Type Here to Get Search Results !

53 Days Study Plan 7th தமிழ் (இயல் 1,2,3) முக்கிய குறிப்பு + 100 வினா விடை

0



எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்

 7th Std Tamil Term 1

UNIT 1: அமுதத்தமிழ்

♦ எங்கள் தமிழ் (நாமக்கல் கவிஞர்)

♦ ஒன்றல்ல இரண்டல்ல (உடுமலை நாராயண கவி)

♦ பேச்சுமொழியும் எழுத்து மொழியும் (இலக்கணம்)

♦ சொலவடைகள்

♦ குற்றியலுகரம், குற்றியலிகரம் (இலக்கணம்)

UNIT 2: அணிநிழல் காடு

♦ காடு (கவிஞர் சுரதா)

♦ அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிஞர் ராஜமார்த்தாண்டன்)

♦ விலங்குகள் உலகம்

♦ இந்திய வனமகன்

♦ நால்வகைக் குறுக்கங்கள் (இலக்கணம்)

♦ திருக்குறள்

UNIT 3: நாடு அதை நாடு

♦ புலி தங்கிய குகை (சேர மன்னன்) (புறநானூறு)

♦ பாஞ்சை வளம் (கட்டபொம்மன்)

தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

♦ கப்பலோட்டிய தமிழர் (வ.உ.சி) (இரா.பி. சேது)

♦ வழக்கு (இலக்கணம்)


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

Modal Questions

1. காந்திய கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

A. சுரதா

B. நாமக்கல் கவிஞர்

C. பாரதிதாசன்

D. வாணிதாசன்

 

2. "அருள் நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும்" என்ற பாடலை பாடியவர் யார்?

A. சுரதா

B. நாமக்கல் கவிஞர்

C. பாரதியார்

D. பாரதிதாசன்

 

3. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்?

A. வாணிதாசன்

B. பாரதிதாசன்

C. நாமக்கல் கவிஞர்

D. தேவநேயப் பாவாணர்

 

4. "ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

A. உடுமலை நாராயணக்கவி

B. வாணிதாசன்

C. நாமக்கல் கவிஞர்

D. சுரதா

 

5. முல்லைக்கு தேர் தந்து மழைமேகத்தை விடப் புகழ் பெற்றவர் யார்?

A. பாரி

B. குமணன்

C. காரி

D. பேகன்

 

6. வானில் --------- கூட்டம் திரண்டால் மழை பொழியும் ?

A. அகில்

B.முகில்

C. துகில்

D. துயில்

 

7. தமது திரைப்பட பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்?

A. நாமக்கல் கவிஞர்

B. கவிமணி

C. உடுமலை நாராயணகவி

D. சுரதா

 

8. வான் + ஒலி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?

A. வான் ஒலி

B. வானொலி

C. வாவொலி

D. வானெலி

 

9. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தவன் யார்?

A. பாரி

B. குமணன்

C. காரி

D. பேகன்

 

10. பொருத்துக:

1. ஒப்புமை --- விந்தை

2. அற்புதம் --- வள்ளல்

3. முகில் --- இணை

4. உபகாரி --- மேகம்

A. 1 2 3 4

B. 2 3 4 1

C. 3 1 4 2

D. 4 3 2 1

 

11. கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி?

கூற்று 1: பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் உடுமலை நாராயணகவி

கூற்று 2: இவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்

கூற்று 3: தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்.

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 2 சரி

C. கூற்று 3 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு

 

12. பகைவரை வெற்றி கொண்ட வரைப் பாடும் இலக்கியம்?

A. கலம்பகம்

B. பரிபாடல்

C. பரணி

D. அந்தாதி

 

13. மொழியின் முதல் நிலை பேசுதல், ---------- ஆகியனவாகும்?

A. படித்தல்

B. கேட்டல்

C. எழுதுதல்

D. வரைதல்

 

14. ' நெறி ' என்னும் சொல்லின் பொருள்?

A. வழி

B. குறிக்கோள்

C. கொள்கை

D. அறம்

 

15. பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A. மலைக்கள்ளன்

B. எங்கள் தமிழ்

C. என்கதை

D. சங்கொலி

 

16. பேச்சு மொழியை ---------- வழக்கு என்றும் கூறுவர்?

A. இலக்கிய

B. உலக

C. நூல்

D. மொழி

 

17. பொருத்துக:

1. மொழியியல் --- Linguistics

2. இதழியல் --- Journalism

3. பொம்மலாட்டம் --- Puppetry

4. எழுத்திலக்கணம் --- Orthography

A. 1 2 3 4

B. 3 4 1 2

C. 4 3 2 1

D. 2 4 1 3

 

18. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க?

கூற்று 1: சுரதாவின் இயற்பெயர் சுப்புரத்தினம்

கூற்று 2: பாரதிதாசனின் இயற்பெயர் இராசகோபாலன்

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு

 

19. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

A. எட்டு

B. ஒன்பது

C. பத்து

D. இரண்டு

 

20. ஆய்தத் தொடர் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக?

A. ஆறு

B. பயிறு

C. எஃகு

D. பாகு

 

 

 

21. கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனி?

கூற்று 1: பேச்சு மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்

கூற்று 2: எழுத்து மொழியை உலக வழக்கு என்றும் கூறுவர்

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு

 

22. ஒலியின் வரிவடிவம் --------- ஆகும்?

A. பேச்சு

B. எழுத்து

C. குரல்

D. பாட்டு

 

23. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று?

A. உருது

B. இந்தி

C. தெலுங்கு

D. ஆங்கிலம்

 

24. " பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும்" என்ற பாடலின் ஆசிரியர் யார்?

A. வாணிதாசன்

B. சுரதா

C. பாரதியார்

D. பாரதிதாசன்

 

25. 'காடெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

A. காடு + டெல்லாம்

B. காடு + எல்லாம்

C. கா + டெல்லாம்

D. கான் + எல்லாம்

 

26. கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்?

A. தேவநேயப் பாவாணர்

B. ராஜமார்த்தாண்டன்

C. சுப்புரத்தினம்

D. பாரதியார்

 

27. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது?

A. பச்சை இலை

B. கோலிக்குண்டு

C. பச்சைக்காய்

D. செங்காய்

 

28. ' மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?

A. மன + மில்லை

B.மனமி + இல்லை

C. மனம் + மில்லை

D. மனம் + இல்லை

 

29. ' சுட்ட பழங்கள் ' என்று குறிப்பிடப்படுபவை?

A. ஒட்டிய பழங்கள்

B. சூடான பழங்கள்

C. வேகவைத்த பழங்கள்

D. சுடப்பட்ட பழங்கள்

 

30. ' குழந்தை வரைந்தது பறவைகளை மட்டுமே வானம் தானாக உருவானது ' என்ற பாடலை இயற்றியவர் யார்?

A. ராஜமார்த்தாண்டன்

B. கலாப்ரியா

C. சுரதா

D. பாரதியார்

 

31. சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1: தமிழ்நாட்டில் வன கல்லூரி அமைந்துள்ள மாவட்டம் - மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்)

கூற்று 2: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வனவியல் (BSc, Forestry), முதுநிலை வனவியல் (MSc Forestry) ஆகிய படிப்புகள் உள்ளன

A. அனைத்தும் சரி

B. கூற்று 1 மட்டும் சரி

C. கூற்று 2 மட்டும் சரி

D. அனைத்தும் தவறு

 

 

 

32. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்?

A. வேடந்தாங்கல்

B. கோடியக்கரை

C. முண்டந்துறை

D. கூந்தன்குளம்

 

33. உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?

A. மூன்று

B. நான்கு

C. இரண்டு

D. ஆறு

 

34. மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு எது?

A. சிங்கம்

B. புலி

C. யானை

D. சிறுத்தை

 

35. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

A. ஆறு

B. ஏழு

C. எட்டு

D. ஒன்பது

 

 

36. "இந்தியாவின் வனமகன்" என்று அழைக்கப்படுபவர் யார்?

A. ஜாதுநாத்

B. ஜாதவ் பயேங்

C. ஜாது பாரிங்

D. சுவாமிநாதன்

 

37. பொருத்துக:

1. உவமை --- Bio Diversity

2. பல்லுயிர் மண்டலம் --- Parable

3. வனவிலங்குகள் --- Jungle

4. காடு --- Wild Animals

A. 2 1 4 3

B. 1 2 3 4

C. 4 3 2 1

D. 3 1 2 4

 

38. 'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?

A. காடு + ஆறு

B. காட்டு + ஆறு

C. காட் + ஆறு

D. காட் + டாறு

 

 

 

 

39. பொருத்துக:

1. அறத்துப்பால் --- 25

2. பொருட்பால் --- 38

3. இன்பத்துப்பால் --- 70

A.1 2 3

B. 2 1 3

C. 2 3 1

D. 3 1 2

 

40. வாய்மை எனப்படுவது?

A. அன்பாக பேசுதல்

B. தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

C. தமிழில் பேசுதல்

D. சத்தமாகப் பேசுதல்

 

41. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள்" என்று கூறியவர்?

A. திருவள்ளுவர்

B. ஔவையார்

C. கம்பர்

D. இளங்கோவடிகள்

 

42. தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல்?

A. தீதுண்டோ

B. தீது உண்டோ

C. தீதிண்டோ

D. தீயுண்டோ

 

43. "சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்" என்ற பாடலை இயற்றியவர் யார்?

A. ஔவையார்

B. பாரதியார்

C. பாரதிதாசன்

D. காவற்பெண்டு

 

44. 'நேரம் + ஆகி ' என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

A. நேரமாகி

B. நேராகி

C. நேரம்ஆகி

D. நேர்ஆகி

 

45. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது?

A. வாசல்அலங்காரம்

B. வாசலங்காரம்

C. வாசலலங்காரம்

D. வாசலிங்காரம்

 

46. எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் வெளியுலகில், சிந்தையில் புதிது புதிதாக எவற்றனுக்கும் பெயர்கள் எல்லாம் கண்டு என்று பாடியவர்?

A. பாவேந்தர்

B. புரட்சிக்கவி

C. A & B

D. கண்ணதாசன்

 

47. வழக்கு எத்தனை வகைப்படும்?

A. இரண்டு

B. மூன்று

C. நான்கு

D. ஆறு

 

48. பாண்டிய நாட்டின் துறைமுக நகரம் எது?

A. வஞ்சி

B. முசிறி

C. தொண்டி

D. கொற்கை

 

49. கப்பலோட்டிய தமிழர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. பெரியார்

B. அண்ணா

C. வ.உ.சி

D. சுப்பிரமணிய சிவா

 

 

 

 

50. பொருத்துக:

1. ஈன்று --- கிளை

2. கொம்பு --- பெற்று

3. அதிமதுரம் --- மகிழ்ந்திட

4. களித்திட --- மிகுந்த சுவை

A. 1 2 3 4

B. 2 1 4 3

C. 2 1 3 4

D. 4 3 2 1

 

51. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது?

A. காது

B. தந்தம்

C. கண்

D. கால்நகம்

 

52. "கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய் கருவேலங்காய் பறித்துப் போடும் மேய்ப்பனை ஒருநாளும் சிராய்ப்பதில்லை கருவமுட்கள்" என்றவர்?

A. அறிவுமதி

B. கலாப்ரியா

C. வாணிதாசன்

D. தாராபாரதி

 

 

 

53. "ஊரின் வடகோடியில் அந்த மரம் ஐந்து வயதில் பார்த்த போதும் இப்படியேதானிருந்தது ஐம்பதைத் தாண்டி இன்றும் அப்படியேதான் என்ற பாடலின் ஆசிரியர்?

A. அறிவுமதி

B. கலாப்ரியா

C. தாராபாரதி

D. ராஜமார்த்தாண்டன்

 

54. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. வாணிதாசன்

B. சுரதா

C. தாராபாரதி

D. ராஜமார்த்தாண்டன்

 

55. சுரதா இயற்றிய நூல்களில் பொருந்தாததைத் தேர்ந்தெடு?

A. அமுதும் தேனும்

B. தேன்மழை

C. துறைமுகம்

D. விரல்நுனி வெளிச்சங்கள்

 

56. வாழை, கன்றை -----?

A. ஈன்றது

B. வழங்கியது

C. கொடுத்தது

D. தந்தது

 

57. மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்?

A. போன்ம்

B.மருண்ம் பழம் விழுந்தது

C.பழம் விழுந்தது

D. பணம் கிடைத்தது

 

58. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு?

A. அரை

B. ஒன்று

C. ஒன்றரை

D. இரண்டு

 

59. தவறானதைத் தேர்ந்தெடு?

A. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை "சுத்த தியாகி" என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாராட்டினார்

B. தேவர் தன் தொடக்கக் கல்வியைக் கமுதியிலும் உயர்நிலைக் கல்வியை மதுரை பசுமலை பள்ளியிலும் ராமநாதபுரத்திலும் பயின்றார்

C. தேவரை "தேசியம் காத்த செம்மல்" என்று திரு வி. கல்யாணசுந்தரனார் பாராட்டியுள்ளார்

D. சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், சோதிடம், மருத்துவம் போன்ற பல துறைகளிலும் ஆற்றல் உடையவராக விளங்கினார்

 

60. அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற கவிதை தொகுப்பை எழுதியவர்?

A. சுரதா

B. வாணிதாசன்

C. அறிவுமதி

D. ராஜமார்த்தாண்டன்

 

61. ஒன்றல்ல இரண்டல்ல என்ற பாடலை எழுதியவர்?

A. அறிவுமதி

B. வாணிதாசன்

C. ராஜமார்த்தாண்டன்

D. உடுமலை நாராயணகவி

 

62. தேவர் பேசத் தொடங்கியதும் சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று புகழ்ந்துரைத்தவர்?

A. பெரியார்

B. அறிஞர் அண்ணா

C. இராஜாஜி

D. காமராசர்

 

63. முத்துராமலிங்க தேவர் நடத்திய இதழின் பெயர்?

A. இராஜாஜி

B. நேதாஜி

C. காந்திஜி

D. நேருஜி

 

64. ஜாதவ் பதேங்குக்கு மரம் வளர்க்கும் எண்ணம் ஏற்பட்ட ஆண்டு?

A. 1969

B. 1979

C. 1989

D. 1959

 

65. முத்துராமலிங்க தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்?

A. தூத்துக்குடி

B. காரைக்குடி

C. சாயல்குடி

D. மன்னார்குடி

 

66. 'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' - என்று அழைக்கப்படும் விலங்கு?

A. சிங்கம்

B. புலி

C. சிறுத்தை

D. மான்

 

67. இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூல்?

A. கடற்கரையினிலே

B. தமிழின்பம்

C. தமிழ் விருந்து

D. மேடைப்பேச்சு

 

68. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. இரா.பி. சேது

B. பாரதியார்

C. வாணிதாசன்

D. பாரதிதாசன்

 

69. "எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்" என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல் எது?

A. நன்னூல்

B. தொல்காப்பியம்

C. சிலப்பதிகாரம்

D. மணிமேகலை

 

70. "பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறு வகை மொழி நிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப் படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்" என்றவர் யார்?

A. மு. வரதராசனார்

B. சுப்பிரமணிய சிவா

C. திரு. வி. கலியாணசுந்தரனார்

D. தேவநேய பாவணர்

 

71. "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி என்ற பாடலை பாடியவர் யார்?

A. பாரதிதாசன்

B. பாரதியார்

C. தாராபாரதி

D. வாணிதாசன்

 

 

 

72. கிர் சரணாலயம் எம்மாநிலத்தில் அமைந்துள்ளது?

A. குஜராத்

B. அருணாச்சலப் பிரதேசம்

C. ஒடிசா

D. வங்காளம்

 

73. தவறானததைத் தேர்ந்தெடு?

A. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு தந்தம் உண்டு

B. ஆசிய யானைகளில் பெண் யானைக்கு தந்தம் இல்லை

C. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் மற்றும் பெண் யானை இரண்டுக்குமே தந்தம் உண்டு

D. யானை கூட்டத்திற்கு ஆண் யானை தான் தலைமை தாங்கும்

 

74. ஜாதவுக்கு "இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது" வழங்கிய ஆண்டு?

A. 1990

B. 2015

C. 2013

D. 2012

 

75. ஔகாரக் குறுக்கம் சொல்லின் எந்தெந்த இடங்களில் வரும்?

A. முதல்

B. இடை

C. இறுதி

D. B &C

 

76. "முதற்பாவலர்" என அழைக்கப்படுபவர் யார்?

A. திருவள்ளுவர்

B. இளங்கோவடிகள்

C. கம்பர்

D. தொல்காப்பியர்

 

77. 'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்?

A. எனது

B. எங்கு

C. எவ்வளவு

D. எது

 

78. பொருத்துக:

1. சூரன் --- வீரன்

2. பொக்கிஷம் --- செல்வம்

3. சாஸ்தி --- மிகுதி

4. விஸ்தாரம் --- பெரும்பரப்பு

A. 1 2 3 4

B. 3 2 1 4

C. 2 3 4 1

D. 4 3 2 1

 

79. ஊர்வலத்தின் முன்னால் --------- அசைந்து வந்தது?

A. தோரணம்

B. வானரம்

C. வாரணம்

D. சந்தனம்

 

80. முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு?

A. காந்தியடிகள்

B. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

C. பெரியார்

D. காமராசர்

 

81. வங்க சிங்கம் என்று போற்றப்பட்டவர் யார்?

A. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

B. பெரியார்

C. அண்ணா

D. காந்தியடிகள்

 

82. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?

A. இரண்டு

B. மூன்று

C.நான்கு

D. ஐந்து

 

83. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்களின் எண்ணிக்கை?

A. 100

B. 133

C. 153

D. 173

 

84. "செந்நாப்போதார்" என அழைக்கப்படுபவர் யார்?

A. இளங்கோவடிகள்

B. கம்பர்

C. இளங்கோவடிகள்

D. திருவள்ளுவர்

 

85. "முப்பால்" என்று அழைக்கப்படும் நூல் எது?

A. ஏலாதி

B. தொல்காப்பியம்

C. திருக்குறள்

D. நாலடியார்

 

86. தவறானதைத் தேர்ந்தெடு?

A. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்

B. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்

C. ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்

D. தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிப்பது ஆய்தக் குறுக்கம் எனப்படும்

 

87. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு எந்த ஆண்டு இந்திய அரசு தபால் தலையை வெளியிட்டது?

A. 1995

B. 1996

C. 1997

D. 1998

 

88. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் என்னும் நூலைத் தொகுத்தவர்?

A. தாராபாரதி

B. அறிவுமதி

C. கலாப்ரியா

D. நா. வானமாமலை

 

89. --------- தற்போது உரைநடை வழக்கில் இல்லை, இலக்கியங்களில் மட்டுமே உள்ளன

A. குற்றியலுகரம்

B. ஆய்தம்

C. குற்றியலிகரம்

D. முற்றியலிகரம்

90. வீரமிக்க பேச்சு விடுதலைப் போருக்கு உதவும் என்று முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர்?

A. காமராசர்

B. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

C. காந்தியடிகள்

D. அறிஞர் அண்ணா

 

91. முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பு பெயர்களுள் பொருந்தாதைத் தேர்ந்தெடு?

A. தேசியம் காத்த செம்மல்

B. வித்யா பாஸ்கர்

C. சன்மார்க்க சண்டமாருதம்

D. மாணிக்கம்

 

 

92. பொருத்துக:

1. கதைப்பாடல் --- Slogan

2. பேச்சாற்றல் --- Courage

3. துணிவு --- Ballad

4. முழக்கம் --- Elocution

A. 1 2 3 4

B. 3 4 2 1

C. 3 4 1 2

D. 4 3 2 1

 

93. தமிழ் நூல்களில் "திரு" இன்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?

A. பதிற்று பத்து

B, நான்மணிக்கடிகை

C. பரிபாடல்

D. திருக்குறள்

 

94. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?

A. பூட்டு + கதவுகள்

B. பூட்டும் + கதவுகள்

C. பூட்டின் + கதவுகள்

D. பூட்டிய + கதவுகள்

 

 

 

 

95. தன் + நெஞ்சு என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?

A. தன்நெஞ்சு

B. தன்னெஞ்சு

C. தானெஞ்சு

D. தனெஞ்சு

 

96. ஜாதவுக்கு "மதிப்புறு முனைவர் பட்டம்" வழங்கிய பல்கலைக்கழகம் எது?

A. கௌகாத்தி பல்கலைக்கழகம்

B. அசாம் பல்கலைக்கழகம்

C. குஜராத் பல்கலைக்கழகம்

D. இந்திரா காந்தி பல்கலைக்கழகம்

 

97. முத்துராமலிங்கதேவர் இயற்கை எய்திய ஆண்டு?

A. 1945

B. 1963

C. 1964

D. 1950

 

98. தேசியம் காத்த செம்மல் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. பெரியார்

B. அறிஞர் அண்ணா

C. முத்துராமலிங்கத் தேவர்

D. இராஜாஜி

 

 

99. இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?

A. சுரதா

B. பாரதியார்

C. பாரதிதாசன்

D. வாணிதாசன்

 

100. பொருத்துக:

1. பந்தர் --- முதற்போலி

2. மைஞ்சு -- முற்றுப்போலி-

3. அஞ்சு --- இடைப்போலி

4. அரையர் --- கடைப்போலி

A. 1 2 3 4

B. 4 1 2 3

C. 3 4 1 2

D. 4 3 2 1

 

Answer Key = 

https://www.minnalvegakanitham.in/p/60-days-study-plan-group-2.html



tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்