எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
100
Questions Test = https://www.minnalvegakanitham.in/p/tamil-2022.html
9ஆம் வகுப்பு புதிய தமிழ்
புத்தகம்
9th Std Tamil Term 3 |
UNIT 6: வாழிய நிலனே [134 வினா விடை] |
♦ பழந்தமிழர் சமூக வாழ்க்கை (பெண்கள் எவ்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள்) ♦ சீவக சிந்தாமணி
(ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று) ♦ முத்தெள்ளாயிரம் ♦ இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு (பசும்பொன் முத்துராமலிங்கனார், நேதாஜி) (மா.சு.
அண்ணாமலை நூலை எழுதினார்) ♦ பொருளிலக்கணம் (இலக்கணம்) |
UNIT 7: என்தலைக் கடனே [115 வினா விடை] |
♦ பெரியாரின் சிந்தனைகள் (தந்தை பெரியார்) ♦ ஒளியின் அழைப்பு (புதுக்கவிதையின் தந்தை ந. பிச்சமூர்த்தி) ♦ தாவோ தே ஜிங் ♦ யசோதர காவியம் (ஐஞ்சிறு காப்பியம்) ♦ மகனுக்கு எழுதிய கடிதம் ♦ யாப்பிலக்கணம் (இலக்கணம்) |
UNIT 9: அன்பென்னும் அறனே [125 வினா விடை] |
♦ விரிவாகும் ஆளுமை (தமிழுக்கு தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத்தக்கவர்
ex.ஜி.யு.போப், பரிப்பெருமாள்) ♦ அக்கறை (கல்யாண்ஜி) (கல்யாணசுந்தரம்) ♦ குறுந்தொகை ♦ தாய்மைக்கு வறட்சி இல்லை ♦ அணியிலக்கணம் (இலக்கணம்) |
UNIT 7: வாழிய நிலனே
1. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டு இருந்த காலத்தில்
ஆங்கிலேயப் படைகள் மலேசியாவில் ஜப்பானியரிடம் சரணடைந்த ஆண்டு- பிப்ரவரி 15, 1942
2. யார் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (INA)
உருவாகியது- மோகன்சிங்
3. ஜப்பானியர்கள் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஒற்றர்களை
எந்தெந்த இடத்திற்கு அனுப்பினர்- கேரளா, குஜராத்
4. ஒற்றர்கள் தரை வழியாக எந்த பகுதியின் வழியாக
இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்- பர்மா
5. ஜெர்மனி - சிங்கப்பூருக்கு செல்ல நேதாஜி நீர்மூழ்கிக்கப்பலில்
எத்தனை நாள் பயணம் செய்தார் - 91
6. நேதாஜி எந்த ஆண்டு இந்திய தேசிய இராணுவத்திற்கு
பொறுப்பேற்றார் - ஜீலை 9, 1943
7. "டெல்லியை நோக்கிச் செல்லுங்கள்" என்று
முழங்கியவர் - நேதாஜி
8. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும்
தமிழர்கள் தான்'' என்று கூறியவர் - தில்லான்
9. "நான் மறுபடியும் பிறந்தால் தென்னிந்திய
தமிழனாகப் பிறக்க வேண்டும்" என்று கூறியவர் - நேதாஜி
10. இந்திய தேசிய இராணுவத்தில் வான்படை தாக்குதல் பயிற்சிக்கு
நேதாஜியால் எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர் - 45
11. நேதாஜி வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி
பெறுவதற்காக ஜப்பானில் எந்த அகாடமிக்கு வீரர்களை அனுப்பி வைத்தார் - இம்பீரியல் மிலிட்டரி
12. நேதாஜியால் 45 பேர் தேர்வு செய்யப்பட்ட பயிற்சிப்
பிரிவின் பெயர் - டோக்கியோ கேடட்ஸ்
13. இந்திய தேசிய இராணுவ வீரர்கள் பர்மாவில் இருந்து
காட்டு வழியாகப் பயணம் செய்து - சயாம் மரண
இரயில் பாதையைக் கடந்தனர் -
14. இந்திய தேசிய இராணுவ வீரர்கள் கடற்படை பயிற்சி
பெற ஜப்பானில் உள்ள - கியூசு தீவுக்கு சென்றனர்
15. இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள்
படைப்பிரிவின் பெயர்- ஜான்சிராணி
16. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை பிரிவின்
தலைவர் - லட்சுமி
17. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் படை தலைவர்களில்
மிகச்சிறந்தவர்கள் - ஜானகி, ராஜாமணி
18. நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் பங்கு கொண்ட தமிழர்கள்
- கேப்டன் லட்சுமி, சிதம்பரம் லோகநாதன்
19. நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பி பயிற்சி
பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் - கேப்டன்
தாசன்
20. சுதந்திர இந்தியாவில் கேப்டன் தாசன் நாட்டின் தூதுவராகப்
பணியாற்றினார் – செசல்ஸ்
21. “மலேசியாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின்
மூளையில் கட்டியாக உள்ளது'' என்று கூறிய ஆங்கிலப் பிரதமர் - சர்ச்சில்
22. நேதாஜியின் பொன்மொழிகள்
1. அநீதிகளுக்கு தவறான செயல்களுக்கும் மனம் ஒப்ப
இடம் தருதல் மிகப்பெரிய குற்றமாகும்
2. நீங்கள் நல்வாழ்வைத் தந்தே ஆக வேண்டும் என்பது
தான் காலத்தால் மறையாத சட்டமாகும்
3. எந்த விலை கொடுத்தாவது சமத்துவத்திற்கும் போராடுவதே
மிகச்சிறந்த நற்குணம் ஆகும்
23. 'இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? என்றால்
இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள்' என்ற பொன்மொழியைக் கூறியவர் - நேதாஜி
24. இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு என்ற நூலின்
ஆசிரியர் - அண்ணாமலை
25. “விடுதலையினால் உண்டாகும் மகிழ்ச்சியும் சுதந்திரத்தினால்
உண்டாகும் மனநிறைவும் வேண்டுமா? அவற்றக்கான விலை துன்பமும் தியாகமும் தான்" என்று
கூறியவர் - நேதாஜி
26. இந்திய தேசிய இராணுவம் 1944 ம் ஆண்டு ஆங்கிலேயரை
வென்று இந்தியாவில் மணிப்பூரில் எந்த பகுதியில் நுழைந்தது - மொய்ராங்
27. இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த எத்தனை இளைஞர்
1943 – 1945 ஆண்டுகளில் சென்னைச் சிறையில் தூக்கிலிடப்பட்டனர் - 18
28. 'நான் என் உயிரைக் கொடுப்பதற்குக் கொஞ்சமும் கவலைப்படவில்லை
: ஏனெனில் நான் கடவுளுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை' என்று கூறியவர் - இராமு
29. 'வாழ்வின் பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை
அடைவான், நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்'
என்று கூறியவர் - அப்துல்காதர்
30. “இந்திய தேசிய இராணுவம் - தமிழர் பங்கு"
என்ற நூலுக்காக தமிழக அரசின் பரிசு பெற்றவர்-
அண்ணாமலை
31. சங்க இலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்களாக
அமைந்த நூல் - சீவகசிந்தாமணி
32. இன்பங்களைத் துறந்து துறவு பூனவேண்டும் என்பதே
சீவகசிந்தாமணி காப்பியத்தின் மையக் கருத்து ஆகும்
33. சீவகனைத் தலைவனாக கொண்ட காப்பியம் – சீவகசிந்தாமணி
34. இரந்து கேட்பவர்க்கு இல்லையென்னாது வாரி வழங்கும்
செல்வர்களைப் போன்றது – வெள்ளம்
35. மணம் கமழும் கழனியில் பேரொலி கேட்டு எந்த மீன்கள்
கலைந்து ஓடுகின்றது - வரால் மீன்
36. "உழுநர்' என்பதன் பொருள் - உழவர்
37. ஏமாங்கத நாட்டில் கருங்கொண்ட பச்சைப் பாம்பு போல
எது தோற்றம் அளிக்கிறது- நெற்பயிர்கள்
38. பொருள் தருக "அடிசில்" - சோறு
39. பொருள் தருக "மடிவு" - சோம்பல்
40. உண்மையான தவம் புரிவோர்க்கும் இல்லறம் நடத்துவோர்க்கும்
இனிய இடமாக உள்ள நாடு - ஏமாங்கத நாடு
41. சீவக சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள இலம்பங்களைக்
குறிப்பிடுக - நாமகள் இலம்பகம், கோவிந்தையார்
இலம்பகம், காந்தருவதத்தையார் இலம்பகம் , குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம்,
கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சியார் இலம்பகம்,
மணமகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம்
42. சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள இறுதி இலம்பகம் - முத்தி இலம்பகம்
43. "இறைஞ்சி" என்பதன் இலக்கணக்குறிப்பு
தருக - வினையெச்சம்
44. "கொடியனார்" என்பதன் இலக்கணக்குறிப்பு
தருக - இடைக்குறை
45. நற்றவம்" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை
46. "தேமாங்கனி" என்பதன் இலக்கணக்குறிப்பு
தருக - உவமைத்தொகை
47.
“செய்கோலம்” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
48. "சொல் அரும் சூலபசும் பாம்பின் தோற்றும்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்" என்ற சீவகசிந்தாமணி பாடலை இயற்றியவர் - திருத்தக்கதேவர்
49. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
- சீவகசிந்தாமணி
50. சீவகசிந்தாமணியில் இடம் பெற்றுள்ள உட்பிரிவின்
பெயர் - இலம்பகம்
51. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டுள்ளது
- 13
52. சீவகசிந்தாமணியின் வேறுபெயர் - மணநூல், முக்திநூல், காமநூல்
53. திருத்தக்கதேவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் - சமணம்
54. "இன்பச்சுவை மிக்க இலக்கியமும் இயற்ற முடியும்"
என்ற வகையில் காப்பியத்தை இயற்றியவர் - திருத்தக்கதேவர்
55. திருத்தக்கதேவரின் காலம் - 9ம் நூற்றாண்டு
56. சீவகசிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர்
எந்த நூலை இயற்றினார் - நாவிருத்தம்
57. முத்தொள்ளாயிரம் எந்தெந்த நாடுகளின் வளங்களை வெளிப்படுத்துகிறது
- சேர, சோழ, பாண்டியன்
58. சேர நாட்டில் சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் எந்த
நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தனர் -
அரக்கு
59. பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட நாடு - சேரர்
60. “நச்சிலைவேல் கோக்கோதை நாடு" என்ற முத்தொள்ளாயிரப்
பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது -சேரர்
61. “நல்யானைக் கோக்கிள்ளி நாடு" என்ற முத்தொள்ளாயிரப்
பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது -சோழர்
62. “நகைமுத்த வெண்குடையான் நாடு" என்ற முத்தொள்ளாயிரப்
பாடல் எந்த நாட்டை குறிப்பிடுகிறது- பாண்டியர்
63. சோழநாட்டில் உழவர்கள் நெற்போர் மீதேறி மற்ற உழவர்களை
கூவி அழைப்பர் - நாவலோ
64. “முத்தம்' என்ற சொல்லின் பொருள் - முத்து
65. பாண்டிய நாடு எந்த மரத்தின் பாளையிலிருந்து சிந்தும்
மணிகளும் முத்துக்கள் போல் இருந்தது - பாக்கு
மரம்
66. "அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாய விழ வெள்ளம்தீப்
பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்'' என்ற முத்தொள்ளாயிரப் பாடலில் இடம்பெற்றுள்ள அணி
- தற்குறிப்பேற்ற அணி
67. “காவல் உழவர் களத்து அகத்துப் போர் ஏறி” என்ற முத்தொள்ளாயிரப்
பாடலில் இடம்பெற்றுள்ள அணி - உவமை அணி
68. "நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்”
என்ற முத்தொள்ளாயிரப் பாடலில் இடம்பெற்றுள்ள அணி - உவமை அணி
69. முத்தொள்ளாயிரம் எந்த பாவால் இயற்றப்பட்டது - வெண்பா
70. முத்தொள்ளாயிரம் மூன்று மன்னர்களைப் பற்றிய 900 பாடல்களை கொண்ட நூல்
71. புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து கிடைக்கப்பெற்ற
முத்தொள்ளாயிரப் பாடல்களின் எண்ணிக்கை -
108
72. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் - பெயர் தெரியவில்லை
73. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச்
சேர்ந்தவராக கருதப்படுகிறார் - 5 ஆம் நூற்றாண்டு
74. மதுரையை சிறப்பித்துக் கூறும் நூல்களில் முதன்மையானது
- மதுரைக்காஞ்சி
75. “மண்உற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின் விண்உற ஓங்கிய
பல்படைப் புரிசை” என்ற மதுரைக்காஞ்சி பாடலின் ஆசிரியர் - மாங்குடி மருதனார்
76. 'பொறிமயிர் வாரணம் .... கூட்டுறை வயமாகப் புலியொடு
குழும ' என்று மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியைக் கூறும் நூல் – மதுரைக்காஞ்சி
77. "ஓவு" என்பதன் பொருள் - ஓவியம்
78. “நியமம்" என்பதன் பொருள் - அங்காடி
79. காஞ்சி என்பதன் பொருள் - நிலையாமை
80. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை கொண்டது - 782
81. மதுரைக்காஞ்சியில் எத்தனை அடிகள் மதுரையை மட்டும்
சிறப்பித்துக் கூறுகின்றன - 354
82. மதுரைக்காஞ்சியின் சிறப்பு பெயர் - பெருகு வள மதுரைக்காஞ்சி
83. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் - பாண்டியன் நெடுஞ்செழியன்
84. மாங்குடி மருதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தவர்
- திருநெல்வேலி
85. மாங்குடி
மருதனார் எட்டுத்தொகையில் எத்தனை பாடல்களை பாடியுள்ளார் - 13
86. தமிழ்த்தாயின் ஆணிவேர் துளித்த இடம் - மதுரை
87. பகலில் நடைபெறும் கடைவீதியின் பெயர் - நாளங்காடி
88. இரவில் செயல்படும் கடைவீதியின் பெயர் - அல்லங்காடி
89. மக்களின் நாகரிகம் வேரூன்றிய இடம் - குறிஞ்சி
90. மக்களின் நாகரிகம் வளர்ந்த இடம் - முல்லை
91. மக்களின் நாகரிகம் முழுமையும் வளமையும் அடைந்த
இடம் - மருதம்
92. தாவணி என்பதன் பொருள் - சந்தை
93. 125 ஆண்டுகள் பழமையான போச்சம்பள்ளிச் சந்தை எந்த
மாவட்டத்தில் உள்ளது - கிருஷ்ணகிரி
94. கடலூரில் இருக்கின்ற காராமணி குப்பம் எதற்குப்
பெயர்பெற்றது - கருவாட்டுச் சந்தை
95. "பொதியை ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்ததையிலே”எனத்
தொடங்கும் பாடலை இயற்றியவர் – மருதகாசி
96. ஒன்றின் இயற்பெயர், அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு
தொன்று தொட்டு ஆகி வருவது - ஆகுபெயர்
97. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும் - 16
98. “முல்லையைத் தொடுத்தாள்'' என்பது எவ்வகை ஆகுபெயர்
- பொருளாகுபெயர்
99. “வகுப்பறை சிரித்தது'' என்பது எவ்வகை ஆகுபெயர்
- இடவாகு பெயர்
100. “கார் அறுத்தான்" என்பது எவ்வகை ஆகுபெயர் - காலவாகுபெயர்
101. “மருக்கொழுந்து நட்டான்' என்பது எவ்வகை ஆகுபெயர்
- சினையாகுபெயர்
102. "மஞ்சள் பூசினாள்” என்பது எவ்வகை ஆகுபெயர்
- பண்பாகுபெயர்
103. "வற்றல் தின்றான்' என்பது எவ்வகை ஆகுபெயர்
- தொழிலாகுபெயர்
104. "வானொலி கேட்டு மகிழ்ந்தனர்" என்பது எவ்வகை
ஆகுபெயர் - கருவியாகுபெயர்
105. "பைங்கூழ் வளர்ந்தது'' என்பது எவ்வகை ஆகுபெயர்
- கருவியாகுபெயர்
106. "அறிஞர் அண்ணாவைப் படித்திருக்கிறேன்"
என்பது எவ்வகை ஆகுபெயர் - கருத்தாவாகுபெயர்
107. “ஒன்று பெற்றால் ஒளிமயம்'' என்பது எவ்வகை ஆகுபெயர்
- எண்ணலளவை ஆகுபெயர்
108. “இரண்டு கிலோ கொடு" என்பது எவ்வகை ஆகுபெயர்
- எடுத்தலளவை ஆகுபெயர்
109. “அரை லிட்டர் வாங்கு" என்பது எவ்வகை ஆகுபெயர்
- முகத்தலளவை ஆகுபெயர்
110. "ஐந்து மீட்டர் வெட்டினான்" என்பது எவ்வகை
ஆகுபெயர் - நீட்டலளவை ஆகுபெயர்
111. இந்திய தேசிய இராணுவம் - மோகன்சிங் இன் தலைமையில் ஜப்பானியர் உருவாக்கினர்
112. அள்ளல் என்பதன் பொருள் - சேறு
113. “நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி
நாடு" - இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற
நாடுகள் முறையே - சேர நாடு, சோழ நாடு
114. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள் - மணம் கமழும் வயலில்
உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்
115. இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான்,
இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்”என்றார்
116. இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு
உரியவர்கள் - தமிழர்கள்
117. “வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய் வளைந்துசெல்
கால்களால் ஆறே!" என்ற பாடலை இயற்றியவர் -
வாணிதாசன்
118. "ஆகாயத்துக்கு அடுத்த வீடு" என்ற நூலின்
ஆசிரியர் - மு. மேத்தா
119. “தமிழ் பழமொழிகள்'' என்ற நூலின் ஆசிரியர் - கி.வா. ஜகநாதன்
120. “இருட்டு எனக்குப் பிடிக்கும்" என்ற நூலின்
ஆசிரியர் - ச.தமிழ்ச்செல்வன்
121. இலக்கணக்குறிப்புத் தருக
1. இளங்கமுகு - பண்புத்தொகை
2. செய்கோலம் - வினைத்தொகை
122. பொருத்துக.
1.
இந்திய தேசிய இராணுவம் -
Indian Natinal Army
2.
பண்டமாற்று முறை - Commodity
Exchange
3.
காய்கறி வடிசாறு - Vegetable
Soup
4.
செவ்வியல் இலக்கியம் -
Classical Literature
5.
கரும்புச்சாறு - Sugarcane
Juice
123. பொருத்துக.
1.
மணப்பாறை - மாட்டுச்சந்தை
2.
அய்யலூர் - ஆட்டுச்சந்தை
3.
ஈரோடு - ஜவுளிச்சந்தை
4.
ஒட்டன்சத்திரம் - காய்கறிச்சந்தை
124. பொருத்துக.
1.
புரிசை - மதில்
2.
அணங்கு - தெய்வம்
3.
சில்காற்று - தென்றல்
4.
புழை - சாளரம்
125. பொருத்துக.
1.
மாகால் - பெருங்காற்று
2.
முந்நீர் - கடல்
3.
பணை - முரசு
4.
கயம் - நீர்நிலை
126. இலக்கணக்குறிப்பு தருக பொருத்துக.
1.
ஓங்கிய - பெயரெச்சம்
2.
வாயில் - இலக்கணப்போலி
3.
குழா அத்து - செய்யுளிசை அளபெடை
4.
முழங்கிசை - வினைத்தொகை
5.
இமிழிசை - வினைத்தொகை
127. இலக்கணக்குறிப்பு தருக பொருத்துக.
1.
நிலைஇய - சொல்லிசை அளபெடை
2.
மாகால் - உரிச்சொல் தொடர்
3.
நெடுநிலை - பண்புத்தொகை
4.
முந்நீர் - பண்புத்தொகை
5.
மகிழ்ந்தோர் - வினையாலணையும் பெயர்
128. பொருத்துக.
1.
அள்ளல் - சேறு
2.
பழனம் - நீர்மிக்க வயல்
3.
வெரீஇ - அஞ்சி
4.
பார்ப்பு - குஞ்சு
129. பொருத்துக.
1.
நாவலோ - நாள் வாழ்க என்பது போன்ற
வாழ்த்து
2.
இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்
3.
நந்து - சங்கு
4.
கமுகு - பாக்கு
130. இலக்கணக்குறிப்பு தருக பொருத்துக
1.
குவி மொட்டு - வினைத்தொகை
2.
வெண்குடை - பண்புத்தொகை
3.
இளங்கமுகு - பண்புத்தொகை
4.
கொல்யானை - வினைத்தொகை
5.
வெரீஇ - சொல்லிசை அளபெடை
131. பொருத்துக
1.
தெங்கு - தேங்காய்
2.
இசை - புகழ்
3.
வருக்கை - பலாப்பழம்
4.
நெற்றி - உச்சி
132. பொருத்துக .
1.
மால்வரை - பெரிய மலை
2.
மடுத்து - பாய்ந்து
3.
கொழுநிதி - திரண்டநிதி
4.
மருப்பு - கொம்பு
133. பொருத்துக.
1.
வெறி - மணம்
2.
கழனி - வயல்
3.
செறி - சிறந்த
4.
இரிய – ஓட
134. பொருத்துக
1.
கொடியன்னார் - மகளிர்
2.
நற்றவம் - பெருந்தவம்
3.
வட்டம் - எல்லை
4.
வெற்றம் - வெற்றி
5.
சூல் - கரு
பாடம்
7.2 சீவக சிந்தாமணி
நூல் வெளி |
·
ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று. ·
விருத்தப்பாவில்
இயற்றப்பட்ட முதல் காப்பியம், ·
மணநூல் என
அழைக்கப்படுகிறது. ·
இலம்பகம்
என்ற உட்பிரிவுகளை கொண்டது. ·
13 இலம்பகங்களை
கொண்டது. ·
இதனை இயற்றியவர்
திருத்தக்க தேவர் ·
சீவக சிந்தாமணியின்
ஆசிரியர் திருத்தக்கதேவர் ·
சமண மதத்தை
சார்ந்தவர் ·
இன்பச்சுவை
மிக்க இலக்கியமும் இயற்ற முடியும் என்று நிறுவும் வகையில் இக்காப்பியத்தை இயற்றினார். ·
இவர் கி.பி.
9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ·
சீவக சிந்தாமணியை
பாடுவதற்கு முன்னோட்டமாக நரிவிருத்தம் என்னும் நூலை இயற்றியுள்ளார். |
பாடம்
7.3 முத்தொள்ளாயிரம்
நூல் வெளி |
·
வெண்பாவால்
எழுதப்பட்ட நூல் ·
மன்னர்களின்
பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாக பாடுகிறது. ·
மூவேந்தர்களைப்
பற்றிய பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல் என்பதால் முத்தெள்ளாயிரம் என்று பெயர்
பெற்றது. ·
நூல் முழுமையாக
கிடைக்கவில்லை ·
புறத்திரட்டு
என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. அவை முத்தொள்ளாயிரம் என்னும்
பெயரில பதிப்பிக்கப்பட்டுள்ளன. ·
எழுதியவர்,
தொகுத்தவர் பெயர் அறிய இயலவில்லை. ·
இவர் ஐந்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்தவரகக் கருதப்படுகிறார். ·
சேர நாட்டை
அச்சமில்லாத நாடாகவும், சோழ நாட்டை ஏர்களச் சிறப்பும், போர்க்களச் சிறப்பும் உடைய
நாடாகவும், பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடப்பகுதி காட்டுகிறது. |
பாடம்
7.4 மதுரைக்காஞ்சி
நூல் வெளி |
·
புதிய படைப்புச்
சூழலில் மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்த விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள்
எனப்பட்டன. ·
பாரதியின்
வசனக் கவிதையைத் தொடந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்பட்டார். ·
புதுக்கவிதையைத்
இலகு கவிதை, கட்டற்ற கவிதை, விலங்குகள் இலாக் கவிதை, கட்டுக்குள் அடங்காக் கவிதை
என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன. ·
ந.பிச்சமூர்த்தி
தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், பின்னர் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை
அலுவலராகவும் பணியாற்றினார். ·
ஹனுமான்,
நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியராக இருந்தார் ·
புதுக்கவிதை,
சிறுகதை, ஓரங்க நாடகங்கள், கட்டுரைகள் ஆகியன இவர் படைத்த இலக்கிய வகைமைகள் ஆகும் ·
இவரின் முதல்
சிறுகதை ஸயன்ஸூக்பலி என்பதாகும் ·
1932-ல் கலைமகள்
இதழ் வழங்கிய பரிசை பெற்றவர் ·
பிக்ஷூ, ரேவதி
என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர். |
minnal vega kanitham