எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
6th Std Tamil Term 1 |
UNIT 1: தமிழ்த்தேன் |
♦ இன்பத்தமிழ் (பாரதிதாசன்) ♦ தமிழ்க்கும்மி (பெருஞ்சித்திரனார்) ♦ வளர்தமிழ் (தமிழின்
தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு) ♦ கனவு பலித்தது (தமிழ்மொழியில்
அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்) ♦ தமிழ் எழுத்துகளின் வகை தொகை (இலக்கணம்)
|
UNIT 2: இயற்கை |
♦ சிலப்பதிகாரம் ♦ காணி நிலம் (பாரதியாரின் கவிதை) ♦ சிறகின் ஓசை (பறவைகள்
& பறவைகள் சரணாலயம்) ♦ கிழவனும் கடலும் ♦ முதலெழுத்தும் சார்பெழுத்தும் (இலக்கணம்) ♦ திருக்குறள் |
UNIT 3: அறிவியல்
தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்) |
♦ அறிவியல் ஆத்திசூடி ♦ அறிவியலால் ஆள்வோம் ♦ கணியனின் நண்பன் ♦ ஒளி பிறந்தது ♦ மொழிமுதல், இறுதி எழுத்துகள் (இலக்கணம்) |
UNIT 1: தமிழ்த்தேன்
1.
இன்பத்தமிழ் - பாடல் ஆசிரியர் - பாரதிதாசன்.
2.
தமிழுக்கும் அமுதென்றுபேர் பாடல் ஆசிரியர்- பாரதிதாசன்.
3.
புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
4.
பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
5.
பாரதிதாசன் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
6.
பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன். என்று மாற்றிக்
கொண்டவர் - கனக சுப்புரத்தினம்
7.
தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான
கருத்துகளை பாடியுள்ளார்- பாரதிதாசன்
8.
தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல் எழுதியவர் -
காசி ஆனந்தன்.
9.
தமிழ் கும்மி என்னும் பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
10.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி பாடலை இயற்றியவர்- பெருஞ்சித்தரனார்.
11. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் - துரை மாணிக்கம்.
12. பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்- பாவலரேறு.
13. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்: கனிச்சாறு ,கொய்யாக்கனி ,நூறாசிரியம் , பாவியக்கொத்து.
14. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் : தென்மொழி , தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்
15. தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.
16. கனிச்சாறு நூலின் ஆசிரியர் – பெருஞ்சித்திரனார்.
17. மாணிக்கம் என்பது யாருடைய இயற்பெயர் – பெருஞ்சித்திரனார்.
18. தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்.
19. திணை எத்தனை வகைப்படும் - இரண்டு
20. தமிழின் இலக்கண நூல் – தொல்காப்பியம் , நன்னூல்.
21. மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடுக்க
- மரம் , துகள் , விலங்கு, நண்டு.
22. வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை
பற்றி கூறும் நூல் - பதிற்றுப்பத்து.
23. "தமிழ்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட
இலக்கியம் எது – தொல்காப்பியம்.
24. பாகற்காய்- பிரித்து எழுதுக - பாகு+ அல் +காய்.
25. இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் - சிவன்.
26. கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு – மூன்றரை.
27. "இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கியஇதுநீ
கருதினை ஆயின்" - என்ற வரி இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரத்தின் காண்டம் - வஞ்சிக் காண்டம்.
28. தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை
– 216.
29. தேடுபொறி - என்பதற்கிணையான ஆங்கிலச் சொல் - Search engine.
30. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால்
தைத்த செய்தியைக் கூறும் நூல் – நற்றிணை.
31. "சீரிளமை " என்னும் சொல்லை பிரித்து
எழுதுக - சீர் + இளமை.
32. தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் யார் – தொல்காப்பியர்.
33. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று கூறும் நூல்
எது – சிலப்பதிகாரம்.
34. அஃறிணை - பொருள் தருக - உயர்வு அல்லாத திணை.
35. தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம்
– சிலப்பதிகாரம்.
36. " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்" என்று பாடியவர் யார் – பாரதியார்.
37. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றும் எழுத்து –
உயிர்மெய்.
38. செம்பயிர் - என்னும் சொல்லை பிரித்து எழுதுக -
செம்மை + பயிர்.
39. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவு அம்மா உனக்கும்
எனக்கும் என்று பாடியவர் - காசி ஆனந்தன்.
40. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது
- அ,எ, ஒ,ய.
41. "என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள்
தாய்!" - என்று பாடியவர் – பாரதியார்.
42. பாரதிதாசனின் சிறப்புப் பெயர் – பாவேந்தர்,புரட்சிக்கவி.
43. தமிழ்+ எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்
சொல் – தமிழெங்கள்.
44. பாரதிதாசன் யாருடைய கவிதைகளின் மீது கொண்ட பற்றால்
தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார் – பாரதியார்.
45. "தமிழன்" என்ற சொல் முதலில் ஆளப்பட்ட
இலக்கியம் – தேவாரம்.
46. பாரதிதாசனின் இயற்பெயர் –சுப்புரத்தினம்.
47. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் அமைந்துள்ளது- வலஞ்சுழி எழுத்துகளாகவே.
48. வலஞ்சுழி எழுத்துகள் - அ, எ, ஔ , ண, ஞ.
49. இடஞ்சுழி எழுத்துகள் - ட, ய, ழ.
50. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
- இரட்டைக் காப்பியம்.
51. பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்.
52. பாரதியாரின் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
53. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் – மாணிக்கம்.
54. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்
உலகம் ஆதலின் - தொல்காப்பியம் .
55. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி - கார் நாற்பது.
56. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – பதிற்றுப்பத்து.
57. தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்
– திருவள்ளுவமாலை.
58. கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர்
பரதவர் – நற்றிணை.
59. தமிழில் இலக்கணம் எத்தனை வகைப்படும் - 5.
60. மெய் என்பது பொருள் - உடம்பு
61. தமிழில் உள்ள உயிர் குறில் எழுத்துகள் - ஐந்து
62. தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் – ஏழு
63. தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை
- 216
64. உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் - 2
65. கால அளவை குறிப்பது - மாத்திரை
66. மெய் எழுத்துக்களை ஒலிக்க ஆகும் கால அளவு - 1/2 மாத்திரை
67. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
68. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
69. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு -2 மாத்திரை
70. வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல்
கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் – பாரதியார்.
71. "1" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- க
72. "2" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- உ
73. ''3' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ங
74. ''4" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - ச
75. ''5" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து- ரு
76. "6" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- சு
77. "7" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- எ
78. ''8' என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து - அ
79. "9" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- கூ
80. "10" என்ற எண்ணுக்குரிய தமிழ் எழுத்து
- க0
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
9 |
10 |
க |
உ |
ங |
ச |
ரு |
சு |
எ |
அ |
கூ |
க0 |
81. பொருத்துக
1.
ஆழிப்பெருக்கு - கடல் கோள்
2.
மேதினி - உலகம்
3.
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
4.
உள்ளப்பூட்டு- உள்ளத்தின் அறியாமை
81. பொருத்துக
1.
வலஞ்சுழி - Clock wise
2.
இடஞ்சுழி - Anti-Clockwise
3.
இணையம் - Internet
4.
தேடுபொறி - Search engine
5.
குரல் தேடல் - Voice search
83. பொருத்துக:
1.
இலக்கண நூல் - தொல்காப்பியம், நன்னூல்
2.
சங்க இலக்கியம் - எட்டுத்தொகை ,பத்துப்பாட்டு
3.
அற நூல் - திருக்குறள், நாலடியார்
4. காப்பியம் - சிலப்பதிகாரம் ,மணிமேகலை
84. பொருத்துக:
1.
நிருமித்த - உருவாக்கிய
2.
சமூகம் - மக்கள் குழு
3.
விளைவு - வளர்ச்சி
4.
அசதி - சோர்வு
85. பொருத்துக:
1.
கமுகு (பாக்கு) - கூந்தல்
2.
சப்பாத்திக்கள்ளி - மடல்
3.
பலா - இலை
4. நாணல் - தோகை
5.
கோரை - புல்
86. பொருத்துக:
1.
விளைவுக்கு - நீர்
2.
அறிவுக்கு - தோள்
3.
இளமைக்கு - பால்
4.
புலவர்க்கு – வேல்
UNIT 2: இயற்கை
1. சிலப்பதிகாரம் ஆசிரியர் - இளங்கோவடிகள்.
2. திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும் பாடல்
ஆசிரியர் - இளங்கோவடிகள்.
3. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர்
– இளங்கோவடிகள்.
4. சேர மன்னர் மரைபச் சேர்ந்தவர்- இளங்கோவடிகள்.
5. இளங்கோவடிகள் காலம் - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
6. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று - சிலப்பதிகாரம்.
7. தமிழின் முதல் காப்பியம்- சிலப்பதிகாரம்.
8. முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
என்றெல்லாம் போற்றப்படுவது - சிலப்பதிகாரம்.
9. இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுவது
– சிலப்பதிகாரம், மணிமேகலை.
10. இளங்கோவடிகள் எந்த மன்னர் மரபைச் சேர்ந்தவர் -
சேர.
11. இளங்கோவடிகள் காலம் – கி.பி 2 ம் நூற்றாண்டு.
12. கழுத்தில் சூடுவது – தார்.
13. தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்.
14. கதிரவனின் மற்றொரு பெயர் – ஞாயிறு
15. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக - வெண்மை + குடை
16. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- பொன் + கோட்டு
17. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - கொங்கலர்
18. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - அவனளிபோல்
19. "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர்
வேலி உலகிற்கு அவன் அளிபோல்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்
20. காணி நிலம் வேண்டும் பராசக்தி என்ற நூலின் ஆசிரியர்
– பாரதியார்.
21. காணி என்பதன் பொருள் - நில அளவு
22. மாடங்கள் என்ற சொல்லின் பொருள் - அடுக்குகள்
23. சித்தம் என்ற சொல்லின் பொருள் - உள்ளம்
24. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் - பாரதியார்
25. பாரதியார் இயற்பெயர் - சுப்பிரமணியன்.
26. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச்
சிறப்பிக்கப்பட்டவர்- பாரதியார்.
27. மண் உரிமைக்காகவும் மற்றும் பெண் உரிமைக்காகவும்
பாடியவர், நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர் – பாரதியார்
28. நிலத்தினிடையே என்னும் சொல்லை பிரித்து எழுதுக
- நிலத்தின்+இடையே.
29. "பாஞ்சாலிசபதம்" என்ற நூலை இயற்றியவர் - பாரதியார்
30. "கிணறு" என்பதன் பொருள் - கேணி
31. "சித்தம்" என்பதன் பொருள் - உள்ளம்
32. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும்
சொல் - நன்மை + மாடங்கள்
33. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும்
சொல் - நிலத்தின் + இடையே
34. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - நிலாவொளி
35. பாரதியார் எழுதிய நூல்கள் : பாஞ்சாலி
சபதம் , கண்ணன் பாட்டு, குயில் பாட்டு.
36. பறவைகள் இடம் பெயர்தல் - வலசை போதல்
37. பெரும்பாலும் எந்த வகைப் பறவைகள் வலசை போகின்றன
-
நீர்வாழ் பறவைகள்
38. எதன் அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம்பெறுகின்றன-நிலவு, விண்மீன், புவிஈர்ப்பு புலம்.
39. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை
- கப்பல் பறவை.
40. வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் மேற்கிலிருந்து
கிழக்குநோக்கியும் - பறவைகள் வலசை போகின்றன.
41. கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப்பறவை என அழைக்கப்படும்
பறவை - கப்பல் பறவை
42. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம்
- சிட்டுக்குருவி.
43. 'தென்திசைக்குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்'
என்ற பாடலை இயற்றியவர் – சத்திமுத்துப்புலவர்
44. இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்திலும் வாழும்
இனம் - சிட்டுக்குருவிகள்.
45. சிட்டுகுருவியின் வாழ்நாள் -10 முதல் 13 ஆண்டுகள்.
46. ஆண்
சிட்டுக் குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும், உடல்பகுதி அடர்
பழுப்பாக இருக்கும்
47. பெண் சிட்டுக்
குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
48. பறவைகள் வலசை போதலை பற்றி 1500 ஆண்டுகளுக்கு முன்பு
பாடிய புலவர் - சத்திமுத்தப் புலவர்.
49. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர்
- சலீம் அலி.
50. உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கி. மீ பயணம் செய்யும்
பறவையினம் - ஆர்டிக் ஆலா.
51. சிட்டுக்குருவி
3 முதல் 6 முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் அடைகாக்கும். 15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
52. "நாராய்,நாராய், செங்கால் நாராய்" என்னும்
பாடலை எழுதியவர் - சத்திமுத்தப் புலவர்.
53. பறவைகள் பற்றிய படிப்பு - ஆர்னித்தாலஜி .
54. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும்! பறவைகள்
இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் - சலீம் அலி.
55. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி
செய்வதிலும் அவற்றை படம் பிடிப்பதிலும் ஈடுபட்டவர்- சலீம் அலி.
56. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுகிறார்-
டாக்டர் சலீம் அலி.
57. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி
செய்தார்- டாக்டர் சலீம் அலி.
58. காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர் – பாரதியார்.
59. climate - என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் – தட்பவெப்பநிலை.
60. வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
என்ன - தலையில் சிறகு வளர்தல், இறகுகளின் நிறம்
மாறுதல் , உடலில் கற்றையாக முடி வளர்தல்.
61. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி - துருவப் பகுதி.
62. சிட்டுக்குருவி
கூடு கட்டி வாழும் பறவை இனத்தை சார்ந்தது. கூடுகட்டும் காலங்களை சத்தமிட்டு கொண்டே
இருக்கும்
63. சலீம் அலி பறவைகள் பற்றிய ஆராய்ச்சி நூலுக்கு
- சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The fall
of sparrow) என்று பெயரிட்டுள்ளார்
64. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் – பாரதியார்.
65. டாக்டர் சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்று நூலின்
பெயர் - சிட்டுக்குருவியின் வீழ்ச்சி.
66. தரை+ இறங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்
சொல் – தரையிறங்கும்.
67. ஆர்டிக் ஆலா எவ்வளவு தொலைவு பயணம் செய்யும் - 22000 கி.மீ.
68. கிழவனும் கடலும் என்ற ஆங்கில புதினத்தின் ஆசிரியர்
- எர்னெஸ்ட் ஹெமிங்வே.
69. எர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற ஆண்டு – 1954.
70. கிழவனும் கடலும் என்ற கதையின் நாயகன் - சாண்டியாகோ
71. கிழவனும் கடலும் என்ற கதையில் சாண்டியாகோவுடன்
மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் - மனோலின்
72. உலக சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் 20
73. தமிழ் எழுத்து எத்தனை வகைப்படும் - 2
74. உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 12
75. மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 18
76. முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை - 30
77. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் -10
78. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் – முப்புள்ளி,முப்பாற்புள்ளி,தனிநிலை.
79. தமிழ் - தொல்காப்பியம்
80. தமிழ்நாடு - சிலப்பதிகாரம், வஞ்சிக்
81. தமிழன் - அப்பர், தேவாரம்
82. வான்புகழ் வள்ளுவர், தெய்வப்புலவர் ,பொய்யில் புலவர்
என்ற சிறப்பு பெயர்களை உடையவர்- திருவள்ளுவர்.
83. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்- திருவள்ளுவர்.
84. அறநூல்களில் ‘உலகப் பொதுமறை’ என்று போற்றப்படும்
சிறப்பு பெற்ற நூல் - திருக்குறள்
85. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தை கற்றுத்தரும்
நூல் – திருக்குறள்
86. ஒருவருக்கு மிகச்சிறந்த அணி - பணிவு,
இன்சொல்
87. திருவள்ளுவர் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டவர்
- 2000
88. எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை
வகுத்துக் கூறியவர் - திருவள்ளுவர்
89. தெய்வப்புலவர் என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுபவர்
- திருவள்ளுவர்
90. திருக்குறளின் மூன்று பிரிவுகள் - அறத்துப்பால்
, பொருட்பால் , இன்பத்துப்பால்
91. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று - திருவள்ளுவர்
92. திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது - 133
93. திருக்குறள் எத்தனை குறள்பாக்களை கொண்டுள்ளது
– 1330
94. திருக்குறள் எத்தனை க்கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது - 100
95. ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி
நடைபெற்ற ஆண்டு - 2016
96. மாரியப்பன் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் - தமிழ்நாடு
97. புள் என்பதன் வேறுபெயர் - பறவை
98. 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு"
என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டவர்- சர்.சி.வி.
இராமன்
99. பிப்ரவரி 28 ஆம் நாளை ஆண்டுதோறும் - "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது.
100. பொருத்துக
1.
முத்துச் சுடர் போல - நிலா ஒளி
2.
தூய நிறத்தில் - மாடங்கள்
3.
சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
101. எதிர் சொற்களைப் பொருத்துக
1. அணுகு - விலகு
2.
ஐயம் - தெளிவு
3.
ஊக்கம் - சோர்வு
4.
உண்மை - பொய்மை
102. பொருத்துக.
1.
திங்கள் - நிலவு
2.
கொங்கு - மகரந்தம்
3.
அலர் - மலர்தல்
4.
திகிரி - ஆணைச்சக்கரம்
103. பொருத்துக.
1.
பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
2.
மேரு - இமயமலை
3.
நாமநீர் - அச்சம் தரும்கடல்
4.
அளி - கருணை
104. பொருத்துக:
1.
சித்தம் - உள்ளம்
2.
காணி - நில அளவை குறிக்கும் சொல்
3.
மேரு -இமயமலை
4.
ஊழி - நீண்டதொரு காலப்பகுதி
105. பொருத்துக.
1.
கண்டம் - Continent
2.
வலசை - Migration
3.
தட்பவெப்பநிலை - Climate
4.
புகலிடம் - Sancturary
5.
வானிலை - Weather
6.
புவிஈர்ப்புலம் - Gravitational field
UNIT 3: அறிவியல் தொழில்நுட்பம் (ஏவுகணை, அப்துல் கலாம்)
1. அகரவரிசையில் அறிவுரைகளை கூறும் இலக்கியம் –
ஆத்திச்சூடி
2. ஆத்திசூடியை இயற்றியவர் - ஒளவையார்
3. "புதிய ஆத்திச்சூடியை" இயற்றியவர்
- பாரதியார்
4. அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஆசிரியர்
- நெல்லை சு. முத்து.
5. "அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு"
என்ற பாடலின் ஆசிரியர் - நெல்லை சு. முத்து.
6. ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும்
ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர் - நெல்லை சு. முத்து.
7. நெல்லை சு.முத்து எங்கு பணியாற்றினார் - விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்,சதீஷ் தவான்
விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம்.
8. “இயன்றவரை” என்ற சொல்லின் பொருள் - முடிந்தவரை
9. “ஒருமித்த” என்ற சொல்லின் பொருள் - ஒன்று பட்டு
10. “ஔடதம்” என்ற சொல்லின் பொருள் - மருந்து
11. உடல் நோய்க்கு தேவை - ஒளடதம்
12. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- கண்டு + அறி
13. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஓய்வு + அற
14. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - ஏனென்று
15. ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் – ஒளடதமாம்
16. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்" என்ற
பாடலின் ஆசிரியர் - பாரதியார்
17. அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
18. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஆழம் + கடல்
19. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- விண் + வெளி
20. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - நீலவான்
21. இல்லாது +இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் - இல்லாதியங்கும்
22. தம்மை ஒத்த அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை
சு. முத்துவை பாரட்டியவர்-அப்துல் கலாம்.
23. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் பிடித்த நூல்
- திருக்குறள்
24. 'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவர்க்கும் உள்ளழிக்கல்
ஆகா அரண்' என்ற குறள் யார் வாழ்க்கைக்கு வலு சேர்த்தது - அப்துல் கலாம்
25. அப்துல் கலாம் அவர்களுக்கு லிலியன் வாட்சன் எழுதிய
Lights from many lamps நூல் மிகவும் பிடிக்கும்
26. அப்துல்கலாம் கார்பன் இலையை கொண்டு எத்தனை கிராம்
எடையுள்ள செயற்கை கால்களை உருவாக்கினார் - 300
கிராம்.
27. அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்!
பரிவு வேண்டும்!-என்று கூறியவர்- அறிவுமதி.
28. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின்
பெயர் - டீப் புளூ.
29. சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் எந்த மீத்திறன்
கணினியுடன் போட்டியிட்டார் - டீப் புளூ.
30. காரெல் கபெக் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்
– செக்.
31. 'கண்டறி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
கண்டு + அறி
32. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
ஓய்வு + அற
33. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- ஏனென்று
34. ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- ஒளடதமாம்
35. மொழி என்பதன் பொருள் - சொல்.
36. தானியங்கிகளுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே
உள்ள முக்கிய வேறுபாடு - செயற்கை நுண்ணறிவு
37. நின்றிருந்த ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- நின்று + இருந்த
38. 'அவ்வுருவம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது- அ + உருவம்.
39. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- மருத்துவத்துறை
40. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- செயலிழக்க
41. "விளக்குகள் பல தந்த ஒளி" என்ற நூலை
எழுதியவர் - எர்னெஸ்ட் ஹெமிங்வே.
42. காரெல் கபெக் என்பவர்- நாடக ஆசிரியர்.
43. ரோபோ என்ற சொல்லின் பொருளுக்கு எதிர்ச்சொல் - சுதந்திரம்.
44. 1920 ல்
காரல் கபெக் ஒரு நாடகம் எழுதினார் அதில் ரோபோ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்
45. உடல் நோய்க்கு தேவை – ஔடதம்.
46. நொ - ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் – துன்பம்.
47. மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் - ஆய்த எழுத்து,மெய்யெழுத்து.
48. "ரோபோ" என்னும் சொல்லின் பொருள் –அடிமை.
49. "வானை அளப்போம் கடல் மீனையளப்போம்'' என்ற
பாடலின் ஆசிரியர் - பாரதியார்.
50. அவன் எப்போதும் உண்மையையே - உரைக்கின்றான்
51. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
ஆழம் + கடல்
52. விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது-
விண் + வெளி
53. நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்- நீலவான்
54. இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்- இல்லாதியங்கும்
55. "சோபியா"வுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய
பட்டம் - புதுமைகளின் வெற்றியாளர்.
56. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம்
- தானியங்கி .
57. தோற்றத்தில்
மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும்
என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
58. உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை
வழங்கிய நாடு - சவுதி அரேபியா.
59. 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு
வழங்கியுள்ளது- ஐக்கிய நாடுகள் சபை
60. எந்த ஆண்டு நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்
புரோவ் மீத்திறன் கணினியுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார் - 1997 மே மாதம்.
61. ஒருமித்து என்ற சொல்லின் பொருள் – ஒன்றுபட்டு.
62. 'ஓய்வற' என்பதை பிரித்தெழுதுக - ஓய்வு+அற.
63. மனிதன் எப்போதும் உண்மையையே – உரைக்கின்றான்.
64. ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
- காரல் கபேக்.
65. முதன் முதலாக எந்திர மனிதனுக்கு குடியுரிமை வழங்கியுள்ள
நாடு - சவுதி அரேபியா.
66. தானே இயங்கும் இயந்திரம் – தானியங்கி.
67. நுண்ணறிவு என்பதற்கு இணையான கலைச்சொல் – Intelligent.
68. டீப் புளூ என்ற மீத்திறன் கணினியை உருவாக்கிய நிறுவனம்
- ஐ. பி. எம்.
69. சர்சிவி ராமனுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த
கேள்வி - கடல்நீர் ஏன் நீல நிறமாக. காட்சியளிக்கிறது?
70. 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் "இராமன் விளைவு"
என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்- சர்.சி.வி.
இராமன்
71. இராமன் விளைவை கண்டறிந்தவர் - சர்சிவி ராமன்.
72. தேசிய அறிவியல் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது
- பிப்ரவரி 28.
73. மெய் எழுத்துக்கள் சொல்லின் - முதலில் வராது.
74. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் - இடையில் வரும்.
75. ஆயுத எழுத்து சொல்லின் - இடையில்
மட்டுமே வரும்.
76. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் - இடையில் வரும்.
77. உயிர் மெய் எழுத்துகளில் 'ங' எழுத்து சொல்லின் இறுதியில் வராது
78. அளபெடை எழுத்துக்களில் உயிர் எழுத்து சொல்லின்
- இறுதியில் வரும்.
79. அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துக்கள் சொல்லின்-இடையில் வரும்.
80. பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும்
முதற்காரணமாக இருக்கின்றது -முதல் எழுத்துகள்.
81. வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி
மழை தோன்றி மலைகள் தோன்றி - எனப் பாடியவர் – வாணிதாசன்.
82. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும்
காணோம் – பாரதியார்.
83. சீர்மை
என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்.
84. அஃறிணை (அல் + திணை) = உயர்வு அல்லாத திணை
85. இனிப்பு அல்லாத காய் பாகற்காய் = பாகு + அல் + காய்.
86. பொருத்துக :
1.
எண்ணத்தை வெளிப்படுத்துவது - இயல் தமிழ்
2.
உள்ளத்தை மகிழ்விப்பது - இசைத்தமிழ்
3.
உணர்வில் கலந்து வாழ்வின் நிறை குறைகளை சுட்டிக்காட்டுவது- நாடகத்தமிழ்
87. பொருத்துக :
1.
செயற்கை நுண்ணறிவு - Artificial
Intelligence
2.
செயற்கைக் கோள் - Satellite
3.
மீத்திறன் கணினி - Super Computer
4.
நுண்ணறிவு - Intelligence
88. எதிர் சொற்களை பொருத்துக.
1.
அணுகி - விலகு
2.
ஐயம் - தெளிவு
3.
ஊக்கம் - சோர்வு
4.
உண்மை – பொய்மை
Mikavun nantru
பதிலளிநீக்குminnal vega kanitham