எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. பொருத்துதல் - (i) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர் |
1. பொருளறிந்து பொருத்துக : (2019 G4) (a) தடக்கர் - கரடி (b) எண்கு - காட்சி (c) வள்உகிர் - பெரிய யானை (d) தெரிசனம் - கூர்மையான நகம் a. 3 1 4 2 b. 1 4 3 2 c. 1 2 3 4 d. 1 3 2 4
2. சொல்லுக்கேற்ற பொருளறிக : (2019 G4) a. வலிமை - திண்மை
b. நாண் - தன்னைக்குறிப்பது c. கான் - பார் d. துணி – துன்பம்
3. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் (2019
G4) றுண்டாகச் செய்வான் வினை - இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது? a. படை கவசம் b. படை கருவிகள் c. கைப்பொருள் d. வலிமையான ஆயுதம்
4. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள
"துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
(2018 G4) a. மாணிக்கம் b. மரகதம் c. இரத்தினம் d. பவளம்
5. "வித்தொடு சென்ற வட்டி” என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன்
பொருள் என்ன? (2018 G4) a. பனையோலைப் பெட்டி
b. வயல் c. வட்ட வடிவு d. எல்லை
6. சொல்லைப் பொருளோடு பொருத்துக: (2018 G4) சொல் - பொருள் (a) வனப்பு 1.காடு (b) அடவி 2.பக்கம் (c) மருங்கு 3.இனிமை (d) மதுரம் 4.அழகு a. 2 1 4 3 b. 3 2 1 4 c. 4 1 2 3 d. 1 2 3 4
7. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும்
என்பதைத் தெரிவு செய்க. (2018 G4) a. பவளம் b. முத்து c. மாணிக்கம். d. மரக்தம் 8. கடிகை என்பதன் பொருள் யாது? (2016 G4) a. அணிகலன் b. கடித்தல் c. கடுகு d. காரம்
9. செறு என்பதன் பொருள் (2016 G4) a. செருக்கு b. சேறு c. சோறு d. வயல்
10. பொருத்துக: (2016 G4) சிந்தை - நீர் நவ்வி - மேகம் முகில் - எண்ணம் புனல் - மான் a. 2 1 3 4 b. 1 3 4 2 c. 3 4 2 1 d. 4 3 1 2
11. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக்
குறிக்கும். (2016 G4) a. சிங்கம் b. கடல் c. மாலை d. சந்தனம்
12. மடங்கல்- என்னும் சொல்லின் பொருள் (2016 G4) a. மடக்குதல் b. புலி c. மடங்குதல் d. சிங்கம்
13. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
(2016 G4) a. பொன்மனம் b. ஆர்த்து c. உற்றார் d. சார்பு
14. அங்காப்பு என்பதன் பொருள் (2016 G4) a. சலிப்படைதல் b. வாயைத் திறத்தல்
c. அலட்டிக் கொள்ளுதல் d. வளைகாப்பு
15. யாப்பு என்றால்---- என்பது பொருள் (2014 G4) a. அடித்தல் b. சிதைத்தல் c. கட்டுதல் d. துவைத்தல்
16. கண்ணகி- எனும் சொல்லின் பொருள் (2014 G4) a. கடும் சொற்களைப்
பேசுபவள் b. கண் தானம் செய்தவள் c. கண்களால் நகுபவள் d. கண் தானம் பெற்றவள் 17. சதகம் என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்
(2014 G4) a. ஐம்பது b. நூறு c. ஆயிரம் d. பத்தாயிரம்
18. வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும்
பொருள் (2014 G4) a. நிலம் b. மலை c. காடு d. நாடு
19. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை - இதில் மகடூஉ என்பது-------
(2014 G4) a. மகள் b. மகன் c. பெண் d. ஆண்
20. பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G4) (a) விசும்பு 1. தந்தம் (b) மருப்பு 2. வானம் (c) கனல் 3.யானை (d) களிறு 4. நெருப்பு a. 2 1 4 3 b. 3 2 1 4 c. 1 3 4 2 d. 4 3 2 1
21. பொருள் தேர்க. அங்காப்பு - என்பது (2014 G4) a. வாயைப் பிளத்தல் b. அங்கம் காப்பு c. அகம் காத்தல் d. வாயைத் திறத்தல்
22. பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள
குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க. (2013 G4) (a) புள் 1.விரைவு (b) குலவு 2.கலப்பை (c) மேழி 3.அன்னம் (d) ஒல்லை 4.விளங்கும் a. 2 4 1 3 b. 4 1 2 3 c. 3 1 4 2 d. 3 4 2 1
23. சரியான பொருள் தருக (2013 G4) இந்து a. நிலவு b. துன்பம் c. படகு d. தலைவன் |
2. தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால்
குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் |
1. "திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
(2019 G4) a. திருவிளையாடற்புராணம் b. மேருமந்த புராணம் c. திருவாசகம் d. பெரிய புராணம்
2. “அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல் (2018 G4) a. முதுமொழிக்காஞ்சி b. ஆசாரக் கோவை c. ஏலாதி d. சிறுபஞ்சமூலம்
3. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - யார் கூற்று?
(2014 G4) a. பாரதியார் b. பாரதிதாசன்
c. கண்ணதாசன் d. முடியரசன்
4. களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - என்று கூறியவர்
(2014 G4) a. ஒக்கூர் மாசாத்தியார் b. பொன்முடியார்
c. காவற்பெண்டு d. ஒளவையார்
5. அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க (2014 G4) (a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான் (b) திவ்வியகவி 2. வாணிதாசன் (c) கவிஞரேறு 3. பாரதியார் (d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் a. 2 4 1 3 b. 1 3 4 2 c. 3 4 2 1 d. 4 3 2 1 |
3. பிரித்தெழுதுக |
1. பாகற்காய் - பிரித்தெழுதுக (2019 G4) a. பாகு + அல்
+ காய் b. பாகு + அற்காய் c. பாகற் + காய் d. பாகு + கல்
+ காய்
2. பைந்நிணம் - பிரித்தெழுதுக(2019 G4) a. பை + நிணம் b. பை+ இணம் c. பசுமை + நிணம்
d. பசுமை + இணம்
3. ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?
(2018 G4) a. ஆற்று - ஈர் b. ஆறு + ஈர் c. ஆ - இற்று
+ ஈர் d. ஆற்று + ஆ
+ ஈர்.
4. “சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு (2018 G4) a. சா +ன்றா +
ண்மை b. சான் + றாண்
+ மை c. சான் + றா
+ ண்மை d. சான் + றாண்மை
5. "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” -என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள
சொல் எது? a. கற்றா b. கன்றா . c. கறா d. கன்று
6. னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி
பின்வருவனவற்றுள் எது சரி? (2018 G4) a. னல முன் டணவும்
ணள முன் றனவும் b. னல முன் றடவும்
ணள முன்னணவும் c. னல முன் றனவும்
ணளமுன் டணவும் d. னல முன் றணவும்ண்ளமுன்
டனவும்
7. சரியானவற்றைக் காண்க. (2013 G4) (1) நீ+ ஐ = நின்னை (2) நீ+ அது= நினது (3) நீ+ ஆல் = நீயால் (4) நீ+ கு = நீக்கு a. 2,3- சரி b. 1,2- சரி c. 3,4- சரி d. நான்கும் சரி
8. செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப்
பிரிக்கப்பட்டிருப்பது எது? (2013 G4) a. செழுமை + கனி
+ தீஞ்கவை b. செழும் + கனி
+ தீஞ்சுவை c. செழும் + கனி + தீம் + சுவை d. செழுமை + கனி + தீம் + சுவை |
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் |
1. மிசை- எதிர்ச்சொல் காண்க : (2019 G4) a. இசை b. விசை c. கீழ் d. நாள்
2. "முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல்
எது? (2013 G4) a. செலுத்தினான் b. நிறுத்தினான்
c. வளைத்தான் d. முரித்தான் |
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் |
1. தவறான இணையைத் தேர்வு செய்க : (2019 G4) a. குறிஞ்சி - கபிலர் b. முல்லை - ஓதலாந்தையார் c. மருதம்- ஓரம்போகியார் d. நெய்தல் – அம்மூவனார்
2. பொருந்தாதச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து,
பவளம், கிளிஞ்சல். (2018 G4) a. மாணிக்கம் b. முத்து c. பவளம் d. கிளிஞ்சல்
3. பொருந்தாத நூலை எடுத்து எழுதுக (2016 G4) a. நான்மணிக்கடிகை b. நாலடியார் c. புறநானூறு d. இனியவை நாற்பது
4. பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க (2016 G4) a. ஏலாதி b. ஆசாரக் கோவை
c. திரிகடுகம் d. சிறுபஞ்சமூலம்
5. பொருந்தாத தொடரைக் கண்டறிக (2013 G4) a. ஒறுத்தார்-பொறுத்தார் b. அஞ்சாமை - துஞ்சாமை
c. அறிவுடையார்-
அறிவிலார் d. வையார் – வைப்பர் |
6. பிழை திருத்தம் (i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச்
சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல் 7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் |
1. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் (2019
G4) a. மிகும் b. மிகாது c. சில இடங்களில்
வரும் d. சில இடங்களில்
வராது
2. ஜெராக்ஸ் (Xerox) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
(2019 G4) a. ஒளி நகல் b. ஒலி நகல் c. அசல் படம் d. மறு படம்
3. வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக
: (2019 G4) மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க. a. மாணவர்கள் உட்கார
வட்டமாகச் செய்க b. மாணவர்களை வட்டமாக
உட்காரச் செய்க c. மாணவர்களை உட்கார
வட்டமாகச் செய்க d. மாணவர்களை செய்க
வட்டமாக உட்கார
4. குழலியும் பாடத் தெரியும் - தொடரில் உள்ள பிழையை நீக்கி
சரியான தொடரை தேர்ந்தெடுக்க (2019 G4) a. குழலிக்குப்
பாடத்தெரியும் b. குழலியின் பாடத்தெரியும் c. குழலி பாடத்தெரியும் d. குழலியால் பாடத்தெரியும்
5, கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? (2018 G4) a. சால, தவ முதலிய
உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது b. வினைத்தொகையில்
வல்லினம் மிகாது c. வன்றொடர்க்
குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது d. உவமைத் தொகையில்
வல்லினம் மிகாது
6. பிழையற்ற வாக்கியம் எது? (2018 G4) a. ஓர் மாவட்டத்தில்
ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார் b. ஒரு மாவட்டத்தில்
ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார் c. ஒரு மாவட்டத்தில்
ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்கொண்டார் . d. ஓர் மாவட்டத்தில்
ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(2016 G4) Writs - வாரிசுரிமைச் சட்டம் Succession Act - உரிமைச் சட்டங்கள் Substantive Law- சான்றுச் சட்டம் Evidence Act - சட்ட ஆவணங்கள் a. 1 3 4 2 b. 4 1 2 3 c. 2 4 3 1 d. 1 2 3 4
8. Might is right - இதன் தமிழாக்கம் . (2016 G4) a. கடமையே உரிமை b. வல்லான் வகுத்ததே
வாய்க்கால் c. வலிமையே சரியான
வழி d. ஒற்றுமையே வலிமை
9. பிறமொழிச்சொல் -தமிழ்ச் சொல் (2016 G4) (a) ஐதீகம் 1. விருந்தோம்பல் (b) இருதயம் 2. சொத்து (c) ஆஸ்தி 3. உலக வழக்கு (d) உபசரித்தல் 4. நெஞ்சகம் a. 2 3 1 4 b. 3 4 2 1 c. 4 1 2 3 d. 1 2 3 4 10. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக
(2016 G4) a. சினிமா தியேட்டர்
அருகாமையில் உள்ளது b. திருநெல்வேலி
சமஸ்தானம் பெரியது c. விழாவிற்கு
முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர் d. வானூர்தி ஒரு
அறிவியல் ஆக்கம் .
11. பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக. (2014 G4) a. வயலில் மாடுகள்
மேந்தது b. வயலில் மாடுகள்
மேஞ்சது c. வயலில் மாடுகள்
மேய்ந்தன d. வயலில் மாடுகள்
மேய்ந்தது
12. "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்" இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள நடலைக்கு இணையான ஆங்கிலச்சொல்லை
எழுதுக (2013 G4) a. Affection b. Affliction c. Attraction d. Addition 13. "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" லுடையுழி என்ற சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
(2013 G4) a. An
assistant b. Supporter c. Staff d. Friends
14. பொருந்தாத இணையைக் கண்டறிக (2013 G4) a. Mishap-விபத்து b. Miserable-
துக்ககரமான c. Mislay - தவறான
சொல் d. Misdeed-கெட்டசெயல்
15. பொருத்துக: (2013 G4) (a) Fanfare 1. இணக்கமுள்ள (b) Fangle 2. வீட்டுப் புறா (c) Fantail 3. எக்காள முழக்கம் (d) Facile 4. நாகரிகம் a. 3 4 2 1 b. 4 1 3 2 c. 2 3 4 1 d. 1 4 2 3
16. பொருத்துக: (2013 G4) (a) Camphor 1. பொய்க்கதை (b) Chide 2. கலவரம் (c) Chaos 3. சலசலப்பு (d) Canard 4. கற்பூரம் a. 1 4 2 3 b. 3 1 4 2 c. 2 4 1 3 d. 4 3 2 1
17. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது? (2013 G4) a. அவன் கவிஞன்
அல்லர் b. அவன் கவிஞன்
அன்று c. அவன் கவிஞன்
அல்லன் d. அவன் அல்லன்
கவிஞன்
18. உரிய மரபுச் சொல்லை எழுதுக. (2013 G4) "மயில்" a. கரையும் b. பிளிறும் c. அலறும் d. அகவும் |
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் |
1. சரியான இணையைத் தேர்ந்தெடு (2019 G4) மரை - மறை a. மான் - வேதம்
b. தாமரை - புலன் c. வேதம் - இயல்பு d. யானை – மறைத்தல்
2. பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
(2013 G4) கழை- களை a. கரும்பு -அழகு b. மூங்கில் -
காந்தி c. வேய் - சீலை d. கழி - அகற்று
|
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல் |
1. ஏ என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் (2019 G4) a. தலைவன் b. நெருப்பு c. அரண் d. அம்பு 2. “மா”
ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் (2019 G4) a. பெரிய . b. இருள் c. வானம் d. அழகு
3. பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ் இதில் இடம்பெற்றுள்ள
கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க :(2018 G4) a. சோலை b. பாலைவனம் c. வயல் d. காடு
4. பொருளறிந்து பொருத்துக: (2013 G4) (a) ஓ 1.கோபம் (b) மா 2.சோலை (c) கா 3.நீர் தாங்கும் பலகை (d) தீ 4.திருமகள் a. 2 4 1 3 b. 1 3 4 2 c. 3 4 2 1 d. 4 1 3 2
5. பொருத்துக: (2013 G4) (a)ஊ 1. தலைவன் (b)ஐ 2. ஊன் (c)நொ 3. கடவுள் (d)தே 4. துன்புறு a. 1 4 3 2 b. 2 1 4 3 c. 4 3 2 1 d. 3 1 2 4 |
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் 11.வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம்,
வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை உருவாக்கல் 14. பெயர்ச்சொல்லின் வகையறிதல் 15. இலக்கணக் குறிப்பறிதல் |
1. பின்வரும் தொடரிலுள்ள நிகழ்கால வினைமுற்றைத் தேர்வு
செய்க? (2019 G4) a. பழுத்த பழம் b. பழுக்கும் பழம் c. பழுக்கின்றது d. பழங்கள் பழுத்தன
2. படி என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினைஎச்சத்தை உருவாக்குக?
(2019 G4) a. படித்து b. படித்தல் c. படித்த d. பாடுதல்
3. "கல்” என்னும் வேர்ச்சொல்லின் பதம் அறிக? (2019 G4) a. கற்றல் b. கற்பனை c. கண்டான் d. கல்லை
4. "இயல்பானது”
வேர்ச்சொல்லறிக (2019 G4) a. இயல் b. இயல்பு c. இயைபு d. இய
5. பொருந்தா இணையைச் சுட்டுக : (2019 G4) a. குறிஞ்சி -
யாமம் b. முல்லை - மாலை c. மருதம் - நண்பகல் d. நெய்தல் - எற்பாடு
6. செல்வச் செவிலி - இலக்கணக் குறிப்பு (2019 G4) a. உவமை b. அடுக்குத்தொடர் c. எண்ணும்மை d. உருவகம்
7. தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு
தருக (2019 G4) a. ஏவல் வினைமுற்று b. உரிச்சொல் தொடர் c. பண்புத்தொகை d. வினைத்தொகை
8. இலக்கணக் குறிப்புத் தருக : கங்கையும் சிந்துவும்
(2019 G4) a. உம்மைத்தொகை b. பெண்பால் பெயர்கள் c. எண்ணும்மை d. அன்மொழித்தொகை
9. தாழ்பூந்துறை - என்ற சொல்லுக்குரிய இலக்கண குறிப்பு
தருக (2019 G4) a. ஏவல் வினைமுற்று b. உரிச்சொல் தொடர் c. பண்புத்தொகை d. வினைத்தொகை
10. அவன் சித்திரையான் - எவ்வகை பெயர் (2019 G4) a. குணப் பெயர் b. இடப் பெயர் c. காலப் பெயர்
d. தொழில் பெயர்
11. பொருத்துக (2019 G4) வேற்றுமை - உருபு (a) நான்காம் வேற்றுமை - இன் (b) ஐந்தாம் வேற்றுமை - அது (c) ஆறாம் வேற்றுமை - கண் (d) ஏழாம் வேற்றுமை - கு a. 4 1 2 3 b. 3 2 1 4 c. 2 3 4 1 d. 1 4 3 2
12. பொருத்துக : (2018 G4) (a) என்றல் 1.முற்றும்மை (b) நுந்தை 2.குறிப்பு வினைமுற்று (c) யாவையும் 3. மரூஉ (d) நன்று 4. தொழிற்பெயர் a. 4 3 1 2 b. 3 4 2 1 c. 2 4 1 3 d. 4 3 2 1
13. நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர் என்னும் தொடரில்
ஐவர் என்பதன் இலக்கணம் யாது? (2018 G4) a. ஒன்றொழி பொதுச்
சொல் b. இனங்குறித்தல் c. தொடர்மொழி d. பொதுமொழி
14. பின்வருவனவற்றுள் எது உருவகமன்று? (2018 G4) a. மொழியமுது b. அடிமலர் c. தமிழ்த்தேன் d. கயற்கண்
15. தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள்
தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு (2018 G4) a. பண்புத்தொகை b. அன்மொழித்தொகை
c. வினைத்தொகை d. உவமைத்தொகை
16. உம்மைத்தொகையில் உம் என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து
வரும் என்பதை தேர்ந்தெடு. (2018 G4) a. முதலில் வரும் b. இடையில் வரும் c. இடையிலும் இறுதியிலும்
வரும் d. இறுதியில் வரும்.
17. ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு (2018 G4) a. மூன்றாம் வேற்றுமை b. ஐந்தாம் வேற்றுமை c. ஆறாம் வேற்றுமை d. இரண்டாம் வேற்றுமை
18. நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை? (2018 G4) a. கொண்டு, உடன் b. பொருட்டு, நிமித்தம்
c. இருந்து, நின்று d. உடைய
19. முட்டையிட்டது சேவலா, பெட்டையா? (2018 G4) a. திணைவழு b. விடைவழு c. மரபுவழு d. வினாவழு
20. வா- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் கூறு
(2016 G4) a. வந்தான் b. வந்து c. வருதல் d. வந்த 21. பெயரெச்சத்தை எடுத்து எழுது. (2016 G4) a. படித்து b. எழுதி c. வந்த d. நின்றான்
22. "எயிறு" என்னும் சொல் - சொல்லின் எவ்வகை?
(2016 G4) a. திரிசொல் b. இயற்சொல் c. வினைத்திரிசொல் d. பெயர்த் திரிசொல்
23. "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில்
"ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு (2016 G4) a. முற்றெச்சம் b. தொழிற்பெயர் c. வினையாலணையும்
பெயர் d. வினையெச்சம்
24. "உவமைத்தொகை" இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத
சொல்லை காண்க (2016 G4) a. கயல்விழி b. மலர் முகம் c. வெண்ணிலவு d. தாமரைக் கண்கள்
25. பொருத்துக: (2016 G4) (a) குமரன், தென்னை 1. இடப்பெயர் (b) காடு , மலை 2. காலப்பெயர் (c) பூ, காய் 3. பொருட்பெயர் (d) திங்கள், வாரம் 4. சினைப்பெயர் a. 4 1 3 2 b. 3 1 4 2 c. 3 4 2 1 d. 2 3 1 4
26. "கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும்
உலகு" - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை (2016 G4) a. இன்னிசை அளபெடை b. செய்யுளிசை
அளபெடை c. சொல்லிசை அளபெடை d. ஒற்றளபெடை
27. இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக. (2016
G4) a. தெரிநிலை வினைமுற்று b. எதிர்மறை பெயரெச்சம் c. குறிப்பு வினைமுற்று
d. வியங்கோள் வினைமுற்று 28. இலக்கணக் குறிப்பு அறிக. (2016 G4) (a) உரிச்சொற்றொடர் 1. சூழ்கழல் (b) வினைத் தொகை 2. தழீஇய (c) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் 3. தடக்கை (d) சொல்லிசை அளபெடை 4. கூவா a. 2 1 3 4 b. 3 1 4 2 c. 1 3 2 4 d. 4 1 2 3
29. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால்
குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி (2016 G4) a. வழுவமைதி b. வினாவழு c. காலவழு d. வழாநிலை
30. "கார்குலாம் " - எனும் சொல் - எவ்வேற்றுமைத்
தொகையைக் குறிக்கும்? (2016 G4) a. ஐந்தாம் வேற்றுமைத்
தொகை b. மூன்றாம் வேற்றுமைத்
தொகை c. ஆறாம் வேற்றுமைத்
தொகை d. நான்காம் வேற்றுமைத்
தொகை
31. வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு
தொடர்புடையது? (2014 G4) a. பண்புத்தொகை
b. வினைத் தொகை c. வேற்றுமைத்
தொகை d. உம்மைத் தொகை 32. பொருத்துக: (2014 G4) (a) வினைத் தொகை 1. நாலிரண்டு (b) உவமைத் தொகை 2. செய்தொழில் (c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள் (d) அன்மொழித் தொகை 4. மதிமுகம் a. 2 4 3 1 b. 4 2 3 1 c. 3 1 4 2 d. 2 4 1 3.
33. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க (2014 G4) a. பெறா அ b. தழிஇ c. அண்ணன் d. கொடுப்பதுஉம்
34. அவன் உழவன்- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
(2014 G4) a. தெரிநிலை வினைமுற்று b. குறிப்பு வினைமுற்று
c. பெயர்ச் சொல் d. தொழிற்பெயர்
35. பெயர்ச்சொல்லின் வகையறிதல் :நடிகன் (2014 G4) a. பொருட்பெயர் b. பண்புப்பெயர் c. தொழிற்பெயர்
d. காலப்பெயர்
36. வினைமுற்றை தேர்க (2014 G4) a. படி b. படித்த c. படித்து d. படித்தான்
37. பெறு என்ற
வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு: (2014 G4) a. பெற்றான் b. பெறுவான் c. பெறுகிறான் d. பெறுபவன்
38. முற்றியலுகரச் சொல்லை எழுதுக. (2014 G4) a. மாடு b. மூக்கு c. கதவு d. மார்பு
39. பொருத்துக: (2014 G4) (a) இலக்கணமுடையது 1.புறநகர் (b) மங்கலம் 2.கால் கழுவி வந்தான் (c) இலக்கணப் போலி 3.இறைவனடி சேர்ந்தார் (d) இடக்கரடக்கல் 4. நிலம் a. 2 3 1 4 b. 4 3 1 2 c. 1 2 3 4 d. 3 4 1 2
40. இலக்கணக் குறிப்பறிதல் : (2013 G4) பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க வினைத்தொகை a. செந்நாய் b. சூழ்கழல் c. வெண்மதி d. கண்ணோட்டம்
41. பெயர்ச்சொல்லின் வகையறிதல் : (2013 G4) ‘கரியன் - என்ற பெயர்சொல்லின் வகை அறிக. a. சினைப் பெயர் b. பொருட்பெயர் c. பண்புப் பெயர்
d. தொழிற் பெயர்
42. பெயர்ச்சொல்லின் வகை அறிக. (2013 G4) ‘நன்மை என்பது a. பொருட்பெயர் b. சினைப் பெயர் c. பண்புப் பெயர்
d. தொழிற் பெயர்
43. பெயர்ச்சொல்லின் வகையறிதல் : (2013 G4) ஆதிரையான் என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக. a. பண்புப் பெயர் b. தொழிற் பெயர் c. காலப் பெயர் d. குணப் பெயர்
44. பெயர்ச்சொல்லின் வகையறிதல் (2013 G4) சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக. a. ஊரன் b. முக்கன் c. வறியன் d. கடையன்
45. தழீஇ-இலக்கணக் குறிப்பு தருக, (2013 G4) a. செய்யுளிசை
அளபெடை b. ஈறுகெட்ட எதிர்மறை
பெயரெச்சம் c. இன்னிசையளபெடை d. சொல்லிசை அளபெடை
46. இலக்கணக்குறிப்பறிதல் (2013 G4) சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற்---- பரிவகற்று உறுவேனில்-----இலக்கணம்
தேர்ந்து எழுது a. வினைத்தொகை b. அன்மொழித்தொகை c. தொழில் பெயர் d. உரிச்சொல் தொடர்
47. மனக்குகை-இலக்கணக் குறிப்பு எழுதுக. (2013 G4) a. வினைத்தொகை b. உவமைத்தொகை c. உருவகம் d. உம்மைத்தொகை
48. வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க: (2013
G4) a. வினையெச்சம் b. உருவகம் c. உரிச்சொல் தொடர் d. வியங்கோள்வினைமுற்று
49. உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
(2013 G4) a. உலகு b. உலவு c. உளது d. உளம்
50.‘வாழ்த்துவோம்’
என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக. (2013 G4) a. வாழ் b. வாழ்த்துதல் c. வாழ்த்து d. வாழ்த்தும்
51. எடு- என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
(2013 G4) a. எடுத்த b. எடுத்தல் c. எடுத்து d. எடுத்தான்
52. வந்தான் என்னும் வினைமுற்று--------என வினையாலணையும்
பெயராய் வரும். (2013 G4) a. வருவான் b. வாரான் c. வந்தவன் d. வந்த 53. பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
(2013 G4) a. பொறுத்தான் b. பொறுத்து c. பொறுத்தல் d. பொறுத்தவர்
54. பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக்கண்டறிக
(2013 G4) a. மார்பு b. வரகு c. மடு d. மாசு
55. இலக்கணக் குறிப்பறிதல் (2013 G4) பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத்
தேர்ந்தெடுக்கவும். பண்புத்தொகை a. நெடுந்தேர் b. மலர்ச்சேவடி
c. செங்கோல் d. கருங்குரங்கு |
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல் |
1. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக. (2019
G4) a. கொன்றை, கெண்டை
, கண், கீரன், காடை b. கெண்டை, கீரன்,
கொன்றை, காடை, கண் c. கண், காடை,
கீரன், கெண்டை, கொன்றை d. கண், கீரன்,
காடை, கொன்றை, கெண்டை
2. அகர வரிசைப்படுத்துக (2019 G4) a. மிளகு, மருங்கை,
முசிறி, மூதூர், மேற்குமலை b. முசிறி, மூதூர்,
மிளகு, மேற்குமலை, மருங்கை c. மருங்கை, மிளகு,
முசிறி, மூதூர், மேற்குமலை d. மருங்கை , முசிறி,
மூதூர், மிளகு, மேற்குமலை
3. அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க (2016 G4) a. நைதல் நாடு
நொச்சி நுங்கு b. நுங்கு நொச்சி
நாடு நைதல் c. நொச்சி நுங்கு
நைதல் நாடு d. நாடு நுங்கு
நைதல் நொச்சி 4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல். (2013 G4) a. தரங்கம், தையல்,
திட்பம், தோடு b. தையல், தோடு,
திட்பம், தரங்கம் c. தரங்கம், திட்பம்,
தையல், தோடு d. தரங்கம், தையல்,
தோடு, திட்பம்
5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல். (2013 G4) a. வீண்,வீழ்ச்சி,
வீடு,வீதி b. வீடு,வீண்,வீதி,
வீழ்ச்சி c. வீழ்ச்சி, வீண்,
வீதி, வீடு d. வீழ்ச்சி, வீடு,
வீதி, வீண் |
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் |
1. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல் (2019 G4) a. மாலை மீது மலையின்
மழை பெய்தது நேற்று b. மலையின் மாலை
மீது நேற்று பெய்தது மழை c. நேற்று மாலை
மலையின் மீது மழை பெய்தது d. பெய்தது மழை
மலையின் மீது நேற்றுமாலை |
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் |
1. வினாவிற்குரிய விடை எழுதுக: (2013 G4) காமராசரின் பிறந்தநாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்? a. கல்விப் பணி
ஆற்றிய நாள் b. கல்வி வளர்ச்சி
நாள் c. தொழில் முன்னேற்ற
நாள் d. தேசிய கல்வி
நாள்
2. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. (2013 G4) ‘அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்
? a. எதனால் ஐவரானார்கள்?
b. ஐவர் யார்? c. ஐந்தாவதாக வந்தவன்
யார்? d. யாரிடம் கூறினான்?
3. வினாவிற்குரிய விடை எழுதுக: (2013 G4) தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்? a. பரிதிமாற் கலைஞர் b. மு. வரதராஜன் c. தேவநேயப் பாவாணர்
d. புதுமைப்பித்தன் |
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் 18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக்
கண்டெழுதுதல் |
1. தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க (2019 G4) a. அப்பூதி அடிகள்
நான்மறை கற்கவில்லை. b. அப்பூதி அடிகள்
நான்மறை கற்றார். c. அப்பூதி அடிகள்
நான்மறை கற்றாரா? d. அப்பூதி அடிகள்
நான்மறை கற்பித்தார்.
2. கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் - இத்தொடருக்குரிய சரியான
எதிர்ச்சொல்லைத் தருக. (2019 G4) a. கலைச்செல்வி
கட்டுரை எழுதிலள் b. கலைச்செல்வி
கட்டுரை எழுத விரும்பவில்லை c. கலைச்செல்வி
கட்டுரை எழுதாமல் இராள் d. கலைச்செல்வி
கட்டுரை வாசிக்கவில்லை
3. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக. (2019 G4) a. எழிலரசி சிலப்பதிகாரம்
கற்றாள் b. எழிலரசியால்
சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது c. எழிலரசி சிலப்பதிகாரம்
கல்லாள் d. எழிலரசி சிலப்பதிகாரம்
கற்பித்தாள்
4. தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம்
கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க. (2019 G4) a. அயற்கூற்று
வாக்கியம் b. நேர்க்கூற்று
வாக்கியம் c. கலவை வாக்கியம் d. எதிர்மறை வாக்கியம்
5. பாத்திமா திருக்குறள் கற்பித்தாள் (2019 G4) a. தன்வினை வாக்கியம் b. செய்வினை வாக்கியம் c. பிறவினை வாக்கியம் d. செயப்பாட்டுவினை
வாக்கியம்
6. எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் எவ்வகைத்
தொடர் என்று தேர்ந்தெடு (2018 G4) a. செயப்பாட்டு
வினைத் தொடர் b. கட்டளைத் தொடர் c. அயற்கூற்றுத்
தொடர் d. செய்வினைத்
தொடர்
7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன (2018 G4) a. மேற்கோள்குறிகள் வராது b. தன்மை, முன்னிலைப்
பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது c. அது, அவை -
அங்கே என மாறும் d. காலப் பெயர்கள்
அந்நாள், மறுநாள் என மாறும்
8. துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை
தொடரை தேர்ந்தெடு (2016 G4) a. கலையரசிதுணி
தைத்தாள் b. கலையரசி தைத்தாள்
துணி c. கலையரசி என்னதைத்தாள் d. கலையரசி துணியைத்
தைத்தாள்
9. பொன்னியிடம் தேன்மொழிதான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக்
கூறினாள்- எவ்வகைத் தொடர்? (2014 G4) a. நேர்க்கூற்று b. அயற்கூற்று
c. எதிர்மறைக்
கூற்று d. கலவைத்தொடர்
10. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக (2013 G4) a. இலக்கியா புத்தாடை
அணிவித்தாள் b. இலக்கியா புத்தாடை
அணிந்தாள் c. புத்தாடை இலக்கியாவால்
அணிவிக்கப்பட்டது d. இலக்கியா புத்தாடை
அணியாள்
11. தன்வினையைத் தேர்ந்து எழுதுக. (2013 G4) a. அப்பூதி அடிகள்
நான்மறை கற்கவில்லை b. அப்பூதி அடிகள்
நான்மறை கற்பித்தார் c. அப்பூதி அடிகள்
நான்மறை கற்றார் d. அப்பூதி அடிகள்
நான்மறை கற்றாரா?
12. பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள்-இவ்வாக்கியம்
எவ்வகை வினை சார்ந்தது? (2013 G4) a. பிறவினை b. தன்வினை c. கலவை d. செய்யப்பாட்டு
வினை |
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் |
1. வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.
(2019 G4) a. தென்னை போன்ற
தோள் b. பளிங்கு போன்ற
தோள் c. மூங்கில் போன்ற
தோள் d. வாழை போன்ற
தோள்
2. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல்" இக்குறட்பாவில் உள்ள உவமையின் பொருளை தேர்ந்தெடு.
(2018 G4) a. நிலம் - வாழ்க்கை b. ஊன்றுகோல்
- பெரியோர் சொல் c. ஊன்றுகோல்
- நிலம் d. ஒழுக்கம் –
வாய்ச்சொல்
3. அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது (2016 G4) a. மலையைப் போன்றது b. கடலைப் போன்றது c. வளர்பிறையைப்
போன்றது d. தேய்பிறையைப்
போன்றது
4. பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக. உலக நிலைகளை அறியாதிருத்தல் (2013 G4) a. கீரியும் பாம்பும்
போல b. இலவு காத்த
கிளி போல c. கிணற்றுத் தவளை
போல d. அனலிடைப்பட்ட
புழு போல
5. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. "கொக்கொக்க கூம்பும் பருவத்து" (2013 G4) a. காத்திருத்தல்
b. வெறுத்திருத்தல் c. அறியாதிருத்தல் d. மறந்திருத்தல்
6. பட்டியல் I ல் உள்ள சொற்றொடரை பட்டியல் II ல் உள்ள தொடர்களுடன்
பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு. (2013 G4) (a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை (b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை (c) அறிவுடையார் நட்பு 3. நலில் தோறும் (d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை a. 4 3 2 1 b. 3 4 2 1 c. 4 3 l 2 d. 1 2 3 4 |
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல் |
1. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று
விடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும். (2019 G4) a. பொழிப்பு எதுகை b. கூழை எதுகை c. மேற்கதுவாய்
எதுகை d. கீழ்க்கதுவாய்
எதுகை
2. அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும் - இந்த அடியில்
அமைந்துள்ள எதுகையைத் தேர்க. (2019 G4) a. கூழை எதுகை b. மேற்கதுவாய்
எதுகை c. கீழ்க்கதுவாய்
எதுகை d. பொழிப்பு எதுகை
3. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள
சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு (2018 G4) a. கீழ்க்கதுவாய்
மோனை b. கூழை மோனை c. ஒருஉ மோனை d. மேற்கதுவாய்
மோனை
4. “விண்இன்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது? (2018 G4) a. மேற்கதுவாய்
மோனை . b. கீழ்க்கதுவாய்
மோனை c. கூழை மோனை d. ஒரூஉ மோனை
5. அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது? (2016 G4) a. எதுகை மட்டும்
வந்துள்ளது b. எதுகையும்,
மோனையும் வந்துள்ளது c. எதுகை, மோனை,
அந்தாதி வந்துள்ளன d. மோனை மட்டும்
வந்துள்ளது .
6. "தித்திக்குந் தெள்ளமுதாய்த்தெள்ளமுதின்" கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது? (2013 G4) a. எதுகை மட்டும்
வந்துள்ளது b. மோனை மட்டும்
வந்துள்ளது c. எதுகை, மோனை,
இயைபு வந்துள்ளன d. எதுகையும்,
மோனையும் வந்துள்ளன
7. மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப்
போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக. - (2013
G4) a. அடிமோனை b. அடி எதுகை c. அடி இயைபு d. சீர் மோனை |
Answer Key = www.minnalvegakanitham.in
minnal vega kanitham