எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. ம.பொ.சிவஞானம் = 10th Lesson 7.1 சிற்றகல் ஒளி
2. செய்குதம்பி
பாவலர் = 10th Lesson 5.2 நீதிவெண்பா
3. நிகழ்கலை (நாட்டுப்புறக்
கலைகள்) தொடர்பான செய்திகள். = 10th Lesson 6.1
4. பேரா.தனிநாயகம்
அடிகள் = 9th [Term 3] 3.1. விரிவாகும் ஆளுமை
5. இராவண காவியம் = 9th [Term 1] 3.2 இராவண காவியம்
6. காயிதேமில்லத் = 7th [Term 3] Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்
7. வேலு நாச்சியார்
= 6th [Term 3] Lesson 1.3 வேலுநாச்சியார்
8. நூலகம் பற்றிய
செய்திகள்.
ம.பொ.சிவஞானம்
1. ம.பொ.சி-க்கு பெற்றோர் இட்டபெயர்? ஞானப்பிரகாசம்
2. ம.பொ.சிவஞானத்தின் சிறப்பு பெயர்? சிலம்பு செல்வர்
3. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின்
நூல்? வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு
4. ம.பொ.சி. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு?
1966
5.
சிலம்புச்
செல்வர் மா.பொ.சிவஞானம் ‘புத்தகப்பித்தன்’
6. “தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கியவர்? ம.பொ.சி
நிகழ்கலை
1. “நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம்
என்ற சொல் சொல் இடம் பெறும் நூல்? புறநானூறு
2. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில்
‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது? பதினொரு
3. “தகக தகதகக தந்தத்த தந்தக்க என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”– என்ற தப்பாட்ட
இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்? அருணகிரிநாதர், திருப்புகழ்
4. குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம்
பெறுகிறது? தொல்காப்பியம்
5. தமிழ் இலக்கியங்களில் பாவைக் குறித்த செய்திகள்
காணப்படும் கால எல்லை? சங்ககாலம், பதினெட்டாம்
நூற்றாண்டு
6. பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு
வந்ததாகக் கூறப்படுகிறது? மராட்டியர்
7. மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்? திருக்குறள்
8. தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவன?
திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள்
9. இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி
என்றும் அழைக்கப்படுவது? பொய்க்கால் குதிரையாட்டம்
10. தெருக்கூத்தை தமிழக்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்?
ந.முத்துசாமி
காயிதேமில்லத்
1.
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த
காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்?
அறிஞர் அண்ணா
2.
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது
அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்? தந்தை பெரியார்
3.
காயிதே மில்லத் ஜமால் முகமது கல்லூரியை
உருவாக்கிய இடம்? திருச்சி
4.
கல்வியை
விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்? காயிதே மில்லத்
5.
ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில்
காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால்,
அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்? காயிதே மில்லத்
6.
மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட
மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான
மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்? காயிதே மில்லத்
7.
காயிதே மில்லத் என்னும் அரபு சொல்லுக்கு
_________ என்று பொருள்? சமுதாய வழிகாட்டி
8. கண்ணியமிகு
என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர்? காயிதே மில்லத்
செய்குதம்பி
பாவலர்
1. சீறாப்புறாணத்திற்கு
உரை எழுதியவர்? செய்குதம்பிப் பாவலர்
2. “சதாவதானி”
என்று பாராட்டு பெற்றவர்? செய்குதம்பிப் பாவலர்
3. “தோண்டும் அளவு ஊறும் நீர் போலக் கற்கும் அளவு
அறிவு சுரக்கும்“ என்று கூறும் நூல்? திருக்குறள்
இராவண காவியம்
இராவண காவியம் பற்றி பேரறிஞர் அண்ணா கூறுவதென்ன?
”இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின்
அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்”
தனிநாயகம்
அடிகள்
தனிநாயகம் அடிகள் எவற்றை உருவாக்க காரணமாய் இருந்தார்? தனிநாயகம் அடிகள் அகில உலகத் தமிழாய்வு மன்றம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாக்க காரணமாய் இருந்தார்.
minnal vega kanitham