Type Here to Get Search Results !

சதவீதம் [7th & 8th New Maths] TNTET & TNPSC




எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்





MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

8th New Book சதவீதம் & இலாபம் நஷ்டம்

1. ஒரு பழ வியாபாரி 200 இக்கு பழங்களை விற்று 40 ஐ இலாபமாகப் பெறுகிறார். அவரின் இலாபச் சதவீதம் _____ ஆகும். [8th New Book Back]

(அ) 20%

(ஆ) 22%

(இ) 25%

(ஈ) 16 2/3%

 

2. பூச்சட்டி ஒன்றை 528 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? [8th New Book Back]

(அ) 500

(ஆ) 550

(இ) 553

(ஈ) 573

 

3. ஒரு நபர் ஒரு பொருளை 150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12% ஐ இதரச் செலவுகளாக செலவிடுகிறார். 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? [8th New Book Back]

(அ) 180

(ஆ) 168

(இ) 176.40

(ஈ) 88.20

 

4. 16% தள்ளுபடியில், 210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? [8th New Book Back]

(அ) 243

(ஆ) 176

(இ) 230

(ஈ) 250

 

5. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _____ ஆகும். [8th New Book Back]

(அ) 40%

(ஆ) 45%

(இ) 5%

(ஈ) 22.5%

 

6. ஒரு மெத்தையின் குறித்த விலை 7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10 % மற்றும் 20 % என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர்செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க. [8th New Book]

a. 5400

b. 5500

c. 5600

d. 5700

 

 

7. ஒரு பொருளை 820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க. [8th New Book]

a. 901

b. 902

c. 903

d. 904

 

8. ஒரு பொருளை 810 இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை 530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க. [8th New Book]

a. 671

b. 673

c. 670

d. 672

 

9. 10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க. [8th New Book]

a. 30%

b. 40%

c. 60%

d. 50%

 

10. 2 பொருள்கள் 15 வீதம் என சில பொருள்கள் வாங்கப்பட்டு அவை 3 பொருள்கள் 25 வீதம் என விற்கப்பட்டால் இலாபம் சதவீதத்தைக் காண்க. [8th New Book]

a. 11 1/9%

b. 12 1/9%

c. 13 1/9%

d. 11 2/9%

 

11. ஓர் ஒலிப்பெருக்கியை 768 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்? [8th New Book]

a. 1151

b. 1152

c. 1153

d. 1154

 

12. நட்டம் அல்லது  சதவீதம் எப்போதும் __________ மீதே கணக்கிடப்படும். [8th New Book Back]

a. விற்பனை விலை

b. அடக்க விலை

c. இலாபம்

d. நட்டம்

 

13. ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் 8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ______ ஆகும். [8th New Book Back]

a. 5000

b. 6000

c. 7000

d. 8000

 

14. ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் 555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும். [8th New Book Back]

a. 400

b. 500

c. 700

d. 600

 

15. 4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் 4140 இக்கு விற்கப்பட்டது. தள்ளுபடிச் சதவீதம்__________ ஆகும். [8th New Book Back]

a. 8%

b. 9%

c. 10%

d. 7%

 

16. 575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், 325 மதிப்புடைய ஒரு T சட்டைக்கும் 5% சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ______  ஆகும். [8th New Book Back]

a. 944

b. 945

c. 946

d. 947

 

17. ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்குச் சென்று, உணவுக்காக 350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தியது எனில், மத்திய மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரியைக் கணக்கிடுக.  [8th New Book]

a. 8.74

b. 8.76

c. 8.75

d. 8.77

 

18. வர்த்தகர் ஒருவர், ஒரு தண்ணீர் கொதிகலனை 11% இலாபம் மற்றும் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து 10502 இக்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் குறித்த விலை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க.   [8th New Book]

a. 1600

b. 1601

c. 1603

d. 1602

 

19. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க. [8th New Book]

a. 40%.

b. 50%

c. 45%

d. 55%

 

 

20. இரஞ்சித் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தை 16150 இக்கு வாங்கினார். மேலும், அதன் போக்குவரத்துச் செலவுக்காக 1350 ஐ செலுத்தினார். பிறகு, அதனை அவர் 19250 இக்கு விற்றார் எனில், அவரின் இலாபம் அல்லது நட்டச் சதவீதத்தைக் காண்க.  [8th New Book]

a. 9%

b. 10%.

c. 11%

d. 12%

 

21. ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க. [8th New Book]

a. 15%

b. 20%

c. 25%.

d. 30%

 

22. 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.  [8th New Book]

a. 10%

b. 05%

c. 15%

d. 20%.

 

23. மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் 4275 இக்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது. 5% இலாபம் பெற வேண்டுமெனில், அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?  [8th New Book]

a. 4725

b. 4726

c. 4727

d. 4728

 

 

24. மழைக்காலத்தின்போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச் சட்டையின் விலையை 1060 இலிருந்து 901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க. [8th New Book]

a. 10%

b. 15%

c. 25%

d. 20%

 

25. 600 இன் x % என்பது 450 எனில், x இன் மதிப்பைக் காண்க.  (8th New Book)

a. 75

b. 60

c. 65

d. 50

 

26. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)

a. 120

b. 160

c. 130

d. 150

 

27. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)

a. 700

b. 710

c. 720

d. 730

 

28. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை 96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.  (8th New Book)

a. 60

b. 70

c. 90

d. 80

 

29. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும். (8th New Book Back)

a. x = 500

b. x = 600

c. x = 800

d. x = 900

 

30. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது _________% ஆகும். (8th New Book Back)

a. 2 1/3 %

b. 3 1/3 %

c. 3 2/3 %

d. 2 2/3 %

 

31. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book Back)

a. x = 30

b. x = 25

c. x = 50

d. x = 60

 

32. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். (8th New Book Back)

a. 50%

b. 60%

c. 80%

d. 70%

 

33. 0.5252 என்பது ________% ஆகும். (8th New Book Back)

a. 52.52%

b. 5.252%

c. 525.2%

d. 0.5252%

 

34. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.  [8th New Book]

a. 1%

b. 2%

c. 3%

d. மாற்றமில்லை

 

35. 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? (8th New Book)

a. 110

b. 150

c. 125

d. 130

 

36. 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? [8th New Book]

a. 30 

b. 40

c. 50

d. 60

 

37. 300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை 200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க. [8th New Book]

a. 33 2/3%

b. 31 1/3%

c. 32 1/3%

d. 33 1/3%

 

 

38. ஓர் எண்ணின் 75% இக்கும் அதே எண்ணின் 60% இக்கும் இடையேயுள்ள

வித்தியாசம் 82.5 எனில், அந்த எண்ணின் 20% ஐக் காண்க. [8th New Book]

a. 120

b. 100

c. 130

d. 110

 

39. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. [8th New Book]

a. 100

b. 200

c. 300

d. 400

 

40. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. [8th New Book]

a. 80

b. 90

c. 100

d. 200

 

41. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. [8th New Book]

a. மாற்றமில்லை

b. 5%

c. 4%

d. 3%

 

42. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் சதவீதத்தைக் காண்க. [8th New Book]

a. 80%

b. 97%

c. 90%

d. 87%

 

43. 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும். [8th New Book]

a.  10%

b.  15%

c.  20%

d.  30%

 

44. ஒரு பள்ளித் தேர்தலில் A, B மற்றும் C ஆகிய மூன்று வேட்பாளர்கள் முறையே 153, 245 மற்றும் 102 வாக்குகளைப் பெற்றனர் எனில், வெற்றியாளர் பெற்ற வாக்குச் சதவீதம்___________ஆகும். [8th New Book Back]

a.  48%

b.  49%

c.  50%

d.  45%

 

45. 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும். [8th New Book]

a.  375

b.  400

c.  425

d.  475

 

46. ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். [8th New Book]

a.  60

b.  100

c.  150

d.  200

 

47. 48 இன் 48% = x இன் 64% எனில், x இன் மதிப்பு ___________ ஆகும். [8th New Book]

a.  64

b.  56

c.  42

d.  36

 

Answer Key 8th New Maths இலாபம் நஷ்டம் =

https://www.minnalvegakanitham.in/2022/08/8th-new-profit-loss.html

 

Answer Key 8th New Book சதவீகிதம் =

https://www.minnalvegakanitham.in/2022/08/8th-new-book-percentage.html

 

 

 

7th New Book சதவீகிதம்

1. ஓர் உயிரியல் வகுப்பு மாணவர்கள் குழு உள்ளுரிலுள்ள ஒரு புல்வெளியில் ஆய்வு செய்தனர். அவற்றுள் 40 இல் 30 பூக்கள் வற்றாதவை எனில், வற்றாத பூக்களின் சதவீதம் காண்க. [7th New Book]

a. 75%

b. 60%

c. 80%

d. 25%

 

2. கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 265 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 45%

b. 53%

c. 8%

d. 10%

 

3. கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம் [7th New Book]

a. 60%

b. 15%

c. 25%

d. 15/25

 

4. தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 3/4%

b. 1/4%

c. 25%

d. 50%

 

5. ஒரு தேர்வில் யாழினி 25 இக்கு 15 மதிப்பெண்கள் பெற்றாள் எனில், அதன் சதவீதம் காண்க. [7th New Book]

a. 70%

b. 60%

c. 80%

d. 30%

 

6. 0.07% என்பது [7th New Book]

a. 7/10

b. 7/100

c. 7/1000

d. 7/10,000

 

7. ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48% ஆகும். அவர் பெற்ற வாக்குகளைப் பின்னமாக வெளிப்படுத்துக. [7th New Book]

a. 12/25

b. 25/12

c. 13/25

d. 25/13

 

8. 2015 ஆம் ஆண்டின் உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு 1,500 ஆக இருந்தது. தற்போது அதன் விலை 18% ஆக உயர்ந்தால், நுழைவுச்சீட்டின் விலை எவ்வளவு? [7th New Book]

a. 1500

b. 1700

c. 1770

d. 1800

 

9. ஒரு மாணவர் 20 கேள்விகள் கெண்டகணிதத் தேர்வை எதிர்கொண்டு அதில் 80% மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தார்? [7th New Book]

a. 20

b. 15

c. 16

d. 25

 

10. 8.5 கி.கி எடை கொண்ட ஓர் உலோகப் பட்டையில் 85% வெள்ளி எனில், அதில் வெள்ளியின் எடையைக் காண்க. [7th New Book]

a. 7.225 கி.கி

b. 72.25 கி.கி

c. 722.5 கி.கி

d. 7225 கி.கி

 

11. ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு 1,62,000 ஒவ்வொரு ஆண்டுக்கும் இவ்வியந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து அவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன? [7th New Book]

a. 1,31,200

b. 1,31,220

c. 1,21,200

d. 1,60,000

12. ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் 4800 ஐப்பிரிமியமாக வசூலித்தார் எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை [7th New Book]

a. 210

b. 220

c. 230

d. 240

 

13. பீட்டர் என்பவர் ஒரு தேர்வில் 280 மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வி அடைந்தார். அவர் இன்னும் 20 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், மொத்த மதிப்பெண்களில் 50% பெற்று வெற்றி பெற்றிருப்பார் எனில், மொத்த மதிப்பெண்களைக் காண்க. [7th New Book]

a. 300

b. 600

c. 500

d. 700

 

14. ராமு என்பவர் ஆங்கிலப் பாடத்தில் 25 இக்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 இக்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 இக்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில், அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்? [7th New Book]

a. 80%

b. 75%

c. 85%

d. 90%

 

15. ஒரு தண்ணீர்த்தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? [7th New Book]

a. 25 லிட்டர்கள்

b. 15 லிட்டர்கள்

c. 10 லிட்டர்கள்

d. 50 லிட்டர்கள்

 

16. ஒரு புத்தகக் கடையிலுள்ள 70 பத்திரிகைகளில் 14 பத்திரிகைகள் நகைச்சுவை பத்திரிகைகள் எனில், நகைச்சுவை பத்திரிகைகளின் சதவீதம் காண்க.  [7th New Book]

a. 10%

b. 20%

c. 30%

d. 40%

 

17. இஸ்மாயில் என்பவர் சில வகையான மணிகளை வாங்குவதற்காகச் சரக்கு அனுப்பாணையை அனுப்பினார். மொத்தம் 50 மணிகளில் 15 மணிகள் மட்டுமே பழுப்பு நிறம் எனில், பழுப்பு நிற மணிகளின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 70%

b. 60%

c. 80%

d. 30%

18. ரோஜா மாதச் சம்பளமாக 18,000 ஐப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2:1:3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக. [7th New Book]

a. 33.33%

b. 17%

c. 16.67%

d. 50%

 

19. இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார் அதில் 6 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 10%

b. 90%

c. 80%

d. 20%

 

20. ஒரு பள்ளியில் மொத்தமுள்ள 120 ஆசிரியர்களில் 60 ஆசிரியர்கள் ஆண்கள் எனில், ஆண் ஆசிரியர்களின் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 70%

b. 60%

c. 80%

d. 50%

 

21. ஒரு மட்டைப் பந்து (கிரிக்கெட்) அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் முடிவு ஏதுமில்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றிச் சதவீதத்தைக் கணக்கிடுக. [7th New Book]

a. 70%

b. 60%

c. 80%

d. 50%

 

22. ஒரு தொடர்வண்டியில் பயணச்சீட்டின் முழுக்கட்டணம் 200 சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 120 இக்கு டிக்கெட் வழங்கப்பட்டால், சலுகை அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிச் சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 40%

b. 60%

c. 80%

d. 50%

 

23. குமரன் ஆண்டுக்கு 9 மாதங்கள் வேலை செய்கிறார் எனில், அந்த ஆண்டில் அவர் எவ்வளவு சதவீதம் வேலை செய்தார் என்பதைக் கணக்கிடுக. [7th New Book]

a. 75%

b. 35%

c. 50%

d. 80%

 

24. கருண் என்பவர் ஒரு சோடிக்காலனிகளை 25% விலையில் வாங்கினார். அவர் செலுத்திய தொகை 1000 எனில், குறிக்கப்பட்ட விலையைக் காண்க. [7th New Book]

a. 4000

b. 1334

c. 1000

d. 4334

 

25. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 8000 இவர்களில் 80% பேர் கல்வியறிவு பெற்றவர்கள் அதில் 40% பெண்கள் எனில், கல்வியறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மக்கள் தொகைக்கும் உள்ள சதவீதத்தைக் காண்க. [7th New Book]

a. 40%

b. 35%

c. 32%

d. 30%

 

Answer Key 7th New Book சதவீகிதம் =

https://www.minnalvegakanitham.in/2022/08/7th-new-book-percentage.html




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.