எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
6th Std Tamil Term 2 |
UNIT 1: கல்வி – கண்ணெனத் தகும் |
♦ மூதுரை (ஒளவையார்) ♦ துன்பம் வெல்லும் கல்வி (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) ♦ கல்விக்கண் திறந்தவர் (காமராசர்) ♦ நூலகம் நோக்கி (நூலகம்
பற்றிய செய்திகள்) ♦ இன எழுத்துகள் (இலக்கணம்) |
UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல் |
♦ ஆசாரக்கோவை (பெருவாயின்
முள்ளியார்) (பதினெண்கீழ்கணக்கு) ♦ கண்மணியே கண்ணுறங்கு (பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தின் பத்து பருவங்களில் ' தால்' என்பதும்
ஒன்றாகும்.) (நாட்டுப்புறப்பாட்டு) ♦ தமிழர் பெருவிழா ♦ மனம் கவரும் மாமல்லபுரம் (மாமல்லபுரம்) ♦ மயங்கொலிகள் ♦ திருக்குறள் |
UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய் |
♦ நானிலம் படைத்தவன் (முடியரசன்) ♦ கடலோடு விளையாடு ♦ வளரும் வணிகம் (தமிழர்
வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்) ♦ உழைப்பே மூலதனம் ♦ சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் (இலக்கணம்) |
Revision UNIT 1:
கல்வி – கண்ணெனத் தகும்
1. "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் - ஒளவையார்
2.
“மாசற" என்ற சொல்லின் பொருள் - குற்றம்
இல்லாமல்
3. சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் - ஒப்பிட்டு ஆராய்தல்
4. “ஆத்திசூடி" என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
5. கொன்றை வேந்தன்,நல்வழி,மூதுரை என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்
6. மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31
7. மாணவர்கள் நூல்களை - மாசற கற்க வேண்டும்
8. இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக்
கிடைப்பது - இடம் + எல்லாம்
9. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
மாசு அற
10. குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்- குற்றமில்லாதவர்
11. சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- சிறப்புடையார்
12. "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
13. தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் – இகழும்படி
14. மூத்தோர் என்ற சொல்லின் பொருள் - பெரியோர்
15. எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி
பாடியவர் - கல்யாண சுந்தரம்
16. திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப்
போற்றியவர்- கல்யாண சுந்தரம்
17. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
18. மாணவர் பிறர் - தூற்றம்படி நடக்கக் கூடாது
19. நாம் - மூத்தோர்
சொல்படி நடக்க வேண்டும்
20. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது-
கை + பொருள்
21. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- மானமில்லா
22. மூதுரை ஆசிரியர் – ஔவையார்.
23. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் பாடல்
ஆசிரியர்- ஔவையார்.
24. ஔவையார் இயற்றியுளளார் நூல்கள் – ஆத்திசூடி, கொன்றை வேந்தன் , நல்வழி.
25. மூதுரை என்னும் சொல்லின் பொருள்- மூத்தோர் கூறும் அறிவுரை.
26. துன்பம் வெல்லும் கல்வி நூல் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
27. ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று
கூறியவர் - காமராசர்
28. காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க
முடிவு செய்தார்- 50000
29. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய
வேண்டும் என்று கூறினார்- 1
30. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
அமைய வேண்டும் என்று கூறினார்- 3
31. காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி
அமைய வேண்டும் என்று கூறினார்- 5
32. கல்விக்கண் திறந்தவர் என்று காமராசை போற்றியவர்
- பெரியார்
33.
“பெருந்தலைவர்" என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
34.
“கருப்புக்காந்தி" என்று அழைக்கப்படுபவர் – காமராசர்
35.“படிக்காத
மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்
36. "ஏழைப்பங்காளர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
37. "கர்மவீரர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
38. "தலைவர்களை உருவாக்குபவர்" என்று அழைக்கப்படுபவர்
- காமராசர்
39. காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை
தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன- 6000
40. இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக
நடைமுறைப்படுத்தியவர்- காமராசர்
41. மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
42. பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி
கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்
43. பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்
44. எம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு
காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - மதுரை
45. நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா
விருது வழங்கிச் சிறப்பித்தது - 1976
46. காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளது- சென்னை, விருதுநகர்
47. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய
பெயர் வைக்கப்பட்டுள்ளது- காமராசர்
48. கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம்
அமைக்கப்பட்டது - 2000
49. ஆண்டு தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது-
ஜீலை 15 காமராசர் பிறந்த நாள்
50. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள்
கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
51. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- பசி + இன்றி
52. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
படிப்பு + அறிவு
53. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் – காட்டாறு
54. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்குள்ளது
- தமிழ்நாடு
55. ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
56. அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுக்குகளைக் கொண்டுள்ளது
- 8
57. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர்
- 8
58. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது
- சீனா
59. நூலக விதிகளை உருவாக்கியவர்- இரா.அரங்கநாதன்
60. "இந்திய நூலகவியலின்தந்தை'' என அழைக்கப்படுபவர்- இரா.அரங்கநாதன்
61. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைக் குறைபாடு
உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
62. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி
எத்தளத்தில் அமைந்துள்ளது - முதல் தளம்
63. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கு
மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது - 20000
64. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பிற நாடுகளில் இருந்து
திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது- 50000
65. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச்
சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளது- ஏழாம்
தளம்
66. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம்,
பிரெய்லி நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்
67. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு
மற்றும் பருவ இதழ்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- முதல் தளம்
68. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில்
அமைந்துள்ளது- இரண்டாம் தளம்
69. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல், தத்துவம்,
அரசியல் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- மூன்றாம்
தளம்
70. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல், சட்டம்,
வணிகவியல், கல்வி சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- நான்காம் தளம்
71. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம், அறிவியல்,
மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளது- ஐந்தாம் தளம்
72. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல், வேளாண்மை,
திரைப்படக்கலை சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஆறாம் தளம்
73. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறு, புவியியல்,
சுற்றுலா சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளது- ஏழாம் தளம்
74. அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாகப் பிரிவு
எத்தளத்தில் அமைந்துள்ளது- எட்டாம் தளம்
75. நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம்
- தமிழ்நாடு
76. சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது
- இரா.அரங்கநாதன் விருது
77. சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்
78. ஒற்றுமை உள்ள எழுத்துகள் - இன எழுத்துகள்
79. சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும்
அதன் இனமாகிய - வல்லினம் எழுத்து வரும்
80. மெய் எழுத்துகளைப் போலவே- உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் உண்டு
81. உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்- குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும்
82. ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இன எழுத்து - இ
83. ஒள என்னும் எழுத்துக்கு இன எழுத்தாகும் - உ
84. தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்து க்கு மட்டுமே
இன எழுத்து இல்லை
85. ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும்
செல்லாத நாடுஇல்லை அந்நாடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- பழமொழி நானூறு
86. காமராசர் பிறந்த நாள்- ஜீலை 15, கல்வி வளர்ச்சி நாள்
87. டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்
88. அப்துல் கலாம் பிறந்த நாள் - அக்டோபர் 15, மாணவர் தினம்
89. விவேகானந்தர் பிறந்த நாள் - ஜனவரி 12 , தேசிய இளைஞர் தினம்
90. ஜவஹாலால் நேரு பிறந்த நாள்- நவம்பர் 14, குழந்தைகள் தினம்
91. இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்- பற்றுச்சீட்டு
92. தொடக்கப்பள்ளி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் -
Primary school
93. பொருத்துக
1.
மின்படிக்கட்டு - Escalator
2.
மின்தூக்கி - Lift
3.
குறுந்தகடு - Compact Disk
4. மின்னஞ்சல்- E-mail
94. பொருத்துக
1.
நூலகம்- Library
2.
மின்நூலகம்- E-Library
3.
மின்நூல்- E-Book
4. மின் இதழ்கள்- E-Magazine
95. பொருத்துக
1.
மேதைகள்- அறிஞர்கள்
2.
மாற்றார்- மற்றவர்
3.
நெறி- வழி
4.
வற்றாமல்- குறையாமல்
96. பொருத்துக
1.
மேதைகள்- அறிஞர்கள்
2.
மாற்றார்- மற்றவர்
3.
நெறி- வழி
4.
வற்றாமல்- குறையாமல்
Revision UNIT 2: நாகரிகம் பண்பாடு – பாடறிந்து ஒழுகுதல்
1. "நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத
எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - ஆசாரக்கோவை
2. ஆசாரக்கோவையின் ஆசிரியர் - பெருவாயின் முள்ளி்யார்.
3. பெருவாயின் முள்ளி்யார் பிறந்த ஊர் - கயத்தூர்.
4. ஆசாரக்கோவை என்பதன் பொருள் - நல் ஒழுக்கங்களின் தொகுப்பு.
5. பதினேன் கீழ் கணக்கு நூல்களில் ஒன்று - ஆசாரக்கோவை.
6. ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்கலை கொண்டது - 100.
7. பிறரிடம் நான் - இன்சொல் பேசுவேன்
8. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்
கொள்வது - பொறை
9. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- அறிவுடைமை
10. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- இவையெட்டும்
11. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- நன்றி + அறிதல்
12. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
பொறை + உடைமை
13. முத்தேன் - கொம்புத்தேன், பொந்துத்தேன், கொசுத்தேன்.
14. முக்கனி - மா, பலா, வாழை.
15. முத்தமிழ் - இயல், இசை, நாடகம்.
16. தாலாட்டு என்பது - வாய்மொழி இலக்கியங்களில் ஒன்று
17. தால் என்பதன் பொருள் - நாக்கு
18. தாலாட்டு எவ்வாறு பிரியும் - தால் + ஆட்டு
19. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- பாட்டு + இசைத்து
20. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
கண் + உறங்கு
21. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - வாழையிலை
22. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- கையமர்த்தி
23. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் - மறைந்த
24. பொங்கல் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது - தமிழர் திருநாள், அறுவடைத் திருவிழா, உழவர் திருநாள்
25. உழவர்கள் எந்த மாதத்தில் விதை விதைத்து எந்த மாதத்தில்
அறுவடை செய்வர்- ஆடி, தை
26. கதிரவனுக்கு நன்றி கூறும் விழா - பொங்கல் விழா
27. அக்காலத்தில் மழைக்கடவுளை வேண்டி போகிப் பண்டிகை
விழாவாக கொண்டாடப்பட்டது - இந்திரவிழா
28. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற
பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நன்னூல்
29. எந்த மாதத்தின் இறுதி நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது-
மார்கழி
30. திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது- தை முதல் நாள்
31. திருவள்ளுவர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது-
தை 2ம் நாள்
32. பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது- மாட்டுப்பொங்கல்
33. மாடு என்னும் சொல்லுக்கு பொருள் - செல்வம்
34. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
35. மஞ்சுவிரட்டுவின் வேறு பெயர் - மாடு பிடித்தல் , ஜல்லிக்கட்டு , ஏறுதழுவுதல்
36. மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது-
காணும் பொங்கல்
37. அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம்,
உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்ன பெயரில் வழங்கப்படுகிறது – மகரசங்கராந்தி
38. பொங்கல் விழா 'லோரி' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- பஞ்சாப்
39. பொங்கல் விழா 'உத்தராயன்' என்ற பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது- குஜராத்,
ராஜஸ்தான்
40. கதிர் முற்றியதும் - அறுவடை செய்வர்
41. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால்
- தோரணம் கட்டுவர்
42. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- பொங்கலன்று
43. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- போகி - பண்டிகை
44. பழையன கழிதலும் - புதியன புகுதலும்
45. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப்போன
மரத்தை காண - துன்பம் தரும்
46. பொங்கல் பண்டிகை எவ்வாறு அழைக்கப்படுகிறது – தமிழர், திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள்.
47. மற்போரில் சிறந்தவன் - நரசிம்மவர்மன்
48. மாமல்லன் என்ற பட்ட பெயர் யாருக்கு உண்டு- நரசிம்மவர்மன்
49. பஞ்சபாண்டவர் இரதம் அமைந்துள்ள இடம் - மாமல்லபுரம்
50. முதலாம் நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்- 7 நூற்றாண்டு
51. நரசிம்மவர்மன் தந்தை பெயர் - முதலாம் மகேந்திரவர்மன்
52. மாமல்லபுர சிற்பங்கள் எத்தனை தலைமுறைகளில் உருவாக்கப்பட்டது
– 4 தலைமுறை
53. சிற்பக்கலையின் உச்சம் - அர்ச்சுனன் தபசு
54. "அர்ச்சுனன் தபசு"ன் வேறு பெயர் - பகீரதன் தவம்
55. தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடம் - மாமல்லபுரம்
56. ஆகாயக்கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் எது
- மாமல்லபுரம்
57. சிற்பக்கலை எத்தனை வகைப்படும் - நான்கு
58. உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்-
மயங்கொலிகள்
59. மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை - 8
60. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ண
61. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியை
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ன
62. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத்
தொடுவதால் பிறக்கும் எழுத்து - ந
63. வாணம் என்ற சொல்லின் பொருள் - வெடி
64. வானம் என்ற சொல்லின் பொருள் - ஆகாயம்
65. பணி என்ற சொல்லின் பொருள் - வேலை
66. பனி என்ற சொல்லின் பொருள் - குளிர்ச்சி
67. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத்
தொடுவதால் தோன்றும் எழுத்து - ல
68. நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத்
தொடுவதால் தோன்றும் எழுத்து -ள
69. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும்
எழுத்து - ழ
70. நாவின் நுனி மேல் அண்ணத்தின் முதல் பகுதியைத் தொட்டு
வருவதால் தோன்றும் எழுத்து -ர
71. நாவின் நுனி மேல் அண்ணத்தின் மையப்பகுதியை உரசுவதால்
தோன்றும் எழுத்து- ற
72. ஏரி என்பதன் பொருள்- குளம்
73. கூரை என்பதன்
பொருள் - வீட்டின் கூரை
74. கூறை என்பதன் பொருள் - புடவை
75. சிரம் என்பதன் பொருள்- தலை
76. இலையின் வேறுபெயர்- தளை
77. வண்டியை இழுப்பது - காளை
78. கடலின் வேறுபெயர் - பரவை
79. பறவை வானில்
- பறந்தது
80. பூ – மணம்
வீசியது
81. புலியின் - கண் சிவந்து காணப்படும்
82. வீட்டு வாசலில் - கோலம் போட்டனர்
83. பொருத்துக:
1.
நந்தவனம் - பூஞ்சோலை
2.
உலகம் - பார்
3.
பண் - இசை
4.
இழைத்து - பதித்து
84. பொருத்துக:
1.
விலை - பொருளின் மதிப்பு
2.
விளை - உண்டாக்குதல்
3.
விழை - விரும்பு
85. பொருத்துக:
1.
இலை - செடியின் இலை
2.
இளை - மெலிந்து போதல்
3.
இழை - நூல் இழை
86. பொருத்துக:
1.
நல்வரவு- Welcome
2.
சிற்பங்கள்- Sculptures
3.
சில்லுகள்- Chips
4.
ஆயத்த ஆடை - Readymade Dress
5.
ஒப்பனை – Makeup
6.
சிற்றுண்டி - Tiffin
87. பொருத்துக:
1.
நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
2.
ஒப்புரவு - எல்லோரையும் சமமாக பேணுதல்
3.
நட்டல் - நட்புகொள்ளுதல்
4.
பொறை - பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்து
கொள்ளுதல்
88. பொருத்துக:
1.
ஆந்திரா - மகரசங்கராந்தி
2.
பஞ்சாப் - லோரி
3.
தமிழ்நாடு - அறுவடைத்திருவிழா
4.
குஜராத் – உத்தராயன்
Revision UNIT 3: தொழில் வணிகம் – கூடித் தொழில் செய்
1. “கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை
மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி'' என்ற பாடலின் ஆசிரியர் - முடியரசன்
2. "ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புதியதொரு விதி செய்வோம்
3. முடியரசனின் இயற்பெயர் - துரைராசு
4. முடியரசன்
எழுதிய நூல்கள் : பூங்கொடி , வீரகாவியம்
, காவியப்பாவை.
5. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்-முடியரசன்.
6. கவியரசு என்று பாராட்டப்பெற்றவர் – முடியரசன்.
7. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல்
ஆசிரியர் – பாரதியார்.
8. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்- வீரம்
9. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது - கல் + எடுத்து
10. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
நான்கு + நிலம்
11. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- நாடென்ற
12. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- கலமேறி
13.“புதியதொருவிதி
செய்வோம்'' என்ற நூலை இயற்றியவர் - முடியரசன்
14. கடலும் கடல் சார்ந்த இடம் - நெய்தல்
15. நெய்தல் நிலத்தல் வாழும் மக்கள் - பரதர், பரத்தியர் , எயினர் , எயிற்றியர்
16. நெய்தல் நில மக்களின் தொழில் என்ன- மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
17. நெய்தல் நிலத்தின் பூ - தாழம் பூ
18. காதால் கேட்டு வாய்மொழியாகவே வழக்கப்பட்டு வருவதால்
நாட்டுப்புற பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது- வாய்மொழி இலக்கியம்
19. நாட்டுப்புறப்பாடலில் அடங்குபவை - ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு,விளையாட்டுப்பாடல்,
தொழில் பாடல், தாலாட்டுப் பாடல்
20. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலைத் தொகுத்தவர்
- சு.சக்திவேல்
21. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- கதிர் + சுடர்
22. மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
மூச்சு + அடக்கி
23. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- பெருவானம்
24. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- அடிக்கும் அலை
25. "பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஐலசா பனிமூட்டம்
உடல்போர்வை - ஐலசா'' என்ற பாடலின் ஆசிரியர்
- சு. சக்திவேல்
26. பொருள்களைக் கொடுத்து நமக்கு தேவையான பொருள்களைப்
பெற்றுக் கொள்வது- பண்டமாற்று வணிகம்
27. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் நெல்லைக்
கொடுத்து அதற்குப் பதிலாக எதைப் பெற்றனர்-
உப்பு
28. சங்ககாலத்தில் பண்டமாற்று வணிகத்தில் ஆட்டின் பாலைக்
கொடுத்து எதைப் பெற்றனர்- தானியம்
29. வணிகம் எத்தனை வகைப்படும் - இரண்டு
30. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றிக் கொண்டு
குழுவாக வெளியூருக்குச் செல்வர் இக்குழுவிற்கு பெயர்- வணிகச்சாத்து
31. துறைமுக நகரங்கள் - பட்டினம் ,பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன
32. பண்டைய தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகம் - பூம்புகார்
33. தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம்
- தனிநபர் வணிகம்
34. ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து
வணிகம் நடத்துவது - நிறுவன வணிகம்
35. “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின்
கொள்ளைச் சுற்றி உமணர் போகலும்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - நற்றிணை
36. “பாலொடு வந்து கூழொடு பெயரும்" என்ற வரி இடம்பெற்றுள்ள
நூல் - குறுந்தொகை
37. “பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்ற பாடல்வரி
இடம்பெற்றுள்ள நூல் - அகநானூறு
38. சிறு வணிகர்கள் - நுகர்வோர் உடன் நேரடித்தொடர்பு கொள்வார்கள்
39. தமிழ்நாட்டில் இருந்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்ட பொருட்கள் எவை - தேக்கு, மயில்தோகை,அரிசி,
சந்தனம்,இஞ்சி, மிளகு
40. சீனத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட
பொருள் - கண்ணாடி ,கற்பூரம் , பட்டு
41. அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு இறக்குமதி
செய்யப்பட்டது - குதிரை
42. “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும்
தமபோல் செயின்” என்று வணிகரின் நேர்மை பற்றி கூறும் நூல் - திருக்குறள்
43. வணிகரை 'நடுவு நின்ற நன்னெஞ்சினோர்' என்று கூறும்
நூல் - பட்டினப்பாலை
44. 'கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது'
என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல் – பட்டினப்பாலை
45. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - திருக்குறள்
46. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்-
நுகர்வோர்
47. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- வணிகசாத்து
48. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதம் கிடைக்கும்
சொல்- பண்டமாற்று
49. வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- வண்ணம் + படங்கள்
50. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
விரிவு + அடைந்த
51. கரன்சி நோட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பணத்தாள்
52. பேங்க் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - வங்கி
53. செக் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - காசோலை
54. டிமாண்ட் டிராப்ட் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்
- வரைவோலை
55. டெபிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - பற்று அட்டை
56. கிரெடிட் கார்டு என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்
- கடன் அட்டை
57. ஈகாமாஸ் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - மின்னணு வணிகம்
58. சங்ககால வணிகம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருந்தது- தரைவழி வணிகம், நீர்வழி வணிகம்
59. துறைமுக நகரங்கள் பட்டினம் என்று அழைக்கப்பட்டது
60. பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்'
என்பது யாருடைய கூற்று- ஒளவையார்
61. ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகள்- சுட்டு எழுத்து
62. சுட்டு எழுத்துகள் - அ, இ,உ
63. தற்போது எந்த சுட்டெழுத்தை பயன்படுத்துவது இல்லை
- உ
64. சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத்
தருவது- புறச்சுட்டு
65. சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத்
தருவது - அகச்சுட்டு
66. அண்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - இ
67. சேய்மைச்சுட்டுக்கு உரிய எழுத்து - அ
68. அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும்
இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட பயன்படுத்தப்பட்டுள்ள சுட்டெழுத்து - உ
69. அ. இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து
பொருள் தருவது- சுட்டுத்திரிபு
70. வினா எழுத்துகள் - எ, யா, ஆ,ஓ ,ஏ
71. மொழியின் முதலில் வரும் வினா எழுத்துகள் - எ, யா
72. மொழியின் இறுதியில் வரும் வினா எழுத்து - ஆ, ஓ
73. மொழி முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து
- ஏ
74. வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப்
பொருளைத் தருமானால் அது - அகவினா
75. அகவினா எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டு - எது, யார், ஏன்
76. வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப்
பொருளைத் தருமானால் அது - புற வினா
77. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன - பட்டினம், பாக்கம்.
78. பொருள்களை விற்பவர் – வணிகர்.
79. நடுவு நின்ற நன்னெஞ்சினோர் என்ற வரி வணிகரின் எத்தன்மையை
எடுத்துக்காட்டுகின்றன - நேர்மை.
80. நானிலம் படைத்தவன் பாடல் எந்நூலில் இடம்பெற்றது
- புதியதொரு விதி செய்வோம்.
81. நெய்தல் திணைக்குரிய நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்.
82. போர்க்களத்தில் வெளிப்படும் குணம் – மறம்.
83. பாடுபட்டு தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்
என்று பாடியவர் – ஒளவையார்.
84. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப்பிற
நாடுகளுக்கு அனுப்புவது – ஏற்றுமதி.
85. பாரம்பரியம் என்ற சொல்லின் கலைச்சொல் தருக – Heritage.
86. நானிலம் படைத்தவன் பாடலில் அதன் ஆசிரியர் கூறும்
நான்கு நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்.
87. எந்த நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன
– அரேபியா.
88. வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர்
– பாரதியார்.
89. நானிலம் என்ற சொல்லை பிரித்து எழுதுக - நான்கு + நிலம்.
90. பொருள்களை வாங்குபவர் – நுகர்வோர்.
91. அவ்வானம் என்ற சொல்லின் சுட்டு எழுத்தை நீக்கினாலும்
பிற எழுத்துக்கள் பொருள் தருவது- புறச்சுட்டு.
92. பொருத்துக
1. விடிவெள்ளி - விளக்கு
2.
மணல் - பஞ்சு மெத்தை
3.
புயல்- ஊஞ்சல்
4.
பனிமூட்டம் - போர்வை
93. பொருத்துக
1.
கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
2.
மின்னல்வரி - மின்னல் கோடுகள்
3.
அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
94. பொருத்துக
1.
மல்லெடுத்த- வலிமை பெற்ற
2. கழனி - வயல்
3.
சமர் - போர்
4. நல்கும் - தரும்
95. பொருத்துக.
1.
மறம் - வீரம்
2.
எக்களிப்பு- பெருமகிழ்ச்சி
3.
கலம்- கப்பல்
4.
ஆழி- கடல்
96. பொருத்துக.
1.
பண்டம்- Commodity
2. பயணப்படகுகள் - Ferries
3.
பாரம்பரியம்- Heritage
4.
நுகர்வோர்- Consumer
97. பொருத்துக.
1.
கடற்பயணம் - Voyage
2.
தொழில் முனைவோர் - Entrepreneur
3.
கலப்படம் - Adulteration
4.
வணிகர்- Merchant
98. பொருத்துக:
1.
நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - பட்டினப்பாலை
2.
தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து - நற்றிணை
3.
பாலொடு வந்து கூழொடு பெயரும் - குறுந்தொகை
4.
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு
99. பொருத்துக:
1.
அகச்சுட்டு - இம்மலை
2.
புறச்சுட்டு - இது
3.
அகவினா - எது
4.
புறவினா - அவனா
100. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தேர்ந்தெடுக்க.
1.
டிஜிட்டல் - மின்னணுமயம்
2.
டெபிட் கார்டு - பற்று அட்டை
3.
இ-காமர்ஸ் - மின்னணுவணிகம்
4.
டிமான்ட் ட்ராப்ட் - வரைவோலை
minnal vega kanitham