எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
|
வினாக்கள் |
பிரித்து எழுதுக |
171
|
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை
அறிதல் |
61 |
எதிர்ச்சொல் தருக |
22 |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் |
89 |
நூல்கள் – நூல் ஆசிரியர்கள் |
23 |
பாடல் வரிகள் – ஆசிரியர் – நூல்கள் |
197 |
நூல் வெளி |
14 |
பாடம்
1.2 தமிழ்க்கும்மி
நூல் வெளி |
இப்பாடல் “கனிச்சாறு” என்னும் நூலில்
இடம் பெற்றுள்ளது, இந்நூல் எட்டுத் தொகுதிகளைக் கொண்டது. இது தமிழுணர்வு செறிந்த
பாடல்களைக் கொண்டது. |
பாடம்
2.1 சிலப்பதிகாரம்
நூல் வெளி |
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்.
சிலம்பின் செயலை மையமாகக் கொண்டு கதையைக் கூறுவதால் சிலப்பதிகாரம் என்னும் பெயர்
பெற்றது. மூன்று காண்டங்கள் முப்பது காதைகளைக் கொண்டது. புகார் காண்டம் – 10 காதைகள்,
மதுரைக் காண்டம் -13 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள். காண்டம் – பெரும் பிரிவு,
காதை – கதை தழுவியப்பாட்டு காண்டத்தின் உட்பிரிவு – காதை. தொடர்நிலைச் செய்யுள்,
முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள்
காப்பியம் ஆகியவை இவற்றின் வேறு பெயர்களாகும். திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை
வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. |
பாடம் 2.2 காணி நிலம்
நூல் வெளி |
இப்பாடல் பாரதியார் கவிதைகள் தொகுப்பில்
காணி நிலம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. |
பாடம் 3.1 அறிவியல் ஆத்திசூடி
நூல் வெளி |
‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’
என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர்
அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி
மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள்,
கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். |
பாடம் 4.1 மூதுரை
நூல் வெளி |
இந்நூலின் ஆசிரியர் ஔவையார். இவர் ஆத்திசூடி,
கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு
மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை
எனப் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன. |
பாடம்
4.2 துன்பம் வெல்லும் கல்வி
நூல் வெளி |
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்த கருத்துகளை
வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின்
உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர். |
பாடம் 5.1 ஆசாரக்கோவை
நூல் வெளி |
ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
இவர் பிறந்த ஊர் வண்கயத்தூர். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு
என்பது பொருள். இந்நூல் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூல் நூறு வெண்பாக்களைக்
கொண்டது. |
பாடம் 5.2 கண்மணியே கண்ணுறங்கு
நூல் வெளி |
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு
என்று பெயர் பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன்
பாடும் பாடல் தாலாட்டு. |
பாடம்
6.1 நானிலம் படைத்தவன்
நூல் வெளி |
முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி,
வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி
என்றும் கவியரசு என்றும் பாரட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும்
நூலில் இடம் பெற்றுள்ளது. |
பாடம்
6.2 கடலோடு விளையாடு
நூல் வெளி |
உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன்
பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு
வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்
பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப்
பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும்
நூலில் இடம் பெற்றுள்ளது. |
பாடம்
7.1 பாரதம் அன்றைய நாற்றங்கால்
நூல் வெளி |
தாராபராதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.
கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல்
நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இவற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள்
என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
பாடம்
8.1 பராபரக் கண்ணி
நூல் வெளி |
இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை
ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். |
பாடம்
8.2 நீங்கள் நல்லவர்
நூல் வெளி |
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்.
கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.
இப்பாடப் பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. |
பாடம்
9.1 ஆசிய ஜோதி
நூல் வெளி |
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில்
வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும்
பட்டம் பெற்றவர். |
Super notes bro
பதிலளிநீக்குVery use full sir thank u so much
பதிலளிநீக்கு8th book tamil book potunka sir
பதிலளிநீக்குminnal vega kanitham