எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
வினாக்கள் |
பிரித்து எழுதுக |
139 |
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை
அறிதல் |
81 |
எதிர்ச்சொல் தருக |
18 |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் |
153 |
நூல்கள் – நூல் ஆசிரியர்கள் |
39 |
பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள் |
153 |
நூல் வெளி |
21 |
New Syllabus | Group 4 (VAO) 2022 |
♦
இன்பத்தமிழ்க் கல்வி (பாரதிதாசன்)
♦
எங்கள் தமிழ் (நாமக்கல் கவிஞர்)
♦
ஒன்றல்ல இரண்டல்ல (உடுமலை நாராயண கவி)
♦
காடு (கவிஞர் சுரதா)
♦
மலைப்பொழிவு (கண்ணதாசான்)
♦
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்
♦
கப்பலோட்டிய தமிழர் (வ.உ.சி) (இரா.பி. சேது)
♦
பேசும் ஓவியங்கள் (ஓவியம்)
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்
♦
கலங்கரை விளக்கம் (பெரும்பாணாற்றும்படை)
♦
கவின்மிகு கப்பல்
♦
தமிழரின் கப்பற்கலை
♦
திருக்குறள்
♦
புலி தங்கிய குகை (சேர மன்னன்) (புறநானூறு)
♦
அழியாச் செல்வம் (நாலடியார்)
♦
விருந்தோம்பல் (பழமொழி நானூறு)
பாடம் 1.1 – எங்கள் தமிழ்
நூல் வெளி |
·
இப்பாடலின் ஆசிரியரை (வெ. இராமலிங்கனார்) நாமக்கல் கவிஞர் என்றும் அழைப்பர். ·
இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். ·
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால்
இவர் காந்தியக்கவிஞர் என்றும் அழைக்கப்படுகிறார். ·
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர். ·
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு
நூல்களை எழுதியுள்ளார். ·
நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலிலிருந்து இப்பாடல் எடுத்துத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 1.2 - ஒன்றல்ல இரண்டல்ல
நூல் வெளி |
·
பகுத்தறிவுக்கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி. ·
இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர். ·
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். ·
நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர். |
பாடம் 2.1 காடு
நூல் வெளி |
·
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்
. பாரதிதாசனின் இயற்பெயர் ‘சுப்புரத்தினம்’. எனவே தம் பெயரைச் சுப்புரத்தினதாசன்
என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா என்பதாகும். உவமைகளைப் பயன்படுத்திக்
கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக் கவிஞர் என்றும் அழைப்பர். அமுதும்
தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். |
பாடம் 2.2 அப்படியே நிற்கட்டும்
அந்த மரம்
நூல் வெளி |
·
ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள்
பெற்றவர். ·
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர். ·
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின்
பரிசு பெற்றவர். ·
சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து கொங்கு தேர்வாழ்க்கை என்னும் தலைப்பில்
நூலாக்கியுள்ளார். ·
இவரது அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்னும் நூலில் உள்ள கவிதை இங்குத்
தரப்பட்டுள்ளது. |
பாடம் 2.6 திருக்குறள்
நூல் வெளி |
·
தமிழ்நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்
ஆகும். ·
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பகுப்புகளைக்
கொண்டது. ·
இதில் அறம்- 38, பொருள்-70, இன்பம்-25 என மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன. ·
இதற்கு முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன. |
பாடம் 3.1 புலி தங்கிய குகை
நூல் வெளி |
·
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர். ·
சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர். ·
கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின்
வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். ·
இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. ·
புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ·
ஒன்று. இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு,
வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது. ·
இந்நூலில் 86-ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 3.2 பாஞ்சை வளம்
நூல் வெளி |
·
கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன.
அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நம் பாடப்பகுதி நா. வானமாமலை தொகுத்து வெளியிட்டுள்ள
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. |
பாடம் 4.1 கலங்கரை விளக்கம்
நூல் வெளி |
·
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவர் கடியலூர் என்ற ஊரில்
வாழ்ந்தவர். இவர் பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை
இயற்றியுள்ளார். ·
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூலின்
346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளன. ·
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த
வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம்
ஆகும். |
பாடம் 4.2 கவின்மிகு கப்பல்
நூல் வெளி |
·
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். கலித்தொகையின் மருதத்திணையில்
உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே. மருதத்திணை பாடுவதில் வல்லவர்
என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார். ·
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக்
கொண்டது. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத்
தரப்பட்டுள்ளது. |
பாடம் 4.4 ஆழ்கடலின் அடியில்
நூல் வெளி |
·
அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். ·
இவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். ·
அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித்
தமது புதினங்களில் எழுதியவர். ·
எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி, பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட
பல புதினங்களைப் படைத்துள்ளார். ·
அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. |
பாடம் 5.1 இன்பத்தமிழ்க் கல்வி
நூல் வெளி |
·
கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதிதாசன். ·
இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். ·
பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இசையமுது, இருண்ட வீடு, குடும்ப விளக்கு,
கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ·
இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது
அளிக்கப்பட்டது. ·
பாரதிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பிலிருந்து தமிழ்ப்பேறு என்னும் தலைப்பில்
உள்ள பாடல் இங்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. |
பாடம் 5.2 அழியாச்செல்வம்
நூல் வெளி |
·
நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். ·
இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். ·
இது நானூறு வெண்பாக்களால் ஆனது. ·
நாலடி நானூறு என்றும், வேளாண்வேதம் என்றும் அழைப்பர். ·
திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. ·
இந்நூல் திருக்குறளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதை நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
என்னும் தொடர் மூலம் அறியலாம். |
பாடம் 5.3 வாழ்விக்கும் கல்வி
நூல் வெளி |
·
திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப்
பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. ·
நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். ·
வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட
பல நூல்களை எழுதியுள்ளார். ·
உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என்னும் இவரது நூல் பெரும் புகழ் பெற்றது. ·
இக்கட்டுரை சிந்தனைக் களஞ்சியம் என்னும் இவரது நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 5.4 பள்ளி மறுதிறப்பு
நூல் வெளி |
·
பள்ளி மறுதிறப்பு கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். ·
இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற
கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்; ·
கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். ·
பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட
பல நூல்களை எழுதியுள்ளார். |
பாடம் 7.1 விருந்தோம்பல்
நூல் வெளி |
·
பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார். ·
இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். ·
பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்
என அறியமுடிகிறது. ·
பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ·
இது நானூறு பாடல்களைக் கொண்டது. ·
ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி
நானூறு என்னும் பெயர்பெற்றது. |
பாடம் 7.2 வயலும் வாழ்வும்
நூல் வெளி |
·
நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப்
பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும்
வழங்குவர். ·
பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை அருவி என்னும் நூலில்
கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். |
பாடம் 7.4 திருநெல்வேலிச் சீமையும்
கவிகளும்
நூல் வெளி |
·
டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்; ·
தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்; ·
இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர். ·
இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள்
நடத்தி வந்தார். ·
இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர்,
குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். ·
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரை இவரது இதய ஒலி என்னும் நூலில் இருந்து
தரப்பட்டுள்ளது. |
பாடம் 8.1 புதுமை விளக்கு
நூல் வெளி |
|
·
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். ·
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். ·
அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
|
பாடம் 8.2 அறம் என்னும் கதிர்
நூல் வெளி |
·
முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர். ·
இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. ·
இவர் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது. ·
அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர் பெற்றது. ·
இந்நூலின் பதினைந்தாம் பாடல் நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 8.4 உண்மை ஒளி
நூல் வெளி |
·
ஜென் என்னும் ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு தியானம் செய் என்பது பொருள். புத்த
மதத்தைச் சார்ந்த துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள். இவர்கள் பெரும்பாலும்
சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமது சிந்தனைகளைச் சிறு
நிகழ்ச்சிகள், எளிய கதைகள் ஆகியவற்றின் மூலம் விளக்கினர். ·
ஜென் கதைகளுள் ஒன்று இங்குப் படக்கதையாகத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 9.1 மலைப்பொழிவு
நூல் வெளி |
·
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. ·
இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார். ·
காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற
இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ·
ஏராளமான திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். ·
இவர் தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்துள்ளார். ·
இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசுகாவியம்
ஆகும். ·
இந்நூலில் உள்ள மலைப்பொழிவு என்னும் பகுதியிலிருந்து சில பாடல்கள் இங்குத்
தரப்பட்டுள்ளன. |
பாடம் 9.2 தன்னை அறிதல்
நூல் வெளி |
·
சே. பிருந்தா புகழ்பெற்ற பெண்கவிஞர்களுள் ஒருவர். ·
மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை ஆகிய கவிதை
நூல்களை எழுதியுள்ளார். ·
இக்கவிதை மகளுக்குச் சொன்ன கதை என்னும் நூலிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது. |
பாடம் 9.4 பயணம்
நூல் வெளி |
·
பாவண்ணன் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்களிலும்
எழுதி வருகிறார். ·
கன்னட மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ·
வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள், கடலோர வீடு, பாய்மரக்கப்பல்,
மீசைக்கார பூனை, பிரயாணம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ·
பிரயாணம் என்னும் நூலில் உள்ள பயணம் என்னும் சிறுகதை இங்குத் தரப்பட்டுள்ளது. |
மிக்க நன்றி அண்ணா
பதிலளிநீக்குminnal vega kanitham