எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
100
Questions Test = https://www.minnalvegakanitham.in/p/tamil-2022.html
11ஆம் வகுப்பு புதிய தமிழ்
புத்தகம்
11th
Std Tamil Term 1 |
UNIT 1: என்னுயிர் என்பேன் [53 வினா விடை] |
♦ யுகத்தின் பாடல் – (கவிஞர் சு.
வில்வரத்தினம்) ♦ பேச்சு மொழியும் கவிதை மொழியும் – (இந்திரனின்) ♦ நன்னூல் பாயிரம் ♦ ஆறாம் திணை - – (இந்திரனின்) ♦ மொழி முதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்) |
UNIT 2: மாமழை போற்றுதும் [55 வினா விடை] |
♦ இயற்கை வேளாண்மை (திருவள்ளுவர்,நம்மாழ்வர்) ♦ ஏதிலிக்குருவிகள் (அழகிய பெரியவன்) ♦ காவியம் ♦ திருமலை முருகன் பள்ளு (96
வகை சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று) (அழகிய பெரியவன்) ♦ ஐங்குறுநூறு ♦ யானை டாக்டர் (டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி) (யானை டாக்டர் என்ற சிறப்பு
பெயரினை பெற்றவர்) ♦புணர்ச்சி விதிகள் (இலக்கணம்) |
UNIT 3: பீடு பெற நில் [64 வினா விடை] |
♦ காவடிச்சிந்து
(அண்ணாமலையார்) ♦ குறுந்தொகை ♦புறநானூறு ♦ வாடிவாசல் (சி.சு.செல்லப்பா) ♦ பகுபத உறுப்புகள் (இலக்கணம்) ♦ திருக்குறள் |
நூல் வெளி
பாடம்
1.1 யுகத்தின் பாடல்
நூல் வெளி |
·
இவர் யாழ்பாணத்தின் புடுங்குத் தீவில் பிறந்தார் ·
இவர் கவிதைகள் “உயிர்த்தெழும்
காலத்துக்காக” என்னும்
தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன ·
இவர் கவிதைகள் இயற்றுவதிலும், சிறப்பாக பாடுவதிலும் திறன் பெற்றவர். ·
வில்வரத்தினத்தின் இரண்டு கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள் பாடப்பகுதியில்
இடம் பெறுகின்றன. |
பாடம்
1.3 நன்னூல் – பாயிரம்
நூல் வெளி |
·
நன்னூல், தொல்காப்பியத்தை முதன் முதலாக கொண்ட வழிநூல் ஆகும். ·
இது கி.பி. 13-ம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுத்தப்பட்ட தமிழ் இலக்கண
நூலாகும். ·
இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு அதிகாரங்களாகப் பகுகக்கப்பட்டது. ·
எழுத்ததிகாரம் எழுத்தியல், பதவியில், உயிரீற்றுப் புணரியியல், மெய்யீற்றும்
புணரியில், உருபுப்புணரியல் என 5 பகுதியாக அமைந்துள்ளது. ·
சொல்லதிகாரம் பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என 5
பகுதியாக அமைந்துள்ளது. ·
சீயங்கன் எனற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனவர் நன்னூலை இயற்றினார்
என்று பாயிராம் குறிப்பிடும். ·
ஈரோடு மாவட்டம், மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப்
பிரபாவின் கோயில் உள்ளது. இங்கோ பவணந்தியாரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது. |
பாடம்
1.4 ஆறாம் திணை
நூல் வெளி |
·
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகில்
உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். ·
பணி தொடர்பாக பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில்
வசித்து வருகிறார். ·
அக்கா,
மகாராஜாவின் ரயில்வண்டி, திகடசக்கரம் உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுப்புகளை
வெளியிட்டிருக்கின்றார். ·
வம்சவிருந்தி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக
1996 தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெறறவர். ·
வடக்குவீதி என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999-ல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசையும் பெற்றிருக்கின்றார். |
Lesson
2.2 – ஏதிலிக்குருவிகள்
நூல் வெளி |
·
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்நத அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். ·
அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகின்றார். ·
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புத் தளங்களில் இயங்குபவர். ·
“தகப்பன்
கொடி” புதினத்திற்காக 2003-ம் ஆண்டு தமிழக
அரசின் விருது பெற்றவர். ·
குறடு,
நெரிக்கட்டு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பும் உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு ஆகிய கவிதைத் தொகுப்புகளும் மீள்கோணம், பெருகும் வேட்கை உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும்
இவரின் படைப்புகள் |
பாடம்
2.3 காவியம்
நூல் வெளி |
·
பிரமிள் என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் இலங்கையில் பிறந்தவர். ·
இவர் பானுசந்திரன்,
அரூப் சிவராம், தருமு சிவராம் போன்ற பல புனைப்பெயர்களில் எழுதியவர். ·
புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், மொழியாக்கம் என விரிந்த தளத்தில்
இயங்கியவர். ·
ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். ·
இவருடைய கவிதைகள் முழுமையாகப் பிரமிள் கவிதைகள் என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. ·
லங்காபுரி
ராஜா உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளும் நக்ஷத்திரவாசி என்னும் நாடகமும் வெயிலும் நிழலும் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. |
பாடம்
2.4 திருமலை முருகன் பள்ளு
நூல் வெளி |
·
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகில் உள்ளது பண்புளிப்பட்டிணம். ·
இங்குள்ள சிறுகுன்றின் பெயர் திருமலை. ·
குன்றின் மேலுள்ள முருகக்கடவுளை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திருமலைமுருகன் பள்ளு பாடப்பட்டுள்ளது. ·
இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பா வகைகள் விரவி வந்துள்ளன. ·
இந்நூல் “பள்ளிசை” என்றும் “திருமலை அதிபர் பள்ளு” எனவும் வழங்கப்படுகிறது. ·
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயன். ·
இவர் காலம் 18-ம் நூற்றாண்டு. |
பாடம்
2.5 ஐங்குறுநூறு
நூல் வெளி |
·
ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு ·
இது மூன்றடிச் சிற்றெல்லையும், ஆறடி பேரல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல். ·
திணை ஒன்றிற்கு நூறு பாடல்களாக, ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்கள் கொண்டது. ·
ஐந்திணை பாடிய புலவர்கள் : குறிஞ்சி – கபிலர், முல்லை – பேயனார், மருதம்
– ஓரம்போகியார், நெய்தல் – அம்மூவனார், பாலை – ஓதலாந்தையார் ·
ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ·
இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் ·
இதனை தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை ·
பேயனார் சங்ககாலப் புலர்களின் ஒருவர். இவர் இயற்றிய 105 பாடல்கள் கிடைத்துள்ளன. |
பாடம்
2.6 யானை டாக்டர்
நூல் வெளி |
·
ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ·
விஷ்ணுபுரம்,
கொற்றவை உள்ளிட்ட பல புதினங்களோடு சிறுகதைகளும்,
கட்டுரைகளும் எழுதியுள்ளார். ·
இயற்கை ஆர்வலர். ·
யானையைப் பாத்திரமாக வைத்து ஊமைச்செந்நாய், மத்தகம் ஆகிய கதைகளயும் எழுதியுள்ளார். ·
இந்தக் குறும்புதினம் “அறம்” என்னும்
சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்று உள்ளது. |
பாடம்
3.2 காவடிசிந்து
நூல் வெளி |
·
19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார், பாடிய காவடிச்சிந்து
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம். ·
காவடிச்சிந்து பாடலுக்குரிய மெட்டுகள், அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டவை ஆகும். ·
தமிழில் முதன் முதலில் வண்ணச்சிந்து பாடியதால் “காவடிசிந்தின் தந்தை” எனப் போற்றப் பெற்றார். ·
18-ம் வயதில் ஊற்றுமலைக் குறுநிலத் தலைவரான “இருதயாலய மருதப்பத்தேவர்” அரசவைப்
புலவராக இருந்தார் ·
இவர் இந்நநூலைத் தவிர வீரைத் தலபுராணம், வீரைநவநீத கிருஷ்ணசாமிப் பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி,
கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார் |
பாடம்
3.3 குறுந்தொகை
நூல் வெளி |
·
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்னு ·
கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணைச் சார்ந்த 401 பாடல்களை கொண்டது. ·
“நல்ல
குறுந்தொகை” என சிறபித்து உரைக்கப்படுகிறது ·
உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல். ஆதலால் இந்நூலே
முதலில் தொகுக்கபட்ட தொகை நூலாக கருதப்படுகிறது. ·
இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். ·
இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். ·
வெள்ளிவீதியார் சங்காலப் பெண் புலவர்களுள் ஒருவர். ·
சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. |
பாடம்
3.4 புறநானூறு
நூல் வெளி |
·
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ·
புறத்திணை சார்ந்த 400 பாடல்களை கொண்டது. ·
புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். ·
அ்கவற்பாக்களால் ஆ்னது. ·
புறநானூற்றுப் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின்
சமூக வாழக்கை பற்றியும் எடுத்துரைக்கின்றது. ·
இந்நூலின் மூலம் பண்டைத் தமிழகம் பற்றியும், தமிழர் நாகரிகம், பண்பாடு, சமூக
வாழ்க்கை குறித்து அறிய முடிகிறது. கடலுள்
மாய்ந்த இளம்பெருவழுதி ·
பெருவழுதி என்னும் பெயரில் பாண்டிய மன்னர்கள் பலர் இருந்தனர். எனினும் அரிய
குணங்கள் பலவற்றையும் இளமை முதலே பெற்றிருந்தமையால், இவரை “இளம்பெருவழுதி” என மக்கள்
போற்றினர் ·
கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டபோது இறந்தமையால் “கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி”
என அழைக்கப் பெற்றார். ·
இவர் பாடல்கள் பரிபாடலில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் ஆக, இரு பாடல்கள்
காணப்படுகின்றன. |
பாடம்
3.5 வாடிவாசல்
நூல் வெளி |
·
சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை,
மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார். ·
சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார். ·
“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். ·
வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி,
தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும். ·
இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது. |
minnal vega kanitham