எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
5. இந்திய ஆட்சியியல்: |
i. இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின்
முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள். ii. குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள்,
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள். iii. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில
சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ். iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில
உறவுகள். v. தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி. vi. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் –
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர்
பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள்
சாசனம். |
கூற்று (கூ): ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு இடையே தகவல் தொடர்பு பாலமாக
செயல்படுபவர் முதல்வர் ஆகும்.
காரணம் (கா): மாநில அமைச்சரவை குழுவுக்கு தலைவராக செயல்படுபவர் முதல்வராவார்.
[12-03-2022]
(A) (கூ) தவறானது மற்றும் (கா) சரியானது
(B) (கூ) சரியானது மற்றும் (கா) தவறானது
(C) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, ஆனால் (கா), (கூ)க்கு சரியான விளக்கம்
இல்லை
(D) (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, மற்றும் (கா), (கூ)க்கு சரியான விளக்கம்
இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புப் படைகளின் மீதான உயர்தனி ஆணையதிகாரம்
யாரிடம் உற்றமைந்திருக்கிறது? [12-03-2022]
(A) குடியரசுத் தலைவரிடம்
(B) பாராளுமன்றத்திடம்
(C) குடியரசுத் தலைவரிடம் ஆனால் பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு உட்பட்டு
(D) முப்படைத் தலைமைத் தளபதியிடம்
புதிய அகில இந்தியப் பணியினை ________ -ஆல் உருவாக்க இயலும்.
[12-03-2022]
(A) பாராளுமன்ற சட்டத்தின் மூலம்
(B) குடியரசுத் தலைவரின் ஆணையின் மூலம்
(C) மாநிலங்களின் அவை தீர்மானத்தின் மூலம்
(D) மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தீர்மானம் மூலம்
இந்திய அரசியலமைப்பின் 326-ம் விதி கீழ் காணப்படும் எவை/எதை குறிக்கின்றது
(பற்றியது)? [22-01-2022]
(A) மக்களவைக்கான தேர்தல் வயது வந்ததோர் வாக்குரிமை-ன் அடிப்படையில் நடத்துவது
(B) குடியரசுத்தலைவர்
(C) பாராளுமன்றம்
(D) உச்ச நீதிமன்றம்
எந்த விதியின் கீழ், பாராளுமன்றம் மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும்
அதிகாரம் பெற்றுள்ளது? [22-01-2022]
(A) விதி 235
(B) விதி 245
(C) விதி 275
(D) விதி 265
இந்திய அளவில் கீழ்கண்டவர்களில் மாநகராட்சியின் முதல் குடிமகன் என்பவர்
யார்?
[22-01-2022]
(A) மாநகராட்சி மன்ற தலைவர்
(B) தலைவர்
(c) ஊர்த்தலைவர்
(D) சட்டமன்ற உறுப்பினர்
விதி 200 விளக்குவது [11-01-2022]
(A) மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டம் இயற்றுதல்
(B) ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வைத்துக் கொள்ளல்
(C) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம்
(D) மக்களவை சபா நாயகரின் அதிகாரம்
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவி இடங்கள் காலியாக
இருக்கும் போது குடியரசுத் தலைவராக செயல்படுபவர் யார்? [08-01- 2022]
(A) தலைமைத் தேர்தல் ஆணையம்
(B) பிரதமர்
(C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
(D) லோக்சபா சபாநாயகர்
முதலாவது மக்களவை எப்போது கலைக்கப்பட்டது? [08-01- 2022]
(A) 26 ஜனவரி, 1957
(B) 04 ஏப்ரல், 1957
(C) 15 ஆகஸ்ட், 1957
(D) 02 அக்டோபர், 1957
(ஜனாதிபதி பற்றிய) பட்டியல் I ஐ பட்டியல்
II ஐ உடன் ஒப்பிடுக [07-11-2021]
(a) விதி 53 - 1. தேசிய அவசர நிலை
(b) விதி 352 - 2. பிரதமர் நியமனம்
(c) விதி 76 - 3. மத்திய அரசின் இந்தியாவின் நிர்வாக அதிகாரம் குடியரசுத்
தலைவரிடம் உள்ளது
(d) விதி 75 - இந்திய தலைமை வழக்குரைஞர் நியமனம்
(A) 1 3 4 2
(B) 3 1 4 2
(C) 3 4 2 1
(D) 4 2 3 1
மத்திய அமைச்சரவை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
I. இந்திய அரசியலமைப்பு விதி 74வது அமைச்சரவையை
விளக்குகிறது
II. அது கூட்டுப் பொறுப்பை இவற்றுள் பெற்றிருக்கவில்லை [07-11-2021]
(A) I மட்டும் சரியானது
(B) II மட்டும் சரியானது
(C) I மற்றும் II சரியானது
(D) I மற்றும் II தவறானது
இந்திய அரசியல் சாசனத்தின் முதல் விதி இந்தியாவை [07-11-2021]
(A) ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
(B) ஒன்றிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
(C) கூட்டாட்சி மாநிலங்கள்
(D) அனைத்தும் சரியே
பின்வருவனவற்றில் எது மக்களவை கூட்டத்தொடர் அல்ல? [17-04-2021]
(A) பருவகால கூட்டத்தொடர்
(B) கோடைகால கூட்டத்தொடர்
(C) குளிர்கால கூட்டத்தொடர்
(D) வரவு-செலவு அறிக்கை கூட்டத்தொடர்
பின்வருவனவற்றில் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையை ஒழிக்க பாராளுமன்றத்திற்கு
பரிந்துரை செய்வது [18-04-2021]
(A) அந்த மாநிலத்தினுடைய சட்டமன்ற பேரவை
(B) குடியரசுத் தலைவா
(C) அந்த மாநிலத்தின் சட்ட மேலவை
(D) அந்த மாநிலத்தின் ஆளுநர்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் யாருடைய ஆலோசனையின் பேரில்
நியமிக்கிறார்? [18-04-2021]
(A) பிரதமர்
(B) தலைமை நீதிபதிகள் தலைமையிலான நீதிபதிகள் குழு
(C) சட்ட அமைச்சர்
(D) குடியரசுத் துணைத் தலைவர்
இந்திய தேர்தல் முறைகளில் ஒற்றை மாற்று வாக்குமூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள்
[20-11-2022]
(A) கீழ் சபையில் இரண்டு ஆங்கில-இந்தியர்களின் தேர்வு முறை
(B) குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், மாநிலங்கள் அவை உறுப்பினர்களின்
தேர்தல் முறை
(C) குடியரசு துணை தலைவரின் தேர்வு
(D) பிரதமரின் தேர்ந்தெடுக்கும் முறை
மாநில சட்டமன்றம் கூடுவதற்கான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கையானது
[20-11-2022]
(A) 30 உறுப்பினர்கள் அல்லது 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள்
(B) 10 உறுப்பினர்கள் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் பத்தில்
'ஒரு பங்கு இவற்றுள் எது அதிகமோ அது
(C) மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
(D) மொத்த உறுப்பினர்களில் பாதிக்குமேல் உறுப்பினர்கள்
பாராளுமன்ற சலுகைகளை ________ல் குறிப்பிடப்பட்டுள்ளன. [18-04-2021]
(A) விதி 105
(B) விதி 194
(C) விதி 186
(D) விதி 172
எப்பொழுது தமிழ்நாட்டில் சட்ட மேலவை கலைக்கப்பட்டது? [18-04-2021]
(A) 1985
(B) 1986
(C) 1987
(D) 1988
கீழ்க்காணப்படும் வாக்கியங்கள் குடியரசு தலைவரின் தேர்தல் குறித்தது. இதில் எது தவறான வாக்கியம் என்று கண்டுபிடிக்கவும். [18-04-2021]
(A) அவர் ஒரு இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்
(B) பாராளுமன்றத்தின் ஈரவைகளின் உறுப்பினர்களால் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்
(C) எவ்விதமான இலாபகரமான தொழிலும் இல்லாமை
(D) அவரை தேர்தல் கல்லூரி
(electoral college) தேர்வு செய்கிறது
Answer Key =
https://www.minnalvegakanitham.in/2022/03/union-executive-union-legislature-state.html
minnal vega kanitham