எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
(உரைநடை) |
1. திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது? (2013 G2) a. யான் கண்ட இலங்கை b. எனது இலங்கைச்செலவு c. யான் கண்ட ஜப்பான் d. உலகம் சுற்றிய தமிழன் 2. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர் (2013 G2) a. மீரா b. இன்குலாப் c. தருமு சிவராமு d. ந.பிச்சமூர்த்தி
3. மனிதர்களின்
மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர் (2013 G2) a. லாச. ராமாமிருதம் b. சி.சு.செல்லப்பா c. ந.பிச்சமூர்த்தி d. தி. ஜானகிராமன்
4. மருமக்கள் வழிமான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்? (2013 G2) a. தி.வி.க. b. கவிமணி c. இரசிகமணி d. நாமக்கல் கவிஞர்
5. கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது? (2013 G2) a. ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி b. இராஜதண்டனை c. மாங்கனி d. கொய்யாக்கனி
6. உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? (2013 G2) a. நிலவுப்பூ b. சூரியகாந்தி c. தேன்மழை d. பூங்கொடி
7. பொருத்துக:
(2013 G2) புலவர் - நூற்பெயர் (a) முடியரசன் -
1. ஆனந்தத்தேன் (b) சச்சிதானந்தன் - 2. மாங்கனி (c) குமரகுருபரர் - 3. காவியப்பாவை (d) கண்ணதாசன் - 4. சகலகலாவல்லிமாலை (a) (b) (c) (d) a. 2 1 4 3 b. 3 2 4 1 c. 3 1 4 2 d. 1 3 2 4
8. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது? (2014 G2) a. குடும்ப விளக்கு b. பாண்டியன் பரிசு c. தேன் மழை d. குறிஞ்சித் திட்டு
9. கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது? (2014 G2) a. பூங்கொடி b. இயேசு காவியம் c. காவியப்பாவை d. வீரகாவியம்
10. கீழ்க்காணும்
நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்? (2014 G2) a. இசையமுது b. கண்ணகி புரட்சிக்காப்பியம் c. தமிழியக்கம் d. தமிழ்ப்பசி
11. மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது? (2015 G2) a. தமிழிலக்கிய வரலாறு b. தமிழின்பம் c. கள்ளர் சரித்திரம் d. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
12. பொருத்துக:
(2015 G2) நூல் - ஆசிரியர் (a) பாண்டியன் பரிசு - 1.
பாரதியார் (b) குயில் பாட்டு - 2. நாமக்கல் கவிஞர் (c) ஆசிய ஜோதி - 3. பாரதிதாசன் (d) சங்கொலி - 4. கவிமணி (a) (b) (c) (d) a. 4 3 2 1 b. 2 1 3 4 c. 3 1 4 2 d. 1 2 4 3
13. சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது? (2015 G2) a. கள்ளர் சரித்திரம் b. தமிழ் இலக்கிய வரலாறு c. தமிழின்பம் d. முத்தொள்ளாயிர விளக்கம்
14. பாரதிதாசன்
வெளியிட்ட இதழ் (2015 G2) a. தேன்மழை b. குயில் c. தென்றல் d. இந்தியா
14. இந்தியா, விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர் (2015 G2) a. பாரதிதாசன் b. பாரதியார் c. திரு.வி.க d. முடியரசன்
15. கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்
(2015 G2) a. ந.மு. வேங்கடசாமி நாட்டார் b. இரா.பி. சேதுப்பிள்ளை c. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் d. மு. வரதராசனார்
16. சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல் (2016 G2) a. சுரதாவின் கவிதைகள் b. துறைமுகம் c. தேன்மழை d. சுவரும் சுண்ணாம்பும்
17. பொருத்துக:
(2016 G2) நூல் - நூலாசிரியர் (a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு. வி. க (b) தமிழ்ச் சோலை 2. சுரதா (c) இரட்சணியக் குறள் 3. கவிமணி (d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார் a. 4 1 2 3 b. 1 4 3 2 c. 2 1 3 4 d. 3 1 4 2
18. பட்டியல்
I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (2016
G2) கவிதை நூல்கள் - கவிஞர்கள் (a) நெருஞ்சி
- 1.சி.மணி (b) அன்று வேறு கிழமை - 2.
இரா. மீனாட்சி (c) தோணி வருகிறது - 3. ஞானக்கூத்தன் (d) வரும் போகும் - 4. ஈரோடு தமிழன்பன் a. 2 3 4 1 b. 1 4 3 2 c. 3 4 2 1 d. 3 1 4 2
19. பட்டியல் I
இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்திழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக கவிதைநூல் - கவிஞர் (2016 G2) (a) புலரி - 1.
கலாப்ரியா (b) சுயம்வரம் - 2. பசுவய்யா (c) மின்னற்பொழுதே தூரம் - 3.
கல்யாண்ஜி (d) யாரோ ஒருவனுக்காக - 4.
தேவதேவன் a. 4 3 2 1 b. 2 4 1 3 c. 3 4 1 2 d. 3 1 4 2
20. "பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது? (2017 G2) a. பாவியக் கொத்து b. பள்ளிப் பறவைகள் c. கொய்யாக்கனி d. குறிஞ்சித்திட்டு
21. ‘ஜீவனாம்சம்’ என்ற நூலை எழுதியவர் யார்? (2018 G2) (A) ஜெயகாந்தன் (B) புதுமைப்பித்தன் (C) அழ.வள்ளியப்பா (D) சி.சு. செல்லப்பா
22. ‘முள்ளும் ரோஜாவும்’ என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? (2018 G2) (A) சி.சு. செல்லப்பா (B) லா. ச. ராமாமிருதம் (C) ந பிச்சமூர்த்தி (D) தி. ஜானகி ராமன்
23. தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார் (2018 G2) (A) 40 (B) 72 (C) 43 (D) 52
24. “புரட்சி முழக்கம்” என்னும் நூலை எழுதியவர் யார்? (2018 G2) (A) பரிதிமாற் கலைஞர் (B) மறைமலையடிகள் (C) தேவநேயப்பாவாணர் (D) சாலை இளந்திரையன்
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/nool-asiriyar-group-2.html
|
minnal vega kanitham