Type Here to Get Search Results !

நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள் PDF || 2022 குரூப் 2/2A 1 கேள்வி உறுதி

0
2022 குரூப் 2/2A 1 கேள்வி உறுதி
பகுதி – (இ) தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்
எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


 

MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST




Download Now






--------------- 

1.சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
ii) மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலாக், தப்பு
iii) ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
iv) தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை

அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

2.பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை

அ) 4, 1, 3, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 1, 2
Answer:
இ) 1, 2, 4, 3

3.தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு?
அ) மூன்று முதல் பதின்மூன்று
ஆ) எட்டு முதல் பத்து
இ) பத்து முதல் பதின்மூன்று
ஈ) எட்டு முதல் பதின்மூன்று
Answer:
ஈ) எட்டு முதல் பதின்மூன்று

4.சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?
அ) நிகழ்கலைகள்
ஆ) பெருங்கலைகள்
இ) அருங்கலைகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நிகழ்கலைகள்

5.கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
அ) குட ஆட்டம்
ஆ) கும்பாட்டம்
இ) கொம்பாட்டம்
ஈ) செம்பாட்டம்
Answer:
ஆ) கும்பாட்டம்

6.கரகாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகள் …………………..
i) நையாண்டி மேள இசை
ii) நாகசுரம்
iii) தவில்
iv) பம்பை

அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – சரி
Answer:
இ) நான்கும் சரி

7.கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
அ) 12
ஆ) 2
இ) 24
ஈ) வரையறை இல்லை
Answer:
ஈ) வரையறை இல்லை

8.“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஆ) புறநானூறு

9.சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
அ) பத்து
ஆ) பதினொரு
இ) ஏழு
ஈ) எண்
Answer:
ஆ) பதினொரு

10.குடக்கூத்து என்பது, …………………………
அ) மயிலாட்டம்
ஆ) கரகாட்டம்
இ) பொம்மலாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
ஆ) கரகாட்டம்

11.கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) தேவராட்டம்
Answer:
அ) மயிலாட்டம்

12.காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் …………………

அ) சோலை
ஆ) பாரந்தாங்கும் கோல்
இ) கால்
ஈ) காவல்
Answer:
ஆ) பாரந்தாங்கும் கோல்


13.இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) காவடியாட்டம்

 

14.மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று எதன் அடிப்படையில் அழைக்கின்றனர்?
அ) அமைப்பு
ஆ) நிறம்
இ) அழகு
ஈ) வடிவம்
Answer:
அ) அமைப்பு


15.இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
ஈ) காவடியாட்டம்


16.ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை …………………

அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) இரண்டு


17.தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) சிறுவர்கள்
ஈ) முதியவர்கள்
Answer:
அ) ஆண்கள்


18.தேவராட்டம், ………. ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அ) வானத்துத் தேவர்கள்
ஆ) விறலியர்
இ) பாணர்கள்
ஈ) அரசர்கள்
Answer:
அ) வானத்துத் தேவர்கள்


19.உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….
அ) தேவதுந்துபி
ஆ) சிங்கி
இ) டோலக்
ஈ) தப்பு
Answer:
அ) தேவதுந்துபி


20.தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ………………………
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) தேவராட்டம்
ஈ) சேவையாட்டம்
Answer:
இ) தேவராட்டம்


21.தேவராட்டம் எவ்வகை நிகழ்வாக ஆடப்படுகின்றது?
அ) அழகியல்
ஆ) நடப்பியல்
இ) சடங்கியல்
ஈ) வாழ்வியல்
Answer:
இ) சடங்கியல்


22.தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை…………………………..
அ) மயிலாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) சேவையாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) சேவையாட்டம்


23.சேவையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) சேவைப்பலகை
ii) சேமக்கலம்
iii) ஜால்ரா

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி


24.எந்தப் பண்புகளைக் கொண்டு நிகழ்த்திக்காட்டும் கலை பொய்க்கால் குதிரையாட்டம் ஆகும்?
அ) போலச் செய்தல்
ஆ) இருப்பதைச் செய்தல்
இ) மெய்யியல்
ஈ) நடப்பியல்
Answer:
அ) போலச் செய்தல்


25.புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
இ) பொய்க்கால் குதிரையாட்டம்


26.பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?
அ) சோழர்
ஆ) நாயக்கர்
இ) மராட்டியர்
ஈ) ஆங்கிலேயர்
Answer:
இ) மராட்டியர்


27.இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுவது?
அ) காவடியாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்
Answer:
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்


28.பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை……………….
அ) கரகம்
ஆ) பொய்க்கால் குதிரை
இ) காவடி
ஈ) மயில்
Answer:
ஆ) பொய்க்கால் குதிரை


29.பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) நையாண்டி மேளம்
ii) நாகசுரம்
iii) தவில்
iv) டோலக்

அ) i, ii – சரி
ஆ) iii, iv – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
அ) i, ii – சரி


30.தப்பு என்பது……………….
அ) தோற்கருவி
ஆ) துளைக்கருவி
இ) நரம்புக்கருவி
ஈ) தொழிற்கருவி
Answer:
அ) தோற்கருவி


31.“தகக தகதகக தந்தத்த தந்தக்க
என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”
– என்ற தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்?

அ) அண்ணாமலையார், காவடிச்சிந்து
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
Answer:
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்


32.பறை என்று அழைக்கப்படும் ஆட்டம்……………….
அ) தப்பாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) கரகாட்டம்
Answer:
அ) தப்பாட்டம்


33.……………….குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது.
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) யாப்பருங்கலம்
Answer:
ஆ) தொல்காப்பியம்


34.சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக் கருவி……………….
அ) பறை
ஆ) தவில்
இ) டோலக்
ஈ) உறுமி
Answer:
அ) பறை


35.தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது………………..
அ) கரகாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) புலி ஆட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) புலி ஆட்டம்


36.……………….தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
அ) காளி
ஆ) மாரி
இ) சர்க்கை
ஈ) திரௌபதி
Answer:
ஈ) திரௌபதி


37.நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்ட கலை……………….
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) தெருக்கூத்து
ஈ) குடக்கூத்து
Answer:
இ) தெருக்கூத்து


38.களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்டது எது?
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) குடக்கூத்து
ஈ) தெருக்கூத்து
Answer:
ஈ) தெருக்கூத்து


39.தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) பேரா. லூர்து
இ) வானமாமலை
ஈ) அ.கி. பரந்தாமனார்
Answer:
அ) ந. முத்துசாமி


40.நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) சங்கரதாசு சுவாமிகள்
இ) பரிதிமாற்கலைஞர்
ஈ) தி.வை. நடராசன்
Answer:
அ) ந. முத்துசாமி


41.கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) ந. முத்துசாமி
இ) தியாகராஜ பாகவதர்
ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி
Answer:
ஆ) ந. முத்துசாமி


42.கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….
அ) பத்ம ஸ்ரீ
ஆ) அர்ஜூனா
இ) பத்மபூஷண்
ஈ) பாரத ரத்னா
Answer:
அ) பத்ம ஸ்ரீ


43.தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….
அ) கலைமாமணி
ஆ) நாடகமாமணி
இ) வ.உ.சி. விருது
ஈ) கம்பன் விருது
Answer:
அ) கலைமாமணி


44.வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்து வருவது……………….
அ) காவடியாட்டம்
ஆ) புலி ஆட்டம்
இ) தேவராட்டம்
ஈ) தெருக்கூத்து
Answer:
ஈ) தெருக்கூத்து


45.அர்ச்சுனன் தபசு எனப்படுவது……………….
அ) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
இ) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
ஈ) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
Answer:
ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

 


tnpsc shortcuts, tnpsc, tnpsc shortcuts in tamil pdf, tnpsc shortcut tricks, tnpsc shortcut maths blogspot, tnpsc shortcuts in history, tnpsc shortcut memes, tnpsc, shortcut notes maths, tnpsc shortcuts pdf, tnpsc shortcuts maths, tnpsc polity shortcuts in tamil, tnpsc shortcuts in tamil, tnpsc shortcut tricks in tamil, tnpsc maths tricks in tamil, tnpsc group 4 question paper, tnpsc, group 4 syllabus, tnpsc group 4, tnpsc group 2 posts, tnpsc group 2, tnpsc group 2 exam date 2021, tnpsc group 4, tnpsc group 2 , tnpsc group 1, tnpsc exam date 2021, tnpsc group 4 syllabus, tnpsc group 2 syllabus, tnpsc notification, tnpsc annual planner 2021, tnpsc group 1 syllabus, tnpsc portal, tnpsc notification 2021, tnpsc online test, tnpsc online test batch 2021, tnpsc online test, subject wise in tamil, tnpsc online test group 4, tnpsc online test series 2021, tnpsc online test in tamil 6th to 10th, tnpsc online test app, tnpsc online test 2021, tnpsc online test app download, tnpsc online test group 2, tnpsc online test batch, tnpsc online test in tamil, tnpsc syllabus group 4, tnpsc syllabus group 2, tnpsc current affairs,

கருத்துரையிடுக

0 கருத்துகள்