
(B) திண்மை – வலிமை
(C) ஆழி – கடல்
(D) நோன்மை- தவம்
(A) இன்மை – இன்பம்
4. சந்திப் பிழையற்று தொடர் எது?
(A)கடுகை துளைத்து ஏழ்கடவைப் புகட்டி குறுகத்தரித்தக் குறள்
(B) கடுகைத் துளைத்து ஏழ்க்கடலைப் புகட்டி குறுகத்தறித்தக் குறள்
(C) கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறிக்கக் குறள்
(D) கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்
(D) கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத்தறித்த குறள்
5. பிறமொழிச் சொற்களை நீக்குதல் நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்
(A) வணக்கம் என்று பணித்தவனை வாழ்த்தினேன்
(B) வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்
(C) வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்
(D) வணக்கம் என்று விழந்தவனை ஆசீர்வதித்தேன்
(C) வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்
6.பிறமொழிக் சொற்களற்ற தொடர்
(A) அவர்கள் இருவருக்கும் இடையே விவாதம் நடந்தது
(B) அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
(C) அவர்கள் இருவருக்கும் இடையே சம்பாஷணை நடந்தது
(D) அவர்கள் இருவருக்கும். இடையே கான்வர்சேசன் நடந்தது
(B) அவர்கள் இருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது
7.“வருவான்“ என்பதில் வோச்சொல் யாது?
(A) வரு
(B) வருவார்
(C) வா
(D) வ
(C) வா
8. ‘கொள்’ என்று வேர்ச்சொல்லிலிருந்து உருவாகிய வினையெச்சம் எது?
(A) கொண்டு
(B) கொண்ட
(C) கொள்ளற்க
(D) கொண்டார்.
(A) கொண்டு
9.”கொல்’ என்ற வேர்ச்சொல்லிற்கான தொழிற்பெயர் எது?
(A) கொல்க
(B) கொல்லற்க
(C) கோறல்
(D) கொன்ற
(C) கோறல்
10.’எள்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவான தொழிற்பெயர் எது ?
(A) எள்ளிய
(B) எள்ளினான்
(C) எள்ளல்
(D) இவற்றில் ஏதுமில்லை
(D) இவற்றில் ஏதுமில்லை
11. சிலப்பதிகாரம் தமிழில் முதன் முதலில் தோன்றிய காப்பியமாகும். இதனைக் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றுவர்
(A) அறிஞர் எதனைப் போற்றவர்?
(B) தமிழில் முதன்முதலில் காப்பியம் தோன்றியது?
(C) குடி மக்கள் காப்பியம் என்றால் என்ன?
(D) தமிழில் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றியது எந்த நூல்?
(D) தமிழில் குடிமக்கள் காப்பியம் என அறிஞர் போற்றியது எந்த நூல்?
12 ஒருவர் போவதை, அவர் பேசியபடியே கூறுவது எவ்வகைத் தொடர்?
(A) செய்வினைத் தொடர்
(B) பிறவினைத்தொடர்
(C) நேர்கூற்றுத் தொடர்
(D) அயற்கூற்றுத் தொடர்
(C) நேர்கூற்றுத் தொடர்
13.பின்வருவனவற்றுள் எவ்வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியம் எனச் சுட்டிக் காட்டுக.
(A)பாவாணர் அரசின் உதவியுடன் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்
(B) அரசின் உதவியுடன் பாவாணரால் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிடப்பட்டது
(C) அரசு உதவி செய்ததால் பாவாணர் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிட்டார்
(D) சொற்பிறப்பியல் அகர முதலியை பாவாணர் அரசு உதவியுடன் வெளியிட்டார்
(B) அரசின் உதவியுடன் பாவாணரால் சொற்பிறப்பியல் அகர முதலி வெளியிடப்பட்டது
14. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தோ லான். – இக்குறட்பாவில் இடம் பெற்ற அணியைச் சுட்டுக.
(A) வஞ்சப்புகழ்ச்சி அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) இரட்டுற மொழிதல் அணி
(D) பின்வருநிலையணி
(A) வஞ்சப்புகழ்ச்சி அணி
15. திருக்குறள் அறத்துப்பாவில் உள்ள அதிகாரங்களின் மொத்த எண்ணிக்கை
(A) 38
(B) 70
(C) 9
(D) 10
(A) 38
16. தமிழக அரசு எந்நாளைத் திருவள்ளுவர் நாளாக அறிவித்துள்ளது?.
(A) சித்திரை 1
(B) ஆடி 18
(C) தை 2
(D) புரட்டாசி 3
(C) தை 2
17. பொருத்துக
(a) இன்மை 1. வலிமை
(b) திண்மை 2. வறுமை
(c) ஆழி 3. தவம்
(d) நோன்மை 4. கடல்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 2 1 4 3
( C) 1 3 2 4
(D) 3 4 1 2
(B) 2 1 4 3
18 “தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்தவன்றே- என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) சீவாசிந்தமாணி
(C) கம்பராமாயணம்
(D) மணிமேகலை
(C) கம்பராமாயணம்
19. கம்பராமாயணத்தில் எத்தனை பாடல்களுக்கொரு முறை சடையப்ப வள்ளல் வாழ்த்திப் பாடப்பட்டுள்ளார்?
(A) ஆயிரம்
(B) நூறு
(C) இருநூறு
(D) ஐம்பது
(A) ஆயிரம்
20. பின்வருவனவற்றுள் சரியானது
I .பதிற்றுப்பத்து என்னும் நூலில் 10 சேர மன்னர்களைப் பற்றி 10 புலவர்கள் பாடியுள்ளனர்.
II . முதல் பத்தும் எட்டாம் பத்தும் கிட்டவில்லை
III. முதல் பத்தும் 10 ஆம் பத்தும் கிட்டவில்லை
(A) I கூற்றும் II கூற்றும் சரியே
(B) I கூற்றும் III கூற்றும் தவறு
(C) I கூற்றும் II கூற்றும் தவறு
(D) I கூற்றும் III கூற்றும் சரியே
21. பத்துப்பாட்டு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்கள்
(A) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
(B) முல்லைப்பாட்டு மலைபடுகடாம். நெடுநல்வாடை
(C) மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை பட்டினப்பாலை
(D) மலைபடுகடாம். குறிஞ்சிப்பாட்டு நெடுநல்வாடை
(A) முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை
22. ‘பெருமாள் திருமொழி’ நூலின் ஆசிரியர்
(A) குலசேகர ஆழ்வார்
(B) பெரியாழ்வார்
(C) திருப்பாணாழ்வார்
(D) திருமங்கையாழ்யார்
(A) குலசேகர ஆழ்வார்
23 “தான் நோக்கள் தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன
கோனோக்கி வாழும் குடிபோன்றிருந்தேனே” -இப்பாடல் இடம் பெற்ற நூல்
(A)தேவாரம்
(B) திருவாசகம்
(C) நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
(D) பெரியபுராணம்
(C) நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
24 “போங்கு கடல் கல்மிதப்பிற் போந்தேறும் அவர் பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யாருளரே“ -இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
(A)கம்பராமாயணம்
(B) மகாபாரதம்
(C) பெரியபுராணம்
(D) நளவெண்பா
(C) பெரியபுராணம்
25 பின்வருவனவற்றுள் சிற்றிலக்கிய வகை நூல்
(A) நாலடியார்
(B) கலிங்கத்துப்பரணி
(C) பழமொழி நானூறு
(D) இன்னாநாற்பது
(B) கலிங்கத்துப்பரணி
26. “மாங்காய்ப்பால் உண்டு மலைமேலே இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் எதுக்கடி? – குதம்பாய்
தேங்காய்ப்பால் எதுக்கடி” – இப்பாடலை எழுதிய சித்தர்
(A) அகப்பேய்ச் சித்தர்
(B) பாம்பாட்டிச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
(D) இடைக்காட்டுச் சித்தர்
(C) குதம்பைச் சித்தர்
27.இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று பாடுவது யாரைப் பற்றிய பாடல்?
(A)வாழ்பவரை
(B) இறந்தவரை
(C) சிறந்தவரை
(D) வள்ளலை
(B) இறந்தவரை
28.பொருத்துக
(a)திருத்தொண்டத்தொகை 1. நம்மாழ்வார்
(b) திருசிற்றம்பலர் கோவையார் 2. திருமங்கை ஆழ்வார்
(c) திருவரங்மொழி 3. சுந்திர மூர்த்தி
(d) திருக்குறுந் தாண்டகம் 4. மணிவாசகர்
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 3 4 1 2
( C) 4 3 1 2
(D) 3 2 1 4
(B) 3 4 1 2
29. பணை என்னும் சொல்லின் பொருள்
(A)மேகம்
(B) புனல்
(C) மூங்கில்
(D) குடை
(C) மூங்கில்
30. செந்தமிழை செழுந்தமிழாக காண ஆர்வம் கொண்ட, கவிஞர்
(A) சுரதா
(B) பாரதிதாசனார்
(C) பாரதியார்
(D) கலைஞர் மு. கருணாநிதி
(B) பாரதிதாசனார்
31. ‘கல்லக்குடி மாகாவியம்’ – நூலின் ஆசிரியர்
(A) கம்பர்
(B) கவிஞர்
(C) அப்துல் ரகுமான்
(D) கண்ணதாசன்
(D) கண்ணதாசன்
32 ‘பக்தி முக்கியம் அந்தக்காலம்
படிப்பு முக்கியம் இந்தக்காலம்’ – இப்பாடலடியைப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வைரமுத்து
(D) உடுமலை நாராயணகவி
(D) உடுமலை நாராயணகவி
33.பிரெஞ்சு குடியரசுத் தலைவரிடம் “செவாலியர்” விருது பெற்றவர்
(A) வீரமாமுனிவர்
(B) பாரதியார்
(C) கம்பதாசன்
(D) வாணிதாசன்
34. “கால்கள் இரண்டும் படைத்தவன் நீ – பெருங்
(D) வாணிதாசன்
34. “கால்கள் இரண்டும் படைத்தவன் நீ – பெருங்
கல்லும் மலையும் கடப்பதற்கே” – என்ற எழுச்சிமிகு வரிகளுக்கு சொந்தமானவர்
(A) தாராபாரதி
(B) பாரதியார்
(C) பாரதிதாசன்
(D) சாலை. இளந்திரையன்
(D) சாலை. இளந்திரையன்
35. பம்மல் சம்பந்தனார்………………………. எனப் போற்றப்பட்டவர்
(A) தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
(B) தமிழ் நாடகத் தந்தை
(C) நாடக உலகின் இமயமலை
(D) சிறந்த வசன கர்த்தா
(B) தமிழ் நாடகத் தந்தை
36.பட்டியல் I-ஐப் பட்டியல் II உடன் போருத்துக
பட்டியல் I பட்டியல் II
சிறுகதை ஆசிரியர்
(a)தேங்காய்த்துண்டுகள் 1. ஜெயகாந்தன்
(b) கிழிசல் 2. புதுமைப்பித்தன்
(c) கூடை 3. டாக்டர் மு.வ.
(d) ஒருநாள் கழிந்தது 4. நாஞ்சில் நாடன்
(a) (b) (c) (d)
(A) 1 3 4 2
(B) 2 4 3 1
( C) 4 1 2 3
(D) 3 4 1 2
(D) 3 4 1 2
37.கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?
(A)எடிசன்
(B) வால்ட் டிஸ்னி
(C) வால்ட் வின்மன்
(D) எட்வர்டு மைபிரிட்சு
(B) வால்ட் டிஸ்னி
38.’திரை உலக அகத்தியர்’ எனனும் சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
(A) அறிஞர் அண்ணா
(B) டாக்டர் மு.வ
(C) கவிஞர் கண்ணதாசன்
(D) கவிஞர் சுரதா
(A) அறிஞர் அண்ணா
39.பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” – எனக் கூறும் நூல்
(A)புறநானூறு
(B) சிலப்பதிகாரம்
(C) தேவாரம்
(D) பட்டினப்பாலை
(B) சிலப்பதிகாரம்
40 ‘செந்தமிழ் ஞாயிறு’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்
(A) தேவநேயப்பாவாணர்
(B) பெருஞ்சித்திரனார்
(C) பரிதிமாற்கவலஞர்
(D) சி இலக்குவனார்
(A) தேவநேயப்பாவாணர்
41. திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயாத்தவர்
(A) வீரமாமுனிவர்
(B) ஜி.யு போப்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D) கால்டுவெல்
(B) ஜி.யு போப்
42″பரமார்த்த குரு கதை” என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர்
(A) ஜி.யு.போப்
(B) வீரமாமுனிவர்
(C) ரா.பி. சேதுப்பிள்ளை
(D)ஆறுமுகநாவலர்
(B) வீரமாமுனிவர்
43. அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன்” என்று கூறியவர்
(A) காந்தியடிகள்
(B) ஐயகாலால் நேரு
(C) அம்பேத்கர்
(D) அறிஞர் அண்ணா
(C) அம்பேத்கர்
44.தலைவர்களை உருவாக்குபவர் என்று சிறப்பித்து அழைக்கப்படுபவர் யார்?
(A) இராஜாஜி
(B) ஜவகர்லால் நேரு
(C) காமராசர்
(D) அம்பேத்கர்
(C) காமராசர்
45.”உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம்” என்றவர்
(A)காந்தியடிகள்
(B) பேரியார்
(C) திரு வி கலியாண சுந்தரனார்
(D) அம்பேத்கர்
(D) அம்பேத்கர்
46.காந்தியடிகளால் ‘தத்தெடுக்கப்பட்ட மகள்’ என்று அழைக்கப்பட்டவர்
(A) அஞ்சலையம்மாள்
(B) கோதைநாயகியம்மாள்
( C) அம்புஜத்தம்மாள்
(D)அசலாம்பிகையம்மாள்
( C) அம்புஜத்தம்மாள்
47.பொருந்தும் விடையை எழுதுக
காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதி இறக்குமதியின் பொருட்டுப் பொருள்கள் மண்டிக் கிடந்ததைக் கூறும் நூல்
(A) முல்லைப்பாட்டு
(B) குறிஞ்சிப்பாட்டு
(C) நெடுநல்வாடை
(D) பட்டினப்பாலை
(D) பட்டினப்பாலை
48. பசு கொடுக்கும் ஐந்து பொருளின் பெயர்
(A) பஞ்சசீலம்
(B) பஞ்ச காவினி
( C) பஞ்ச கவ்வியம்
(D) பஞ்சமுக கவ்வியம்
( C) பஞ்ச கவ்வியம்
49.வள்ளலாரைப் பாரதியார் எவ்வாறு போற்றினார்?
(A) புதுநெறி கண்ட புலவர்
(B) அருட்பிரகாச வள்ளலார்
(C) புரட்சித்துறவி
(D) இறையருள் பெற்ற திருமகனார்
(A) புதுநெறி கண்ட புலவர்
50 “அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்த” – இறைவன் தம்மை வருவித்ததாகக் கூறியவர்
(A) திருமூலர்
(B) திருநாவுக்கரசர்
( C) இராமலிங்க அடிகள்
(D) குலசேகர ஆழ்வார்.
( C) இராமலிங்க அடிகள்
51. சரியான பொருத்தம் எது?
சொல் பொருள்
(a) விரை 1.உடல்
(b) சுழல் 2.பெருகி
(c) ததும்பி3.மணம்
(d) மெய் 4.அணிகலன்
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 2 3 4 1
( C) 1 2 3 4
(D) 3 2 4 1
52.பட்டியல் I -லிருந்து பட்டியல் II-ஐப் பொருத்துக
பட்டியல் – I பட்டியல் – II
திணை கருப்பொருள்
(a) குறிஞ்சி 1.சூறையாடல்
(b)முல்லை 2.களையெடுத்தல்
(c) மருதம் 3.காளை தழுவல்
(d) பாலை 4.வெறியாடல்
(a) (b) (c) (d)
(A) 3 1 2 4
(B) 4 2 3 1
( C) 4 3 2 1
(D) 2 4 3 1
53.தண்டமிழ் ஆசான் என இளங்கோவடிகளால் போற்றப்பட்டவர் யார்?
(A) கம்பர்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) திருவள்ளுவர்
(D) ஒளவையார்
54.முல்லைத் திணைக்குப் பொருந்தாதது?
(A) தோன்றல்
(B) ஆயர்
(C) சேர்ப்பன்
(D) இடையர்
55. என் மாமா வந்தது – இத்தொடரில் அமைந்துள்ள வழு என்ன?
(A) திணை வழு
(B) பால் வழு
(C) இட வழு
(D) கால வழு
56. சந்திப் பிழையற்ற சொற்றொடர் எது?
(A) போர் கோலம் பூண்டு வந்த பரதனது சேனையை கண்ட குகன், இராமனை வெல்ல கருதி வந்தான் என்று எண்ணினான்.
(B) போர்க் கோலம் பூண்டு வந்தப் பரதனதுச் சேனையைக் கண்ட குகன், இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணினான்.
(C) போர்க் கோலம் பூண்டு வந்த பரதனது சேனையைக் கண்ட குகன், இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணினான்.
(D) போர்க் கோலம் பூண்டு வந்த பரதனது சேனையை கண்ட குகன், இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணினான்.
57.ஒருமை பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) இங்குள்ளது எல்லாம் நல்ல பழமே
(B) இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
(C) இங்குள்ளன எல்லாம் நல்ல பழமே
(D) இங்குள்ளன எல்லாம் நல்ல பழங்களே
58. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை பொருந்துக
(a) Aesthetic 1. பாசறை
(b) Archaeology 2. இயற்கை வனப்பு
(c) Green Rooms 3. தொல்லியல் ஆய்வு
(d) Explorers 4. நிலவியல் கண்டுபிடிப்பாளர்கள்
(a) (b) (c) (d)
(A) 4 2 1 3
(B) 1 3 2 4
( C) 2 3 1 4
(D) 3 4 1 2
59. ‘வண்மை என்பதன் பொருள் கூறுக
(A) வண்ணம்
(B) வலிமை
(C) வள்ளல் நன்மை,
(D) மெலிவு
60. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிக – மா
(A) குட்டி
(B) கொக்கு
(C) விலங்கு
(D) நீர்
61. அகர வரிசைப்படி வந்துள்ள சொற்களைச் சுட்டிக் குறிக்க
(A) மூகில் புலை, நவ்வி, சிந்தை
(B) புனல், முகில், நவ்வி, சிந்தை
(C) சிந்தை நவ்வி, முகில், புனல்
(D) சிந்தை நவ்வி, புனல் முகில்
62.சரியான தொடரைத் தேர்ந்தெடு
(A) குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு
(B) குமரி நோய்க்குக் கண்ட குமரி கொடு
(C) நோய்க்குக் குமரி கண்ட குமரி கொடு
(D) குமரி கொடு நோய்க்குக் கண்ட குமரி
(A) குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு
63.நீர், நீவிர் என்பன…………… பெயர்கள்
(A) முன்னிலை ஒருமை பெயர்கள்
(B) முன்னிலைப் பன்மை பெயர்கள்
(C) ஏவல் ஒருமை பெயர்கள்
(D) படர்க்கை பலர்பால் பெயர்கள்
(B) முன்னிலைப் பன்மை
64.”நாவினுக் கரசர் கேளா‘- இச்சொற்றொடரில் கோடிட்ட சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பு
(A) விளித்தொடர்
(B) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(C) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
(D) எதிர்மறைப் பெயரெச்சம்
(C) செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
65. ‘மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்’ என்ற பாடல் வரியில் இடம்பெறும் தொடை எது?
(A) எதுகை
(B) இயைபு
(C) மோனை
(D) அளபெடை
நிலன் ஏந்திய விசும்பும்’ என்ற பாடல் வரியில் இடம்பெறும் தொடை எது?
66. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் – இக்குறட்பாவில் பயின்று வருவது
(A) அடி எதுகை, சீர் மோனை
(B) அடிமோனை, அடி இயைபு
(C) சீர்மோனை, அடி இயைபு
(D) அடிமோனை. சீர்எதுகை
(A) அடி எதுகை, சீர் மோனை
67. ”……புரை தீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்” – எனத் திருக்குறளைப் போற்றியவர்
(A)பாரதியார்
(B) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(C) பாரதிதாசன்
(D) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப் பிள்ளை
(C) பாரதிதாசன்
68 “தானதைச் சம்பு வின்கனி யென்று
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்” – இவ்வரிகளில் ‘சம்புவின்கனி’ எனக் குறிப்பிடப்படுவது எது?
(A)நெல்லிக்கனி
(B) மாங்கனி
( C) நாவற்கனி
(D) கொய்யாக்கனி
( C) நாவற்கனி
69.பட்டியல் – I ஐ பட்டியல் – II உடன் பொருத்துக
பட்டியல் 1 பட்டியல் – II
(a)நிலத்துக்கு அழகு 1. அறம்
(b) குளத்துக்கு அழகு 2. நெல்லும் கரும்பும்
(c) பெண்ணுக்கு அழகு 3. தாமரை
(d) மறுமை உலகுக்குச் செல்ல அழகு 4. நாணம்
(a) (b) (c) (d)
(A) 3 2 4 1
(B) 2 3 4 1
(C) 1 2 3 4
(D) 2 3 1 4
(B) 2 3 4 1
70. “அறவுரைக் கோவை“ என வழங்கப்படும் நூலின் பெயரை எழுதுக
(A)திருக்குறள்
(B) முதுமொழிக்காஞ்சி
(C) ஆசாரக்கோவை
(D) திருச்சிற்றம்பலக்கோவை
(B) முதுமொழிக்காஞ்சி
71.நாலடியாருக்கு வழங்கும் சிறப்பு பெயர் யாது?
(A) நாலடி நானூறு
(B) நானூறு அடிகள்
(C) நாலடி நான்கு
(D) நாலடி நானூறு
(D) நாலடி நானூறு
72.கீழ்வரும் அடிவரையறைகளைச் சரியான நூலுடன் பொருத்துக
(a) 13 அடி முதல் 31 அடிவரை 1.நற்றிணை
(b) 3 அடி முதல் 6அடிவரை 2.குறுந்தொகை
(c) 9 அடி முதல் 12 அடி வரை 3.ஐங்குறுநூறு
(d) 4 அடி முதல் 8 அடி வரை 4.அகநானூறு
(a) (b) (c) (d)
(A) 4 3 1 2
(B) 2 1 4 3
( C) 4 1 3 2
(D) 3 2 1 4
(A) 4 3 1 2
73 பின்வரும் நூல்களுள் பொருளால் மாறுபட்ட நூல்?
(A)நற்றிணை
(B) புறநானூறு
(C) ஐங்குறுநூறு
(D) குறுந்தொகை
(B) புறநானூறு
74. ”காதற் கணவனைக் கண்டால், அவன் வாயில்
தீதறு நல்உரை கேட்பனே! ஈதொன்று” -இவ்வடிகள் இடம் பெறும் நூல்
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) குண்டலகேசி
(D) சீவகசிந்தாமணி
(A) சிலப்பதிகாரம்
75.ஆடல்மகள் மாதவி பெற்ற பட்டம்
(A) ஆடலரசி
(B) நாட்டியப் பேரொளி
(C) ஆடல் வல்லாள்
(D) தலைக் கோலரிவை
(D) தலைக் கோலரிவை
76. ”ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி“ எனும் பாடல் வரிகள் இடம் பெற்ற இலக்கணநூல்
(A)தொல்காப்பியம்
(B) நன்னூல்
(C) பன்னிருபாட்டியல்
(D) தண்டியலங்காரம்
(C) பன்னிருபாட்டியல்
77. சைவ வைணவத்தை இணைப்பதற்காக எழுதப்பட்ட நூல்
(A) குறவஞ்சி
(B) முக்கூடற்பள்ளு
(C) அந்தாதி
(D) சதகம்
(B) முக்கூடற்பள்ளு
78. அம்மானை என்பது யாது?
(A) ஆண்கள் விளையாடும் விளையாட்டு
(B) பெண்கள் விளையாடும் விளையாட்டு
(C) குழந்தைகள் விளையாடும் விளையாட்டு
(D) ஆணும் பெண்ணும் சேர்ந்து விளையாடும் விளையாட்டு
(B) பெண்கள் விளையாடும் விளையாட்டு
79.’பாடு’ என்றவுடன் உடனே பாடுபவருக்கு வழங்கப்படும் பெயர்
(A) மதுரகவி
(B) ஆசுகவி
(C) வித்தாரகவி
(D) சித்திரகவி
(B) ஆசுகவி
80. ‘கொம்பினை யொத்த மடப்பிடியோடும்’ – எனும் தொடரில் மடப்பிடி எனக் குறிப்பிடப்படுபவள்
(A) தேவ மகளிர்
(B) கண்ணகி
(C) பாஞ்சாலி
(D) சீதை
(C) பாஞ்சாலி
81.மாணிக்கவாசகரை ஆட்கொள்ளப் பெற்ற இறைவன் கோயில் கொண்டுள்ள திருப்பெருந்துறை – என்ற ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
(A) விருதுநகர் மாவட்டம்
(B) தஞ்சை மாவட்டம்
(C) புதுக்கோட்டை மாவட்டம்
(D) திருச்சி மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
82 ‘தாண்டக வேந்தர்’ என்றழைக்கப்படுபவர்
(A) திருஞான சம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) திருமங்கையாழ்வார்
(D)திருமழிசைநாழயார்
(B) திருநாவுக்கரசர்
83.’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமை சோராதிருத்தல்’ – என்று கூறியவர்
(A) கவிமணி
(B) சுரதா
(C) முடியரசன்
(D) பாரதியார்
(D) பாரதியார்
84.பொருத்துக
(a)கம்பர் 1. பாஞ்சாலி சபதம்
(b)ஒட்டக்கூத்தர் 2. குடும்ப விளக்கு
(c) பாரதிதாசன் 3. இராசராச சோழனுலா
(d) பாரதியார் 4. சரசுவதி அந்தாதி
(a) (b) (c) (d)
(A) 3 4 2 1
(B) 4 3 2 1
( C) 4 2 1 3
(D) 1 3 2 4
(D) பாரதியார்
85. பின்வருவவைற்றுள் அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பில் இல்லாத நூல்
(A) ஒளிப்பறவை
(B) நேயர் விருப்பம்
(C) பால்வீதி
(D) ஆலாபனை
(A) ஒளிப்பறவை
86. 1991 ஆம் ஆண்டு தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர் யார்?
(A) சாலை. இளந்திரையன்
(B) ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
(C) வானிதாசன்
(D) தாராபாரதி
(A) சாலை. இளந்திரையன்
87. சாலை. இளந்திரையனின் கவிதைத் தொகுப்பைக் கண்டறி
(A) தமிழர் சமுதாயம்
(B) தமிழோவியம்
(C) புதுமைப் பூக்கள்
(D) பூத்தது மானுடம்
(D) பூத்தது மானுடம்
88.’ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதியவர் யார்?
(A) தியாகராச தேசிகர்
(B) அரிமதி தென்னகன்
(C) அருணாசலக் கவிராயர்!
(D)இந்திரா பார்த்தசாரதி
(B) அரிமதி தென்னகன்
89. ‘தொண்டுக்கு முந்து. தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும் என்று கூறியவர்
(A) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(B) காந்தியடிகள்
(C) மு. வரதராசனார்
(D) ஜவஹர்லால் நேரு
(C) மு. வரதராசனார்
90.‘டம்பாச்சாரி விலாசம்’ என்னும் நாடக நூலை எழுதியவர்
(A) தி.க. சண்முகனார்
(B) சங்கரதாஸ் சுவாமிகள்
(C) காசி விசுவநாதர்
(D) பரிதிமாற் கலைஞர்
(C) காசி விசுவநாதர்
91 தொண்டை நாடு…………….. உடைத்து
(A) வேழமுடைத்து
(B) முத்துடைத்து
(C) சான்றோர் உடைத்து
(D) சோறுடைத்து
(C) சான்றோர் உடைத்து
92. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மிட்டுமின்றித் தழைத் தோங்கவும் செய்யும் என்று கூறியவர் யார்?
(A) ஈராஸ் பாதிரியார்
(B) ஜி.யு.போப்
(C)தமிழ்த் தென்றல் திரு.வி.க
(D) கால்டுவெல்
(D) கால்டுவெல்
93.”தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிறமொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று” – எனக் கூறியவர்
(A) உவே. சாமிநாத ஐயர்
(B) திரு.வி. கலியாண சுந்தரனார்
(C)பாரதியார்
(D) பாரதிதாசன்
(B) திரு.வி. கலியாண சுந்தரனார்
94.பொருத்துக
புலவர் நூற்பெயர்
(a) திரு.வி.க 1.என் சரித்திரம்
(b) உ.வே.சா. 2.மண்ணின் விண்
(c) பரிதிமாற் கலைஞர் 3.உரிமை வேட்டல்
(d) தேவநேயப்பாவாணர் 4.ரூபாவதி
(a) (b) (c) (d)
(A) 3 1 4 2
(B) 2 4 1 3
( C) 3 1 2 4
(D) 3 4 2 1
(A) 3 1 4 2
95.தமிழ் அறிஞர் டாக்டர் உ.வே.சா அவர்களின் பெயரின் விரிவாக்கம் என்ன?
(A)உத்தமபுரம் வேங்கடனின் மகனார் சாமிநாதன்
(B)உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன்
( C)உத்தமபுரம் வேங்கடநாதனின் மகனார் சாமிநாதன்
(D)உத்தமதானபுரம் வேங்கடநாதனின் மகனார் சாமிநாதன்
(B)உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன்
96. 1990-ஆம் ஆண்டு (இந்திய மாமணி) “பாரத ரத்னர“ விருது பெற்றவர் யார்?
(A)அம்பேத்கர்
(B) மொரார்ஜி தேசாய்
(C) நேரு
(D) இராஜாஜி
(A)அம்பேத்கர்
97. குறிஞ்சி நில ஊர்
(A) ஆர்க்காடு
(B) நீலகிரி
(C) நீலாங்கரை
(D) ஆத்தூர்
(B) நீலகிரி
98. எது சரியானது? “தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்”
(A) மொரிசியசு, இலங்கை, கனடா
(B) பிரிட்டன், பிஜித் தீவுகள், சிங்கப்பூர்
(C) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
(D) பாகிஸ்தான், மலேசியா, தென்அமெரிக்கா
(C) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
99. உலக வனவிலங்கு நாள் எது
(A) அக்டோபர் 4
(B) அக்டோபர் 6
(C)அக்டோபர் 3
(D) அக்டோபர் 1
(A) அக்டோபர் 4
100.’தென்னாட்டின் ஜான்சிராணி’ என அழைக்கப்பட்டவர் யார்?
(A) அஞ்சலையம்மாள்
(B) அம்புஜத்தம்மாள்
(C) இராணி மங்கம்மான்
(D) வேலுநாச்சியார்
(A) அஞ்சலையம்மாள்
minnal vega kanitham