Type Here to Get Search Results !

குரூப்-2A பொதுத்தமிழ் 20 to 40 கேள்வி உறுதி Last Minute Revision

1



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






---------------

1. மணிமேகலை ………………. நகரைச் சேர்ந்தவள்? பூம்புகார்

2. கோவலன் மாதவியின் மகள் பெயர்? மணிமேகலை

3. மணிமேகலையின் வேறு பெயர்? பசிப்பிணி போக்கிய பாவை

4. “வைகாசி முழுநிலவு நாள்” தோன்றுவது? அமுதசுரபி பாத்திரம்

5. “கோமுகி” என்பதன் பொருள்? பசுவின் முகம்

6. மணிமேகலை காப்பியத்தின் படி ________ சிறந்த அறமாகும்? உணவு கொடுப்பது

7. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவாேம்” என்றார்? பாரதியார்

8. வள்ளலார் - பசிப்பிணி போக்கியவர்

9. ஆசியஜோதி ஆங்கில மொழியல் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றை கூறுகிறது

10. தேசிய விநாயகனார் ___________ என்னும் பட்டம் பெற்றவர்? கவிமணி

11. சத்திய தருமச்சாலை என்னும் அமைப்பைத் தொடங்கியவர் ______? வள்ளலார்

12.“சிலப்பதிகாரம்” என்னும் காப்பியத்தை இயற்றியவர்? இளங்கோவடிகள்

13. இளங்கோவடிகள் ___________ சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது? சேர மன்னர் மரபைச்

14. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர்? பாரதியார்

15. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்? தொல்காப்பியம்

16. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று பாடியவர்? பாரதியார்

17. தமிழ்நாடு – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்? சிலப்பதிகாரம்

18. தமிழன் – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்? அப்பர் தேவாரம்

19. உழவர் – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்? நற்றிணை

20. பாம்பு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்? குறுந்தொகை

21. அரசு – என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்? திருக்குறள்

22. தமிழ் மொழி பெரும்பாலும் _________ எழுத்துகளாகவே அமைந்துள்ளன?  வலஞ்சுழி

23. உயர்திணை எதிர்ச்சொல் ___________ என அமைய வேண்டும்? தாழ்திணை

24. தாழ்திணை என்று கூறாமல் ___________ என அழைக்கிறோம்? அஃறிணை

25. தமிழுக்கு __________  என்ற சிறப்பு பெயரும் உண்டு? முத்தமிழ்

26. ___________ , _________ ஆகிய இரண்டும் சங்க நூல்கள் எனப்படும்?  பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

27. தொல்காப்பியர் தன் நூலில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்து இவ்வுலகம் என்று கூறுகிறார்.

28. திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவை சுருக்க முடியாது என்பதை ஒளவையார் தனது பாடலில் கூறியுள்ளார்.

29. கடல் நீர் ஆவியாகி மேகமாவும், பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.  இதனை முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது, திருப்பாவை போன்ற  இலங்கியங்களில் காண முடிகிறது.

30. இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவம்

i. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைப் பதிற்றுப்பத்து நூலில் கூறுகிறது.

ii. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தியை நற்றிணை நூல் கூறுகிறது

31. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம் பெற்றுள்ளது.

32. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர்பு உடையது? பாண்டிய

33.  இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்? பொதிகை

34. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது? தாமிரபரணி

35. “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என அழைக்கப்படும் நகர்? பாளையங் கோட்டை

36. முற்காலத்தில் “வேணுவனம்” (மூங்கில்காடு) என அழைக்கப்படும் இடம்? திருநெல்வேலி

37. முற்காலத்தில் “தன்பொருநை நதி” என ……………………. அழைத்தனர்? தாமிரபரணி

38. ……………. உற்பத்தியில் தமிழகத்தில் திருநெல்வேலி முதலிடம் வகிக்கின்றது? நெல்லிக்காய்

39. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் ……………. என்னும் துறைமுகம் இருந்தது? கொற்கை

40. வணிகம் நடைபெறும் பகுதியை ………………… என வழங்குதல் மரபு? பேட்டை

41. மீனாட்சி அம்மையார் பெயரில் அமைந்த ஊர் _______________ என வழங்கப்பட்டது? மீனாட்சிபுரம்

42. “நம்பியாரூரர், தம்பிரான் தோழர்” என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்? சுந்தரர்

43. தேவாரத்தைத் தொகுத்தவர்? நம்பியாண்டார் நம்பி

44. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர்? சுந்தரர்

45. திருக்கேதாரம் எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்? சுந்தரர்

46. தேவாரத்தை பாடியவர்கள் யார்? திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்

47. ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல்? தொல்காப்பியம்

48. சேரர்களின் தலைநகரம்? வஞ்சி

49. “ஆன்பொருநை” என்று அழைக்கப்படும் ஆறு? அமராவதி

50. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்?

கோயம்புத்தூர்

51.  ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்? சேலம்

52. “சுங்குடிச் சேலை”களுக்குப் புகழ்பெற்ற ஊர்? சின்னாளப்பட்டி (திண்டுக்கல்)

54. சேரர்களின் நாடு _______ எனப்பட்டது? குடநாடு

55. பின்னலாடை நகரமாக ______ விளங்குகிறது? திருப்பூர்

56. தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர்? திண்டுக்கல்.

57. மூவேந்தர்களில் பழமையானவர்கள்? சேரர்

58. சேரர்களின் ‘கொடி’? வில்

59. சேரர்களின் ‘பூ’? பனம்பூ

60. “கொங்குமண்டலச் சதகம்” என்னும் நூலை இயற்றியவர்? கார்மேகக் கவிஞர்

61. சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாட்டுப் பகுதிகள் ஆகும்

62. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்? பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை

63. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்? மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி

64. தொல்காப்பியம் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது.

65. வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

66. சேரநாட்டின் துறைமுகப் பட்டினங்கள் யாவை? தொண்டி, முசிறி, காந்தளூர்

67. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா? நேதாஜி ஆயத்த ஆடைப் பூங்கா (திருப்பூர்)

68. கடற்போர் வெற்றி கண்ட சேரன்? செங்குட்டுவன்

69. ………….. என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கபட்டு வருகிறது? கோவன்புத்தூர்

70. தமிழகத்திலேயே  மஞ்சள் சந்தை இடம் பெறும் ஒரே ஊர்? ஈரோடு

71. அயோத்திதாசர் …………… சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்? தென்னிந்திய

72. அயோத்திதாசர் நடத்திய இதழ்? ஒருபைசாத் தமிழன்

73. 1907-ம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசா தமிழன்” (தமிழன்) என்னும் வார இதழைக் காலணா விலையில் தொடங்கினார்.

74.  அயோத்திதாசரின் இயற்பெயர்? காத்தவராயன்

75. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் எவை? போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்

76. அயோத்திதாசர் எழுதிய நூல்கள் யாவை? புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா

77. அயோத்திதாசர் தேர்ச்சி பெற்ற மொழிகள் யாவை? தமிழ் மொழியுடன் வடமொழி, பாலி, ஆங்கில மொழி

78. திருவள்ளுவர், ஒளவையார் ஆகியோரின் படைப்புக்குப் பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்-அயோத்திதாசர்

79. “தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

80. பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

81. ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

82. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

83. ‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்? குமரிலபட்டர்

84. பணத்தாள்களில தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள்? மொரிசியஸ், இலங்கை

85. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.

86. இந்திய மொழிக்குடும்ப வகைகள் 4

87. ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்ட அறிஞர்? வில்லியம் ஜோன்ஸ்

88. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்? கால்டுவெஸ்

89. திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்

90. 18-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வட மொழியே மூலம் என்றனர்.

91. மால்தோ, தோடா, கொண்டி முதலான மொழிகளை ஆய்ந்தவர்? ஹோக்கன்

92. தெலுங்கு மொழி நடு திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

93. வட திராவிட மொழிக்கு பொருந்தாத மொழியைக் கண்டறிந்து எழுதுக? இருளா

94. திராவிட மொழிகளுள் ………………… தமிழ்? மூத்த மொழி

95. தழிழ் மொழியில் பழமையான இலக்கண நூல்? தொல்காப்பியம்

96. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல்? லீலாதிலகம்

97. குவி என்றழைக்கப்படும் நடுத்திராவிட மொழி? கூவி

98. தமிழ் மொழி, திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது.

99. பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் எவை? மொரிசியஸ், இலங்கை

100. அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள் யாவை? எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா

101. தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை எவை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

102. தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள் எவை? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி

103. வட திராவிட மொழிகள் யாவை? குரூக், மால்தோ, பிராகுய் (பிராகுயி)

104. திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள் யார்?

ஸ்டென்கனோ, கே.வி.சுப்பையா, எல்.வி.இராமசுவாமி, பரோ, எமினோ, கமில், சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

105. ஊர்களையும் அங்கு புகழ் பெற்ற சந்தைகளும் பற்றி கூறுக.

மணப்பாறை – மாட்டுச் சந்தை

அய்யலூர் – ஆட்டுச் சந்தை

ஒட்டன்சத்திரம் – காய்கறிச் சந்தை

நாகர்கோவில் தோவாளை – பூச்சந்தை

ஈரோடு – ஜவுளிச் சந்தை

கடலூர் அருகிலுள்ள காராமணி குப்பம் – கருவாட்டுச் சந்தை

நாகப்பட்டினம் – மீன் சந்தை

106. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று? மாமல்லபுரம்

107. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை? தீர்த்தங்கரர் உருவங்கள்

108. தொடக்க காலச் சிற்பகலைக்குச் சான்றினைக் கூறும் நூல் எது? தொல்காப்பியம்

109. கண்ணகிக்குச் சிலை வடித்த் செய்தி இடம் பெறும் நூல் எது-சிலப்பதிகாரம்

110. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை  (கதைச் சிற்பங்கள்) இருந்த செய்தியைக் கூறும் நூல் எது? மணிமேகலை

111. சிற்ப தொழிலுக்குரிய உறுப்புகளைப் பற்றிக் கூறும் நூலகள்? திவாகரநிகண்டு, மணிமேகலை

112. பல்லவர்கள் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்? மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை

113. பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்? திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்

114. நாயக்கயர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள்? மதுரை மீனாட்சி அம்மன் கோவில், இராமேசுவரம் பெருங்கோவில்

115. சிற்பக்கலை பற்றிய செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயககம் வெளியிட்டுள்ள நூல்? சிற்பச்செந்நூல்

116. தமிழக அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகின்ற இடம்? மாமல்லபுரம்

117. உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்ள் அமையாத இடம்? மாமல்லபுரம்

118. அரசு கவின்கலைக் கல்லூரிகள் உள்ள இடங்கள்? சென்னை, கும்பகோணம்

119. பட்டிமண்டபம் பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியங்கள் யாவை? சிலப்பதிகாரம், திருவாசகம், மணிமேகலை, கம்பராமாயணம்

120. எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன? 1914ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன

121. அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள்

கண்டுபிடிக்கப்பட்டன, அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

122. கீழடி அகழாய்வு  2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன.

123.  “கோபல்லபுரத்து மக்கள்” என்னும் கதையின் ஆசிரியர்? இந்திரா பார்த்தசாரதி

124. கறங்கு இசை விழாவின் உறந்தை குறிப்பிடும் நூல்? அகநானூறு

125. இடைசெவல் மக்களின் வாழ்வியல் காட்சிகளுடன் கற்பனையும் புகுத்தி எழுதப்பட்டுள்ள நூல்? கோபல்லபுரத்து மக்கள்

126. கோபல்லபுரத்து மக்கள் என்னும் கதை ‘சாகித்திய அகாதெமி’ பரிசினைப் பெற்ற ஆண்டு? 1991

127. “எழுத்துலகில் கி.ரா.” என்றழைக்கப்படுபவர்? கி. ராஜநாராயணன்

128.  “கரிசல் வட்டாரச் சொல்லகராதி” ஒன்றை உருவாக்கியவர்? கி. ராஜநாராயணன்

129. வட்டார மரபு வாய்மொழிப் புனைக் கதைகளை (கரிசல்) தொடங்கியவர்? கி. ராஜநாராயணன்

130. கோவில்பட்டியைச் சுற்றிய வட்டாரப் பகுதிகளில் தோன்றிய இலக்கிய வடிவம்? கரிசல் இலக்கியம்

131. கி.ராஜநாராயணனுக்கு முன் எழுதத் தொடங்கிய கரிசல் மண்ணின் படைப்பாளி? கு.அழகிரிசாமி

132. கரிசல் இலக்கியப் பரம்பரைக்குத் தொடர்பில்லாதவரைக் கண்டறி? ந.பிச்சமூர்த்தி

133. திருச்சி மாவட்டம் உறையூர் பற்றி அகநானூறு வரிகள் பற்றி எழுதுக? “கறங்கு இசை விழவின் உறந்தை…..”

134. சாகித்திய அகாதெமி விருது ஜெயகாந்தனின் புதினம்? சிலநேரங்களில் சில மனிதர்கள்

135. பிரெஞ்சு மொழியில் வந்த ” காந்தி வாழ்க்கை வரலாற்றின்” தமிழாக்க நூல்? வாழ்விக்க வந்த காந்தி

136. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு? ஒரு கதாசிரியரின் கதை

137. “தர்க்கத்திற்கு அப்பால்” சிறுகதை அமைந்த தொகுப்பு? யுகசந்தி

138. தன்னுடைய படைப்புகளுக்குத் தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையர்? ஜெயகாந்தன்

139. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

140. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்? இமயத்துக்கு அப்பால்

141. சமகாலக் கருத்துகளையும், நிகழ்வுகளையும், சமகால மொழியல் சமகால உணர்வில் தந்தவர்? ஜெயகாந்தன்

142. உன்னைப்போல் ஒருவன் – திரைப்படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது? குடியரசுத்தலைவர் விருது

143. “சிறுகதை மன்னன்” என்று சிறப்பிக்கக்கூடியவர்? ஜெயகாந்தன்

144.  “படிக்காதமேதை” என்று கா.செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளார்? ஜெயகாந்தன்

145. ஜெயகாந்தன் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு? 1972

146. “தாகங்கொண்ட மீனொன்று” என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்? என்.

சத்தியமூர்த்தி

147. “எங்கள் தந்தையர் நாடெ ன்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது? தந்தைவழிச் சமூகமுறை

148. “குடும்பம்” என்னும் சொல், முதன்முதலில் இடம் பெற்ற நூல்? திருக்குறள்

149. தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்? இல், மனை

150. “மனையுரை மகளிர்க்கு ஆடவரே உயிரே” என்னும் பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல்? குறுந்தொகை

151.  “சிலம்புகழி நோன்பு” செய்வதற்கு உரியவர்? தலைவனின் தாய்

152. “இலக்கிய மானிடவியல்” என்னும் நூலை இயற்றியவர்? பக்தவச்சல பாரதி

153. சங்க பாடல்களில் “மனை” எனும்” சொல் குறிப்பது? வாழ்விடம்

154. “தமிழ்த்தாத்தா” என அழைக்கப்பட்டவர்? உ. வே. சாமிநாதர்

155. சென்னையில் உ.வே.சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம்? திருவான்மியூர்

156. உ.வே.சா. சென்னை பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு? 1932

157. நற்றிணை நூலின் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி

158. “தமிழ்த்தாத்தா” – பெற்ற சிறப்புப் பட்டங்கள் யாவை?

i. மகாமகோபாத்தியாய

ii. திராவிட வித்தியா பூஷணம்

iii. தாக்ஷிணாத்திய கலாநிதி

iv. 1932-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம்

159. அவரது திருவுருவச் சிலை, சென்னை மாநிலக் கல்லூரியில் வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. & சென்னையில் திருவான்மியூரில் இவர் பெயரால் உ. வே. சா. நூலகம் அமைந்துள்ளது.

160. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது? சென்னை

161. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை ……………… காலத்தில் அமைக்கப்பட்டது? முதலாம் மகேந்திரவர்மன்

162. இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனை ஏற்படுத்திய கல்கோடாரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்? பல்லாவரம்

163. சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ள இடம்? திருவல்லிக்கேணி

164. 1856-ல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்? இராயபுரம்

165. அசையும் உருவங்களைப் படம் பிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்? தாமஸ் ஆல்வா எடிசன்

166. படப்படிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் சேர்த்து திரைப்படம் என்னும் விந்தையை உலகுக்கு அளித்தவர்கள்? லூமியர் சகோதரர்கள்

167. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் எனக் கண்டுபிடித்தவர்? ஜார்ஜ் மிலி

168. “மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும் தான்” என்பதை

உணர்த்தி படம்? தி கிரேட் டிக்டேட்டர்

169. சாமிக்கண்ணு வின்சென்ட் துண்டுபடங்களைக் காட்ட ஆரம்பித்த இடம்? திருச்சி

170. 1977-ம் ஆண்டு வரை திரைப்படமே பார்க்காமல் வாழ்ந்த மக்களின் ஊர்? கர்நாடக மாநிலத்தில் ஹெக்கோடு

171. ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்? மயிலைநாதர்

172. ஐம்பெருங்காப்பியம்:- சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

ஐஞ்சிறுகாப்பியம்:- நீலகேசி, சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்

173. நன்னூலுக்கு உரை எழுதியவர்? மயிலைநாதர்

174. “பஞ்சகாப்பியம்” என்னும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்ட நூல்? தமிழ்விடு தூது

175. சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழக்கம் சி.வை.தாமோதரனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பன அறிய செய்வது? சி.வை. தாமோதரனாரின் சூளாமணி பதிப்புரை

176. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியம்? சீவகசிந்தாமணி

177. “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப” என்பது …………. பாவீகம்? கம்பராமாயணத்தின்

178. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது? சிலப்பதிகாரம்

179. “ஆட்டனத்தி ஆதிமந்தி” என்னும் குறுங்காப்பியத்தை இயற்றியவர்? கண்ணதாசன்

180. பொருள் தொடர்நிலைக்கான நூல்கள்? சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

181. விருத்தம் என்னும் ஒரேவகைச் அச்செய்யுளில் அமைந்தவை? சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்

182. EPOS என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. EPOS என்பதற்குச் சொல் அல்லது பாடல் என்பது பொருள்.

183. காதை – சிலப்பதிகாரம், மணிமேகலை

சருக்கம் – சூளாமணி, பாரதம்

இலம்பகம் – சீவக சிந்தாமணி

படலம் – கந்தபுராணம், கம்பராமாயணம்

காண்டம் – சிலப்பதிகாரம், கம்பராமாயணம்

184. சங்ககாலக் கட்வெட்டுகளும் என் நினைவுகளும்” என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்? கணையாழி

185.  …………… எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பதை ஏற்படுத்தியது? சிந்துவெளி

186. மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்? பாண்டியன்

நெடுஞ்செழியன், 2-ம் நூற்றாண்டு

187. 1965 நவம்பர் 3-ம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக்கூறும் நூல்? நூற்றாண்டு மாணிக்கம்

188. “எர்லி தமிழ் எபிகிராபி” என்னும் நூலின் ஆசிரியர்? ஐராவதம் மகாதேவன்

189. புகளூர் கல்வெட்டின் காலம் ……………… நூற்றாண்டு? இரண்டாம்

190. தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்? கே.வி. சுப்பிரமணியார்

191. ஆராய்ச்சிப் பேரறிஞர் – மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ்த் தென்றல் – திரு.வி.க.

மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

192. ச. த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்? கிறித்தவமும் தமிழும்

193. தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்? தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்

194. தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டுருவாக்கம் செய்தற்கான சான்றாக விளங்கும் வேங்கடசாமியின் நூல்? தமிழ்நாட்டு வரலாறு

195. தாங்கெட நேர்ந்த போதும்

     தமிழ்கெட லாற்றா அண்ணல்

     வேங்கட சாமி என்பேன் – என்று கூறியவர்? பாரதிதாசன்

196. வேங்கடசாமி ……………….. என்னும் இதழில் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் “அஞ்சிறைத் தும்பி” என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது? செந்தமிழ்ச்செல்வி

197. மத்தவிலாசம் என்ற நாடக நூலை இயற்றியவர் …………… அதனை ஆங்கிலம் வழியாக தமிழாக்கியவர்? மகேந்திரவர்மன், மயிலை சீனி. வேங்கடசாமி

198. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்னும் அடிகள் இடம் பெற்ற நூல்? மணிமேகலை

199. கல்வி கற்பதற்காகப் பிரிநது செல்வதை, “ஓதற் பிரிவு” எனக் கூறும் நூல்?

தொல்காப்பியம்

200. ஆசிரியர், மாணவர்க்கான இலக்கணம் வகுத்த நூல்கள்? தொல்காப்பியம், நன்னூல்

201. இளமையில் கல் எனக்கூறியவர்? ஒளவையார்

202. “கண்ணுடையர் என்பவர் கற்றோர்” எனக் கூறும் நூல்? திருக்குறள்

203. கல்வி கற்பிக்கப்டும் இடங்களைப் “பள்ளி” என்று குறித்தது? பெரிய திருமொழி

204. கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் “கல்லூரி” என்று குறித்தது? சீவகசிந்தாமணி

205. “துணையாய் வருவது தூயநற் கல்வி” எனக் கூறும் நூல்? திருமந்திரம்

206. “கல்வி அழகே அழகு” என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்? நாலடியார்

207. “கற்றில னாயினும் கேட்க” எனக் கூறியவர்? திருவள்ளுவர்

208. “கண்ணுடையர் என்பவர் கற்றோர்” எனக் கூறும் நூல்? திருக்குறள்

209. பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று சுட்டும் நூல்? மணிமேகலை

210.  “கணக்காயர் இல்லாத ஊர், நன்மை பயக்காது” என்று கூறும் நூல்? திரிகடுகம்

211. 18-ம் நூற்றாண்டின் புதுவை வரலாற்றை அறிந்து கொள்ளக் கிடைத்த அரிய பெட்டகம்? ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

212. ஆனந்தரங்கர் தமிழில் எழுதிய நாட்குறிப்பு ……………. தொகுதிகளாக வந்துள்ளது? 12

213. முகலாய மன்னர்களிடையே நாட்குறிப்பு எழுதும் வழக்கம் ………… காலம் முதல் வழக்கத்தில் இருந்தது? பாபர்

214. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, தென்னிந்தியாவின் ………….. ஆண்டுகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது? 25

215. இந்தியாவின் பெப்பிசு என்று அழைக்கப்பட்டவர்? ஆனந்தரங்கர்

216. மரபுவழிக் கல்வி முறைகளுள் ஒன்றான உயர்நிலைக் கல்விமுறையில் உ.வே.சா. பயின்றார்.  மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் உ.வே.சா. பயின்ற கல்விமுறை இம்முறையாகும்.

217. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி உ.வே.சா? “நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் தமிழ்த்தாய் பாதிக்கப்பட்டாலும், அவளுடைய ஆபரணங்கள், தொலைவில் உள்ள நகரமான பாரிசீல் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன”

218. ஆனந்தரங்கர் நாட்குறிப்பு பற்றி மகாகவி பாரதியார்? “அந்தக் காலத்தில் நடந்த செய்திகளை எல்லாம் ஒன்று தவறாமல் நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்”

219. கட்டக்கலை என்பது “உறைந்த போன இசை” என்று கூறியவர்? பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

220.  “தட்சிண மேரு” என அழைக்கப்படுவது? தஞ்சைப் பெரிய கோவில்

221. செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களை கட்டியவன்? சோழன் செங்கணான்

222. “இராசசிம்மேச்சுரம்” என அழைக்கப்படும் கோவில்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

223. தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி? திராவிட கலைப்பாணி

224. ‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியர்? இரண்டாம் நரசிம்மவர்மன்

225. குடைவரைக் கோவில்களை அமைத்தவன்? முதலாம் மகேந்திரவர்மன்

226. தமிழக அரசின் சின்னம்? கோவில் கோபுரம்

227. “ஒலோகமாதேவீச்சுரம்” கோவிலை திருவையாற்றில் கட்டியவர்? ஓலோகமாதேவை

228. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” – எனப் பாடியவர்? பாரதிதாசன்

229. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என …………. குறிப்பிடுகிறது? மணிமேகலை

230. “வீட்டுக்கு உயிர் வேலி!

வீதிக்கு விளக்குத்தூண்!

நாட்டுக்குக் கோட்டை மதில்!

நடமாடும் கொடிமரம் நீ” எனப் பாடியவர்? தாதாபாரதி

231.  “எத்தனை உயரம் இமயமலை – அதில்

இன்னொரு சிகரம் உனது தலை!

எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ

இவர்களை விஞ்சிட என்ன தடை?” – இவ்வரிகளுக்கு சொந்தக்காரர்? தாதாபாரதி

232. “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா” – எனப் பாடியவர்? பாரதியார்

233. வீதிதோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்” – எனப் பாடியவர்? பாரதியார்

234. வல்லமை தாராயோ – இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?” – என நாட்டு நலத்திற்குப் புதிய வழித்தடம் அமைத்தவர்? முண்டாசுக் கவிஞன்

235. “பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்” – என்று பாடியவர்? சுப்பிரமணிய பாரதி

236. “பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில்

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே” – இப்பாடலுக்கு சொந்தக்காரர்? புரட்சிக்கவிஞர்

237. “நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்” – எனக் கூறியவர்? பாவேந்தர்

238.  “வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்” – என்று கூறியவர்? பேரறிஞர்

239. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – என்னும் மேன்மையான பார்வைக்கு வழி  கூறியவர்? கணியன் பூங்குன்றன்

240. “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை

மானுட சமுத்திரம் நானென்று கூவு

புவியை நடத்து; பொதுவில் நடத்து!”  – எனக் கூறி உலகத்தை வீடாகக் கட்டியவர்?  புரட்சிக்கவிஞர்

 சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் யாவர்?

1970

அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி

1979

சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்

1987

முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்

1996

அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்

2008

மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி

2010

சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்

2016

ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot,  tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham