எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
ஓரெழுத்து ஒருமொழிகள் (7th & 8th தமிழ்) |
1. தவறான ஒன்றைத்
தேர்வு செய்க A) ஆன் - ஆ B) மான் - மா C) கோன் - கோ D) தேன் - தோ
2. மொழியை எத்தனை
வகையாகப் பிரிக்கலாம்? A) 2 B) 3 C) 4 D) 5
3. ஓரெழுத்து மொழி
என்பது நெட்டெழுத்துகள் ஏழே என்று கூறியவர்? A) தொல்காப்பியர் B) அகத்தியர் C) நன்னூலார் D) பவணந்தி முனிவர்
4. நெட்டெழுத்து
ஏழே ஓரெழுத்து ஒருமொழி – இதில் குறிப்பிடப்படும் நெட்டெழுத்துகள் எவை? A) உயிர் நெடில் எழுத்து B) உயிர்மெய் நெடில் எழுத்து C) மெய் எழுத்து D) A மற்றும் B
5. உயிர் மெய்
நெட்டெழுத்துக்கள் எத்தனை? A) 216 B) 126 C) 247 D) 18
6. கூற்றுகளை ஆராய்க. 1. தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் எல்லா நிலைகளிலும்
வாரா. 2. சில எழுத்துக்கள் அரிச்சுவடியில் இருப்பினும் அவை மொழிநிலையில்
இடம்பெறா. 3. ஆனால் நெட்டெழுத்துகளில் சொல் என்னும் நிலையைப் பெறாதவை
இல்லை. A) 1, 3 சரி B) 1, 2 சரி C) 1 மட்டும் சரி D) அனைத்தும் சரி
7. பொருந்தாத ஒன்றை
தெரிவு செய்க (ஓரெழுத்து ஒருமொழி பற்றியதில்) A) உயிர் வரிசையில் ஏழு எழுத்துக்கள் B) ம வரிசையில் ஆறு எழுத்துக்கள் C) த, ப, ந என்னும் வரிசையில் ஐந்து ஐந்து எழுத்துக்கள் D) க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகள்
8. மாநிலம் என்ற
சொல்லின் பொருள்? A) மாங்காய் விளையும் நிலம் B) மாமரம் இருக்கும் நிலம் C) பெருநிலம் D) விளைநிலம்
9. மாஞாலம் – இச்சொல்சொலிலுள்ள
ஞாலம் என்பதன் பொருள்? A) நாடு B) கண்டம் C) உலகம் D) கடல்
10. மா என்ற ஓரெழுத்து
ஓரு மொழிக்கு பொருத்தமானது? A) பறவை B) விலங்கு C) மனிதன் D) உலகம்
11. ஓயாது ஒலி
செய்யும் ஒலிக் குறிப்பைக் காட்டி நிற்கும் ஓரெழுத்து ஒரு மொழி? A) மா B) வீ C) ஏ D) ஈ
12. குற்றெழுத்து
ஐந்தும் மொழிநிறைபு இலவே – என்று கூறியவர்? A) தொல்காப்பியர் B) அகத்தியர் C) நன்னூலார் D) பவணந்தி முனிவர்
13. கூற்றுகளை
ஆராய்க. 1. நன்னூலார் கூறிய சில ஒரெழுத்து ஒரு மொழிகள் இன்று வழக்கில் இல்லை 2. வழக்கிலுள்ள
எல்லா ஓரெழுத்து ஒரு மொழிகளும் நன்னூலார் கூறியது A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் தவறு D) இரண்டும் சரி
14. தனித்தமிழ்
இயக்கம் என்ற நூலை எழுதியவர்? A) தேவநேய பாவாணர் B) இரா. இளங்குமரனார் C) மறைமலையடிகள் D) பரிதிமாற்கலைஞர்
15. ஓரெழுத்து
ஒரு மொழியில் குறில் எழுத்துக்களை இடம்பெற செய்தவர்? A) தொல்காப்பியர் B) அகத்தியர் C) நன்னூலார் D) பவணந்தி முனிவர்
16. ஓரெழுத்து
ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகளின் எண்ணிக்கை? A) 1 B) 2 C) 3 D) 4
17. தேவநேயம் என்ற
நூலை தொகுத்தவர் யார்? A) தேவநேய பாவாணர் B) இரா. இளங்குமரனார் C) மறைமலையடிகள் D) பரிதிமாற்கலைஞர்
18. பாவாணர் நூலகத்தை
அமைத்தவர்? A) தேவநேய பாவாணர் B) இரா. இளங்குமரனார் C) மறைமலையடிகள் D) பரிதிமாற்கலைஞர்
19. ஓரெழுத்து
ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை? A) 2 B) 42 C) 30 D) 40
20. பழங்கால கல்வெட்டுகளில்
க என்னும் எழுத்தில் நெடில் வடிவத்தை எவ்வாறு எழுதலாம்? A) க: B) கா C) க. D) க. .
21. தமிழிசை இயக்கம்
என்ற நூலை எழுதியவர்? A) தேவநேய பாவாணர் B) இரா. இளங்குமரனார் C) மறைமலையடிகள் D) பரிதிமாற்கலைஞர்
22. கூற்றுகளை
ஆராய்க 1. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் – இரா. இளங்குமரனார் 2. இவர் திருச்சிக்கு அருகில் அல்லூரில் விவேகானந்தர் தவச்சாலையும்,
திருவள்ளுவர் நூலகமும் அமைத்துள்ளார். A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் தவறு D) இரண்டும் சரி
23. இரா. இளங்குமரனார்
எழுதிய நூல்களில் பொருந்தாது எது? A) இலக்கண வரலாறு B) தமிழிசை இயக்கம் C) தனித்தமிழ் இயக்கம் D) தேவநேயம்
24. தமிழின் தனிப்பெருஞ்
சிறப்புகள் என்னும் நூலை எழுதியவர்? A) மறைமலை அடிகள் B) தேவநேயப் பாவாணர் C) இரா. இளங்குமரனார் D) பாரதியார்
25. தமிழில் மொத்தம்
எத்தனை ஓரெழுத்து ஒருமொழி உள்ளது? A) 40 B) 42 C) 44 D) 46
26. தமிழில்
42 ஓரெழுத்து ஒருமொழி உள்ளது எனக் கூறியவர் யார்? A) சமணமுனிவர் B) பவணந்தி முனிவர் C) தொல்காப்பியர் D) அகத்தியர்
27. தமிழில் எத்தனை
ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் நெடில் எழுத்தாக அமைந்துள்ளது? A) 40 B) 42 C) 38 D) 36
28. "அம்பு” என்று பொருள்
தரும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) ஆ B) ஏ C) ஊ D) ஏ
29. “பூமி”-யைக் குறிக்கும்
ஓரெழுத்து ஒருமொழி எது? A) ஐ B) ஓ C) கூ D) கா
30. “அரசன்” என்பதை குறிக்கும்
ஓரெழுத்து ஒருமொழி எது? A) கை B) கோ C) சா D) சீ
31. “உயர்வு” என்பதைக்
குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) சே B) சோ C) தா D) தீ
32. “கடவுள்-யைக்
குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி எது? A) தூ B) தே C) தை D) நா
33. “வறுமை”-யைக் குறிக்கும்
ஒரெழுத்து ஒருமொழி எது? A) நீ B) நே C) நை D) நோ
34. “மேகம்” என்பதைக்
குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) பா B) பூ C) பே D) பை
35. “வான்” என்பதைக்
குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) போ B) மா C) மீ D) மூ
36. “அன்பு” என்பதைக்
குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) மே B) மை C) மோ D) யா
37. “மலர்” என்பதைக்
குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது? A) வா B) வீ C) வை D) வெள
38. ‘து’ என்னும் ஓரெழுத்து
ஒருமொழி உணர்த்தும் பொருள் என்ன? A) உண் B) நோய் C) அம்பு D) பசு
39. பொருத்துக அ. புல்லை மேய்வது – 1. தீ ஆ. சுடுவது – 2. ஆ இ. மணம் வீசுவது – 3. ஏ ஈ. பறப்பது – 4. வீ A) 2, 1, 3, 4 B) 2, 3, 4, 1 C) 3, 2, 4, 1 D) 2, 1, 4, 3
Answer Key = https://www.minnalvegakanitham.in/2022/03/oru-eluthu-oru-mozhi-new-book.html |
minnal vega kanitham